காலை வகுப்புகள் முடிய ரிதுவும் அவளது நண்பர்களும் கேன்டீனுக்கு சென்றனர்.
வரிசையில் நின்று டோக்கன் குடுத்து அவர்களுக்கு தேவையான உணவை வாங்கி…
ஜன்னல் அருகே ஒரு மேஜையை தேர்ந்தெடுத்து போய் அமர்ந்து உண்ண ஆரம்பித்தனார்.
“இன்னிக்கு மார்னிங் செஷன் ஜாலி ஆஹ் போச்சு ல?” என அச்சு கேக்க
” இல்ல??… நல்லா இருந்துச்சு… ம்ம்ம்ம் இதே மாதிரி ரெகுலர் ஆஹ் ஓபி அடிக்கிற கிளாஸ்ஸஸ் இருந்தா இன்னும் நல்லா இருக்கும் எங்க??? அதான் அபிடேர்நூன் அந்த டோலோரிஸ் அம்ப்ரிட்ஜ் வருமே… சும்மா டெஸ்ட் வெச்சே கொள்ள போகுது… ஹ்ம்ம் எப்படி கட் அடிக்கிறதுனே தெரில ” என கூறினாள் நேத்ரா.
“டோலோரிஸ் அம்ப்ரிட்ஜ் ஆஹ் அது யாரு டி எங்களுக்கு தெரியாம?” – நேஹா
“வேற யாரு நாம அசிஸ்டன்ட் hod மல்லிகா மாம் தான் அப்படி சொல்ற” என சிரித்து கொண்டே கூறினாள் ரிது.
“ஹா ஹா ஏன் டி அந்த மேம் கு இப்படி ஒரு பெயர்?”
“பின்ன முதல் நாள் வந்ததுல இருந்து சும்மா சும்மா பேப்பர் எடுங்க டெஸ்ட் எழுதுங்கனு சொல்லிட்டு இருக்கு… ஹே ரிது ஒழுங்கா chairman சார் கிட்ட சொல்லி அந்த அம்மா வா மிரட்ட சொல்லு.. முடில” என முகத்தை அழுவது போல் வைத்து கொண்டாள்.
அவள் செய்த ரியாக்ஷனை பார்த்து அனைவரும் சிரித்தனர்….ஆம் இவர்கள் கல்லூரி ஆரம்பித்த முதல் நாளில் இருந்தே prof மல்லிகா பாடம் எடுக்க ஆரம்பித்துவிட்டார்.
எடுத்தது கூட பரவாயில்லை எதோ ஆர்வ கோளாறு என நம் நாயகியும் அவளது நண்பிகளும் நினைக்க…
அந்த prof பாடத்தை முதல் அரை மணி நேரத்தில் முடித்து கடைசி 15 நிமிடங்களில் டெஸ்ட் வைத்தார்… என்ன ஒரு வில்லத்தனம்… அன்றில் இருந்து அவரது பெயர் ‘டோலோரிஸ் அம்ப்ரிட்ஜ்’ என (பட்ட பெயர் )மற்ற பட்டது.
(டோலோரிஸ் அம்ப்ரிட்ஜ் யார் னு நீங்க கேக்கறது புரியுது.. அவங்க ‘ஹாரி பாட்டர்’ ல வர ஒரு வில்லி டீச்சர்… ஹாரி பாட்டர் படிச்சவங்க இல்ல பார்த்தவங்களுக்கு தெரியும்).
அப்போது போனை எடுத்து நோண்டி கொண்டு இருந்தாள் ரிது… எதையோ சீரியஸ் ஆஹ் பார்த்து கொண்டு இருந்தாள்…
“என்ன ரிது ஏன் இவ்ளோ சீரியஸ் ஆஹ் இருக்க ஏத்தாது ப்ரோப்லேம் ஆஹ்?” என கேட்டாள் நேஹா.
“இந்த பெல்லி என்ன லூசா.. அதான் கான்னி வந்து நா உன்ன மாட்டும் தான் லவ் பண்றேன் எனக்கு நீ மட்டும் போதும் னு சொல்றன் ல..
அப்பவே அவன ஓகே சொல்லி ஜெரேமையா வா பிரேக் அப் பண்ண வேண்டியது தான” என்க.
“என்ன டி உலற ஒன்னுன் புரியல ” என குழம்பி போனாள் அச்சு
“ஹே உனக்கு தெரியாதா அவ சீரிஸ் பத்தி பேசிட்டு இருக்கா…”
“அடி பாவி நான் கூட எதோ பிரச்னை னு நெனச்சி பார்த்த… உன்னை” என அவள் கையில் கிள்ளினாள்.
“அவுச்…. ஏன் டி கிள்ளி வெக்கற?… போ.. “என பளிப்பு கட்டினாள் ரிது.
“இப்படியே எல்லாம் சிரிச்சிட்டு டைம் வேஸ்ட் பண்ணுங்க நான் போறேன் நீங்க மேம் கிட்ட திட்டு வாங்குங்க “என வேகமாக உண்டாள் நேஹா.
“ஐயோ ஆமா ல… இரு டி வெயிட் பண்ணு நாங்களும் வரோம்” என எதோ ஒன்றை வாய்க்குள் அடைத்து கொண்டு தங்களது கிளாசிற்கு சென்றனர்.
போகும் வழியில்” ரிது கம் டு மை கேபின்” என அழைத்தார் பார்த்தசாரதி.
“எஸ் sir” என அவள் நண்பர்களுக்கு முன்னே செல்லுமாறு சைகை செய்தவள் பார்த்தாவின் பின்னால் சென்றாள்.
அவருடைய அறையை அடைந்ததும் ” ஹப்பாடா” என சோபாவில் அமர்ந்தவள் தலைவர் இருக்கையில் இருந்தவனை பார்க்க தவறினாள்.
அவளது செய்கை பார்த்து கோபம் கொண்டது போல் நடித்தவன்…
“ஹலோ யார் நீங்க excuse கேக்காம நீங்க பாட்டுக்கு போய் நேர சோபா la வகாறீங்க அதும் கேஷ்வலா வாட் இஸ் திஸ்? ” என பொறிய தொடங்கினான்.
முதலில் திக் என்று பயந்து பதறி சோபாவில் இருந்து எழுந்து அட்டென்ஷனில் “சாரி sir” என கண்களை மூடி கொண்டு இடது கையை சலூட் வைப்பது போல நின்று கொண்டாள்.
அவளை அடக்கபட்ட சிரிப்புடன் பார்த்தவன்… அதற்கு மேல் தாக்கு புடிக்க முடியாமல் சிரிக்க தொடங்கினான்..திடீர் என்று வந்த சிரிப்பு சத்தத்தில் “யவன் அவன்??” என ஒற்றை கண்ணை மட்டும் திறந்து பார்த்தாள்… அதை பார்த்தவன் இன்னும் பலமாக சிரித்தான்.
அதை பார்த்தவள் முதலில் எரிச்சல் அடைந்தாளும் பின்பு அவனை இழகாரமாக பார்த்துவிட்டு அதே சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து… “சிரிச்சி முடிச்சிட்டு சொல்லுங்க mr ஆதி” என கைகளை மார்புக்கு குறுக்கே கட்டி கொண்டு வேறெங்கோ பார்த்தாள்.
தனது பிஎ விடம் எதோ கல்லூரி சம்பந்தமான வேலையை கூறிவிட்டு உள்ளேயே நுழைந்தவர் இந்த காட்சியை கண்டு “ஏன் இவன் இப்படி சிரிக்கிறான்?” என முணுமுணுத்தவர் பார்வையை சோபாவின் புறம் திருப்ப அங்கு காளி அவதாரதில் கண்களில் கோப தீயுடனும் உதட்டில் இகழ்ச்சி புன்னகையுடன் வீற்றுரிருந்த ரிதிமாவை பார்த்தார்.
“அய்யயோ… இப்போ என்ன பண்ணி தொலைச்சான்னு தெரியலயே… பாவி பயலே வாய்யா மூடு டா…” என சைகை செய்து காண்பித்தார்.
அதை கவனித்தவன் இன்னும் பலமாக வயிறு குலுங்க குலுங்க சிரித்தான்”அட கடவுளே, பைத்தியக்கார சிரிக்காத டா… அவ மொத்தமா அப்றம் சேத்து வெச்சி லாடம் கட்டிடுவா டா”என ஓடி அவனது அருகில் சென்று அவனது கை முட்டியில் கிள்ளி கொண்டே சொன்னார்..
இதையும் ரிது கவனிக்காமல் இல்லை…அமைதி காத்தால்.
“ப்ளீஸ் டா சொன்ன கேளு…” என கெஞ்சவே ஆரம்பித்து விட்டார் பார்த்தா.
சற்றே சிரிப்பில் இருந்து மாட்டு பட்டவன் அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு தாத்தாவை சிரிப்புடன் பார்த்தான் “என்ன டா நடந்துச்சு படவா?” என அவன் முதுகில் மெதுவாக அடித்தார்..
.”அயோ பாத்து தாத்தா… உங்க ஆசை பேரனுக்கு வலிச்சுடா போகுது ” என இரு கைகளையும் அவர் முன்னே நீட்டினாள்.
“இப்போ அடிங்க னு சொல்றால இல்ல அடிக்காதிங்க னு சொல்றளா? ஐயோ ஒன்னும் புரியலையே ” என வாய்க்குள் பேசியவர் அவளை பார்த்து பல்லை காட்டினார்….
“இருக்கறது நாலு பல்லு அதும் இப்டி காட்டி உழ வெச்சிடாதீங்க”
“அது போன போகுது…ரிது குட்டி என்ன நடந்துச்சு…ஏன் இவ்ளோ கோவமா இருக்க?”
“தாத்தா அவ எங்க கோவமா இருக்க சிரிச்சிட்டு தானே இருந்தா?” என வேண்டும் என்றே கேட்டான் ஆதி
“டேய் சும்மா இருடா… நீயா வழிய போய் மாட்டாத”… என திட்டியவர்(கண்களால் கெஞ்சியவர்) ரிதுவிடம் திரும்பி
“என்ன டா செல்லம் நடந்துச்சு?” என சூழ்நிலையை சமாளிக்க கேட்டார்.
“இந்த கொஞ்சிற வேலைலாம் வேண்டாம்… வந்தோமா பாடம் நடத்துனோமா போனோமா னு இருக்க சொல்லுங்க.. என்னை வம்புக்கு இழுக்க வேண்டாம் அப்றம் விபரிதாமயிடும்” என்று எச்சரிக்கை விடுத்தாள்.
” ஒஹ்ஹஹ் மஹாராணி அப்படி என்னை என்ன பண்ணிர்விங்க? ” என சண்டைக்கு நின்றான் ஆதி.
“அடேய் வேணாம் டா உன்ன அப்புறம் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போற மாதிரி ஆயிடும் சொன்ன கேளு அவ கிட்ட வம்புக்கு நீக்காத” என தான் பீதியுடன் கூறினார்
“என்ன பண்ணிரவா இவ?.. என பெரிய இவளா நீ?” என்று தாத்தாவிடம் ஆரம்பித்து ரிதுவிடம் முடித்தான்.
“பாக்க தான போற இந்த ரிதுவோட ஆட்டத்த”… என்று நக்கலாக கூறியவள்… பார்த்தாவிடம் திரும்பி
“எதுக்கு என்ன கூப்பிட்டீங்க?” என்று கேட்டாள்.
“அது வந்து.. இதை நான் எப்படி உங்கிட்ட சொல்றது…” என நாகத்தை கடித்தவர்.
“சீக்ரம் சொல்லுங்க எனக்கு கிளாஸ் இருக்கு” என்று ஆதியை பார்த்து முறைத்தாள்.
தொண்டைய செருமியவர் “ஓ சாரி ட பாப்பா… நீ கிளாஸ்க்கு போ நாம ஈவினிங் வீட்டுக்கு வந்து பேசுரேன்” என்று பேசி சமாளித்து அனுப்பினார்.
போனவள் சும்மா போகாம அவனை பார்த்து முறைத்து விட்டு சென்றாள்…
“பாரா எனா லுக்கு… போ” என வாயை திறக்க போக அவனது வாயை பொத்தி ரிதுவை பார்த்து
“நான் சொல்லி வெக்கறன் டா செல்லம் நீ போ” என அனுப்பி வைத்தார் தாத்தா.
“ம்ம்ம்ம் ” ன்று சென்றுவிட்டாள் அவன் சென்றுவிட்டாளா என்று அவனது வாயை பொத்திக்கொண்டு கதவு வரை சென்று பார்த்து விட்டு, அவள் அந்த கரிடோர் கிராஸ் செய்யும் வரை பார்த்துக் கொண்டிருந்தவர்
“அப்பாடா” என்று அவன் வாயிலிருந்து கையை எடுத்தார்.
அவரது கையை அவ்ளோ நேரமும் எடுக்க படாத பாடு பட்டவன்… மூச்சு தினர “தாத்தா… உங்களுக்கு என்ன ஆ..ச்சு எதுக்கு அந்த பப்ளிமாசுக்கு போய் இப்படி பயப்படறீங்க… அவ என்ன பண்ணிர்வா நானும் பாக்கறேன்” என்று சவடால் விட்டான்.
“அட அறிவு கெட்டவனே சொன்ன புரிஞ்சிக்க… எனக்கு என் பேரன் வேணும்… உனக்கு mr அசோக் ஞாபகம் இருக்கா?”
“ஆமா நாம காலேஜ் ஸ்டார்ட் பண்ற அப்போ ஜாயின் பண்ணாரு…”
“ஆஅன் அவரு எவ்ளோ பெரிய ஸ்ட்ரிக்ட் ஆஃபீஸ்ர்? ஞாபகம் இருக்கா?”
“ஆமா நீங்க கூட அவரு மிலிட்டரில சேர முடில னு இங்க வந்ததா தான் சொன்னீங்களே அவர் தானே ஏன் என்ன ஆச்சு?”
” என்ன ஆச்சா? ஒரு மூணு வருஷத்துக்கு முன்னாடி இவ எதோ அவ தாத்தா கூட காலேஜிக்கு வந்த.. அப்போ அவ வெறும் 10த் தான் லீவு கு ஊரு சுத்தணும்னு அவ வீட்ல கேட்டிருப்பா போல விடலை அதனால அவங்க தாத்தா வந்து சரி வெளியில போறேன் வா அப்படின்னு சொல்லி இங்க கூட்டிட்டு வந்துட்டாங்க.
இவளும் காலேஜ் ல சுத்தி பாத்துட்டு கேன்டீன் ல போய் காபி சாப்டுட்டு இருந்துற்ப போல….
“ஆஹ்ஹ்ன்.. சரி… அப்றம்” என்று நக்கல் தோணியில் கேட்டான்.
“என்னடா நக்கலா முழுசா கேளு ” என மீண்டும் விட்ட இடத்தில் இருந்து தொடங்கினார்.
” சரி கேட்கிறேன் ஒரு காபி சொல்லுங்க ” என்றான் அதே நக்கல் தோணியில்
” சரிதா வேற ஏதாவது ஸ்னாக்ஸ் சொல்லட்டுமா? “
” ஓகே பாப்கார்னு சொல்லுங்க”
” படவா ராஸ்கல் சொல்லி தொலைக்கிறேன்”