” அவருக்கும் உன்ன தெரியுமா?? தெரிஞ்சி தான் அன்னிக்கு சண்டை போட்டீங்களா? ” என கேட்டாள் நேஹா.
“இல்ல டி இப்போ தான் என்கே தெரியும்… அந்த டைம்ல எனக்கு இவரு தான் ஆதி-னு ஒரு ஐடியாஉம் இல்ல ” என்க
” என்னவோ சொல்ற… ” என தோளை குளிக்கினால் அச்சு
” ஒகே கைஸ்… ஐ வில் லீவ் தி கிளாஸ் டு mr ஆதி…. ஆதி ப்ளீஸ் கேர்ரி ஓன்.” என கூறி விட்டு சென்று விட்டார் HOD.
” தங்க் யூ சார் ” என கூறியவன் அவர் சென்றதும்.
“ஒகே கைஸ் என பத்தி எல்லாமே கலை சார் சொல்லிட்டாரு… இப்போ உங்கள நீங்க இன்ட்ரோ பண்ணிக்கோங்க… முடிஞ்சா அளவுக்கு ஞாபகம் வெச்சிக்கிறேன் பட் கீப் இட் ஷார்ட் அண்ட் ஸ்வீட் நமக்கு நெறய டைம் இல்லை சோ…. நீங்க ஸ்டார்ட் பண்ணுங்க” என முதல் வரிசையில் இருந்தா மாணவியை தொடங்க சொன்னான்.
” ஹாய் சார் ஐ அம் லேகா ஃப்ரம் கோவை ” என தொடங்கி வைத்தாள்ஒரு தலை அசைப்புடன் அடுத்தவரை பார்த்தான்இப்படியே கடைசி வரிசைக்கும் அவனது பார்வை வர…
முதலில் நேஹா அமர்ந்து இருந்தாள்
“ஹாய் ஐ அம் நேஹா ஃப்ரம் சென்னை”
“ஓகே next” – ஆதி
“ஹாய் சார் ஐ அம் நேத்ரா ஃப்ரம் சென்னை”
“ம்ம்ம் next” –
” ஐ அம் அக்ஷயா ஃப்ரம் chennai” என கூறிய மறுநொடி ரிது எழ போக…
“ஒகே கைஸ் தங்க் யூ போர் தி நேமஸ்… நாம இன்னிக்கு பேசிக் ஆஹ் AI னா என்ன னு பாக்கலாம்” என அவளை தவிர்த்து பாடத்திற்கு தாவினான்.
ரிது எழுந்து அவனை “வாட்!!” என மனதிற்குள் கேட்டு கொண்டு அவனை முறைத்து விட்டு அமர்ந்து கொண்டாள்.
அதை கவனித்த தோழிகளோ… “இவளை பார்த்து விட்டு திரும்பி கொண்டனர்”….ஆதி சாராளமாக இங்கிலிஷ்ல் பாடம் நடத்தி கொண்டு இருந்தான்….
அப்போது அருண் எழுந்து
“சார் நீங்க ரிது ஓட நேம் கேக்கல” என கூற
ரிதுவை ஒரு உறுத்த பார்வை பார்த்தவன்
” அப்போ நீங்க கிளாஸ் எடுக்கறிங்களா அருண்” என அவனை வம்புக்கு இழுத்தான்.
“நோ சார் “என அமைதியாக அமர்ந்துந்துகொண்டான் அருண்.
ஆதி மறுபடியும் பாடம் எடுக்க ஆரம்பிக்க…
“என்னைய டா இக்னோர் பண்ற ஆதி? உனக்கு இருக்கு இரு” என மனதில் கறுவி கொண்டவள் அவன் பாடம் எடுக்க எடுக்க விடாது அவனை பல விதமாக டவுட் கேட்டு டார்ச்சர் செய்தாள்.
“சார் நாம தான் மனுஷங்களுக்கு ஈசி ஆஹ் இருக்க AI கண்டு பிடிக்கறோம் ஏன் அது எப்போமே ஆபத்தா முடியுது?”
“சார் Ai இல்லை னா எப்படி manual ஆஹ் எல்லாம் பண்லாம் னு காணபிடென்ஸ் வரும்?”
“சார் ai ல இன்னும் அட்வான்ஸ் ஆஹ் ஏன் பண்ண கூடாது” என்று உப்பு சப்பு இல்லாமல் வேண்டும் என்றே பல கேள்விகளை கேட்டாள்முதல் கேள்விக்கு பதில் கூறியவன்..
இரண்டாவது கேள்விக்கு என்ன சொல்வது என்று யோசிக்க தொடங்கினான்… ஏனெனில் அவனுக்கு தெரிந்தது அவள் வேண்டும் என்றே தான் கேள்வி கேட்டு குடைகிறாள் என்று.
அவனை சீண்டும் பார்வை பார்த்தாள்
“ஓகே மிஸ் ஹூஎவர் யூ ஆர்… நீங்க கேக்கற கேள்வி உங்களுக்கே புரியுதா…?” என கேட்டான்.
அனைவரும் அவளை பார்த்து சிரித்தனர்அதில் கோபம் கொண்டவள் அவனை கண்களில் அனல் தெறிக்க பார்த்தாள்
“ஒரே ஒரு கேள்வி கேளுங்க தெளிவா இருக்கனும்”என சொல்ல.
“மாட்னடா என் பாம்பரகட்ட மண்டைய” என முணுமுணுத்தவள்.
“What is AI? WHY SHOULD A HUMAN TRUST AI IN THE FUTURE? DOES IT PROVIDE ETHICALLY SAFER ENVIRONMENT FOR PEOPLE WHO USE IT? IF SO HOW IS IT SAFE, AND WHY DO WE HAVE TO DO THE REDO CRAP EVERYTIME WE WANT TO CREATE SOMETHING?”. என அவள் சாராளமாக இங்கிலீஷில் கேட்க… அந்த கிளாஸ்சே அவளை ஆஆஆஆ வென வாயை பிளந்து பார்த்தது…
ஏன்எனில் அந்த வருடத்தத்திற்கான முதல் பாடம் அன்னிக்கு தான் ஆரம்பிக்க பட்டது… அப்றம் எப்படி இப்டி கொஸ்டின் கேக்கறா என வியந்தனர்.
அவள் கேள்வி கேட்ட தோரணையில் அவன் வியந்து தான் போனான்… சுற்றம் உணர்ந்து.
தொண்டையை செருமி.. “ம்ம்ம்ம் ம்ம்ம்ம்” என அவன் பதில் கூற தொடங்கும் நேரம் செரியாக அந்த செஷன் முடிய பெல் அடித்தது…
‘எப்படியும் அடுத்த கிளாஸ்ல பாக்கலாம் னு ஓடி போக போறான்… ஹ்ம்ம் இவன் என கலாய்க்கறானா… ‘ என ஏளனமாக புன்னகைத்தாள்.
அவள் சிரிப்பதை பார்த்து என்ன நினைத்திருப்பாள் என கண்டு கொண்டவன்
” பெல் அடிச்சிட்டாங்க… பட் நான் ஆன்ஸர் பண்ணிட்டே போறேன்… ஒகே என்ன கேட்டீங்க கேன் யூ ரிப்பீட் இட்? ” என கேட்டான்.
.. அவள் சொன்னதும்
“ஒகே….இப்போ AI எதிகல் ஆஹ் யூஸ் பண்றது னால தான் எல்லாரும் இப்போ CHATGPT, பெரிப்லேக்ஸிட்டி னு நெறய AI ஜெனெரேட்ட் ஆப்ஸ் யூஸ் பண்றங்க… அதுனால தான் நெறய assignments, இமேஜ் ஜெனெரேஷன் எல்லாம் பண்றங்க… பட் அது தப்பான வழில பயணடுத்த னு கேட்ட ஆமா தான்… இருந்தும் மக்கள் அது நம்பி தான் இருகாங்க னு சொல்ல முடியாது… நம்மள பொறுத்த வரைக்கும் நாம எப்போதும் எதிகல் ஆஹ் இருக்கோமா னு பாருங்க அத நாம misuse பணமா இருக்கனும்.
நாம திருந்துனாலே… ஈசி ஆஹ் உலகத்தை திருத்தலாம்.
“அண்ட் ரிடு பத்தி கேட்டீங்க… அதுகிட்ட ஈசி ஆஹ் இருக்கறது னால தான அத பண்ண சொல்றிஙக… அப்போ உங்களுக்கு புடிச்ச மாதிரி வேணும் னா நீங்கலே பண்ண வேண்டியது தான ஏன் அத டிஸ்டர்ப் பண்றீங்க.” என்று முடிக்க
அவள் ஞஞஞஞ என முழிக்க…அந்த அரையே குண்டுசி விழுந்தால் சத்தம் கேட்கும் அளவிற்கு அமைதியாக இருந்தது.
“உங்க கொஸ்டின்கு ஆன்ஸர் பண்ணிட்டேன் அடுத்த ஸ்டாப் வந்துட்டாங்க பை கைஸ் என கூறியவன் அவளை மட்டும் பார்த்து “எப்புடி” எனும் விதமாக அவளை போலவே ஒற்றை புருவம் உயர்த்தி அவளுக்கு மட்டும் தெரியும் வண்ணம் கேட்டு சென்றான்….
ரிது அவனை முறைத்து கொண்டு
“இரு மாட்டாமலா போய்டுவா… மங்கி” என அவனை மனதிற்குல் வருத்து எடுத்தாள்.
இதை எல்லாம் அந்த காலேஜின் உரிமையாளரும், ஆதியின் தாத்தாவுமான mr பார்த்தசாரதி ஜன்னல் வழியாக ரசித்து கொண்டு இருந்தார்….
“இன்னும் இதுங்க திருந்தவேயில்ல” என சொல்ல சரியாக ஆதி அவரை நோக்கி வந்தான்.
“என்ன தாத்தா.. இங்க என்ன பண்றீங்க?”
“ஒன்னும் இல்லை டா… கிளாஸ் எப்படி போச்சி ஆல் ஒகே ஆஹ்?” என பேச்சை குடுத்தார்.
அவர் பார்திருப்பார் என புரிந்து கொண்டவன் “உங்களுக்கு தெரியாதா” என சிரிக்கவும் அவரும் சிரித்து கொண்டே
” படவா… வா போலாம் ” என அழைத்து சென்றார்.
அடுத்த வகுப்பிற்கான ஆசிரியரும் வந்து அவர்களுக்கு பாடம் எடுக்க தொடங்கினார்…முதல் நாள் காலை வகுப்புகள் முடிய அனைவரும் சாப்பிட சென்றனர்.