காலை 8 மணி.
அந்த வீட்டில் இருந்த அனைவரும் அம்மு, பாட்டி, மற்றும் ரிதுவைத் தவிர்த்து, மற்ற அனைவரும் சாப்பிடும் மேசையைச் சுற்றி அமர்ந்திருந்தனர்.
அவர்களுக்காகக் காத்திருந்தார்கள். ஆனால் அம்முவும் ரிதுவும் அறையில் பேசிக்கொண்டிருந்தனர்.
“அஹ்ஹான்! இதான் விஷயமா? சரி, அதை விடு. அலாரத்தை தாத்தாதான் மாற்றினார் என்று எப்படிச் சொல்கிறாய்?” என்று அம்மு கேட்டாள்.
“அதுவா? உங்க மிஸ்டர். மாதவ் இருக்காரே, அவர் வந்து அலாரத்தை மாத்திட்டு போனது போதாதுனு, அதுல ரிமைண்டர் வேற போட்டிருக்கிறார். என்ன தெரியுமா?”
“ரிமைண்டரா? அப்படி என்ன போட்டு வெச்சார்?”
“வேற என்ன? ‘காலேஜ் ஃபர்ஸ்ட் டே பாப்பாவாம்… லேட்டா போகாதே’னு போட்டிருக்காரு. எனக்கு அது தெரியாதா என்ன? அதனால தான் 5 மணிக்கு ஜாகிங் போகணும்னு அலாரம் வெச்சேன்.”
“அவரு பாட்டுக்கு மாத்திட்டுப் போய்ட்டார்.”
“வர வர அந்த மனுஷனுக்கு சேட்டை ஜாஸ்தி ஆயிடுச்சு. கவனிச்சிக்கிறேன்! சரி, வா சாப்பிட்டு கிளம்பு” என்று அம்மு, ரிதுவை அழைத்துச் சென்றார்.
அப்போதுதான் மாதவ் ஏதோ சொல்ல வந்தது ஞாபகம் வர, “ஏன் அம்மு? தாத்தா என்ன சொல்ல வந்தாரு?” என்று ரிது, பாட்டியிடம் கேட்டாள்.
“ஏன் கிட்ட கேட்டா எனக்கு எப்படித் தெரியுமாம்? ஏதோ ‘இம்போர்ட்டன்ட்’னு சொன்னாரு. அவரேதான் சொல்லுவாராம், ஓவரா ‘சீன்’ போடுறாரு… நீயே கேட்டுக்கோ” என்று கூறி பாட்டி அங்கிருந்து நகர்ந்தார்.”
‘இம்போர்ட்டன்ட்’? என்னவா இருக்கும்?” என்று யோசித்தவள், “சரி, கேட்போம்” என்று தோளைக் குலுக்கிவிட்டுச் சென்றாள்.
அம்முவும், ரிதுவும் சாப்பிடும் மேஜைக்கு வர, எல்லோரும் அவளைப் பார்த்தனர்.
ஈஷா அவளை முறைத்தார். “ஏன்மா, என்னை ‘சைட்’ அடிக்கிறீங்க? அதான் டாட் இருக்கார்ல?” என்று ரிது கிண்டல் செய்தாள்.
அதற்கு ஈஷா, “ஏய், கொழுப்பாடி? வந்து வாயை மூடிட்டு சாப்பிடு” என அதட்டினார்.
அருகில் இருந்த திரிலோக், “வாயை மூடிட்டு எப்படி டார்லிங் சாப்பிட முடியும்?” என ஈஷாவைக் கிண்டல் செய்தார்.
ஈஷா அவரைப் பார்த்து முறைக்க, அங்கே சிரிப்பலை குடிகொண்டது.
சாப்பிடும் மேசைக்கு அருகே இன்னொரு சிறிய, ஒருவர் அமரும் அளவுக்கு வேறொரு மேசை இருந்தது. அதில் அவர்களின் செல்ல வளர்ப்பு நாய் ‘புளூட்டோ’ அமர்ந்து “வல் வல்” என்று குறைத்தது.
“ஹே, புளூட்டோ! இருடா, உனக்கு ‘கிப்பிள்ஸ்’ எடுத்துட்டு வரேன்” என்று ரிது, உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்று எடுத்து வந்து அதற்குப் பரிமாறினாள்.
“குட் பாய்!” என அதைத் தடவி கொடுத்தவள், தன் இருக்கைக்கு வந்து அமர்ந்தாள்.
அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. அப்போது திடீரென ஞாபகம் வந்தவளாக,
“தாத்தா, நேத்து என்கிட்ட ஏதோ சொல்ல வந்ததா பாட்டி சொன்னாங்க. என்ன விஷயம் தாத்தா? அப்படி என்ன ‘இம்போர்ட்டன்ட்’?” என்று கேட்டாள்.
“அதுவாடா… என்னோட ஃப்ரெண்ட் பார்த்தசாரதி இருக்கான்ல? அவன் நேத்து ‘சர்ப்ரைஸ்’ கொடுக்கிறேன்னு மாலுக்கு வாடான்னு கூப்பிட்டான். நானும் போனேன். அங்க பார்த்தா அவன் பேரன் ஆதி வந்து நிக்கிறான்.”
“வாட்? அ… அ… அவனா?…”என திக்கியவள் தொண்டையை செருமி சாதாரணமக்கப்பட்ட குரலில் “அவன் எப்போ வந்தானாம்? என்ன விஷயமாம் அந்தச் சிடுமூஞ்சிக்கு?” என்று அவன் பெயறை கேட்டதும் அவளது நெஞ்சாங்குழியை உரசி கொண்டு இருந்த ‘AR’ என பிளாட்டினத்தில் infinity வடிவில் டைமோண்டால் பொறிக்க பட்ட டாலரை இடது கையால் அழுத்தி கொண்டாள்.
“அதுவா? அவனை காலேஜ்ல ‘கெஸ்ட் லெக்சரர்’ராக அப்பாயின்ட் பண்ணியிருக்காங்களாம். அவன் ஃபாரீனில் ‘ஹையர் ஸ்டடீஸ்’ முடிச்சிட்டு வந்துட்டான்ல? அவனுக்கு அங்க வேலை பார்க்கப் பிடிக்கலையாம்.
அதான் இங்க வந்துட்டானாம்” என்று தாத்தா கூறினார்.
“என்ன சப்ஜெக்ட்? ஏன், எங்க காலேஜ்? வேற எங்காவது போக வேண்டியதுதானே?” என்று ரிது கேட்டாள்.
“அது எனக்குத் தெரியாது… அவன் வர்றேன்னு சொல்லிட்டேன். நீயும் அவனும் ஃப்ரெண்ட்ஸ் தானே?” என்று தாத்தா கேட்க,
“யாரு, நாங்களா? அதை நீங்க எப்போ பார்த்தீங்க? நாங்க ஃப்ரெண்ட்ஸ் இல்லை. எப்பவுமே எதிரிகள் தான்” என்றாள் ரிது.
“ரிது, என்ன பேச்சு இது? ஆள் வளர்ந்திருக்கேயே தவிர, அறிவு வளரல” என்று திரிலோக் திட்டினார்.
“சும்மா இருங்க டாட். அவன் பண்ணது உங்களுக்குத் தெரியும்ல? அப்பவும் அவனுக்குதான் சப்போர்ட் பண்ணீங்க. இப்பவும் அதான் பண்றீங்க” என்று இட்லியை மென்றுகொண்டே கூறினாள்.
“ரிது, நான் என்ன தப்பா சொல்லிட்டேன்? அப்போ அவன் பக்கம் தான் நியாயம் இருந்தது. அதனால சப்போர்ட் பண்ணேன்” என்று திரிலோக் கூற,
“சரி விடுடா…” என்று மாதவ் இடைபுகுந்தார். பேத்தியின் முகம் மாறுவதைப் பொறுக்காமல்,
“சரி, சாப்பிடுடா ரிது. ஒண்ணும் பயப்படாத. அவன் உன்னைக் கடிக்காம நான் பார்த்துக்கச் சொல்றேன், என்ன?” என்று குறும்பாகப் பார்த்தார் மாதவ்.
அவர் சொன்னதும் அனைவரும் “கொல்”லெனச் சிரித்துவிட்டனர்.
“தாத்தாவ்வ்வ்வ்!” எனப் பற்களைக் கடித்தாள் ரிது.
பேத்திக்கு கோபம் வருவதைப் பார்த்த அம்மு பாட்டி, சிரிப்பை சிரமப்பட்டு அடக்கி,
“சும்மா இருக்க மாட்டீங்களா? பாப்பா, நீ சாப்பிட்டியா? டைம் ஆகுது பாரு, கிளம்பு” என்று மாதவிடம் ஆரம்பித்து ரிதுவிடம் முடித்தார்.
எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தவள், “வந்து பார்த்துக்கிறேன் உங்களை” என்று கூறிவிட்டு, கைகழுவி எழுந்து, தன் பையை எடுத்துக்கொண்டு, கார் சாவியைச் சுழற்றிக்கொண்டே சென்றாள்.
அவள் வீட்டு வாசலைத் தாண்டும் வரை பொறுமையாக இருந்தவர்கள், மறுபடியும் சிரிக்க ஆரம்பித்தனர்.
என்னடா இது… எதுக்கு இப்படிச் சிரிக்கிறாங்க?
அப்படி என்ன நடந்திருக்கும்?
யாரு அந்த ஆதி?
சஸ்பென்ஸோட தூங்குங்க.
நெக்ஸ்ட் எபியில் பார்க்கலாம். பை! 😉