இப்போதைக்கு இந்த இன்ட்ரோ போதும் பா ..
போக போக in between ல சொல்றேன்.
ரிது குளித்து வந்த உடனே அவளை பிலு பிலுவென பிடித்து கொண்டார் பாட்டி அம்மு (அப்படி தான் வீட்ல கூப்பிடுவாங்க).
அவள் உடை மாற்றும் வரை கூட அவரால் பொறுக்க முடியல
“ஏய்! ரிதூ நேத்து என்ன அச்சு ஆல் ஒகே தானே? ” என்கஅவரை பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்தாள்.
“என்னடி சிரிப்பு ? கேக்குறேன் ல செல்லு இல்லை னா எனக்கு நாளே ஒடாது” என சொல்ல.
“அது அம்மு … நேத்து நாங்க. ..”
” நீங்க? ??”
” அந்த ….”
” ஏன் டி இழுக்கற சொல்லேன்…” என கெஞ்சவே ஆரம்பித்து விட்டார்…
ரிது கண்களில் குறும்பு மின்ன
” சரி சரி கண்ல ஜலம் வெச்சிராதீங்கோ அதை யார் பாக்க …சரி கேளுங்க” என கூறியவள் விட்டத்தை பார்க்க அம்மு பாட்டியும் ஃபாளஷ் பேக்கிற்கு பயணித்தார்.
” என்ன பார்க்கிறிங்க வங்க நாமளும் போவோம்”
“நேத்து நானும்…நானும் என் பிரண்ட்ஸும் மாலுக்கு போயிருந்தோம் இல்ல அப்போ நாங்க எஸ்கேலாட்டர் ல இருந்து 2வது ப்லொர் ல சிரிச்சுட்டு நடந்து போய்ட்டு இருந்தோமா”….
(Author: மீதிய நான் சொல்றேன்)
நேற்று மாலுக்கு சென்ற ரிதுவும் அவளது தோழிகளும் 3 பேரும் எஸ்கேலாட்டரில் இருந்து 2வது மாடியில் உள்ள nykaa ஷோரூமில் ஷாப்பிங் செய்யது முடித்து வெளியே வந்தனர்.
தேவையான காஸ்மெட்டிக் பொருட்களை வாங்கி வெளியே வந்தவர்கள் ஒருத்தரை ஒருத்தர் கலாய்த்து கொண்டும் வாங்கி வந்த பொருள்களுக்காக சண்டை போட்டுக் கொண்டும்.
வெளியே வந்தனர் வரும் வழியில் எதிரே வந்தவனை மூன்று பேரும் பார்க்கவில்லை அவனும் தொலைபேசியில் பிஸியாக இருந்ததினால் எதிரே வந்த மூன்று பெண்களை அவனும் பார்க்கவில்லை.
அதில் அவன் நேரே இடித்தது வேறு யாரும் இல்லை நம்ம ரிது வை தான்.
அவன் இடித்த இடையில் ரிது கையில் வைத்திருந்த பேகையும் அவளது செல்போனையும் தவறவிட்டால்.
அது விழுந்த உடனே அதிர்ச்சியில் அவள் திரும்பி அவனை யார் தள்ளுனது என்று பார்த்தால்.
அவனும் அப்போதும் அவளை திரும்பி பார்த்தான். அங்கே நின்று இருந்த நெடியவனை பார்த்தவளுக்கு சுறுசுறுவென கோவம் ஏறியது.
” அச்சச்சோ சாரிங்க “என அவன் கூறியது தான் தாமதம் அவனது முகத்தை கூட அவள் சரியாக கவனிக்கவில்லை மூக்கு விடைக்க பொரிய ஆரம்பித்துவிட்டாள்.
” இடியட் கண்ணு தெரியலையா எங்க பாத்துட்டு வர முன்னாடி மூணு பொண்ணுங்க வந்தா போதுமே எங்க இருந்தாலும் வந்துருவீங்களே இடிக்கிறதுக்கு சென்ச்லஸ் ” என வாய்க்கு வந்தப்படி அவனை திட்ட ஆரம்பித்து விட்டாள்.
அவன் திரும்பி வாய் திறப்பதற்கு சந்தர்ப்பம் கொடுக்கவில்லை அவன் “ஏங்க… நான்…” என அவன் பேச வாய் எடுக்க
” பேசாத மான் வாய மூடு” என கத்தினாள்
“ஏங்க நான் ஒரு நிமிஷம்….” என திரும்பி ஆரம்பிக்க
அப்போது தான் சரியாக அம்மு பாட்டியின் போன் கால் வந்தது”இது வேற” என கடுப்பில் இருந்தவள் அவனை நிறுத்துமாறு கை காண்பித்து அவளது போனை உயிற்பித்து காதுக்கு குடுத்தாள்.
“என்ன வேணும் உங்களுக்கு” என கத்த மறுமுனையில் என்ன கூற பட்டதோ
“அதுலாம் வாங்கிட்டு வர முடியாது உங்க புருஷன் கிட்ட கேளுங்க இப்போ போன் ஆஹ் வைங்க என கத்தியத்தில் ரெஸிவேறுக்கு அந்த பக்கம் இருந்த அம்மு “என்ன ஆச்சு இவளுக்கு ஒரு facemask வாங்கிட்டு வர சொன்னது குத்தமா இந்த கத்து கத்துறா” என சொன்னவர் “இன்னைக்கு யார் மாட்னாங்களோ தெரியலையே பாவம்…. ஈஷா அந்த பயத்தம் மாவட்ட தயிர் ல கலந்து வை… ஈவினிங் கிளப் கு போனும்.. பேஸ் டல் ஆஹ் இருக்கு” என சொல்லி போனை கட் செய்து விட்டார்.
இதறதுக்கு இடையில் ஆல்ரெடி வேற போன் காலில் இருந்த அந்த நெடியவன் “நான் திரும்பி கூபிட்றேன்” என கூறி அந்த அழைப்பை தூண்டிதான்.
மாலில் இருந்தவர்கள் எல்லாம் இவர்களை திரும்பி பார்த்து கொண்டு செல்ல… அதனை பார்த்தவன்.. அவளிடம் சாரி கேட்டு தான் நிலையை சொல்ல திரும்பியவன் அவளை அப்போது தான் செரியாக பார்த்தான். அவள் அணிந்து இருந்த ஜீன்ஸ் உம் ஹூடி ட்ஷிர்ட் உம் போனியில் அடக்கியா முடியும், சிறிது foundation போட்ட முகமும் லைட் nude ஷேடு லிப்ஸ்டிக்க்கும் அவளுக்கு இன்னும் அழகு சேர்த்தது..
அவளை பார்த்து கொண்டே கண் சிமிட்டாமல் இருந்தவனுக்கு சொடக்கு போட்டு நிகழ் காலத்திற்கு அழைத்து வந்தாள்.
” ஹலோ மிஸ்டர் என்ன கனவா நான் இங்க கத்திட்டு இருக்கன்… “என அவள் விடாமல் சண்டைக்கு நிக்க..
அவள் சொட்டக்கு போடத்தில் கடுப்பானவன் இருந்தும் பொறுமையாக இரு கைகளையும் மார்புக்கு நடுவே கட்டி கொண்டு அவளை பார்த்தான்.
“ஹலோ” என அவள் மறுபடியும் தொண்டங்குவதற்குள் அவளது தோழிகள்
” ஹே ரிது போதும் டி வா போலாம் அவன் பார்வையே சரி இல்லை பிரச்சனை வேண்டாம் வா” என இழுத்து கொண்டு சென்றனர்..
போறவ அமைதியா போகாம திரும்பி அவனை பார்த்து கண்ணை சுருக்கி விரலை நீட்டி பத்திரம் காட்டி விட்டு சென்றாள்.
அவள் செய்த செய்யலை பார்த்தவனுக்கு கீற்றாக உதட்டில் ஒரு புன்னகை மலர்ந்தது.”ரிது” என அவளது பெயரை உச்சரித்து பார்த்தான் புன்னகை முகம் மாறாமல் அவனது பாண்ட் பாக்கெட்டில் கைகளை விட்டு அவள் சென்ற திசையில் பார்த்தான்.
இது எதையும் நம் நாயகி பார்க்கவில்லை. (பார்த்திருந்தால்???? ஊ ஊ தான்))வழி எல்லாம் “இடியட், ஸ்டுபிட்..” என சரமாரியாக திட்டி கொண்டு சென்ற ரிதுவை அவளது தோழிகள் food court கு அழைத்து சென்றனர்.
சரி விடு டி போனா போறான்… என கையில் kfc சிக்கன் ட்ரெவை கொண்டு வந்து வைத்தால் அக்ஷயா அவளது தோழிகளில் ஒருத்தி.”உனக்கு புடிச்ச சிக்கன் வாங்கி வந்து இருக்கேன் சாப்பிடு” என அவளை சமாதானம் செய்ய முயன்றாள்.
சிக்கனும், அவளது மூடை மாற்ற நினைக்கும் தோழிகளை பார்த்து மன்ம் நெகிழ்ந்து போய் அவர்களுடன் கலகலப்பாக இருந்தாலும்… அவளது மனதில் “ஏன் அவன் திரும்பி சண்டை போடல”என்ற யோசனை இல்லாமல் இல்லை.
அதே யோசனை உடன் தோழிகளோடு உண்டு முடித்து அவர்களை தத்தம் வீட்டில் இறக்கி விட்டவல் தலைவலியோடு 8 மணி அளவில் வீட்டிற்கு வந்தாள்.
அவள் வந்ததும் நேராக அவளிடம் “என்ன டி ஆச்சு?” என கேட்ட தாயையும் பட்டியையும் பார்த்த ரிது “headache” என ஒற்றை வார்த்தை கூறி அவள் அறைக்கு சென்று கதவை அடைத்தாள்.
மருமகளும் மாமியாரும் ஒருவரை ஒருவர் பார்த்து தோலை குலுக்கி விட்டு அவர் அவர் வேலையை பார்க்க சென்றனர்.
உள்ளே சென்றவள் போன் இல் 4 மணிக்கு ஜாகிங் செல்ல அலாரம் வைத்து விடிவிட்டு படுத்தாள்.” அதுக்கு அப்றம் இப்போ தான் எழுந்தேன் ” என முடிக்க
“ஓஓஓஓ” என கதை கேட்பது போல் கூறியவரை முறைக்க
” ரிது குட்டி அது ஒன்னும் இல்லை டா தாத்தா நீ தூங்குன அப்றம் எதோ உங்கிட்ட பேசணும் னு வந்தாரு நீ தல வலியோட படுத்திர்கனு சொன்னதும் உன் போன் ல அலாரம் எடுத்து மாத்தி வெச்சிட்டு போனாரு நான் வேணான்னு தான் சொன்னேன் அவர் கேக்கல” என்க.
“அதான் எனக்கு தெரியுமே..”என்றாள்.
“எப்படி?” என்றார் அம்மு பாட்டி