“என்ன ப்ராப்ளம்?” என தாத்தா கேட்டதும் பதில் கூற வந்த கோபாலை தடுத்தது ஒரு பெரும் குரல்.
“தத்தாதாதா”அக்குரல் வந்த திசையை திரும்பி பார்த்த மாதவ்,
“ஹாய் டா ரிதூ, குட் மார்னிங். காலையில என்ன காளி அவதாரம்? காலேஜ்ல ல பேன்சி டிரஸ் காம்பிடேஷனா?” என குறும்பு சிரிப்புடன் கேட்டார்.
ஏன் என்றால் அவள் இருந்த கோலம் அப்படி.. கண்ணில் வைத்து இருந்த மை அவள் தூங்கி எழுந்ததில் கண்ணை சுற்றி ஸ்மெட்ஜ் ஆகி இருந்தது.
பார்க்க சந்திரமுகி ஜோதிகாவை போல இருந்தாள்..என்ன பரதநாட்டியம் காஸ்டியும் தான் போட வில்லை மாறாக ஒரு 3/4த் பண்டும் ஒரு ட்ஷிர்டும் அணிந்து இருந்தாள்.
அவர் கூறியதில் பற்களை நறநற நறநறவென்று கடித்த ரிதூ என அழைக்கப்படும் ரித்திமா,
“என்ன நக்கலா? ஏன் அலாரம் டைம் மாத்தி வச்சிங்க? நான் இன்னைக்கு காலேஜ் சீக்கிரம் போறேன்னு நேத்து சொன்னேன்ல?” என்று கீற்சிட்டாள்.
அவள் கோபத்தைப் பார்த்த ஈஷா முதலில் சுற்றம் உணர்ந்து “மாமா அவங்க…” என இழுக்க.
அவர் “ச்ச மறந்துடே்டேன்” என திரும்பி அங்கு இருந்தவர்களுக்கு சமாதானம் கூறினார்.
“சாரி, நாளைல ல இருந்து உங்களுக்கு இந்த டிஸ்டர்பன்ஸ் இருக்காது” என கூறினார்.
“ஏன் சார், பாப்பா படிக்க வெளி ஊர் போறாங்களா?” என கேட்டார் எதிர் வீட்டுக்காரர் சண்முகம்.
லேசாக சிரித்து, “இல்ல பா, ‘சவுண்டு புருப்’ போட சொல்லிர்கேன்.” போனா நல்ல நல்லாதான் இருக்கும் என்று மனதில் நினைத்தாரே தவிர வெளியே மூச்சி விடவில்லை. (சொல்லிருந்தால் அங்க ஒரு பெரிய சம்பவம் நடந்துருக்கும்).
தாத்தா அவர்களுக்கு சமாதானம் சொல்லி அனுப்பும் கேப்பில் ஈஷா மகளை முறைத்தார்.
“என்ன லுக்கு?” என்று கேட்ட ரிதூவை,
“போடி போய் ரெடியாகு…காலையில சண்டை…” என்று கூற வருவதற்குள் இடைபுகுந்தார் ‘தி கிரேட் கிரானி அமிர்தா பாட்டி’,
“ரிதூ குட்டி, நான் உன் உன்கிட்ட நேத்தே பேசணும்னு நினைச்சேன். ஏதோ வேலை இருக்குன்னு போய்ட்ட” என்று அவளை இழுத்துச் சென்றார்.
மருமகள் ரிதூவை வெளுத்து வாங்கி விடுவாள் என்று. தனது தாயை பார்த்து நாக்கை வெளியே நீட்டி பழிப்பு காண்பித்து தனது இடது தோளில் நாடி இடித்து சென்றாள் ரிது.
அவளைப் போலவே ஈஷாஉம் பழிப்பு காட்டி நாடி இடித்தார். உள்ளே சென்ற அமிர்தா,
“ரிது சீக்கிரம் ரெடியாகு…உன் கிட்ட ஒன்னு கேட்கணும்” என்று சொல்ல …
அவர் என்ன கேட்கப் போகிறார் என்பதை முன்பே ஊகித்து விட்டவள் குறும்பு சிரிப்புடன் குளிக்க சென்றால் நம் நாயகி (அவ்ளோ ஸ்மார்ட்).
இந்த கேப்ல நாம ஒரு இன்ட்ரோ போய்டு வரலாம். மிஸ்டர் மாதவ் இளம் வயதில் சென்னையில் ஒரு பெரிய கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தில் சாதாரண கன்சல்டிங் அசோசியேட்டாக வேலை பார்த்தார்.
அவர் அங்கே வேலை செய்யும் போது ஒரு சைட் விசிட்டில் அமிர்தாவைப் வை பார்த்து தடுக்கி விழுந்தார்.
அமிர்தாவிற்கும் அதேதான். இருவர வீட்டில் பேசி அனைவரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
அவர்களுக்கு மகன் த்ரிலோக் பிறந்ததும் செல்வமும் பன்மடங்கு பெருகியது. இருப்பினும் எந்தவொரு பந்தாவும் இல்லாமல் இருந்தனர்.
மகன் த்ரிலோகும் ஈஷாவை வை காதல் திருமணம் செய்ய அவர்களுக்குப் பிறந்த மகள் தான் நம் நாயகி ரித்திமா.ரிது சிறு வயதில் இருந்து ஒரு “டாம் கர்ள்” போல வளர்ந்தாள்.
தன்னுடனே படிக்கும் சிறுமிகள் கவுன், ஸ்கர்ட் என விதவிதமாக அணிந்தால் மேடம் மட்டும் எப்பவும் ஜீன்ஸ், டரவுசர்ஸ், ஜாக்கரஸ என அணிந்து கொண்டு சுற்றினாள்.
அது மட்டுமா சரியான அறுந்த வாலு.சக மனவர்களை கலாய்த்தால் பரவாயில்லை. இவள் வாத்தியாரை கூட விட்டு வைப்பது இல்லை.
இருப்பினும் அவளை பிடிக்காதவர்கள் யாரும் இல்லை.5 அடி 3 அங்குலம், மாநிறம், ஃபேதர் கட் செய்யப்பட்டு முடியை சுருட்டி கிளிப்பில் அடக்கி இருந்தால்.
பெயர் போன இஞ்சினியரிங் காலேஜில் ARTIFICIAL INTELLIGENCE படித்துக் கொண்டுிருந்தாள்.