விட்டாலும் விலகாதே! ~ விலகல் 5.2

ஏய்” என்று கத்தியவள் கோபத்துடன், இனி ஒரு முறை இப்படி பேசின பல்லை கழட்டி கையில் கொடுத்திருவேன். என்று ஆள்காட்டி விரலை நீட்டி எச்சரித்தாள்.

திவ்யாவின் கோபத்தை கண்டு, பவித்ரா சிறு பதறலுடன், ஜனனி நீ கிளம்பு” என்றாள்.

ஆனால் ஜனனியோ அசராமல் திவ்யாவை பார்த்து, ஒரு முறை என்ன, பல முறை சொல்வேன்… அவர் நம்ம அப்பா தான்.

திவ்யா, அவள் கன்னத்தில் அறைந்துவிட,

பவித்ரா, என்ன செய்ற திவி?” என்று பதற்றத்துடன் அதட்ட,

அப்பொழுது, என் மேல் உள்ள கோபத்தை ஏன் சின்னப் பொண்ணு கிட்ட காட்டுற?” என்ற இறைஞ்சும் குரலில்…

வேகமாகத் திரும்பிய திவ்யா கடும் கோபத்துடன், உங்களை அடிக்க முடியலையே, அதான் உங்க பொண்ண அடிக்கிறேன்.

அவர் துயரத்துடன், அப்போ, நீ யாரு?”

அனாதை!

திவ்யா!” என்று அவர் அதிர்வுடன் அவளைப் பார்த்தார். அவர் கண்களில் வேதனையும் வலியும் நிறைந்திருந்தது.

அவரது வலியை பொருட்படுத்தாமல் திவ்யா, என்னை அனாதை ஆசிரமத்தில் சேர்த்த நொடியில், எனக்கும் உங்களுக்குமான உறவு முடிந்து போனது… இனி நீங்களோ, உங்க மகளோ என் முன் வந்து நிற்காதீங்க…! மீறி வந்தால், நான் எங்கேயாவது கண் காணாத இடத்துக்குப் போய்டுவேன்.

அப்பொழுது அங்கே வந்த ராஜாராம், என்ன பேச்சு இது திவ்யா?” என்று அதட்டிவிட்டு அந்தப் பெண்மணியிடம், நீ ஏன் இங்கே வந்த சுபா?” என்றார்.

கணவரின் குரலில் கண்ணில் வழிந்த நீருடன் திரும்பியவர், ‘என்னால் முடியலையே!’ என்று கண்களால் பேசினார்.

மனைவியின் துயர் அறிந்து, தோளில் ஆறுதலாக கை போட்டவர்… கண்களிலேயே நம்பிக்கையும், தைரியமும் ஊட்டினார். சில நொடிகளில் கண்களை துடைத்து நிமிர்ந்து நின்றார், சுபாஷினி(ராஜாராமின் மனைவி). கணவரின் அன்பிற்காக, தன் துயரை தன்னுள் புதைக்கொண்டு நிமிர்ந்து நின்றவரை, திவ்யா வெறுப்புடன் பார்த்தாள்.

திவ்யாவின் வெறுப்பில் மீண்டும் மனம் கலங்கத் தான் செய்தது. இருப்பினும் மனதை தேற்றி, திவ்யாவை பார்த்து உறுதியான குரலில், நிச்சயம் ஒரு நாள் என்னை நீ புரிந்து கொள்வ…”

உங்களை பற்றி தெரிந்தவரை போதும்… இதுவே நான் உங்களை சந்திப்பது கடைசியாக இருக்கட்டும். என்றவள் நகர்ந்தாள்.

அப்பொழுது சொடக்கு போட்டு அழைத்த ஜனனி, ஹலோ சிஸ்… இனி அடிக்கடி உன்னை வந்து பார்ப்பேன்… உன் தைரியத்தைப் பற்றி இந்த காலேஜே பேசுது! ஆனா, இனி உன்னை வந்து பார்த்தால் கோழைத்தனமா புறமுதுகு காட்டி ஊரை விட்டு ஓடுவேன்னு சொல்லுற?”

இப்படியெல்லாம் பேசினால், இங்கேயே இருந்துடுவேன்னு தப்புக் கணக்கு போடத! நான் கோழை போல் ஓட நினைக்கலை… வெறுப்புடன் விலகுறேன்.” என்றவள் தோழியை அழைத்துக்கொண்டு விடுதி நோக்கிச் சென்றாள்.

செல்லும் திவ்யாவை கலங்கிய விழிகளுடன் பார்த்துக் கொண்டிருந்த மனைவியின் தோளில் அழுத்தம் கொடுத்து, அவரது பார்வையை தன் பக்கம் திருப்பிய ராஜாராமன், நீ சொன்னது போல், ஒரு நாள் எல்லாம் சரியாகும்.

ப்ச்”

ஜனனி, உச்சு கொட்டுறதை விட்டுட்டு, அக்காவை எப்படி கரெக்ட் பண்றதுனு யோசிங்க”

“…”

அம்மா, சும்மா சோக கீதம் வாசிக்காதீங்க… நமக்கு இன்னும் ஒரு வருஷம் தான் இருக்குது… அப்புறம் படிப்பு முடிஞ்சு, அக்கா சொன்னது போல எங்கேயாவது போய்டுவா…”

ராஜாராம், அவ எங்க போனாலும், என் பார்வை அவளை தொடர்ந்துட்டு தான் இருக்கும்.

தொடர்ந்து என்ன பிரயோஜனம்?”

சில நொடிகள் மௌனத்தில் கழிய…

ஜனனி, இந்த அம்மா சொன்னதை கேட்டு, அக்காவை நீங்க விட்டிருக்கக் கூடாது பா? அதுவும் அந்த ஆளிடம்.

ராஜாராமன், ஜனனி, மரியாதை கொடுத்துப் பேசு.

அந்த ஆளுக்கெல்லாம் என்னால் மரியாதை கொடுக்க முடியாது. என்றவள் அன்னை முகத்தில் தெரிந்த இறுக்கத்தில், பேச்சை மாற்றினாள்.

ஹலோ சுபா மேடம்! உங்க பெரிய பொண்ணை பற்றிய கவலையில், சின்ன பொண்ணை மறந்திறாதீங்க! அதுவும் இன்னைக்கு என் பிறந்த நாள்…! ஹோட்டல் கூட்டிட்டு போறேன்னு சொல்லியிருக்கீங்க…! அப்புறம் மால் போகணும்… நான் கேட்பதையெல்லாம் வாங்கித் தரணும்… வாங்க… வாங்க… கிளம்பலாம். என்று பெற்றோரை விரட்டினாள்.

ராஜாராம், ஒரு சின்ன வேலை இருக்குது… என் ரூமுக்கு வந்து வெயிட் பண்ணுங்க. என்றபடி மனைவியையும் மகளையும் அழைத்துச் சென்றார்.

கல்லூரி விடுதி அறைக்குச் சென்ற திவ்யா கோபத்துடனும், வெறுப்புடனும், இயலாமையுடனும் முகத்தை மூடிக்கொண்டு படுக்கையில் அமர்ந்தாள்.

அவளது தோளில் பவித்ரா கையை வைக்கவும், தோழியின் இடுப்பை இறுக்கமாக கட்டிக்கொண்ட திவ்யா, சில நொடிகளில் முகத்தை மட்டும் நிமிர்த்தி, எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கணும்?”

உன்னை விட மோசமான நிலையில் பலர் இருக்காங்க… மனசை போட்டு குழப்பிக்காம, எப்பொழுதும் போல தைரியமா நிமிர்ந்து நில்! 

சில நேரம், இந்த வாழ்க்கை மீது வெறுப்பா இருக்கு?”

இப்போ கூட, நீ நினைத்தால் ஒரு அன்பான குடும்பம் உனக்கு கிடைக்கும்.

திவ்யாவின் உடலும் மனமும் இறுகியது.

என்னை வேண்டாம்னு சொன்ன குடும்பம், எனக்கு வேண்டாம்.

அப்போ……”

எனக்கு யாரும் வேண்டாம்.

உன் காதல் கணவன் கூடவா?”

ஒரு நொடி அதிர்ந்த திவ்யா, அடுத்த நொடி சிரித்தபடி, இங்கே காதலுக்கே வழி இல்லை, இதில் காதல் கணவனா?”

கடவுள் ஒரு கதவை மூடினா, இன்னொரு கதவை திறப்பார்.

என் விஷயத்தில் ஒன்னு இல்லை, இரண்டு கதவுகளையும் மூடிட்டார். என்று கூறியவள், பின் தலையை உலுக்கிக்கொண்டு “சரி அதை விடு… இன்னைக்கு இவினிங் பீச் போகலாமா?”

போகலாமே”

பீச் போயிட்டு… அப்படியே… நான்… உன்னோட வீட்டிற்கு வரட்டுமா?”

வா… இதை கேட்கணுமா? எதுக்கு தயக்கம்?”

தேங்க்ஸ்டி”

பவித்ரா இடுப்பில் கை வைத்து செல்லமாக முறைக்கவும்,

திவ்யா புன்னகையுடன், நீ தான் எனக்கு தேங்க்ஸ் சொல்லக் கூடாது… நான் சொல்லுவேன்.

எப்போதும் இப்படி சிரிச்சிட்டே இரு.

அப்புறம் என்னையும் உன்னை போல நினைச்சிருவாங்களே!”

யாரு, என்ன நினைப்பாங்க?”

மற்றவர்கள்… என்னையும் உன்னை போல லூசுன்னு நினைச்சுப்பாங்கனு சொன்னேன். என்று புன்னகையுடன் கூற,

பவித்ரா இப்பொழுது நிஜமாகவே முறைத்தாள்.

வாய்விட்டு சிரித்த திவ்யா, சரி சரி… வேலையைப் பார்… அந்த டிரெஸ்ஸை எல்லாம் இந்த பேக்கில் வை.

என் முறைப்பை கொஞ்சமாவது மதிக்கிறியா?”

நீ முறைச்சியா? எப்போ? சொல்லவே இல்ல…!”

பவித்ரா, மீண்டும் முறைக்க முயற்சித்து சிரித்துவிட்டாள்.

மனதின் கொதிப்பை வெளியே காட்டாமல், சிரித்தபடி தோழியுடன் கிளம்பிய திவ்யாவின் அகத்தோடு முகமும் விடுதி வெளியே நின்றவரைக் கண்டதும், சிரிப்பை தொலைத்து இறுகியது.

error: Content is protected !!