சுப முகூர்த்த நேரத்தில் கெட்டிமேளம் முழங்க, மக்களின் ஆராவாரத்துடன், மாறவர்மசிம்மன் பூங்குழலி கழுத்தில் பொன் தாலியுடன் கூடிய மங்கள நாணை சூடி இரண்டு முடிச்சு போட, இளவரசி மூன்றாவது முடிச்சைப் போட்டாள்.
அமரகேசரி புன்னகையுடன் நண்பனின் கையை குலுக்கிய படி, “இனிமையான வாழ்க்கை தொடங்கட்டும்.. வாழ்த்துகள் நண்பா..! வாழ்த்துகள் மா” என்றான்.
மாறவர்மசிம்மன் புன்னகையுடன், “நன்றி நண்பா” என்று கூற, பூங்குழலி மென்னகையுடன், “நன்றி அண்ணா.” என்றாள்.
அடுத்து இளவரசன் புன்னகையுடன் தமையனின் கையை குலுக்கிய படி, “வாழ்த்துகள் சிம்மா.” என்றான்.
மாறவர்மசிம்மன் அதே புன்னகையுடன், “நன்றி விக்ரம்.” என்றதும்,
இளவரசன் புன்னகையுடன் பூங்குழலியை பார்த்து, “வாழ்த்துக்கள் அண்ணியாரே!” என்றான்.
அவளும் புன்னகையுடன், “நன்றி கொழுந்தனாரே!” என்றாள்.
இளவரசியும் மகிழ்ச்சியுடன் தமையனின் கையை குலுக்கியபடி, “மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா.” என்றாள்.
அவளது ‘அண்ணன்’ என்ற விழிப்பில் மாறவர்மசிம்மன் இன்ப அதிர்ச்சியுடன், தனது கழுத்தில் இருந்த தங்கச் சங்கலியை அவளுக்குப் போட்டு, அவளது தலையை வருடியபடி, “நன்றி மா.” என்றான்.
அவள், “இதெல்லாம் எதற்கு அண்ணா?” என்று கூற, அவன் புன்னகையை மட்டும் பதிலாகத் தந்தான்.
இளவரசி பூங்குழலியின் கையை குலுக்கியபடி, “மனமார்ந்த வாழ்த்துகள் அண்ணி” என்றதும், பூங்குழலி அவளை தோளோடு லேசாக அணைத்தபடி, “நன்றி காஞ்சி” என்றாள்.
இளவரசனைப் பார்த்து, “அண்ணன் என்று அழைத்தால் பரிசு கிடைக்கும் என்று தெரிந்து இருந்தால், அவ்வாறே அழைத்து இருக்கலாமோ! என்று தானே யோசிக்கிறீங்க?” என்று பூங்குழலி வம்பிழுக்க,
அமரகேசரியும் இளவரசியும் சிரிப்புடன், “அதே அதே” என்றும், “அதே தான்” என்றும் கூற,
இளவரசன் பாவமாக முகத்தை வைத்தபடி, “ஏன் இப்படி?” என்றான்.
இவர்களின் பாசப் பிணைப்பை ஆனந்தத்துடன் சந்ரா, தீரன், தயாளன், சுதிர் மற்றும் ஆணையரும் பார்த்துக் கொண்டிருக்க, மகாராணி எப்பொழுதும் போல் அமைதியான நிர்மலமான முக பாவனையுடன் ரசித்துக் கொண்டு இருந்தார்.
முதலில் மாறவர்மசிம்மனின் பெற்றோரின் புகைப்படத்திற்கு முன் கீழே விழுந்து ஆசிர்வாதம் வாங்கியவர்கள், பிறகு, ராஜமாதா மற்றும் மகாராணியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர்.
ராஜமாதா இன்னும் அப்படியே தான் இருக்கிறார். ஆனால் அனைவர் முன்பும் வெறுப்பை காட்ட முடியாமல் உள்ளுக்குள் குமைந்தபடி வெளியே இருவரையும் ஆசிர்வதிப்பது போல் நடித்தார்.
அடுத்து, மணமக்கள் ஆணையர் மற்றும் ஆசிரம ஐயா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர்.
பிறகு கொலுவிருக்கையின் முதல் தளத்தில் இருக்கும் முன் பக்க உப்பரிகைக்குச் சென்று கை கூப்பி வணங்கியபடி, மக்களுக்கு காட்சி அளித்தனர். மக்கள் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் எழுப்பினர்.
அன்று இரவு ரோஜாவனத்தில் அவர்களின் பிரத்யேக அறை வண்ண மலர்களால் அலங்கரிக்கப் பட்டு இருக்க, தனது தேவியின் வருகைக்காக ஆர்வமும் மகிழ்ச்சியுமாக மாறவர்மசிம்மன் கீழே காத்துக் கொண்டு இருந்தான்.
நாணத்துடனும், ஒரு வித படபடப்புடனும் அரண்மனை உள்ளே பூங்குழலி நுழைந்ததும், மாறவர்மசிம்மன் இடைவரை குனித்து, “வருக! வருக தேவி” என்றபடி புன்னகையுடன் வரவேற்றான்.
“மாறா!” என்று பூங்குழலி சிணுங்கவும்,
அவளது சிணுங்கலில் எப்பொழுதும் போல் அவனது மனம் சிக்கிக் கொள்ள, சட்டென்று அவளை நெருங்கி, அவளது கையில் இருந்த பால் சொம்பை வாங்கி சிறு மேசையில் வைத்தவன், அடுத்த நொடி அவளை இறுக்கமாக அணைத்து, இதழில் இதழ் பதித்து இருந்தான்.
நீண்ட முத்தத்திற்குப் பின் இதழ்களை மட்டும் பிரித்தவன், “இன்று தேனூறிய செர்ரி பழம் அதிகமாக தித்திப்பதின் காரணம் என்னவோ, தேவி!” என்று சற்று கிறக்கத்துடன் கேட்டான்.
அவள் வெட்கத்துடன்,“ஹ்ம்ம்.. மாறா” என்று மீண்டும் சிணுங்கியபடி, முகத்தை அவனது நெஞ்சில் மறைக்க,
அவன் உல்லாசமாகச் சிரித்தபடி, அவளை கைகளில் ஏந்தியபடி, படிகளில் ஏறி தங்கள் அறைக்குச் சென்றான்.
பூப்போல் மென்மையாக அவளை மஞ்சத்தில் கிடத்தியவன், விடிவிளக்கை மட்டும் போட்டுவிட்டு அவள் அருகே படுத்தான்.
“நான் சபிக்கப் பட்டவன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன், தேவி.. தேவதையாய் வந்து எனக்கு சாபவிமோசனம் கொடுத்து, நம் குடும்பத்தை மீட்டுத் தந்து இருக்கிறாய்.. என் வாழ்வை வசந்தமாக்க வந்த தேவதை நீ தேவி.” என்றான்.
அவனை பார்க்கும்படி திரும்பிப் படுத்தவள், “உங்கள் அன்பையும் காதலையும், வரமாய் நீங்க தான் எனக்குக் கொடுத்து இருக்கிறீங்க.. நீங்கள் எனக்கு கிடைத்த பொக்கிஷம்.. உயிர் மூச்சு இருக்கும் வரை இதே காதல் எனக்கு வேண்டும், மாறா!” என்றவள் அவனது இதழில் இதழ் பதித்தாள்.
அவள் மென்மையாக ஆரம்பித்த முத்தத்தை சற்று வன்மையாக மாற்றி இருந்தான். அவளது கீழ் உதட்டையும் மேல் உதட்டையும் தனி தனியாக சுவைக்க ஆரம்பித்தவனின் கரம் அவளது வெற்றிடையில் பதிந்து அழுத்தம் கொடுக்க, அவளது ஒரு கரம் அவனது சிகைக்குள் நுழைந்து இறுக்கிப் பிடிக்க, மற்றோர் கரம் அவனது முதுகை இறுக்கமாக வளைத்துப் பிடித்தது.
அவளது தயக்கங்களும் சின்ன சின்ன மறுப்புகளும் அவனது வேட்கையில் மறைந்து போனது. அவளது நாணத்தையும் சிணுங்கலையும் ரசித்தபடி பெண்ணவளை நிதானமாக ரசனையுடன் கையாண்டான்.
தடைகளை அகற்றி, அவளது மேனியில் வலம் வர ஆரம்பித்த, அவனது கரமும் இதழும், சில இடங்களில் தேங்கி நகர, அவள் உணர்ச்சிகளின் குவியலாக மாறி இருந்தாள்.
“மா..றா” என்று அவள் திணறலுடன் அழைக்க,
அவன், “தேவி” என்று தாபத்துடன் அழைத்தான்.
அவளது செவ்விதழ்களை சுவைத்த படி தேடலை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றவன், காதலெனும் ஆழ்கடலினுள் மூழ்கி முத்துகளை எடுத்தான்.
அனைவருக்கும் சிம்மமாக இருக்கும் மாறனிற்கு பூங்குழலின் மென்மையை கற்றுக் கொடுத்தவள் அவனது உயிர்மூச்சாய் மாறி இருக்க,
இனி என்றும் அவன் வாழ்வில் புல்லாங்குழலின் காதல் இசை ஒலித்துக் கொண்டே இருக்கும்.
காலத்தின் ஓட்டத்தில்
வம்சங்கள் வாழ்ந்தாலும்…
ஞாலத்தின் ஓட்டத்தில்
அம்சங்கள் வீழ்ந்தாலும்
பொக்கிஷமாய் பாரம்பர்யம்
பொன் ஏட்டில் படித்தாலும்
போற்றாத பண்பும்
தேற்றாத அன்பும்
ஆற்றாத காயத்தை
ஆசுவாசப் படுத்துமன்றோ!
புல்லாங்குழலில்
பூங்குழலியின் சுவாசம்
ஆசுவாசம் தந்த காதை
காவியத்தின் இலக்கணமே! (இந்த கவிதை புத்தகம் வெளியிட்ட போது DTP வேலை பார்த்த செல்வி அக்கா எழுதியது)
**********இதே காதலுடன் இவர்கள் இனிதே வாழ வாழ்த்தி விடைபெறுவோம்********
குறிப்பு: அடுத்த ரீரன் கதையின் இன்ட்ரோ link இதோ:
https://forum.saranyahemanovels.com/threads/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87-intro.888/