புல்லாங்குழலே! பூங்குழலே! ~ பொக்கிஷம் தேடல் போட்டி
இறுதி நிலை
முதல் நிலைக்கான சரியான விடை:-
‘வெய்யோன் திசை சகதாத்திரி வழி காட்டுவாள்.’ என்றால்…..
‘கிழக்கு திசையில் இருக்கும் துர்க்கை வழி காட்டுவாள்.’ மற்றும் அதன் உட்பொருள்,
‘ரோஜாவனத்தில் பூமித்தாய் வழி காட்டுவாள்.’
குறிப்பு: உட்பொருள் கூற வேண்டும் என்று இல்லை. முதல் அர்த்தத்தை கூறி இருந்தாலே போதுமானது தான்.
முதல் நிலையில் வெற்றி பெற்றவர்கள்:-
meenakrish(100%)
kothai(100%)
suganyagnanavel(99%)
Kavi Natarajan(90%) – நீங்க sentence finish பண்ணலை ஆனால் உட்பொருளை லேசாக தொட்டு சென்றதால் 90% கொடுத்து இருக்கிறேன்.. ‘வழி கிடைக்கும்/காட்டுவாள்’ னு ரெண்டு வார்த்தைகள் சேர்த்து இருந்தால் 100% தந்து இருப்பேன்.
உதயா(85%) – கிழக்கு திசைனு சொல்லலைனாலும் சூரியன் உதிக்கும் திசை னு சொல்லி இருந்ததால் அதை கருத்தில் எடுத்து கொண்டேன். ஆனாலும் வார்த்தைகளும் அதன் அர்த்தமும் முழுவதுமாக சரியாக வரலை சிஸ்.. அதான் 85%
kaviragu, prikar(75%) – சூரிய திசையில் னு சொன்ன நீங்க கிழக்கு திசை னு சொல்லி இருந்தால் 100%
Srichitra(75%) – துர்க்கை என்று சேர்த்து கூறி இருந்தால் 100%
sujikarthik, Jeyaprabha, krishnav (50%) – கிழக்கு திசை மட்டுமே சரி.
முதல் நிலையில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். அடுத்த நிலையில் இருவர் மட்டுமே வெற்றியாளராக தேர்ந்தெடுக்க படுவீர்கள்.
minimum 50% எடுத்தவர்களை முதல் நிலையில் வெற்றியாளர்கள் என்று கூறி உள்ளேன்.
அதற்காக மற்றவர்கள் இறுதி நிலையில் பங்கு பெறாமல் இருக்க வேண்டாம், இறுதி நிலையில் உங்கள் பதில் 100% சரியாக இருப்பின், நீங்கள் வெற்றி பெற கூட வாய்ப்பு இருக்கிறது. முயற்சி செய்யுங்கள் தோழமைகளே!
hazeen, Harini Vinoth, Mahilrajini, Mini arul, Angel laddus – உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
Marlimalkhan – சூரியன் இருக்கும் திசை என்றால் தவறு, மாலையில் சூரியன் மேற்கில் இருக்கும். நீங்க சூரியன் உதிக்கும் திசை என்று சொல்லி இருந்தால் கூட 50% தந்து இருப்பேன். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
Ram Priya, Padmasubramanian – புதிய கோணம், ஆனால் பதில் தவறு. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
வைஸானிகா – யாரும் சொல்லாத கோணம்.. அதுவும் வடக்கு திசை பற்றி கூறியது முற்றிலும் சரி, அதற்கு பாராட்டுக்கள். ஆனால் இங்கே கிழக்கு தான் சரி, அதற்கான விளக்கம் 22வது எப்பியில் கொடுத்துவிட்டேன். இறுதி பதிலாக நீங்கள் கூறியது தவறு. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
இப்போது இறுதி நிலைக்கு செல்வோமா!!!!!!!
விதி முறைகள்:
- இந்த திரியில் கூறப்படும் பதில்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
- ஒரு நாள் மட்டுமே அவகாசம்.
- நாளை(செவ்வாய்) மாலை 4(IST) மணி வரை வரும் பதில்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
குறிப்பு:
- நாளை மாலை 4 மணியளவில் 23வது அத்தியாயத்தை பதிவிடுவேன்.
- சரியான விடை மற்றும் வெற்றியாளர்கள் புதன் அன்று அறிவிக்கப்படும்.
- இந்த முறை உங்கள் விடைகளுக்கான பதிலை நாளை மாலை 4 மணிக்கு மேல் கூறுவேன். ‘முழுவதுமாக சரியா’ அல்லது, ’75% சரியா’ அல்லது ‘பாதி சரியா’ போன்ற பதில்களை கூறுவேன்.
- நாளை நான்கு மணிக்கு மேல் என் பதிலுக்கு உங்கள் மறுபதில்/மாற்று பதில்களை கூறலாம், ஆனால் அவை விவாதத்திற்கு மட்டுமே, போட்டியின் பதிலாக கணக்கில் எடுத்துக்கொள்ளப் படாது.
போட்டி:
இரண்டாவதாக கிடைத்த ஓலைச்சுவடியில் இருக்கும் வரிகளுக்கான பொருள் என்ன? என்று கண்டு பிடியுங்கள் தோழமைகளே!!!
இதோ வரிகள்:
“மாயோன் முடிவின் வழி
அட்டாணி கிட்டும்..
மச்சபுள்ளி ராஜவந்தம் சீரியங்கும்
கருவூலம் தோன்றும்.”
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் தோழமைகளே!!!
உங்கள் பதில்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்……
உங்கள் அன்புத் தோழி,
கோம்ஸ்.