புல்லாங்குழலே! பூங்குழலே! ~ குழலிசை 15.3

“அவரை ராஜமாதா தடுத்து இருக்கலாம்! பிறகு நாளடைவில், கூறிப் பயன் இல்லை என்று நினைத்து அவர்களே விட்டு இருக்கலாம்!”

எல்லோரையும் நியாயப் படுத்துறீங்க.”

ராஜாமாதாவை நியாயப் படுத்த வில்லையே!” என்றவனின் உடலும் குரலும் இறுகி இருந்தது.

அப்பொழுது தான் நினைவு வந்தவளாக சற்று தயங்கிய குரலில், “உங்க அம்மா பற்றி ஏதோ சொன்னீங்களே!” என்றாள்.

அவனது உடல் மேலும் இறுகவும்,  அவள், “இல்லை.. கஷ்டமா இருந்தா சொல்ல வேண்டாம்” என்றாள்.

கண்களை இறுக்கமாக மூடித் திறந்தவன், “நீ தெரிந்துக் கொள்ள வேண்டிய விஷயம் தான் தேவி.. என் அன்னை எப்படி இறந்ததாக உனக்குத் தெரியும்? என்று கேட்டான்.

உடம்பு சரி இல்லாமல்” என்று அவள் இழுத்து நிறுத்த,

அவன், “அது வெறும் கண் துடைப்பு.. என் அன்னைக்கு காய்ச்சல் வந்தது உண்மை.. ஆனால் அது வெறும் சாதாரணக் காய்ச்சல் தான்.. அந்த நேரத்தில், ராஜமாதா நயவஞ்சகமாகச் செயல்பட்டு, என் அன்னையை கொன்றுவிட்டார்..

என் அன்னையை பார்த்துக்கொள்ள என்று தனியாக ஒரு ஆளை நியமித்து, தினமும் சுலபமாக செரிமானம் ஆகும் ஆகாரமான இடியாப்பம் மற்றும் கஞ்சி கொடுக்கச் சொல்லி இருக்காங்க..

இடியாப்பம் மற்றும் கஞ்சியில் மெதுவாகக் கொல்லும் விஷத்தை கலந்து கொடுத்து இருக்காங்க.. ஒரு நாள் பணிப்பெண் விஷத்தை கலக்கும் போது, சந்ராமா பார்த்துட்டாங்க.. என் தந்தையிடம் அழைத்துச் சென்று இருக்காங்க.. என் தந்தையின் கடுமையான விசாரணையில், அவள் உண்மையைச் சொல்லி விட்டாள். ஆனால், அதற்குள் காலம் கடந்துவிட்டது.. என் அன்னையை காப்பாற்ற முடியவில்லை.. எனக்கும் எதுவும் ஆகிவிடக் கூடாது என்ற எண்ணத்தில் தான், என் தந்தை என்னை நான்கு வயதிலேயே விடுதியில் சேர்த்து விட்டார்..

முதலில் நான் என் தந்தையை வெறுக்கத் தான் செய்தேன்.. சில ஆண்டுகளுக்கு முன் இந்த உண்மைகள் தெரிந்த பிறகு தான், என் தந்தையின் பாசம் எனக்குப் புரிந்தது.” என்றான்.

அவள் கோபத்துடன், “ராஜமாதாவை மகாராஜா போலீஸில் பிடித்துக் கொடுத்து இருக்கலாமே! அன்னை பாசம் தடுத்து விட்டதா?என்றாள்.

அப்படி இல்லை.. ராஜமாதாவை தண்டிக்க ஆதாரம் எதுவும் இல்லை.. ஏனென்றால், உண்மையைச் சொன்ன அன்றே, அந்த பணிப்பெண் விஷம் குடித்து இறந்து விட்டாள்.. அதாவது விஷம் கொடுத்துக் கொல்லப் பட்டாள்” என்றான்.

அவனது கையை ஆதரவாக பற்றிக் கொண்டவளுக்கு, அன்றொரு நாள் இடியாப்பத்தை கண்டு அவன் உணவை மறுத்ததின் காரணம் புரிந்தது.

ஒன்றுமில்லை தேவி.. இதை எல்லாம் நான் கடந்து வந்து விட்டேன்.” என்றான்.

பின் அவள் மெல்லிய குரலில், “நான் இங்கே வந்த காரணம்..” என்று ஆரம்பிக்க,

அவன், “தேவை இல்லை தேவி.. ஓரளவிற்கு நான் கண்டுபிடித்து விட்டேன்.. ஆதாரத்திற்காகத் தான் காத்திருக்கிறேன்.. அது கிடைத்ததும், நானே சொல்கிறேன்.” என்றான்.

அவள் மீண்டும் ஆச்சரியத்துடன் அவனைப் பார்க்க, அவனோ புன்னகையுடன்,

“ஆனால் நீ வந்த காரியம் நிறைவேறாது, தேவி” என்றான் உறுதியான குரலில்.

அவள் முறைப்புடன் ஏதோ கூற வர, அப்பொழுது அவனது கைபேசி சிணுங்கியது.

அழைப்பு ரஞ்சித்திடம் என்றதும் அதை எடுத்தவன், “சொல்லுங்க, ரஞ்சித்” என்றான்.

சார்.. நீங்க சந்தேகப் பட்டது சரி தான்.. கமிஷனர் சாரோட அக்கௌன்ட் ஸ்டேட்மென்ட் கிடைச்சிருச்சு.. அவர் தான் மீனாட்சிக்கு நிதி உதவி செய்து இருக்கார்.”

ஒரு  வாரம்  தேவைப்படும் என்று சொன்னீங்களே!”

அவர் அக்கௌன்ட் வச்சிருக்க பேங்க்கில் என்னோட பிரெண்ட் வேலை பார்க்கிறான். ஸோ, அவனை சரிகட்டி வாங்கிட்டேன்..

அவர் அக்கௌன்ட்டில் இருந்து, ட்ரஸ்ட்டுக்குத் தான் பணம்(money) ட்ரான்ஸ்பர் ஆகி இருக்குது.. அதை வச்சு, அவர் மீனாட்சிக்கு தான் உதவினார்னு ப்ரூவ் பண்ண முடியாது.. ஆனா, அவர் அனுப்பிய அமௌன்ட்டும், மீனாட்சி பீஸ்ஸும் ஒரே அமௌன்ட் தான்..

இது போக, இன்னொரு க்ளு கிடைச்சு இருக்குது.. நேத்து, ஆசிரமத்தில்  இருக்கும் ஆபீஸ் ரூமில் இருக்கும் சிஸ்டம் சரி பண்ண ஆள் கேட்டு இருந்தாங்க.. சிஸ்டம் சர்விஸ் பண்ணப் போனது நம்ம ஆள்.. அவன் வரும் போது சில டேட்டாஸ்(datas)கொண்டு வந்தான்.

அதில் ஆசிரமத்தில் நடந்த கல்சரல் ப்ரோக்ரம் ஒண்ணு இருந்தது.. அதில் ஒரு இடத்தில் கமிஷ்னர் சார், மீனாட்சி கூட சிரித்துப் பேசியபடி, தோளைத் தட்டிக் கொடுப்பது போல் இருக்குது.” என்று நீளமாக பேசி முடித்தான்.

விரைவாக கண்டு பிடித்ததற்கு நன்றி ரஞ்சித்.. அனைத்து ஆவணங்களையும், எனக்கு மின்னஞ்சலில் அனுப்பிடுங்க.”

ஓகே சார்” என்றவன், “வந்திருக்கும் ஆள் கமிஷனரின் ஆள்.. நீங்க கொஞ்சம் கவனமா இருங்க சார்..” என்றான்.

எனக்கு எந்தப் பிரச்சனையும் வராது.. கவலைப் படாதீங்க ரஞ்சித்.. உங்கள் அக்கறைக்கு மிக்க நன்றி.”

டிப்பார்ட்மென்ட்டில் மீனாட்சி பற்றி விசாரிக்க முடிந்தால் விசாரித்துச் சொல்கிறேன், சார்”

தேவைப்படாது.. காவல்துறை ஆணையர் சங்கரநாராயணன், என் தந்தையின் நண்பர் தான்.. நான் அவரிடம் பேசிக்கிறேன்.”

ஓகே சார்” என்றதும் அழைப்பைத் துண்டித்து திரும்பிய மாறவர்மசிம்மன் கண்டது தனது கைவளைவில் அமர்ந்தபடி, தன்னை முறைத்துக் கொண்டிருந்த பூங்குழலி என்ற அவனது தேவியைத் தான்.

குழலின் இசை தொடரும்…

error: Content is protected !!