குழலிசை 9
அடுத்த அறைக்குச் சென்றதும் மீனாட்சி கண்களை விரித்தபடி, “வாவ்.. எவ்வளவு வித்யாசமான பொருட்கள்.” என்றாள்.
அவளது முகத்தை உன்னிப்பாக பார்த்த மாறவர்மசிம்மன் அதில் உண்மையான உற்சாகம் தெரியவும் சகஜமானான். அந்த அறையில் ஒரு பக்கம் மண்ணில் செய்த பாத்திரங்கள் இருக்க, இன்னொரு பக்கம் அம்மிக் கல், ஆட்டுக்கல், உரல் என்று இருக்க, மற்றொரு பக்கம் பீங்கானால் செய்யப்பட்ட தட்டுகள், கிண்ணங்கள், கரண்டிகள், வித்யாசமான பாத்திரங்கள் என்று நிறைய இருந்தன.

கண்களை விரித்தவள், “இது எப்படி வேலை செய்யும்?” என்று கேட்டாள்.
“ஒவ்வொரு பானையிலும் வேர், மூலிகை என்று போட்டு வைத்திருப்பார்கள்.. மேலே இருக்கிற பானையில் தண்ணீரை ஊற்றுவார்கள்.. தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக கீழே இருக்கும் பானையில் விழும்.. அப்படியே அடுத்தடுத்த பானைகளிலும் நடக்கும்.. இதன் மூலம் குளிர்ச்சியான சுத்தமான மூலிகைத் தண்ணீர் கிடைக்கும்.”
“வாவ்.. எப்படி யோசிச்சு இருக்கிறாங்க! சான்சே இல்லை!”
“இந்த அரண்மனைக்கு வந்த பிறகு, பழையபடி ஆங்கிலம் உன் நாவில் நர்த்தனம் ஆடுகிறது.”“அது சட்டுன்னு வந்துடுது.” என்றவள் பீங்கான் பாத்திரம் ஒன்றைக் காண்பித்து, “இது என்ன? இதுல எதுக்கு சின்னதா ஓட்டை இருக்குது?” என்று கேட்டாள்.

“இதை இப்போ கூட யூஸ் பண்ணலாமே!”
“வேந்தபுரத்தில் சிலதை பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறோம்..”
“ஓ! ஆயுதங்கள் எல்லாம் எங்கே இருக்குது?” என்று கேட்டாள்.
“மாடியில் இருக்கிறது.. இறுதியாக அதைப் பார்க்கலாம்.” என்றபடி அவன் படிகளில் ஏற, அவளும் அவனுடன் ஏறினாள்.
அடுத்து சென்ற அறையில் கண்ணாடி தடுப்புக்குள் தங்கம், வெள்ளி மற்றும் பளிங்கினால் செய்த தட்டுகள், கிண்ணங்கள், கரண்டிகள் இருந்தன.
“எவ்வளவு குட்டியா அழகா இருக்குது.” என்றாள் குதூகலத்துடன்.
அவளது கண்களை உன்னிப்பாகக் கவனித்தவன் அதில் ஆசை இல்லாமல், ரசிப்புத் தன்மை மட்டுமே இருக்கவும், நிம்மதியாக உணர்ந்தான்.
இருந்தாலும் பொக்கிஷம் பற்றிய அவளது கேள்வி, அவனது மூளையை குடைந்துக் கொண்டு தான் இருந்தது. சில நாட்களாக காதல் மயக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்த மூளை, சற்றே விழித்துக் கொண்டதோ!
அவள் ஒவ்வொரு பொருளாக பார்த்துக் கொண்டிருக்க,
அவன் அங்கே இருந்த ஒரு வித்யாசமான பொருளைக் காட்டி, “இது என்ன என்று தெரியுமா?” என்று கேட்டான்.
அவன் காட்டிய இடத்தில், ஒரே வடிவமைப்பில் வெவ்வேறு அளவுகளில் நான்கு கருவிகள் இருந்தன. அவள் தெரியவில்லை என்பது போல் உதட்டை பிதுக்க, அவன்,

“ஹ்ம்ம்” என்று அவன் மென்னகையுடன் கூற,
அவளோ முறைப்புடன், “எவ்வளவோ பாத்திரங்கள் இருக்குது.. அதை எல்லாம் விட்டுட்டு, இதை வந்து விம் போட்டு விளக்குறீங்க!” என்றாள்.
சற்று சத்தமாகச் சிரித்தவன், “கவலை வேண்டாம் தேவி.. எனக்கு இந்தப் பழக்கம் கிடையாது.” என்றான்.
“ஹ்ம்ம்.. டி-டோட்டலர்னு விசாரிச்சதுக்கு அப்புறம் தான், இங்கே வந்தேன்.”
“ஹ்ம்ஹும்.. வெளி உலகத்திற்குத் தெரியாமல் நான் ரகசியமாக வைத்திருந்தால்!” என்று கேட்டு புருவம் உயர்த்தினான்.
“தெரியும்.”
“என்ன தெரியும்?”
“இந்த ஒரு மாசமா பார்க்கிறேன் தானே!”
மென்னகையுடன் அவளது இடையைப் பற்றி, நெற்றியில் முட்டியபடி, “ஆனாலும், வசமாகச் சிக்கிக் கொண்டாயே!” என்றான்.
அவள் வெட்கத்துடன், “ஹ்ம்ம்” என்றாள்.
“என்னுடைய போதை எல்லாம், இந்த தேவியிடம் மட்டும் தான்.” என்றவனின் உதடுகள் அவளது முகத்தில் ஊர்வலம் செல்ல, மங்கையவள் துவள ஆரம்பித்தாள்.
துவளும் அவளை தன்னுடன் இறுக்கி அணைத்தவனின் உதடுகள், அவளது கன்னத்தில் சற்று அழுத்தமாகப் பதிந்து, பின் இதழில் வந்து இளைப்பாறியது.
சுவாசத்திற்காக இடைவெளி விட்டு விட்டு தேனிதழ்களை சுவைத்துக் கொண்டிருந்தவனின் உணர்வுகள் ஒரு கட்டத்தில் தடையை நீக்கி எல்லை கடக்க ஆணையிடவும், சட்டென்று சுதாரித்து விலகினான்.
அவனது திடீர் விலகலில், அவள் பிடிமானம் இன்றித் தடுமாற, அவளை நெஞ்சில் சாய்த்தபடி அணைத்துக் கொண்டு அமைதியாக நின்றான்.
அவள் இன்னமும் அவன் இட்டுச் சென்ற மாய உலகத்தினுள் தான் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள்.
மெல்ல நிதானத்திற்கு வந்தவனின் மூளை அவளது நிலையை பயன்படுத்திக் கொள்ளக் கட்டளையிட, அவன் மெல்லிய குரலில், “இங்கே வருவதற்கு முன் என்னைப் பற்றி யாரிடம் விசாரித்தாய்?” என்று கேட்டான்.
அவள் மாய உலகில் மிதந்தபடி, “நான் எங்கே விசாரிச்சேன்!” என்றாள்.
“அப்புறம்?”
“அங்கிள் தான் சொன்னாங்க.” என்று உளறியவள், “எந்த அங்கிள்?” என்ற கேள்வியில் சட்டென்று சுதாரித்து, “நான் வளர்ந்த ஆசிரம உரிமையாளர்.” என்றபடி அவனை விட்டு விலகி நின்றாள்.
அவள் சுதாரித்துவிட்டதைப் புரிந்துக் கொண்டவன் அதைப் பற்றி மேலும் துருவிக் கேட்க வில்லை.
“நேரமாச்சு.. நான் கிளம்பனும்.” என்று அவள் கூற,
“உடனே தப்பிச்சு ஓடப் பார்க்கிறாயே!” என்றான்.
மனதினுள் திடுக்கிட்டவள் வெளியே சாதாரண குரலில், “எதில் இருந்து தப்பிக்கப் போறேன்!” என்றாள்.
“நான் எப்போ நெருங்கினாலும் மகாராணி பெயரைக் கூறி ஓடுவதில் தான் குறியாய் இருக்கிறாய்” என்று இருபொருள் படவே கூறினான்.
அவள் தனது சிறு திணறலை மறைத்தபடி, “அப்படி எல்லாம் இல்லை” என்றாள்.
மென்னகையுடன் அவளை சிறைப் பிடித்த படி, “ஹ்ம்ம்.. என்னிடம் இருந்து நீ தப்பிக்கவே முடியாது.” என்றான்.
அவனது முகத்தில் இருந்து அவன் கூறியதின் உட்கருத்தை அறிய முயற்சித்து முடியாமல் புன்னகைத்தபடி, “நான் தப்பிக்கணும்னு நினைக்கவே இல்லையே!” என்றாள்.
“அப்படியா!” என்றபடி அவளது நெற்றியை முட்டினான்.
“ஹ்ம்ம்” என்றவள், “மகாராணி உடற்பயிற்சி நேரம் நெருங்கிடுச்சு..” என்றாள்.
“தப்பிக்க நினைக்கவில்லை என்றாய்!”
“வேலை இருக்கிறதே!”
“ஹ்ம்ம்” என்றபடி விலகியவன், “சரி வா.. இன்னும் இரண்டு அறைகள் தான் இருக்கின்றன.” என்றபடி அழைத்துச் சென்றான்.
அடுத்துச் சென்ற அறையில் உடற்பயிற்சி செய்யும் கருவிகள் இருந்தன. அங்கிருந்த கருவிகள் கற்களால் உருவாக்கப் பட்டவையே.

கர்லாக்கட்டை மட்டுமே வெவ்வேறு எடைகளில் ஏழு இருந்தன.
அவற்றைக் காண்பித்து, “இதை நீங்க தூக்கிடுவீங்களா?” என்று கேட்டாள்.
அவன் மென்னகையுடன் தூக்கி சுற்றிக் காட்டினான்.
“இதில் பயிற்சி செய்வீங்களா?”
“இல்லை”
“ஏன்?”
“நீ வந்து கேள்வி கேட்பாய் என்று தெரியாதே!”
அவள் செல்லமாக முறைக்க, அவன் புன்னகைத்தான்.
வடையை போன்று வட்டமாக நடுவில் மட்டும் பிடிப்பதற்காக சிறு தடி போன்ற அமைப்புடன் இருந்த கருவிகளை காட்டி, “இதெல்லாம் என்ன?” என்று கேட்டாள்.
“டம்பெல்ஸ் மாதிரி.. இரண்டில் இருந்து பதினைந்து கிலோ எடை வரை இருக்கிறது.”
“ஓ.. ஜிம்மில் சர்கில்லா வெயிட்ஸ் இருக்குமே! அது மாதிரியா?”