புல்லாங்குழலே! பூங்குழலே! ~ குழலிசை 8.1

குழலிசை 8

ஒரு வாரம் கடந்த நிலையில், அன்று மாலை மீனாட்சி ராஜமாதாவிடம் அறிக்கை சமர்ப்பிக்கச் சென்ற பொழுது,

ராஜமாதா, “காரியம் முடிந்ததா? என்று கேட்டார்.

அரை நொடி தடுமாறியவள், “இன்னும் இல்லை, ராஜமாதா” என்றாள்.

அவர் கோபத்துடன், “இன்னுமா அவனை உன்னிடம் மதி மயங்கச் செய்ய முடியவில்லை!” என்றார்.

ராஜா மனதை மாற்றுவது, அவ்வளவு எளிது இல்லையே!”

நீயும் அவனும் இந்த ஒரு வாரமாக தினமும் மாலையில்  ரோஜாவனத்தில் சந்தித்துக் கொள்வது எனக்குத் தெரியாது என்று நினைக்கிறாயா? ரோஜாவனத்தினுள் உன்னை விட்டவன் மனதினுள், நீ இல்லை என்று சொல்கிறாயா!” என்றார் கோபக் குரலில்.

அப்படிச் சொல்லலை.. நான் எதைச் சொன்னாலும் கேட்கும் நிலைக்கு அவர் இன்னும் வரலைன்னு தான் சொன்னேன்.”

ஒரு வாரம் தருகிறேன்.. அதற்குள் அவன் நீ என்ன கூறினாலும், நம்பிச் செய்யும் நிலைக்கு வந்திருக்க வேண்டும்.. இல்லை, உனக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்.”

சரி ராஜமாதா.”

அவன் உதவியுடன் தண்டனையில் இருந்து தப்பிவிடலாம் என்று கனவு காணாதே! நீ இங்கே வந்த காரணம் தெரிந்தால், அவனே உனக்கு தண்டனை கொடுத்து விடுவான்”

அவள் அதிர்வுடன் அவரைப் பார்க்க, அவர் குள்ளநரித்தனமாக சிரித்தபடி, “நீ போகலாம்.” என்றார்.

டேஞ்சரஸ் லேடி’ என்று மனதினுள் நினைத்தபடி தீரன் அறை நோக்கிச் சென்று கொண்டிருந்தவள் முன் வந்த இளவரசன், “தினமும் ரோஜாவனத்தில் ரகசிய சந்திப்பு நடக்கிறது போல!” என்றான் கோபம் கலந்த இகழ்ச்சிக் குரலில்.

அவள் நிதானமான குரலில், “எல்லோருக்கும் தெரிந்து நடக்கும் சந்திப்பு, எப்படி ரகசிய சந்திப்பு ஆகும்? என்று கேட்டாள்.

முன்னாடியே இளவரசன் என்று யோசியாமல் கேள்வி கேட்பவள்.. இப்போ சொல்லவா வேண்டும்!” என்றான் குத்தலாக.

உங்களுக்கு என்ன வேண்டும்?

கேட்டால் கொடுத்து விடுவாயா?என்று ஒருமாதிரி குரலில் கேட்டபடி, அவன் ஒரு  அடி முன்னால் வர,

வருங்கால ராணியிடம் மரியாதையுடன் பேசு” என்ற கடுமையான குரலைக் கேட்டு ஆர்வத்துடன் திரும்பியவள், அவனது அறிவிப்பு மூளையை எட்டியதும், சிறு அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள்.

இளவரசன் இகழ்ச்சியுடன் பார்த்தபடி, “வருங்கால ராணி தான். ஆனால், ராஜா நீ இல்லை.. நான்” என்றான்.

மாறவர்மசிம்மன் சத்தமாகச் சிரிக்க, இளவரசன் கோபமும் வெறுப்புமாக முறைத்துக் கொண்டு நின்றான்.

தீரன், “ராஜாவை மரியாதையுடன் பேசுங்க, இளவரசே!” என்றான்.

இளவரசன் கடும் கோபத்துடன், “சாதாரண வேலைக்காரன் நீ என்னைப் பேசுகிறாயா! எல்லாம் இவன் கொடுக்கும் இடம்.” என்றான்.

மாறவர்மசிம்மனின் பார்வையில் தீரன் அமைதியாகிவிட, மாறவர்மசிம்மன், “ராஜாவிற்கே ஆலோசனை சொல்பவர் முதன்மை மந்திரி.. உனது தவறை தீரன் சுட்டிக்காட்டியதில் எந்தத் தவறும் இல்லை.” என்றான்.

அதைக் கண்டு கொள்ளாத இளவரசன் இகழ்ச்சியாக உதட்டை வளைத்த படி, “வருங்கால ராணி என்று நீ கூறினால் போதுமா? அதை, இவள் சொல்ல வேண்டும்.” என்றான்.

சிறு திடுக்கிடலுடன், மீனாட்சி மாறவர்ம சிம்மனைப் பார்க்க, அவன் கண்களை மூடித் திறந்து ‘உன்னை நான் அறிவேன்’ என்று சொல்லாமல் சொல்லவும் தான் நிம்மதியுற்றாள்.

அவளுக்கு மாறவர்மசிம்மன் மீது நம்பிக்கை இருந்தாலும் சற்று முன் ராஜமாதாவுடன் பேசியதில் மனம் சற்றே கலங்கி இருக்கவும், அவனைப் பார்த்தாள்.

மாறவர்மசிம்மன், “நடக்காத விஷயத்தை, நான் பேச மாட்டேன்.” என்றான்.

இளவரசனோ, “மிரட்டி நடக்க வைப்பதில் என்ன பெருமை!” என்றான்.

நான் மிரட்டுகிறேனா! நல்ல வேடிக்கைப் பேச்சு!”

பிறகு ஏன் உனது அறிவிப்பைக் கேட்டு மிரட்சியுடன் பார்த்தாள்?

இதற்கு மாறவர்மசிம்மன் பதில் கூறும் முன் மீனாட்சி, “மிரட்டும் பழக்கமோ, அவசியமோ ராஜாவிற்கு இல்லை.. நானும் மிரட்டலுக்குப் பயப்படுகிறவள் இல்லை!” என்றாள்.

இளக்காரமாக, “ஓ!” என்ற இளவரசன், “ராணி என்ற பதவி உன்னை பேச வைக்கிறது.” என்றான்.

இவர் ராஜாவாக இல்லை என்றாலும், நான் இவரைத் தான் கல்யாணம் செய்துப்பேன்.” என்றாள்.

இளவரசன் இகழ்ச்சியாகப் பார்க்க,

அவள் கைகளைக் கட்டியபடி அவனை தீர்க்கமாகப் பார்த்து, “உங்க கிட்ட ஒன்னு கேட்கிறேன்.. ஒருவேளை என்னை மாதிரி ஒரு சாதாரணப் பெண்.. நல்லா கவனிங்க, என்னை மாதிரினு தான் சொல்றேன், என்னைச் சொல்லலை.. என்னை மாதரி ஒரு சாதாரணப் பெண் உங்களை விரும்பி, நீங்களும் அந்தப் பெண்ணை விரும்பும் பட்சத்தில், ராஜமாதாவை எதிர்த்து அவளை கல்யாணம் செஞ்சுப்பீங்களா? என்று கேட்டாள்.

மாறவர்மசிம்மன் உதட்டோரப் புன்னகையுடன் தன்னவளைப் பார்க்க, தீரன் மனதினுள் ‘சபாஷ்.. சரியான கேள்வி’ என்று கூறிக் கொண்டான்.

இளவரசன் பதில் கூற முடியாமல் நிற்க,

அவள், “இனி இப்படிப் பேசாதீங்க.. முதலில் இருந்தே உங்களோட ஆர்வமான பேச்சை நான் ஆதரித்தது கிடையாது.” என்றாள்.

மீனாட்சி மாறவர்மசிம்மன் முன் இவ்வாறு கூறியதை பெரிதும் அவமானமாக உணர்ந்த இளவரசனின் மனதினுள், ‘இவனிடம் நான் தோற்பதா!’ என்ற எண்ணமும் சேர்ந்துக்கொள்ள, அவளைக் கடுமையாக முறைத்தபடி, “இவனை நீ எப்படி கல்யாணம் செய்கிறாய் என்று பார்க்கிறேன்? என்று சவாலாக கூறிவிட்டுச் சென்றான்.

மாறவர்மசிம்மன் மீனாட்சியிடம், “அவனை விடு.. இன்று ஏன் தாமதமாகி விட்டது? ரோஜாவனத்தில் உன்னைக் காணாமல் தான், உன்னைத் தேடி இங்கே வந்தேன்.” என்றான்.

மீனாட்சி சிறிது சங்கடத்துடன் தீரனைப் பார்க்க,

சரி ராஜா நான் வேலையைப் பார்க்கப் போகிறேன்.” என்ற தீரன் மாறவர்மசிம்மன் தலையசைத்ததும் விலகினான்.

மாறவர்மசிம்மன், “இப்போது சொல்.” என்றான்.

மகாராணி தூங்கி எழுந்திரிக்க கொஞ்சம் தாமதம் ஆகிருச்சு.. அதான்” என்றாள்.

இன்று உன்னை கன்னிமாடம் அழைத்துச் செல்ல எண்ணி இருந்தேன்.. இப்போது நேரமாகிவிட்டது.”

அவள் முகத்தில் நாணம் தோன்றவும், அவன் உல்லாசப் புன்னகையுடன், “அக்கால ராஜாக்கள் பயன்படுத்திய பொருட்களை ஆர்வமாகவும் ஆசையாகவும் பார்ப்பாயே என்று நினைத்துத் தான் சொன்னேன்.. ஆனால் தேவியின் முகத்தில் தெரியும் நாணம், வேறு கதை சொல்கிறதே!” என்றான்.

வேறு எந்தக் கதையும் இல்லை.”

அப்புறம் ஏன் நாணுகிறாய்?

வழியில் நின்னுக்கிட்டு என்ன பேச்சு இது?

அது நின்று கொண்டு.” என்றவன், “உன்னிடம் தமிழ் படும் பாடு இருக்கிறதே!” என்றான்.

அவள் முறைப்புடன், “இப்போ ஆங்கில வார்த்தை இல்லாமப் பேசுறேன் தானே!” என்றாள்.

அது போதுமா!”

போதும் போதும்..” என்றவள், “நான் கிளம்புறேன்” என்றாள்.

இன்று மாலையில், நீ ஓய்வு எடுக்கவில்லையே!”

மகாராணி தூங்கிட்டு இருந்தப்ப ஓய்வில் தானே இருந்தேன்.. இப்போ மகாராணிக்கு உடற்பயிற்சி நேரம்.”

நன்றாக பேச்சை மாற்றிவிட்டுச் செல்கிறாய்”

அப்படியே விட்டுவிடுகிற ஆளா நீங்க?

விடுவதற்கு, நான் என்ன உன்னை அணைத்துக் கொண்டா நிற்கிறேன்!”

அதிலேயே இருங்க!”

காதலியிடம் வேறு எப்படிப் பேசுவது?

சரி அதை விடுங்க..”

நான் தான்..” என்றவனின் பேச்சை இடையிட்டவள், “இந்தப் பேச்சே வேணாம் என்கிறேன்” என்றாள்.

வேறு என்ன பேச?

கன்னிமாடம், நாளைக்குக் கூட்டிப் போவீங்க தானே!”

அவன் செல்லமாக முறைக்கவும்,

அவள், “ஸ்ப்பா.. முடியலை.. நான் எல்லாம் ஆங்கிலம் கலக்காத தமிழ் பேசுறதே பெருசு.. இதில் சுத்த தமிழில் பேசலைன்னு முறைக்கிறது ரொம்ப அதிகம் சொல்லிட்டேன்.. இருந்தாலும், இவ்வளவு தமிழ் பற்று இருக்க வேணாம்.” என்றாள்.

தமிழ் எவ்வளவு அழகான இனிமையான மொழி தெரியுமா? என்றவனின் பேச்சை இடையிட்டவள்,

நாளைக்கு வந்து கதை கேட்கிறேன்.. இப்போ எனக்கு நேரமாச்சு.. நான் கிளம்புறேன்.” என்று கூறிச் சென்றாள். தீரனைப் பார்த்து அன்றைய வேலைகளைப் பற்றிக் கூறிவிட்டே தேவிபுரம் சென்றாள்.

அதே நேரத்தில் ராஜமாதாவின் அறையில் இளவரசன், “அன்றைக்கு என்னை மட்டும் சொன்னீர்கள்! இப்பொழுது அவன் பழகுவதை எதுவும் கூறக் காணும்!” என்றான்.

ராஜமாதா, “உன்னிடம் தான் நான் சொல்வேன்.. அவனைப் பற்றி எனக்கு என்ன கவலை? என்றார்.

இன்னும் கொஞ்ச நாளில் பணிப்பெண் ராணியாக வருவாள்.. அப்பவும் இப்படித் தான் சொல்வீர்களா?

நான் அமைதியாக இருந்தால் அதில் ஆயிரம் காரணங்கள் இருக்கும்”

அந்த ஆயிரத்தில் ஒன்றை என்னிடம் சொல்லுங்களேன்”

விக்கிரமா!” என்று அவர் குரலை உயர்த்த, அவன் அமைதியானாலும் முகத்தில் கோபம் எஞ்சி இருந்தது.

இளவரசி, “பணிப்பெண் ராணியாக வந்துவிடக் கூடாது என்பது மட்டும் தான், உன் கோபத்திற்கு காரணமா? என்று குத்தலாக வினவ, அவன் அவளை முறைத்துவிட்டு வெளியேற முயற்சிக்க, ராஜமாதா, “விக்கிரமா” என்று அழைத்தார்.

error: Content is protected !!