புல்லாங்குழலே! பூங்குழலே! ~ குழலிசை 6.2

அந்த சப்தத்தில் மான் துள்ளிக் குதித்து ஓடிவிட, கோபத்துடன் இடது புறம் திரும்பியவன், கோப விழிகளுடன் நின்றிருந்த வீர மங்கையைக் கண்டு ஆச்சரியம் கொண்டான். அர்ஜுனன் என்று பெயரெடுத்த தன்னை, ஈரம்பு எய்து முறியடித்தது ஒரு பெண்ணா என்று ஆச்சரியம் கொண்டான்.

வானுலக தேவதை என்று கூறும் அளவிற்கு அவள் பேரழகி இல்லை என்றாலும், அவளது கோப விழிகள் அவனை வசீகரித்தது.

அவளது கண்களில் சீற்றத்தைக் கண்டதும், இவனது கண்களில் கோபம் நீங்கி சுவாரசியம் குடியேறியது.

உமது வீரத்தை, வாயில்லா ஜீவன்களை விடுத்து போரில் காட்டும்.” என்றாள்.

மீறிக் காட்டினால்?

கண்ணிமைக்கும் விநாடியில், எனது அம்பு உமது நெஞ்சைத் துளைக்கும்”

மூக்கை துடைத்தவன், “மான் குருதி சிந்தாமல் இருக்க, எனது குருதியை சுவை பார்த்தது அதிகபடியாகத் தெரியவில்லையா பெண்ணே!” என்றான்.

உமக்குப் பின்னே இருக்கும் புதரைப் போய் பாரும்.”

அவன் சற்று தள்ளி இருந்த புதர் அருகே சென்று பார்க்க, அங்கே வில்லில் அடிபட்டு ஒரு சிறுத்தை மடிந்து இருந்தது. தனது மூக்கை உரசிச் சென்ற அம்பு தாக்கியதில் தான், அந்த சிறுத்தை இறந்திருக்கிறது என்பதை புரிந்து கொண்டவனுக்கு, ஆச்சரியம் கூடியதோடு அவள் மீது ஈர்ப்பு பிறந்தது.

அவளது விவேகமும் வீரமும் அவனைப் பெரிதும் வசீகரித்தது.

அவள் பக்கம் திரும்பியவன், “தாங்கள் யார் என்று அடியேன் அறியலாமோ? என்று கேட்டான்.

முதலில் நீர் யார் என்று சொல்லும்?

முதல் கேள்வி எனது”

முதல் பதிலும் உமதாகட்டும்.”

மெல்லிய புன்னகையுடன், “விவேகத்திலும் வார்த்தையாடலிலும் தங்களை வெல்ல யாரும் இல்லையோ!” என்றான்.

வாள் வீச்சை விட்டு விட்டீரே!”

சோதிக்கலாமா? என்று கேட்டபடி தனது வில் அம்பை ஓரமாக கீழே வைத்தவன், இடுப்பில் இருந்த வாளை எடுத்துச் சுழற்றினான்.

அவன் வாளை சுழற்றிய வேகத்தை வைத்தே அவனது வாள் வீச்சுத் திறமையை கணித்தவள், தனது வில் அம்பை கீழே வைத்துவிட்டு, உறைவாளை எடுத்து வேகமாகச் சுழற்றினாள்.

அதைக் கண்டு, அவனது கண்களில் சுவாரசியத்தின் அளவு கூடியது. 

இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை என்பதை நிரூபிப்பது போல், வாளை சுழற்றி சுழற்றிச் சண்டையிட்டனர்.

ஒரு கட்டத்தில் தனது வாளை வேகமாக சுழற்றி அவளது வாளை கைப்பற்றியவன், மறு கையால் அவளை சுழற்றிப் பிடித்து, அணைத்தார் போல் நின்றான்.

அவள் சிறு பிரம்மிப்புடன் அவனைப் பார்க்க,

அவன் அவளது விழிகளை காதலுடன் பார்த்தபடி,

தணல் விழியில்

சித்தம் கலங்கி..

கணை துரிதத்தில்

கர்வம் அழிந்ததடி!

கூர்வாள் விடுத்து

இல்வாழ்வில் இணைவாயோ!” என்றான்.

அவனது வாள் வீச்சில் அவளது மனம் அசைந்தது என்றால், அவனது கண்களில் வழிந்த நேசம், அவளது உள்ளத்தை தீண்டியது.

தடுமாறிய மனதுடன் அவள் நின்றது ஒரு சில நொடிகளே, ஒரு அந்நிய ஆடவனின் தொடுகையில் நின்று கொண்டிருக்கிறோம் என்பதை முழுதாக உணர்ந்த நொடியில், அவனை உதறி விலகி இருந்தாள்.

அவளது விழிகளில் அலைப்புறுதலைக் கண்டவன், தைரியத்துடன் அவளை நெருங்க முயற்சிக்க,

அவள், “அங்கேயே நில்லும்” என்றாள்.

தேவி..” என்று ஆரம்பித்தவன் அவளது கண்கள் சிறிது ஆச்சரியத்தில் விரியவும்,  “என்ன? என்றான்.

அவள் ‘ஒன்றுமில்லை’ என்பது போல் தலையை அசைக்க,

நான் உன்னை மணக்க விரும்புகிறேன், தேவி.. நான் எழில்புரத்தின் அரசன் ரணசிம்மன்.” என்றான்.

அவளது கண்கள் மேலும் விரிந்ததில் இருந்தே, அவள் தன்னைப் பற்றி கேள்வியுற்று இருக்கிறாள் என்பதை புரிந்துக் கொண்டவன், “இப்பொழுதாவது உன் பெயரைச் சொல், தேவி” என்றான்.

சிறு நாணத்துடன், “தாங்களே கூறி விட்டீர்களே!” என்றாள்.

சற்று யோசித்தவன் வசீகர சிரிப்புடன், “உனது பெயரே தேவி தானா!” என்றான்.

அவனது சிரிப்பு அவளை ஈர்க்க, தன்னை மறந்து அவனது முகத்தை பார்த்துக் கொண்டு நின்றாள்.

அவன் ஆழ்ந்த குரலில், “தேவி” என்று அழைத்தான்.

அவனது குரலில் தெரிந்த உரிமை கலந்த காதல் அவளுள் ஏதோ செய்தது.

என்னை மணக்கச் சம்மதமா தேவி? என்று கேட்டான்.

அவனது முகத்தை நோக்கியவள், “என்னை வாட்போரில் வெல்லும் சுத்த வீரனைத் தான் மணப்பேன் என்ற முடிவில் இருந்தேன்.. தங்களது வாள் வீச்சு என்னுள் சலனத்தை ஏற்படுத்தியது. தங்களது விரல் தீண்டலை விட, விழி தீண்டலில் மயங்கினேன் அரசே..! கண்களில் எனக்கான நேசத்தோடு காதல் கலந்த உரிமையுடன் தேவி என்று என்னை தாங்கள் அழைத்த நொடியில், என்னுள் முழுதாக நுழைந்து விட்டீர்கள் அரசே!” என்றாள்.

என் தேவி!” என்று அழைத்தபடி அவளை நெருங்கியவன், அவளை அணைத்து இருந்தான்.

சில நொடிகள் கட்டுண்டு நின்றவன் மெல்ல நிமிர்ந்து அவளது முகம் நோக்கினான். இமைகளை மூடியபடி அவள் நின்று கொண்டிருந்த கோலத்தை அவன் ரசித்தாலும், “என்னைப் பார், தேவி” என்றான்.

அவள் வெட்கப் பூக்களை உதிர்த்தபடி மறுப்பாகத் தலை அசைத்தாள். அவளது மனமோ ‘இவரை இன்று தான் முதல் முதலாக சந்தித்தேனா! அரை நாழிகை கூட இருக்காதே! ஆனால், இந்த நொடியில் காலம் காலமாக பழகியது போன்றதொரு உணர்வை உணர்வது எப்படி! ஒருவேளை பூர்வ ஜென்ம பந்தமோ!’ என்று விவாதித்துக் கொண்டிருந்தது.

சற்று முன் பெண் சிங்கமாக சீரிய நங்கையா இவள் என்று ஆச்சரியம் கொண்டவனின் மனம், அவளது நாணத்தைக் கண்டு மயங்கியது.

மெல்ல அவளது முகம் நோக்கிக் குனிந்தவன் மூடிய சிப்பி இமை மீது, தனது முதல் முத்திரையைப் பதித்தான்.

அவனது முத்தத்தில் அவளுள் ஒரு வித சிலிர்ப்பு ஓடியது. அதை உணர்ந்தார் போல், அவன் மென்னகையுடன் அவளது இடையை, மென்மையாகப் பற்றியபடி, மறு இமை மீதும் முத்தமிட்டான்.

முதல் முறை உணர்ந்த ஒரு ஆடவனின் தொடுகையில், அதுவும் மனம் கவர்ந்தவனின் தொடுகையும் முத்தமும் கொடுத்த உணர்வைத் தாள முடியாமல் தவித்தாள்.

அவளது நிலையைப் புரிந்தவனின் உதடுகள் மெல்ல கீழ் இறங்கி, அவளது கன்னத்தில் பதிந்தது. அந்த கன்னத்தின் மென்மையில் மயங்கியவனது உதடுகள் அங்கிருந்து நகர மறுக்க, அவளது இடையில் இருந்த கரம் சற்று அழுத்தமாகப் பதிந்தது.

அவனது தீண்டலில் அவளது உடலின் அணுக்கள் புத்துயிர் பெற்றாலும், கால்கள் பலம் இழந்தார் போல் தோன்ற, கண்களை மூடிய நிலையிலேயே பிடிமானத்திற்காக வலது கரம் கொண்டு அவனது வலிய தோளைப் பற்றினாள்.

அடுத்து அவனது இதழ்கள் தனது இணையான அவளது தேனூறும் இதழ்களை, கவ்விக் கொண்டது.

அமுத பானத்தை அருந்தியது போல் உணர்ந்தவனது உடல் உச்சி முதல் பாதம் வரை சிலிர்க்க, சித்தம் கலங்கி தன்னை தொலைக்கத் தொடங்கினான்.

அவளது உடல் முழுவதும் சிலிர்த்து,  அடி  வயிற்றினுள் பிரளயம் நிகழ, அவனது தோளை அழுத்தமாகப் பற்றினாள்.  

அவளது நெருக்கத்தில் அவனது உணர்வுகள் தாளம் தப்ப, மென்மையை மறந்து சற்று வன்மையாக இதழ் அணைக்கத் தொடங்கினான். அவனது வேகத்தில் அவளது இதழ்கள் சற்று பிரிய, அது அவனுக்கு வசதியாகப் போனது. அவளது கீழ் உதட்டையும் மேல் உதட்டையும் தனி தனியாக சுவைக்க ஆரம்பித்தான்.

ஆழிப் பேரலையின் தாக்கத்தில் தத்தளிக்க தொடங்கிய கன்னியவளின் நிலையை வார்த்தைகளால் வடிக்க முடியாது.

error: Content is protected !!