காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 14.1

கீதம் 14

நான்கு நாட்கள் கடந்து இருந்தது. மகிழ் கொற்றவன் மருத்துவமனைக்கு செல்ல ஆரம்பித்து இருக்க, லயனிகாஸ்ரீ வீட்டில் இருந்தபடியே, தனது மடிக்கணினி மூலம் அலுவலக வேலைகளை செய்ய ஆரம்பித்து இருந்தாள். இங்கே இருந்தபடியே, தனது தந்தையின் குழுமத்தை வெற்றிகரமாக நடத்திக் கொண்டு இருந்தாள். தயாளனும் அவளுக்கு உதவி கொண்டு இருந்தான்.

இந்த நான்கு நாட்களும் ‘மதில் மேல் பூனை’ போன்றதொரு நிலையில் தான் தனலட்சுமி இருக்கிறாள். லயனிகாஸ்ரீ பேச்சில் இவர்கள் பக்கம் இளகும் அவளது மனம், அடுத்து பத்மாவதியின் போதனையில் பழைய நிலைக்கே சென்றுவிடும்.

கோமதிநாதன் பேசுவதாக கூறியதற்கு மறுப்பு தெரிவித்த மகிழ் கொற்றவன், தனலட்சுமி தானே உணர்ந்து மனம் மாறி வந்தால் மட்டுமே, அது நிலையானதாக இருக்கும் என்று கூறிவிட்டான்.

வெற்றிவேந்தனும் லயனிகாஸ்ரீயும் நல்ல நண்பர்களாகினர். இவர்களுடன் ஆச்சியும் சேர்ந்து விட்டால், வீடு களைகட்டும். இந்தக் கூட்டணியில் அவ்வபோது மகிழ் கொற்றவனும் தயாளனும் கூட இணைந்து கொள்வார்கள்.

கனிமொழியுடன் நன்றாகப் பழகினாலும், நெருங்கிப் பழக லயனிகாஸ்ரீ விரும்பாததால், அவளே ஒரு எல்லையை நிர்ணயத்துக் கொண்டாள்.

மலர்கொடி லயனிகாஸ்ரீயுடன் சிரித்துப் பேசுவதைப் பார்த்து, குழந்தை ஆரியன் அவளுடன் பேச ஆரம்பித்து இருந்தாலும், இதுவரை அவனாகச் சென்று பேசியது இல்லை. அவள் கேட்கும் கேள்விகளுக்கு, தயக்கமின்றி பதில் கூறும் நிலைக்கு முன்னேறி இருக்கிறான்.

லயனிகாஸ்ரீக்கு, மெதுவாகக் கொல்லும் விஷத்தை கொடுத்த நபரை கண்டுபிடிப்பதில் தீவிரமாக களம் இறங்கி இருந்த தயாளன், ஆரியனை நெருங்கவில்லை என்றாலும், அவனை அமைதியாக கவனித்துக் கொண்டே தான் இருக்கிறான்.

நடுவில் ஒரு நாள், தயாளன் மதிய உணவை தாமதமாக, தனியாக உட்கார்ந்து உண்டு கொண்டிருந்த போது, அவனுக்கு விக்கியது. அப்பொழுது அந்த பக்கம் சென்ற மலர்கொடி அவனுக்கு தண்ணீர் கொடுத்தாள்.

அதைப் பார்த்த பத்மாவதி, பஞ்சையும் நெருப்பையும் பக்கத்தில் வைக்காதீங்கனா, இந்த வீட்டில் யார் கேட்கிறா! எல்லாம் முடிந்த அப்புறம், குடும்ப மானம் போச்சு, சந்தி சிரிச்சிடுச்சினு புலம்பப் போறாங்க!” என்று சத்தமாக முணுமுணுத்தார்.

கூனிக்குறுகி கண்கள் கலங்கிய நிலையில் மலர்கொடி நகர ஆரம்பிக்க,

அவளை பார்க்காமலேயே, ஒரு நிமிஷம்” என்றபடி எழுந்த தயாளன், பத்மாவதியை முறைத்தபடி, இங்கே பஞ்சு ஈரமா தான் இருக்குது.. எந்த நெருப்பும் அதை ஒன்னும் செய்ய முடியாது.. இந்த நெருப்பும் வேலி மாதிரி தான்.. சுட்டுப் போஷிக்கிடும்.. ஜாக்கிரதை!” என்றான்.

பத்மாவதி அவனது கண்ணில் தெரிந்த தீட்சண்யத்தில் மேலும் பேசத் தோன்றாமல் முறைத்துவிட்டு சென்றார்.

அவனது பேச்சு மற்றும் பத்மாவதியின் எதிர்வினையில், மலர்கொடி சிறு ஆச்சரியமும் அதிர்ச்சியுமாக அவனைப் பார்க்க,

அவனோ இப்பொழுதும் அவள் முகத்தை பார்க்காமல், குனிய குனிய குட்ட தான் செய்வாங்க.. எதிர்த்து பேசலனாலும், நிமிர்ந்து நின்னு தைரியமா நேருக்கு நேர் பாருங்க.. சிட்சுவேஷனை தைரியமா எதிர்கொள்ளப் பழகுங்க.. உங்களுக்காக இல்லைனாலும் உங்களைப் பார்த்து வளருற உங்க பையனுக்காகவாது, செய்ய முயற்சி செய்யுங்க.. முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.” என்று விட்டுச் சென்றான்.

அவள் சங்கடம் கொள்வாளோ என்ற எண்ணத்தில் தான், அவளது முகத்தை அவன் பார்க்கவில்லை.

அவன் பேசியதில் சற்றே இதமாக உணர்ந்தவள், என்னால் அப்படியெல்லாம் நிமிர்ந்து நிற்க முடியுமா?’ என்ற கேள்வியுடன் சென்றாள்.

ஒரு நாள் மாலை லயனிகாஸ்ரீ வீட்டுத் தோட்டத்தில் வைத்து தனிமையில் மலர்கொடியிடம், நீங்க என்ன படிச்சு இருக்கிறீங்கக்கா?” என்று கேட்டாள்.

பி.ஈ கம்ப்யூட்டர் சயின்ஸ்”

லெக்சரர் வேலைக்கு போகலாமே! இப்படி வீட்டுக்குள்ளேயே அடைந்து இருக்காம, சுதந்திரமா வெளி உலகை பாருங்க.. தன்னால் உங்களுக்கு தன்னம்பிக்கை வரும்.”

விரக்த்தியாகச் சிரித்தவள், கல்யாணத்துக்கு முன்னாடி வேலைக்குப் போற ஆசை எனக்கும் இருந்தது. ஆனா… இப்போ சான்சே இல்லை.. அதுவும் நீ சொல்ற லெக்சரர் வேலை! நான் அவுட் டேட்டட்!” என்றாள்.

பி.ஈ நீங்க எவ்ளோ பெர்சன்டேஜ் எடுத்தீங்க?”

“85%”

அப்போ, உங்களால் ஈஸியா அப்டேட் ஆகிக்க முடியும்”

இந்த வீட்டில்! காமடி செய்யாத ஸ்ரீ” என்றபடி சிரித்தாள்.

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.. நான் உங்களுக்கு ஹெல்ப் செய்றேன்.. எனக்கு தெரிந்த காலேஜில் நான் வேலை வாங்கித் தரேன்.. முதல்ல கெஸ்ட் லெக்சர் மாதிரி ஹாஃப் டே போங்க.. ஆரி குட்டியை ப்ளே ஸ்கூலில் விட்டுட்டு காலேஜ் போங்க.. அவன் வீட்டுக்கு வரதுக்கு முன்னாடி நீங்க வர மாதிரி பார்த்துக்கலாம்.. பார்ட் டைம் ஸோ சலரி கம்மியா தான் இருக்கும்.. ஆனா நம்ம நோக்கம் சலரி இல்லையே! உங்களுக்கு எக்ஸ்போஷர் வேணும்.. என்ன போறீங்களா?”

மலர்கொடி ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்தபடி இருக்க, அவள், என்னக்கா?” என்றாள்.

நீ சொல்லும் போது ஈஸியா தான் தெரியுது, ஆனா…”

இந்த ஆனாவை விடுங்க…”

இல்ல ஸ்ரீ.. ரெண்டு முக்கியமான விஷயத்தை மறந்துட்டு பேசுற.. நான் அவுட் டேட்டட்”

அது தான் நீங்க ஈஸியா அப்டேட் ஆகிக்கலாம்னு சொன்னேனே! லெக்சர் எடுக்க போறதை வீட்டில் பிரிப்பர் செய்துட்டு போங்க.. எல்லாம் சரியா வரும்.. ஜஸ்ட் ஸ்டார்ட் செய்தாச்சுனா, உங்களுக்கே இன்ட்ரெஸ்ட் வந்து அப்டேட் ஆகிக்குவீங்க..”

ஆனா, நேரம் வேணுமே!”

நீங்க மைண்டு டைவர்ஷனுக்கு செய்ய ஆரம்பித்த வீட்டு வேலையை, அப்படியே உங்க தலையில் கட்டி… நீங்க அதுக்கு தான் இருக்கிறீங்கனு உங்களையே நம்ப வைக்க முயற்சி செய்றாங்க.. அதை விட்டு வெளியே வாங்கனு தான் சொல்றேன்..

அதான் உங்களுக்கும் ஆரி குட்டிக்கும் நல்லது.. வீட்டு வேலைகளை செய்ய வேலையாட்கள் இருக்காங்க.. அவங்களை மேற்பார்வை செய்தா போதும்.. யார் யாருக்கு என்னென்ன எந்தெந்த நேரத்தில் செய்யணும்னு என் கிட்ட சொல்லுங்க, அதை நான் பார்த்துக்கிறேன்.”

இன்னொரு முக்கியமான விஷயத்தை மறந்துட்டு பேசுற! என்னை, வேலைக்கு போக விட மாட்டாங்க.”

அதை நான் பார்த்துக்கிறேன்.. எனக்கு வேண்டியது உங்க சம்மதம் மட்டும் தான்.”

மலர்கொடி அப்பொழுதும் தயக்கத்துடன், என்னால் முடியுமா?” என்று கேட்க,

அவள் விரிந்த புன்னகையுடன், கண்டிப்பா முடியும்” என்றபடி கட்டைவிரலை உயர்த்திக் காட்டினாள்.

அதில் நம்பிக்கை துளிர் விட, மலர்கொடியும் புன்னகையுடன், சரி” என்றாள்.

சூப்பர் க்கா” என்றபடி அணைத்து, தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தாள்.

error: Content is protected !!