காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 13.2

நீண்ட ஆழமான இதழ் முத்தத்தைக் கொடுத்தவன், அதையும் இப்படி கொடுக்கணும்.. நம்ம டீப் லவ்வை எக்ஸ்ப்ரெஸ் பண்ண லிப் லாக் தான் சரி.. சும்மா பட்டும் படாமல் லிப் கிஸ்லாம் கிஸ்ல சேர்த்தியே இல்ல…” என்றான்.

கிஸ்ல… பிஎச்டி செய்து இருப்பீங்க போல!”

எல்லாம் கேள்வி ஞானம் மட்டும் தான்.. ப்ராக்டிகல் உன்னோட மட்டும் தான். இன்னொரு ப்ராக்டிகல் போகலாமா?” என்று கேட்டு கண் சிமிட்டினான்.

நோ.. வே..!” என்றபடி அவள் எழப் பார்க்க,

அவளை போர்வையுடன் தன்னுள் சுருட்டிக் கொண்டவன், அவளது கழுத்தடியில் அழுத்தமாக முத்தமிட்டான்.

ப்ளீஸ் கிங்.. நான் இப்போ போய் குளிச்சு தலையை காய வச்சா தான், டீ டைம் கீழ போக முடியும்…”

நீ ஒரு கண்டிஷனுக்கு ஓகே சொன்னா, நானும் இதுக்கு ஓகே சொல்றேன்.” என்றவன் கண்ணில் வழிந்த விஷமத்தில், அவனை கண்டு கொண்டவளாக,

லேட் ஆகும் கிங்.” என்று சிணுங்கினாள்.

ரெண்டுல… ஏதாவது ஒரு சாய்ஸ் தான்”

சரி” என்று அவள் இழுக்க,

ஹே கேடி! என்னவோ இஷ்டம் இல்லாத மாதிரி நடிக்காத.. நீ என்னென்ன செய்வனு நான் சொல்லட்டா…” என்றவனின் வாயை கையால் மூடியவள், ஒன்னும் வேணாம்…” என்றாள்.

லிப் லாக் செய்ய லிப் தான் யூஸ் பண்ணனும்.” என்றபடி அவளது கரத்தை விலக்க, அடுத்த நொடி அவன் இதழில் அவள் இதழ் பதித்து இருந்தாள்.

முத்தம் கொடுத்தபடியே, அவளை தூங்கிக் கொண்டு குளியலறைக்குச் சென்றான்.

சின்ன சின்ன காதல் லீலைகளை முடித்துக் கொண்டு, ஒருவாறு கிளம்பி இருவரும் கீழே சென்றனர்.

அவர்கள் படியில் இறங்கியபோது, “ஹாய்.. ஹாய்.. வெல்கம்.. சுவாகதம்.. நல்வரவு!” என்ற உற்சாகக் குரலைக் கேட்டு, இருவரும் திரும்பிப் பார்க்க, அங்கே வெற்றிவேந்தன் நின்றிருந்தான்.

அவன் தான் லயனிகாஸ்ரீயை… ஆங்கிலம், மலையாளம், தமிழ் என்று மூன்று மொழிகளில் வரவேற்று இருந்தான்.

உற்சாகத்துடன், ஹாய்” என்ற லயனிகாஸ்ரீ, கூடத்தில் அமர்ந்திருந்த பத்மாவதியை பார்த்ததும், குறும்பு புன்னகையுடன், நீங்க தான், இந்த வீட்டோட வெட்டி ஆஃபிஸரா?” என்று கேட்டாள்.

கோபமாக எழுந்து வந்த பத்மாவதி பேசும் முன், வெற்றி வேந்தன், நோ.. நோ.. மீ புவர் பாய்(boy).. அம்மா உங்க ஹஸ்பண்டை பேசினா, உங்க டார்கெட் அவங்க ஹஸ்பண்டா தானே இருக்கணும்.. வொய் மீ…!” என்றபடி உதட்டை பிதுக்கினான்.

பின் அவனே, மே பி… அப்பாவை சொன்னால் அம்மா பெருசா கண்டுக்க மாட்டாங்கனு, நீங்க என்னோட நேமை டேமேஜ் செய்து இருக்கலாம்..! ஆனா அண்ணி.. யூ னோ(know)ஒன்திங்!” என்றவன்

பத்மாவதியை ஓரப்பார்வை பார்த்தபடி, சிலருக்கு நீங்க எப்படி சொன்னாலும் புரியாது.” என்றான்.

அன்னையின் முறைப்பில் பார்வையை லயனிகாஸ்ரீ பக்கம் திருப்பியவன், இருந்தாலும், நீங்க கொஞ்சம் ரீ-கன்சிடர் செய்து, என் நேமை விட்டுட்டு, என் அப்பா நேமை டேமேஜ் செய்யலாம்.. வைத்தியலிங்கம்! வைத்தி.. வைத்தியம்.. மருத்துவம்.. மெடிசன் மாமா சொல்லுங்க.. இல்லைனா, வைத்தியை இன்னும் சுருக்கினா வை.. அதுக்கு இங்கிலீஷ்ல என்ன! கீப்!” என்றவன், வாயில் கை வைத்து, அச்சோ! ராங்கா போகுதோ!” என்றான்.

லயனிகாஸ்ரீ சிரிக்க, மகிழ் கொற்றவன் அவனை மேலும் கீழும் பார்த்தான்.

அவன் புன்னகையுடன், என்ன அண்ணா! ‘நீ பேசுவனு தெரியும். ஆனா, இவ்ளோ பேசுவனு தெரியாது!’ இதானே உங்க மைண்டு வாய்ஸ்!” என்றான்.

மறுப்பாக தலை அசைத்த மகிழ் கொற்றவன், இன்ஜினியரிங் சேர்த்ததுக்கு பதில், உன்னை வக்கீலுக்கு படிக்க வச்சு இருக்கலாம்.. எதிராளியை பேச விடாம தம்கட்டி பேசுறியே!” என்றான்.

அண்ணா!”

லயனிகாஸ்ரீயோ, சச.. அதுக்கு மொக்க போடாம வலிட் பாயிண்ட்ஸ் பேசணும்…” என்று குறுஞ்சிரிப்புடன் கிண்டல் செய்தாள்.

மகிழ் கொற்றவனும் குறுஞ்சிரிப்புடன், அப்படிங்கிற…!” என்று கூற,

அவள் கிண்டல் குரலில், இந்த லேகியம் விக்கிற வேலை பத்தி என்ன நினைக்கிறீங்க கிங்!” என்றாள்.

மீண்டும் தம்பியை மேலும் கீழும் பார்த்தவன், ஹும்ம்.. செட் ஆகும்னு நினைக்கிறேன்.” என்றான்.

ஓ காட்! மை இமேஜ் டோட்டல் டேமேஜ்” என்று வெற்றி வேந்தன் கூற,

அதே நேரத்தில் பத்மாவதி, ஹே யாரைப் பார்த்து என்ன சொல்றீங்க! புருஷனும் பொண்டாட்டியும் ஜோடியா போய் லேகியம் வித்து பொழப்ப நடத்துங்க!” என்று கத்தினார்.

ஆனால், அவரது மகன் உட்பட… யாருமே அவரை அங்கே கண்டு கொள்ளவே இல்லை.

லயனிகாஸ்ரீ, என்னா தம்பி, என்னா சொன்ன? இமேஜ்! அப்படி ஒன்னு உனக்கு இருக்குது?” என்றாள்.

நோ.. நோ.. மீ யுவர் பெஸ்ட் கொழுந்தன்.. ஸோ..”

ஸோ”

இப்படியெல்லாம் சட்டுன்னு கேட்கப்பிடாது.. சின்ன பையன், யோசிக்க டைம் வேண்டாமா?”

லயனிகாஸ்ரீ விரிந்த புன்னகையுடன், ஈ கொச்சுகுட்டிக்கு ஒரு மலையாள காமுகி கிட்டி.. அல்லோ!” என்று கேட்டு கண் சிமிட்டினாள். (‘இந்த சின்னப் பையனுக்கு மலையாள கேர்ள் பிரெண்ட் கிடைத்து இருக்கு.. சரியா!’ என்றதை மலையாளத்தில் கேட்டு இருந்தாள்.)

சற்றே அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தவன், சில நொடிகளில் சுதாரித்து, தெய்வமே! உங்க காலைக் காட்டுங்க..” என்றான்.

வாய்விட்டு சிரித்தவள், ஞயான் பரயில்லா.. என்ஜாய்!” என்று கூறி கண் சிமிட்டினாள்.

“உங்க அளவுக்கு மலையாளம் தெரியாது தெய்வமே! ஏதோ பார்த்து செய்யுங்க.” என்றவன், ‘ஒத்த வார்த்தையில் இப்படி சிக்கிட்டேனே!’ என்று முணுமுணுத்தான்.

கீதம் இசைக்க காத்திருப்போம்…

error: Content is protected !!