காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 13.1

கீதம் 13

மகிழ் கொற்றவன் திருச்சி கருத்தரங்கைப் பற்றிய அறிக்கையை சமர்ப்பிக்க, மருத்துவமனை சென்றிருக்க, லயனிக்காஸ்ரீ பெட்டியில் இருந்த ஆடைகளை, அலமாரியினுள் வைத்துக் கொண்டு இருந்தாள். கைகள் அதன் வேலையை செய்ய, இதழ்களோ பாடல்களை முணுமுணுப்பாக பாடிக் கொண்டே இருந்தது.

அவள் வேலையை முடிக்கும் தருவாயில் உள்ளே வந்த அவளவன், சத்தமின்றி அவள் பின்னால் நின்றபடி அவள் பாடுவதை கேட்டுக் கொண்டிருந்தான்.

கண் நிறைந்த

காதலனை காணவில்லையே

இந்த காதலிக்கு தேன் நிலவில்

ஆசை இல்லையா..

காதல் தோன்றுமா

இன்னும் காலம் போகுமா

இல்லை காத்து காத்து

நின்றது தான் மீதமாகுமா!” என்ற போது, அவளது இடையை பற்றியபடி இறுக்கி அணைத்தவன், பாடலைத் தொடர்ந்தான்.

பாட்டு பாடவா

பார்த்து பேசவா

காதல் சொல்லவா

பறந்து செல்வோமா!” என்று பாடியபடி, அவளது கழுத்தடியில் அழுத்தமாக முத்தமிட்டான்.

கிறக்கத்தையும் மீறி, “அது காதல் சொல்லவா இல்லை கிங், பாடம் சொல்லவா!” என்று அவனைத் திருத்தினாள்.

இதழை அவள் கழுத்தில் இருந்து எடுக்காமல், தெரியும்” என்றவன் அப்படியே இதழ்களை கொடிழுத்தபடி, கன்னத்திற்குக் கொண்டு சென்று முத்தமிட்டான்.

கிங்’ என்று சத்தமின்றி இதழைசைத்தவள், அப்படியே அவன் மீது சாய்ந்தாள்.

லயனெஸ்!”

கண்களை மூடிய நிலையிலேயே, ஹும்ம்” என்றாள்.

மென்னகையுடன், அவளை குழந்தை போல் கைகளில் ஏந்தினான். அவனது கழுத்தை சுற்றி கை கோர்த்தபடி, முகத்தை அவனது கழுத்தடியில் புதைத்தவள், அப்பொழுதும் கண்களை திறக்கவில்லை.

மெதுவாக அவளை மஞ்சத்தில் சரித்தவன், தானும் அவள் அருகே ஒரு பக்கமாகப் படுத்து, தலைக்கு இடது கையை முட்டுக் கொடுத்து இருந்தான்.

ஒற்றை விரலால் அவளது முகவடிவை அளந்தவன், கிறங்கிய குரலில், கண்ணை திற லயனெஸ்…” என்றான்.

அவள் மறுப்பாக தலையசைக்க, அவளது மூடிய விழிகள் மீது முத்தமிட்டவன், காதினுள் மெல்லிய குரலில், கண்ணை திறந்தா தானே, என் காதலை சொல்ல முடியும்…” என்றான்.

அவள் சட்டென்று கண்ணை திறக்கவும்,

காதலுடன் அவள் விழிகளை நோக்கியபடி,

விழியில் விழுந்து இதயம் நுழைந்து

உயிரில் கலந்த உறவே” என்று பாடி நிறுத்தியவன், தனது இதழ் கொண்டு அவளது இதழை சிறைப் பிடித்து இருந்தான்.

இருவருக்குமான முதல் இதழ் முத்தம், இருவரின் உயிர் வரை சென்று தீண்ட, சட்டென்று உடம்பின் அனைத்து அணுக்களும் புத்துயிர் பெற்றது போல் உணர்ந்தனர். அவளது இதழின் மென்மையில் பித்தம் கொண்டவனது முத்தத்தின் வேகம் சற்றே கூட, கரமோ மென்னிடையை பற்றியது. ஆழிப்பேரலை தாக்கிய உணர்வில் தத்தளித்தவளின் கரம், அவனது பின்னந்தலையினுள் நுழைந்து, முடியை இறுக்கிப் பிடித்தது. 

சுவாசத்திற்காக சற்று இடைவெளி விட்டவன், மீண்டும் அவளது மென் இதழ்களை சுவைத்தான். இந்த முறை நிதானமாக ரசித்து அனுபவித்து, இன்னும் ஆழமாக சுவைத்தவன்… அவளையும் அனுபவித்து ரசிக்க வைத்தான். 

அப்படியே தன்னவளை எடுத்துக்கொள்ள அவனது நாடி நரம்புகள் பேயாட்டம் போட்டாலும், தனது காதலை முழுதாகக் கூற விரும்பியவன், முத்தத்தை தற்காலிகமாக நிறுத்தினான்.

சில நொடிகள் கழித்தே அவள் கண்களை திறக்க, அதுவரை அவள் முகம் காட்டிய வர்ணஜாலத்தை ரசித்துக் கொண்டு இருந்தான்.

கண்களைத் திறந்தவள் அதை உணர்ந்து சிணுங்கலாக, கிங்!” என்றாள்.

அவன் மென்னகையுடன் அவளது கன்னத்தில் பட்டும் படாமல் உதட்டால் உரசியபடி,

சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா

செல்வக் களஞ்சியமே!

என்னைக் கலிதீர்த்தே உலகில்

ஏற்றம் புரிய வந்தாய்!

பிள்ளைக்கனியமுதே கண்ணம்மா!

பேசும் பொற்சித்திரமே!

அள்ளியணைத்திடவே – என்முன்னே

ஆடிவருந் தேனே!

என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா

என்னுயிர் நின்னதன்றோ!” என்று அவனுக்குப் பொருந்திய வரிகளை மட்டும் பாடினான்.

பின், இந்த வரிகள் அப்படியே எனக்கு பொருந்தும் லயனெஸ்.. என்னோட பொக்கிஷம் நீ கண்ணம்மா.. என்னுடைய துன்பங்கள் எல்லாத்தையும் தீர்த்து, என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கொடுத்து, செழுமையை புகுத்தியவள் நீ..! பேச்சால் பாசிடிவ் வைப்ஸ் கொடுக்கும் நீ, பேசும் பொற்சித்திரம் தான்..” என்றவன்,

சிறு விஷமம் கலந்த குறும்புச் புன்னகையுடன், அஃப்கோர்ஸ் உன்னை அணைக்கும் போது, இன்பத்தேன் பொங்கி வழியுது தான்” என்று கூறி கண் சிமிட்டினான்.

அவள் வெட்கப் புன்னகையுடன், சேம் டு யூ கிங்.” என்றாள்.

சத்தமாகச் சிரித்தவன், ஆனா, நீயா என்னை ஹக் பண்ணதே இல்லையே!” என்றான்.

இனி பண்றேன்.” என்று கூறி கண் சிமிட்டினாள்.

பின், எப்போ காதல் வந்துச்சு?” என்று கேட்டாள்.

உனக்கு வந்தப்பவே வந்துடுச்சு தான்.. ஆனாலும், என்னை நானே அனலைஸ் செய்துக்க, ரெண்டு நாள் எடுத்துக்கிட்டேன்.. அதுக்குள்ள என்ன பாடு படுத்துற…?” என்றவன் அவளது மூக்கை லேசாகக் கடித்தான்.

அவள் சத்தமாகச் சிரிக்க, அவனது பார்வை மோகத்துடன் அவள் இதழ் மேல் படிந்தது. அதில் அவள் சட்டென்று அமைதியானாள்.

ஒருவாறு சுதாரித்தவன், லவ் அட் ஃபஸ்ட் சைட் கேட்டு இருப்ப.. என்னோடது லவ் அட் ஃபஸ்ட் ஸ்பீச்.. நீ மாமா கிட்ட சொன்னது சரி தான்.. நிஜமாவே பேசி பேசி தான், என்னை கரெக்ட் பண்ணீட்ட” என்று கூறி கண் சிமிட்டினான்.

அப்போ, மெஸ்மரைஸிங் ஐஸ் சொன்னது சும்மாவா?”

உன் குணத்திலும் பேச்சிலும் காதலில் விழுந்தாலும், என்னை வசியம் செய்றது உன்னோட கண்ணு தான்!” என்றவன் மோகம் கலந்த விஷமப் புன்னகையுடன், ஆனா, இப்போ இந்த நொடியை கேட்டா, என்னை வசியம் செய்றது, உன்னோட வாய்னு தான் சொல்லுவேன்.” என்று கூறி கண் சிமிட்டினான்.

யூ நாட்டி!”

சிரித்தபடி, எஸ் நாட்டி, இப்போ டர்ட்டி ஆகலாம்னு பார்க்கிறேன்.” என்றான்.

அவள் புருவம் சுருக்கிப் பார்க்க, அவளது வெற்றிடையை வருடியபடி, நாம டிஃப்ரென்ட்டா ஃபஸ்ட் டே கொண்டாடலாம்..” என்று கூறி கண் சிமிட்டினான்.

அவனது கையை பற்றியபடி, வெட்கம் கலந்த சிறு பதற்றத்துடன், நோ.. நோ கிங்” என்றாள்.

மென்னகையுடன், ரிலாக்ஸ் லயனெஸ்… மார்னிங் காதலை சொன்னா, முத்தம் தரதா சொன்னீங்க மேடம்!” என்று கூறி புருவத்தை ஏற்றி இறக்கினான். 

அது…”

என்ன?”

சரி தரேன்.. நீங்க கண்ணை மூடுங்க.”

நோ.. என் கண்ணை பார்த்துட்டே குடு.”

கிங்!” என்று அவள் சிணுங்க, அதில் அவன் இதயம் தாளம் தப்பத் தொடங்கியது.

ஹும்ம்”

அவள் மெல்ல அவன் இதழருகே சென்று, மென்மையாக முத்தமிட்டாள்.

அவள் மென்மையாக ஆரம்பித்த முத்தத்தை, சற்றே வன்மையாக மாற்றியவனின் கரம், வெற்றிடையை வருடியபடி புடவையினுள் புகுந்தது.

மெல்ல… அவனது கரம் அவளது அங்கம் முழுவதும் வலம் வரத் தொடங்க,

அவளது ‘கிங்!’ என்ற பலவீனமான மறுப்புக் குரல், அவனது இதழினுள் புதைந்து போனது.

அவளது தயக்கங்களும், சின்னச் சின்ன மறுப்புகளும் அவனது வேட்கையில் மறைந்து போக, அவளது நாணத்தையும் சிணுங்கலையும் ரசித்தபடி, அவளை மென்மையாகக் கையாண்டான்.

கரம் மற்றும் இதழ் கொண்டு தீண்டியே, அவளை ஒரு வழியாக்கினான். உணர்ச்சிக் குவியலில் சிக்கியவளின் ஒரு கரம் அவனது சிகைக்குள் நுழைந்து இறுக்கிப் பிடிக்க, மற்றோர் கரம் அவனது முதுகை இறுக்கமாக வளைத்துப் பிடித்தது.

ஒரு கட்டத்தில் இருவரும் விரும்பியே, அந்தச் சுழலில் சிக்கினர். அதன் பிறகு யார் எடுத்தது, யார் கொடுத்தது என்றில்லாமல், இருவரும் சேர்ந்தே தேடலை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்று, காதலெனும் ஆழ்கடலினுள் மூழ்கி முத்தை எடுத்தனர்.

கூடல் முடிந்த பின் காதலுடன், லவ் யூ லயனெஸ்!” என்றவன், அவளது நெற்றியில் இதழ் பதித்தான்.

மீ டூ.. லவ் யூ கிங்” என்றவள் அவனது இதழில் முத்தம் கொடுத்து, லவ்வை சொல்லும் போது, இங்கே தான் முத்தம் கொடுக்கணும்!” என்று கூறி கண் சிமிட்டினாள்.

error: Content is protected !!