காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 12.4

நண்பகல் பன்னிரெண்டு மணி போல், மூன்று பெரிய பெட்டிகளை தள்ளியபடி இருவரும் உள்ளே வந்த போது, கூடத்தில் தனலட்சுமியும் பத்மாவதியும் அமர்ந்து பேசிக்கொண்டு இருப்பதை கண்டனர்.

முன் தினம், தனலட்சுமியின் மனம் சற்றே இளகி இருந்தாலும், ஒரே நாளில் மாற்றம் வந்து விடாதே! அதுவும் சிறு வயது போதனை, நெஞ்சில் பசுமரத்தாணி போல் பதிந்து இருக்குமே!

பத்மாவதி வேறு இன்று காலையில் கோமதிநாதன் வெளியே செல்லும் நேரத்தைக் கணக்கிட்டு, கைபேசியில் அழைத்து தூபம் போட்டு இருந்தார். 

பத்மாவதி, என்ன புது மருமகளே! வெளியே போறதுக்கு முன்னாடி பெரியவங்க கிட்ட பெர்மிஷன் கேட்கிறது இல்லையா?” என்று ஆரம்பித்தார்.

அவரது குரல் கேட்டதும், மற்ற வீட்டு பெண்கள் அங்கே வந்துவிட்டனர். முதல் தளத்தில் தனது அறையினுள் அலுவலக காணொளி அழைப்பில் இருந்த தயாளனுக்கு சத்தம் கேட்காததால், கீழே வரவில்லை. 

ஆச்சி கிட்டயும், அம்மா கிட்டயும் கேட்டுட்டு தான் கிளம்பினா…” என்ற மகிழ் கொற்றவன், ஆச்சி..! சித்தி… உங்க கிட்ட பெர்மிஷன் கேட்டுட்டு தான் எல்லாம் செய்வாங்களா என்ன?” என்று நக்கலாகக் கேட்டான்.

வடிவழகி, ஹும் ஹுக்கும்.. அவ கேட்டுட்டா மழை பூமியில் இருந்து வானத்துக்கு பெய்திடாது!” என்று நொடித்தார்.

அவர் சொன்ன விதத்தில் லயனிகாஸ்ரீ புன்னகைக்க, பத்மாவதி கோபத்துடன் தனலட்சுமியிடம் கண்ஜாடை காட்டினார். அவன் தனலட்சுமியை எதிர்த்து பேசமாட்டான் என்ற எண்ணத்தில், அவளை களம் இறக்கினார். பாவம், அவருக்கு லயனிகாஸ்ரீ பற்றி தெரியவில்லை.

தனலட்சுமி சற்றே கோபக் குரலில், நீ என்ன இவளுக்கு மௌத் பீஸ்ஸா! அதான் நேத்து ஓம் பொண்டாட்டி அவ்ளோ பேசினாளே! அவளே பேசட்டும்!” என்றாள்.

மகிழ் கொற்றவன் தோள்களை லேசாகக் குலுக்க, அவள் மென்னகையுடன், இப்ப உங்களுக்கு என்ன தெரியனும் அண்ணி?” என்று கேட்டாள்.

மூத்த மருமகளாவது ஏதோ கொண்டு வந்தா.. நீ வெறும் கை வீசிட்டு தான வந்த.. வந்த மறுநாளே, இந்த வீட்டு சொத்தை கரைக்க ஆரம்பிச்சுட்டியா?”

இது எல்லாம் என்னோட பழைய ட்ரெஸ்சஸ் அண்ட் ஜுவெல்ஸ் தான்.. அப்புறம் பயப்படாதீங்க.. இந்த வீட்டு சொத்தை கரைக்க மாட்டேன்.. நானே சம்பாதிக்கிறேன் தான்..”

ஓ! உனக்கு வாங்கிக் கொடுக்க இவனுக்கு வக்கில்லைனு சொல்லாம சொல்றியா?” என்று கேட்ட தனலட்சுமி, கண்ணில் இருந்தது வன்மம் மட்டுமே…!

மகிழ் கொற்றவன் மற்றும் லயனிகாஸ்ரீ, அவளது கூற்றில் சிறிதும் பாதிக்கபடாதவர்களாக நிற்க, அதில் தனலட்சுமிக்கு தான் கோபம் வந்தது.

நடப்பதை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டு இருந்த பத்மாவதிக்கும் எரிச்சல் மூண்டது.

லயனிகாஸ்ரீ, நேத்து, நான் கட்டி இருந்த முகூர்த்த புடவை மட்டும் ஒரு லட்சம்.. அப்புறம் தாலி, பரிச நகை எல்லாம் வாங்கியதும், என்னோட கிங் தான்!” என்றாள்.

அப்போ, இந்தப் பணத்துக்காக தான் இவனைக் கல்யாணம் செய்தியா?”

சத்தமாகச் சிரித்தவள், பணம் வாழ்க்கைக்கு தேவை தான். ஆனா, அதை மட்டுமே வைத்து ஒன்னும் செய்ய முடியாது.. நான் அவரோட குணத்தைப் பார்த்து தான் காதலித்தேன், காதலிக்கிறேன், இன்னும் இன்னும் அதிகமா காதலிப்பேன்..! நான் அவரை காதலிக்கும் போது அவரோட பின்னணி எனக்கு தெரியாது. அவர் ஏழையா இருந்து இருந்தாலும், நான் அவரைத் தான் கல்யாணம் செய்து இருப்பேன்.

சரி… உங்களை ஒன்னு கேட்கிறேன்.. அண்ணா உங்களிடம் தன்னோட காதலை சொல்லிட்டு, உங்களை வெளியே கூட்டிட்டு போய் நகை வாங்கிக் கொடுக்கிறார்.. எந்த தருணத்தில் அதிகமா சந்தோஷப்பட்டு இருப்பீங்க? அண்ணா காதலை சொன்ன போதா? நகை வாங்கிக் கொடுத்த போதா?” என்று கேட்டாள்.

தனலட்சுமி பதில் சொல்ல விரும்பாமல், முகத்தை திருப்பிக் கொண்டாள்.

வடிவழகி, நச்சுனு கேட்ட தங்கம்!” என்று கூற, தனலட்சுமி அவரை முறைத்தாள்.

அதற்கும் அவர், என்னடி முறைப்பு! கண்ணை நோண்டிபுடுவேன்!” என்றார்.

பத்மாவதி, அது என்ன, புருஷனை கிங்னு சொல்ற?” என்று கேட்டார்.

கொற்றவன்னா அரசன் தானே! அதான் கிங்னு சொல்றேன்.”

இருவரையும் எப்படியாவது மட்டம் தட்டிவிட வேண்டும் என்ற வெறியில், தனலட்சுமி நக்கலாகச் சிரித்தபடி, அரசனா! அவனுக்கு இந்த வீட்டில் என்ன பேர் தெரியுமா? கொட்டு…” என்றாள்.

பத்மாவதியும் சத்தமாகச் சிரித்தபடி, கொட்டு சத்தம் கொஞ்சம் அதிகமா கேட்குதுல…” என்று கூற,

தனலட்சுமி, அது ஒன்னுமில்ல சித்தி.. புது பொண்டாட்டி முன்னாடி மௌஸ் காட்ட” என்றபடி சத்தமாகச் சிரித்தாள்.

லயனிகாஸ்ரீ, ஆச்சி, இனி கோமதிநாதன் அண்ணாவை… நான் கோமதி அண்ணா இல்ல… நாத் அண்ணானு தான் கூப்பிடப் போறேன்..

இந்த ‘நாத்’ நாத்தங்கிற வார்த்தையோட ஷாட்ஃபார்ம் மாதிரி இருக்குதோ! பரவாயில்லை.. இனி அப்படியே கூப்பிடுறேன்!” என்றாள்.

வேக மூச்சை வாங்கியபடி கோபத்துடன் அவள் முன் வந்து நின்ற தனலட்சுமி, ஏய்! அப்படி மட்டும் நீ கூப்பிட்ட!” என்று கத்தினாள்.

கனிமொழி வாய் திறக்கப் போக,

அதற்குள் லயனிகாஸ்ரீ, கிங் அண்ணியோட மாத்திரையை எடுத்துட்டு வாங்க.” என்றுவிட்டாள்.   

அவன் அன்னையை ஒரு பார்வை பார்த்து விட்டு, மாத்திரையை எடுத்து வர தங்கள் அறைக்குச் சென்றான்.

தனலட்சுமியிடம் நிதானமான குரலில், கூப்பிட்டா, என்ன செய்வீங்க?” என்று கேட்ட லயனிகாஸ்ரீ, பத்மாவதியையும் விட்டு வைக்காமல், எங்க உங்களோட பையன்? அந்த வெட்டி ஆபீஸ்ஸரை நான் பார்க்கவே இல்லையே! என்ன பார்க்கிறீங்க? வெற்றியை தான் வெட்டினு சொன்னேன்.” என்றாள்.

அவரும், ஏய்! என்ன திமிரா?” என்று கத்த,

அது எனக்கில்லை…”

அப்போ எனக்கு இருக்குதுனு சொல்றியா?” என்று அவர் திரித்து பேசப் பார்க்க,

அவளோ அலட்டிக் கொள்ளாமல், அப்படி நான் சொல்லலை.. உங்களுக்கா தோனுச்சுனா நான் பொறுப்பில்லை..! ஆனா எனக்கு ஒரு சந்தேகம்.. எப்போதும் நீங்க ‘நான் சரியா தான் பேசுவேன்’னு சொல்லுவீங்கலாமே! அப்போ இதுவும் சரியா தான் இருக்குமோ!” என்று கூறினாள்.

பத்மாவதி பதில் கூற முடியாமல் திணற,

தனலட்சுமி, பெரியவங்களை மரியாதை இல்லாம பேச தான், உங்க வீட்டில் கத்துக் கொடுத்து இருக்காங்களா?” என்று கேட்டாள்.

வீண் பழியை ஏத்துகாத.. நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமேனு தைரியமா எதிர்த்து நின்று பேசுனு சொல்லிக் கொடுத்து இருக்காங்க.”

வடிவழகி ஆச்சி கைகளை தட்டியபடி, அருமையா சொன்னடா ராஜாத்தி!” என்றார்.

கீழே வந்த மகிழ் கொற்றவன், நீ ஏன் உன்னோட எனர்ஜியை வேஸ்ட் பண்ற! வா…” என்று கூறி அறைக்கு அழைத்துச் செல்ல,

செல்லும் முன், “உங்க ரெண்டு பேருக்கும் ஒன்னு சொல்லிக்கிறேன்.. கிவ் ரெஸ்பெக்ட் அண்ட் டேக் ரெஸ்பெக்ட்.. நீங்க சரியா கூப்பிட்டா, நானும் சரியா கூப்பிடுவேன்.” என்று விட்டே சென்றாள்.

கீதம் இசைக்க காத்திருப்போம்…

error: Content is protected !!