காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 12.1

கீதம் 12

அடுத்த நாள் காலையில், லயனிகாஸ்ரீ உப்பரிகையில் நின்று தலை முடியை காய வைத்த படி, அந்த புலர்ந்தும் புலராத ஏகாந்தப் பொழுதை ரசித்துக் கொண்டிருந்தாள்.

அப்பொழுது, பட்டும் படாமலும் அவளை உரசியபடி இரு புறமும் கைகளை கொண்டு சென்று, உப்பரிகை கம்பியை பிடித்த மகிழ் கொற்றவன், அவளது முடி மறைக்காத இடதுபுற கழுத்தடியில் முத்தமிட்டு, குட் மார்னிங் லயனெஸ்!” என்றான்.

அவனது அருகாமையிலும் முத்தத்திலும் கிறங்கியவள், நாம வெளியே இருக்கோம் கிங்.” என்றாள்.

இந்த அதிகாலையில், நம்மைத் தவிர வேற யாரும் வெளியே இல்ல…”

அவனது கைவளைவினுள் இருந்தபடியே திரும்பியவள், காதலை சொல்லாம, இப்படி கிஸ் கொடுக்கிறது தப்பு.” என்றாள்.

அப்போ… இறுக்கி அணைச்சு உம்மா தரவா?”

செல்லமாக முறைத்தபடி, நான் என்ன சொல்றேன்னு உங்களுக்குப் புரியல..!” என்றவள் முடித்த போது, கண்களை உருட்டியபடி மிரட்டியிருந்தாள்.

அவனோ புன்னகையுடன் அவளது இடையைப் பற்றி, அவளை தன்னுடலுடன் லேசாக உரசியபடி நிறுத்த,

இதெல்லாம் சரியே இல்ல… கிங்!” என்றாள்.

இடையை சற்றே இறுக்கியபடி, தன்னுடன் சேர்த்து அணைத்தவன், அவளது மூக்கை மூக்கால் உரசியபடி, இது சரியா?” என்று கேட்டான்.

கிங்!” என்று காற்றாகிய குரலில் அவள் அழைக்க,

மூக்கால் அவளது கன்னத்தில் கோலம் போட்ட படி, நீ தான் என்னைக் கெடுத்து வச்சிருக்க” என்றான்.

யாரு நானு! அநியாயம் கிங்!”

ஓயாம கண்ணடிச்சி, அப்பப்போ உதட்டசைத்து முத்தம் கொடுத்தா, என்னோட மனசு அலைபாயாதா? அதான், அந்த அலைகளை எல்லாம் உன் கிட்ட அனுப்புறேன்.”

அப்போ, நான் என்ன செய்றது?”

நெற்றியில் முட்டியபடி, சிம்பிள்.. திரும்ப என் கிட்ட அனுப்பு.. நான் உன் கிட்ட அனுப்புறேன்.. அலைகள் ஓய்வதில்லை!” என்றான்.

லேசாக தலையை பின்னால் நகர்த்தியவள், எது! காதல் அலைகளா?” என்று கேட்டு கண் சிமிட்டினாள்.

அவன் சிரிக்கவும், அதான… இதுக்கு மட்டும் சிரிச்சு மழுப்புவீங்களே!’ என்று மனதினுள் நினைத்தவள், அவனிடம், இப்படி செய்தா, டெம்ப்ட் ஆவீங்களா கிங்!” என்றபடி கண்ணில் காதலுடன், இதழ் குவித்து முத்தம் கொடுத்தாள்.

அவன் பேச்சின்றி அவளையே பார்க்கவும், அவள் குறும்புப் புன்னகையுடன் புருவத்தை ஏற்றி இறக்கினாள்.

கண்ணாலே பேசி பேசி கொல்லாதே..

காதல் தெய்விக ராணி..

போதை உண்டாகுதே..

உன் கண்ணில் வழியும் காதலில்…” என்று அவன் சற்றே கிறங்கிய குரலில் பாடி நிறுத்த,

கண்களை விரித்தவள், உங்க இஷ்டத்துக்கு வார்த்தைகளை மாத்திப் பாடுறீங்க” என்றாள்.

என் மனசில் இருப்பதைத் தானே நான் பாட முடியும்!” என்றவனின் பார்வை, மையலுடன் அவள் விழிகளில் பதிய, அவள் பேச்சிழந்தாள்.

கிறக்கமும், படபடப்பும், காதலும் நிறைந்த அவளது விழிகள்.. அவனைக் காந்தம் போல் இழுக்க, மெல்ல தன்வசம் இழந்தவன், அவளை கைகளில் ஏந்தியபடி அறையினுள் சென்றான்.

அப்பொழுது பூஜை வேளை கரடியாக, அவனது கைபேசி சத்தமிடவும், இருவரும் மாயவலையினுள் இருந்து வெளியே வந்தனர்.

அப்பொழுதும் அவளை நிதானமாக இறக்கிய அவன், அவளது விழிகளின் மேல் மென்மையாக முத்தமிட்டு, மெஸ்மரைஸிங் ஐஸ்!” என்ற பிறகே, கைபேசியில் வந்த அழைப்பை ஏற்று பேச ஆரம்பித்தான்.

கைபேசியில் பேசிக் கொண்டிருந்தாலும், அவனது கவனம் தன்னவளிடம் இருக்க, அவளும் தலை முடியை வாரியபடி கண்ணாடி வழியே, அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பேசி முடித்துவிட்டு அவள் பின்னால் வந்து நின்றவனும், கண்ணாடி வழியே அவளைப் பார்க்க,

அவள் பின்னலிட்டபடி, இந்த நேரத்தில் யாரு?” என்று கேட்டாள்.

ஏன்! எதையும் எதிர்பார்த்து மிஸ் செய்தியா?” என்றபடி அவன் புருவத்தை ஏற்றி இறக்க,

நீங்க சரியே இல்லை கிங்…” என்றாள்.

சிரிப்புடன், கூட வொர்க் பண்ற டாக்டர் தான், போன் செஞ்சார்.. இன்னைக்கு அவரோட டூட்டிய(duty) சேர்த்து பார்க்க முடியுமானு கேட்டார்.. சாரி சார்.. நேத்து தான் கல்யாணம் ஆச்சு.. ஸோ, நான் லீவில் இருக்கிறேன்னு சொல்லி, இன்னொரு டாக்டரை கேட்கச் சொன்னேன்” என்றான்.

உங்க சீஃப் கிட்ட, திருச்சி கான்ஃபரென்ஸ் பத்தி ரிபோர்ட் செய்ய வேணாமா?”

லன்ச் அப்புறம் போவேன்.. கொஞ்ச நேரத்தில் வந்திடுவேன்… அது தெரிந்தா, சரியா அந்த நேரம் வந்து பத்து நிமிஷம் பாருங்கனு சொல்லி, நைஸா என் தலையில் கட்டிட்டு கிளம்பிடுவார். அதான், லீவில் இருக்கேன்னு சொன்னேன்.. ஜெனியூன் பெர்சன், கேட்டா நான் ஹெல்ப் செய்வேன் தான்.”

ரிபோர்ட் சப்மிஷனுக்கு, எதுவும் பிரிப்பேர் செய்ய வேணாமா?”

நேத்து காரில் நீ தூங்கிட்டு இருந்த நேரம் செய்துட்டேன்.. அக்ஷுவலி சந்தோஷே ரெடி பண்ணிட்டான்.. ஜஸ்ட், நான் ரிவ்யூ செய்து சில சேஞ்சஸ் செய்தேன். அதை நான் பார்த்துக்கிறேன்..” என்றவன், அவளது விழிகளை ஆழ்ந்து பார்த்தபடி, 

நீ எதிர்பார்க்கிறதை சொல்லாம, உன்னை எடுத்துக்க மாட்டேன்.” என்றான்.

சட்டென்று அவன் பேச்சை மாற்றியதில், அரை நொடி விழித்தாலும் பிறகு புரிந்து கொண்டு, அது எனக்கும் தெரியும்.” என்றவள் பார்வையை தழைத்து, நான் உங்களை எடுத்துக்காம இருந்தா சரி.’ என்று முணுமுணுத்துவிட்டு எழுந்து செல்ல, அவளது கையைப் பற்றி நிறுத்தியவன்,

இப்போ என்ன சொன்ன?” என்று கேட்டான்.

மனதினுள்,அச்சோ! இப்போ நான் என்ன சொல்வேன்?’ என்று நினைத்தவள், அவன் கண்ணில் தெரிந்த விஷமப் புன்னகையில், தான் பேசியதை தெளிவாகக் கேட்டுவிட்டான் என்று புரிந்து கொண்டாள்.

அவள் அவனுக்கு அழகு காட்டிவிட்டு நகரப் பார்க்க, அவனோ பற்றிய கையை சுழற்றி, அவளை ஒரு சுற்று சுற்ற வைத்து தன் நெஞ்சின் மீது மோதச் செய்து, இடையைப் பற்றினான்.

அவள் படபடத்த இதயத்துடன் அவனை நோக்க, காதலும் மோகமும் கலந்த குரலில், கிஸ் மீ!” என்றான்.

error: Content is protected !!