காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 11.3

அதன் பிறகு, பத்மாவதி எந்த பிரச்சனையும் செய்யாததால், அன்றைய பொழுது அமைதியாகவே கடந்தது. கோமதிநாதனும் தனலட்சுமியும் இரவு உணவை முடித்துக் கொண்டு கிளம்ப, அதன் பிறகு அனைவரும், அவரவர் அறைக்கு படுக்கச் சென்றனர்.

வெல்கம், மை டியர் லயனெஸ்” என்றபடி மகிழ் கொற்றவன் கதவை தனது பெருவிரல் ரேகை கொண்டு திறக்க,

அதான், ஈவ்னிங்கே வெல்கம் செய்தீங்களே!”

அப்போ, நீ அவசரமா கிளம்புற மூடில் இருந்த… அதான் பெருசா எதுவும் சொல்லல..”

குறும்புப் புன்னகையுடன், இப்போ மட்டும் ஸ்பெஷலா தூக்கிட்டு வந்தா, வெல்கம் செஞ்சீங்க!” என்று கேட்டு, கண் சிமிட்டினாள்.

செய்துட்டா போச்சு.” என்றவன், அவளது கையைப் பிடித்து வெளியே கூட்டிச் செல்ல,

கிங் நான் சும்மா சொன்னேன்.” என்று அவள் அவசரமாகக் கூறினாள்.

அறைக்கு வெளியே கூட்டி வந்திருந்தவன், பார்வையை சுழற்றி யாரும் இல்லாததை உறுதி செய்து, சும்மா சொன்னாலும் மனசில் இருக்கப் போய் தானே வந்தது!” என்று கேட்டபடி, அவளை கைகளில் ஏந்தி இருந்தான்.

தன்னிச்சையாக, அவளது கரங்கள் அவனது கழுத்தை தழுவி இருக்க, அவனது கரம் அவளது வெற்று இடையை தீண்டியதில்.. அவளுள் உணர்வலைகள் பாய, அவனைப் பார்த்தபடி காற்றாகிய கிறங்கிய குரலில், கிங்!” என்று அழைத்தாள்.

அவளது இடையின் மென்மையிலும், குரலிலும் அவன் தடுமாறினாலும், அவனை வசம் இழக்கச் செய்யும் வசியம், அவளது விழிகளுக்கே இருந்தது. அவள் கண்ணில் வழிந்த காதலும், வெட்கமும், காதலுடன் கூடிய தேடலும், அவனை வெகுவாகப் பாதித்தது.

லயனெஸ்” என்று கிறங்கிய குரலில் அழைத்த படி, அவளது நெற்றியில் முட்டியவன்.. அவளது கால்களை கொண்டு கதவை மூடினான்.

சில நொடிகளில், கை வலிக்கப் போகுது கிங்.. இறக்கி விடுங்க.” என்றாள்.

அதில் சற்றே தெளிந்தவன், மென்னகையுடன் அவளது நெற்றியில் முத்தமிட்டு, மெத்தையில் படுக்க வைத்து விட்டு, கதவை லாக் செய்துட்டு வரேன்.” என்று கூறிச் சென்று, கதவின் தாழ்பாளை போட்டுவிட்டு வந்தான்.

அதற்குள், அவளும் தெளிந்து இருந்தாள்.

சுவற்றில் தலையணையை சாற்றி அதில் சாய்ந்து, கால்களை நீட்டியபடி அமர்ந்தவன், இன்னைக்கு என்ன மதுரகீதம்?” என்று கேட்டான்.

உருண்டு வந்து அவனது தொடையில் தலையை வைத்துப் படுத்தவள், இன்னைக்கு நமக்கு ஃபஸ்ட் நைட்.. ஸோ அதுக்கு ஏத்த மாதிரி, பாட்டைப் போடுவோம்.” என்றாள்.

என்ன ‘நிலவை கொண்டு வா, கட்டிலில் கட்டி வை’ பாட்டை போடப் போறியா!”

என்னோட லிஸ்ட் பெரும்பாலும் 60’ஸ் 80’ஸ் தான்.” என்றவள் கைபேசியில் இணையத்தின் மூலம்,

முத்து குளிக்க வாரீகளா

மூச்சை அடக்க வாரீகளா” என்ற பாடலை ஒலிக்க விட்டாள்.

ஹக்.. கோளாறு பண்ணாம

கிட்ட வந்து கொஞ்சுங்கோ

சினிமாவில் கொஞ்சுராப்பல” என்ற பெண் வரிகளுக்கு,

காத்தவராயனை ஆரியமாலா

காதலிச்ச மாதிரியிலா” என்ற ஆண் வரிகளை கேட்டு அவன் சிரிக்க,

அவளோ பாடலுடன் சேர்ந்து,

ஜிஞ்சினாக்கடி ஜிஞ்சினாக்கடி

பாத்திகல்லா நீங்களும்

அந்த சரசம் பண்ணிப் பாருங்க” என்று பாடியபடி கண்ணடித்தாள்.

பாடல் முடிந்ததும் அவன், இன்னைக்கு தான் கேட்கிறேன்.. நமக்கு பொருத்தமான பாட்டு தான்.” என்றான்.

நாகேஷ் மனோரம்மா பாட்டு.. படம் ‘அனுபவி ராஜா அனுபவி’னு நினைக்கிறேன்” என்றவள், அடுத்த பாட்டு போடவா?” என்று கேட்டாள்.  

அவன் ஆர்வத்துடன், ஹும்ம்” என்றான்.

இது 90’ஸ் கிட்டான உங்களுக்காக..”

நான் 90’ஸ் கிட்டா?”

இல்லையா பின்ன! 2k கிட்னா இந்நேரம் நாம பாட்டா கேட்டுட்டு இருப்போம்!” என்று கேட்டு கண் சிமிட்டினாள்.

முதல்ல காதல் கடலில் நீந்துவோம்.. அப்புறம் மூச்சை அடக்கி முத்தெடுக்கலாம்…”

அப்போ காதல் வந்துடுச்சா கிங்?”

நீ பாட்டை போடு.” என்று அவன் பேச்சை மாற்ற, அவள் மென்னகையுடன் பாடலை ஒலிக்க விட்டாள்.

ருக்குமணி ருக்குமணி அக்கம் பக்கம் என்ன சத்தம்! காது ரெண்டும் கூசுதடி, கண்டுபிடி என்ன சத்தம்” என்ற பாடல் ஒலித்தது.

சேட்டை’ என்று அவனது வாய் மென்னகையுடன் முணுமுணுக்க, அவள் குறும்புடன் சிரித்தாள்.

பாடல் முடிந்ததும் அவன், ரெண்டு பாட்டும் மெலோடி இல்லையே!” என்றான்.

ஓ!” என்றவள்,

ஊரு சனம் தூங்கிடுச்சி

ஊதக் காத்தும் அடிச்சிடுச்சு

பாவி மனம் தூங்கலையே

அதுவும் ஏனோ புரியலையே!” என்ற பாடலை ஒலிக்க விட்டாள்.

பாடல் முடியும் தருவாயில், அவளை எழுமாறு செய்கை செய்தவன், அவள் எழுந்து அமர்ந்ததும், குழல் விளக்கை அமத்தி, விடிவிளக்கை போட்டு விட்டு, தனது தலையணையை சரியாக வைத்துப் படுத்தான்.

அவள் அவனையே பார்த்தபடி இருக்க, பாடலும் முடிவுற்று இருக்க, நான் புரிய வைக்கிறேன் வா.” என்றபடி, அவளது இடையை பற்றி இழுத்து, தன்னுடன் படுக்க வைத்துக் கொண்டான்.

அவள் அதிர்வுடன், கிங்!” என்று அழைக்க,

அவளை பின்னால் இருந்து அணைத்தபடி, கழுத்திற்கும் தோளிற்கும் இடையில் முகத்தை வைத்திருந்தவன், இப்போ தூக்கம் வரும்.. தூங்கு.” என்றான்.

அவள் சற்றே நெளிந்தபடி, இப்படி, எப்படி கிங்!” என்று மெல்லிய குரலில் வினவ,

உதட்டோரப் புன்னகையுடன், பழகிக்கோ” என்றவன், குட் நைட், ஸ்வீட் ட்ரீம்ஸ்!” என்றபடி அவளது கழுத்தடியில், முத்தம் கொடுத்தான்.

உணர்ச்சிப் பெருங்கடலில் சிக்கியவள் எழும்பாத குரலில், கிங், இப்போ என்ன செய்தீங்க?” என்று கேட்டாள்.

குட் நைட் கிஸ் கொடுத்தேன்.”

இது குட் நைட் கிஸ் இல்ல.. வம்பைர்(vampire) கிஸ்!” என்று அவள் முணுமுணுக்க,

வம்பைர் கிஸ்னா… இன்னும் டீப்பா கொடுத்துட்டு, லாஸ்ட்டா கடிக்கணும்.. வேணுமா..”

சட்டென்று எழுந்தமர்ந்து, வாயில் கை வைத்தபடி அவனைப் பார்க்க,

அவனோ சிரிப்புடன், இப்பவும் என்னை 90’ஸ் கிட்னு சொல்றியா?” என்று கேட்டான்.

அப்பொழுதும் அசராமல், இம்ப்ளிமென்ட் செய்றவரை சொல்லுவேன்.” என்றாள்.

அதிகமாக பேசுற இந்த வாயை, ஒரு நாள் தனியா கவனிக்கிறேன்.. இப்போ படுக்க வா.” என்றபடி பழைய நிலையில் அவளைப் படுக்க வைத்தான்.

சில நொடிகளில், அவனது கைவளைவின் உள்ளேயே அவன் பக்கம் திரும்பியவள், அவனது கழுத்தடியில் முத்தம் கொடுத்த படி, குட் நைட்! ஸ்வீட் ட்ரீம்ஸ் கிங்!” என்றுவிட்டு திரும்பிக் கொண்டாள்.

இப்பொழுது உணர்வுக் கடலினுள் சிக்கிக் கொள்வது அவனது முறையானது. சிரமத்துடன் தன்னை கட்டுப்படுத்தியவன், சற்றே அவளது இடையை இறுக்கிப் பிடித்தபடி, “தூங்கலாம்” என்றான்.

கீதம் இசைக்க காத்திருப்போம்…

error: Content is protected !!