காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 10.4

அவன் கையில் இருக்கும் மருத்துவ அறிக்கையை மனதில் கொண்டு, ஆமா” என்று கூற,

தனலட்சுமி இகழ்ச்சியுடன், கேட்டுக்கோ ஆச்சி.” என்றாள்.

அவன் புரியாமல் பார்க்க, தனலட்சுமியின் கூற்றை சரியாகப் புரிந்து கொண்ட லயனிகாஸ்ரீ மென்னகையுடன், கிங்! அவங்க எனக்கு அபார்ஷன் செய்த மாதிரி பேசுறாங்க.” என்றாள்.

அவன் அதிர்ச்சி கலந்த கோபத்துடன், அக்கா!” என்று அழைக்க,

அதே நேரத்தில் பத்மாவதி, “இதை தான் அப்போ சொன்னியா? அது சரி.. உன்னோட சின்ன மாமியார் அந்த குழந்தை யாரோடதுனு எதுவும் சொன்னாங்களா? இவனோடதா, இல்லை..” என்று இழுத்து நிறுத்த,

கனிமொழி, பத்மா.. தப்பா பேசாத…” என்றார்.

பத்மாவதி அலட்சியமாக உதட்டை சுளிக்க,

மகிழ் கொற்றவனோ கோபத்தை அடக்கிய நிதான குரலில், பார்த்து பேசுங்க சித்தி.. நான் இந்த வீட்டு மற்ற ஆண்களை போல் இல்லை..! மனைவியை யார் வேணாலும் என்ன வேணாலும் பேசலாம்னு கண்டுகாமப் போற கணவனும் இல்லை! தாம் தூம்னு மனைவியை கத்த விட்டு, அமைதியா இருக்கிற கணவனும் இல்லை!” என்றவனின் பேச்சை இடையிட்ட பத்மாவதி,

ஏய்! எவ்ளோ தைரியம் இருந்தா என் புருஷனை பேசுவ…!” என்று கத்தினார்.

சட்டென்று அருகே சென்று, சுப்” என்றபடி தனது வாய் மீது ஆள் காட்டி விரலை வைத்தவன், கண்களில் தெரிந்த அடக்கப்பட்ட கோபத்தைக் கண்டு, ஒரு நொடி ஆடித்தான் போனார்.

பின், இவ்ளோ நாள் நான் அமைதியா இருந்தேன்னா, உங்களுக்கு பயந்து இல்லை. என் அம்மா சொல்லுக்கு கட்டுப்பட்டு.. ஆனா, அதுவே என் மனைவியை பேசினா…!” என்று ஒரு நொடி நிறுத்தி அவரை ஆழ்ந்து நோக்கியவன், நான் ஈ.என்.டீ டாக்டர்.. எந்த கேபிளை கட் செய்தா, வாய் நிரந்திரமா பேசாதுனு நல்லாவே தெரியும்!” என்று மிரட்டி விட்டே நகர்ந்தான்.

அவனது பார்வை மற்றும் பேச்சில், பத்மாவதி சிறு பயத்துடன் வாயை தற்காலிகமாக மூடிக்கொள்ள,

மொத்த வீடுமே ‘மகிழா இது!’ என்று தான் பெரும் ஆச்சரியத்துடன் பார்த்தது.

இப்பொழுதும் முதலில் சுதாரித்த தனலட்சுமி, பார்த்தீங்களாப்பா! நம்ம மகிழ் என்னைக்காவது இப்படி பேசி இருக்கானா? எல்லாம் இவளால தான்.. வீட்டில் காலடி எடுத்து வச்சதும், சண்டை மூட்டி விட்டுட்டா!” என்றாள்.

மகிழ் கொற்றவன், ஓ! இத்தனை நாள் நம்ம வீடு அமைதி பூங்காவா இருந்ததா!” என்று நக்கலாகக் கேட்டான்.

அவளோ அதை கண்டு கொள்ளாமல், முதல்ல சித்தி கிட்ட அப்படி பேசியதுக்கு மன்னிப்பு கேளு!” என்று அதிகாரமாகக் கூறினாள்.

முடியாது.”

அவள் அதிர்வுடன், என்ன?” என்று வினவ,

அவனோ நிதானமாக, உங்களுக்கு காது சரியா தான் கேட்டுது.” என்றான்.

எப்படி பேசுறான் பாருங்கப்பா!” என்று அவள் தந்தையை இழுக்க,

அவரும் கண்டிக்கும் குரலில், மகிழ் அக்கா கிட்ட ஒழுங்கா பேசு.” என்றார்.

அவங்க என் மனைவியை தப்பா பேசியும், நான் இப்பவரை மரியாதையுடன் தான் பேசுறேன்.”

அப்பா.. அவனை சித்தி கிட்ட மன்னிப்பு கேட்கச் சொல்லுங்க.”

தர்மலிங்கம் பேசும் முன்,

நான் ஏன் கேட்கணும்.. தப்பா பேசியதுக்கு அவங்க தான் லயனி கிட்ட மன்னிப்பு கேட்கணும்!” என்றிருந்தான்.

என்ன! நான் மன்னிப்பு கேட்கணுமா…. என்னடா நினைச்சிட்டு இருக்க?” என்று பத்மாவதி எகிற,

நான் சொன்னபடி அவனை மன்னிப்பு கேட்கச் சொல்லுங்கப்பா” என்று வேக மூச்சை வெளியிட்டபடி கத்தினாள்.

அவளது முகத்தைப் பார்த்து பதற்றம் கொண்ட தர்மலிங்கம், தனாமா.. அப்பா சொல்றதை கேளுடா!” என்று ஆரம்பிக்க,

முதல்ல அவனை மன்னிப்பு கேட்கச் சொல்லுங்கப்பா” என்று சொன்னதையே தான் சொன்னாள்.

கனிமொழி, மகிழா..” என்று அழைக்க, பத்மாவதி வெற்றிக் களிப்புடன் நடப்பதை பார்க்க ஆரம்பித்தார்.

மகிழ் கொற்றவனோ கொண்டு வந்திருந்த பையில் இருந்து, தண்ணீர் போத்தல் மற்றும் தனலட்சுமி இந்த மாதிரி சமயத்தில் எடுத்துக் கொள்ளும் மாத்திரையையும் எடுத்து அன்னை கையில் கொடுத்து, இதை கொடுங்க.. சரி ஆகிடும்.” என்றான்.

அனைவரும் அவனை அதிர்வுடன் பார்க்க, தனலட்சுமி கூட அதிர்ச்சியில், சற்றே இயல்பு நிலைக்குத் திரும்பி இருந்தாள்.

மகிழ் கொற்றவன், என்ன அக்கா பார்க்கிறீங்க! என்னை என்ன வேணாலும் சொல்லும் உரிமை, உங்களுக்கு இருக்குது.. ஆனா, என் மனைவியை பேசும் உரிமை இல்லை.. உங்க உடல் நிலையை காட்டி தானே, என்னை பணிய வச்சாங்க.. இனி நானே அதுக்கு மருத்துவம் பார்த்திடுறேன்.. அப்போ உங்களுக்கு பிரச்சனை வராதே!” என்றான்.

பலத்த கை தட்டும் ஓசை கேட்டு, அனைவரும் சத்தம் வந்த திசையில் திரும்ப, அங்கே கைகளை தட்டியபடி கோமதிநாதனும், அவன் அருகே தயாளனும் நின்றிருந்தனர்.

முதலில் சுதாரித்த மகிழ் கொற்றவன், வாங்க மாமா.” என்று அழைக்க,

அதன் பிறகே தர்மலிங்கமும் கனிமொழியும், வாங்க மாப்பிள்ளை!” என்று வரவேற்றனர்.

வாங்க தயாளன்” என்றபடி தயாளனுடன் அனைவர் அருகே சென்ற கோமதிநாதன்,

மகிழ் கொற்றவனை அணைத்தபடி, வாழ்த்துக்கள் மகிழ்” என்றான்.

தேங்க்ஸ் மாமா.”

வாழ்த்துக்கள் தங்கச்சி.” என்று லயனிகாஸ்ரீயைப் பார்த்து கூற,

அவள் மென்னகையுடன், நன்றி அண்ணா” என்றாள்.

என்ன, வந்த முதல் நாளே பிச்சிட்டு ஓடிடலாமானு யோசிக்க வைக்கிறாங்களா?” என்று மென்னகையுடன் அவன் வினவ,

அவளோ புன்னகையுடன், போக போக தானே தெரியும்.. யாரு பிச்சிட்டு ஓடப் போறாங்கனு..” என்றாள்.

அப்படிங்கிற!”

ஹும்ம்”

அம் வெயிட்ங்!” என்றவன் தன்னை அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்த மனைவியைப் பார்த்து, தங்கச்சி கிட்ட மன்னிப்பு கேளு.” என்றான்.

அவள் பெரும் அதிர்வுடன், ஹான்!” என்றபடி விழிக்க,

அவன், அழுத்தம் திருத்தமாக மீண்டும் கூறினான்.

நான் தப்பா சொல்லலைங்க.. சின்ன அத்தை தான் ஹாஸ்பிடலில் இவங்களை பார்த்ததாவும்.. ‘மகிழ் ஹஸ்பண்டுனு சொல்லி அட்மிட் செய்து இருந்தாலும், அந்த பொண்ணு கழுத்தில் தாலி இல்ல.. சாப்பாட்டு ஒத்துக்கலைனு ட்ரீட்மென்ட் நடக்கிறதா வெளியே சொன்னாலும், எனக்கு என்னவோ சந்தேகமா இருக்குது’னு ஒரு நர்ஸ் இன்னொரு நர்ஸ் கிட்ட பேசிட்டு இருந்ததை கேட்டதாவும் சொன்னாங்க…”

மற்றவர்கள் அவளை தவறாக நினைக்கக் கூடாது என்பதற்காக, அவளது விளக்கத்தை பொறுமையாகக் கேட்டவன், “இதை வைத்து, அபார்ஷன்னு நீயே முடிவு செய்துட்டியா?” என்று கேட்டான்.

குரலை சற்றே தாழ்த்தி இருந்தவள், இல்லைங்க.. அதையும் சின்ன அத்தை தான் சொன்னாங்க..” என்றாள்.

இத்தனை வருஷத்தில், அவங்க குணம் உனக்கு தான் தெரியாதா? இல்லை… அப்படி ஒன்னு நடந்து இருந்தா, ஒரே நாளில் இந்த பொண்ணு தான் இப்படி தெம்பா வந்து நிற்க முடியுமா? இல்லை, இன்னைக்கு கல்யாணம் செய்றவன் அப்படி ஒரு காரியத்தை செய்றதுக்கான அவசியம் தான் என்ன? மகிழ் விசயத்தில் மட்டும் எதையுமே யோசிக்க மாட்டியா?” என்று அவன் கேள்விகளை அடுக்க, ஒன்றிற்குக் கூட அவளால் பதிலை சொல்ல முடியவில்லை.

பத்மாவதி எரிச்சலுடன் இருக்க, மற்றவர்களும் அப்போது தான் கோமதிநாதன் கேட்ட கோணத்தில் யோசித்து, அதானே!’ என்று நினைத்துக் கொண்டனர்.

தனலட்சுமி, சாரி அத்தான்.” என்று கூற,

அவனோ, நான் உன் மேல் வைத்திருக்கும் நேசம் உண்மைனா, இனி என்னைக்குமே நீ லயனிகாஸ்ரீயோட குணத்தைப் பற்றி தப்பா பேசக் கூடாது.” என்றான்.

கண்கள் கலங்கிய நிலையில், ஏன்க… பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க?” என்றாள்.

மனைவியின் கலங்கிய முகம், அவனை பெரிதும் வதைத்தாலும், அவளை திருத்துவதற்காக மனதை இழுத்துப் பிடித்துக் கொண்டு அமைதியாக நின்றான்.

தனலட்சுமி, லயனிகாஸ்ரீயிடம் மன்னிப்பு கேட்க வாய் திறக்கப் போக,

அவள், யாரோ தப்பா சொன்னதுக்கு, நீங்க என்ன செய்வீங்க அண்ணி! விடுங்க.” என்றிருந்தாள்.

அந்த நொடியில்… பத்மாவதி மற்றும் தனலட்சுமி தவிர… மற்றவர்கள் மனதில் அவள் இடம் பிடித்துவிட்டாள்.

தனலட்சுமியோ, இருந்தாலும், நான் நிதானித்து இருக்கணும்.. அப்படி பேசியதுக்கு சாரி.” என்றாள்.

அப்பொழுதும், அவள் தனது தவறை உணர்ந்து வருந்தவில்லை தான். ஆனால், தனது கணவனின் நேசத்திற்காக மன்னிப்பு கேட்டு இருந்தாள்.

கீதம் இசைக்க காத்திருப்போம்…

error: Content is protected !!