காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 9.6

அவன் முறைப்புடன், என்ன கிண்டலா?” என்று வினவ,

பின்ன என்ன! நீங்க பாட்டுக்கு அடுக்கிட்டே போறீங்க! இந்த திருட்டுக் கல்யாணத்துக்கு, பாட்டி ஓகே சொல்ல மாட்டாங்க.”

எது! திருட்டு கல்யாணமா?”

வீட்டில் சொல்லாம, பெரியவங்களுக்கு தெரியாம, செய்துக்கிற கல்யாணத்துக்கு பெயர் அதான்”

ஆமா, நம்ம வீட்டில் அப்படியே ஆரத்தி எடுத்து வரவேற்பாங்க!”

காதல் கல்யாணத்தில் சில எதிர்ப்புகள் வர தான் செய்யும்.. அதையெல்லாம் தாண்டி கல்யாணம் செய்துக்கிறதில் தானே த்ரில்!” என்று கூறி கண் சிமிட்டினாள்.

என்ன தான், நம்ம வீட்டில் ஓகே சொல்ல மாட்டங்கனு தெரிந்து இருந்தாலும், போராடி வீட்டு சம்மதத்துடன் தான் கல்யாணம் செய்துக்க நினைத்தேன். ஏன்னா, அதான் உனக்கு மரியாதை..! இப்போ, சும்மா இருக்க வாய்க்கு அவல் போட்ட மாதிரி தான். ஆனா, எனக்கு வேற வழி இல்லை.. உன் உயிருக்கு ஆபத்து இருக்கும் போது, என்னால் இப்படி மட்டும் தான் யோசிக்க முடியுது. நம்ம கல்யாணத்தை வைத்து, கொஞ்ச காலம் நீ பேச்சு வாங்குறது போல் இருக்கும்.. என்னை மன்னிச்சிடு.”

என்ன இது மன்னிப்புனு பெரிய வார்த்தை எல்லாம் கேட்டுட்டு!” என்று அவள் கோபத்துடன் முறைத்தாள்.

என்னால் நீ பேச்சு வாங்கும் போது..” என்றவனின் பேச்சை இடையிட்டவள்,

ஏன் எனக்கு வாய் இல்லை! அதெல்லாம் நான் அசால்ட்டா சமாளிப்பேன்.”

ஓகே.. ஆனா எது நடந்தாலும், என் கிட்ட டெய்லி சொல்லிடனும்.. அண்ட் உன்னால் முடியலைனா, தனியா போய்டலாம்.”

அதெல்லாம் ரஸ்க் மாதிரி சமாளிக்கலாம் அரசே!”

புன்னகைத்தவன், அப்புறம் ஒரு முக்கியமான விசயம், அங்க நம்ம வீட்டில் உன்னோட அடையாளத்தை சொல்லப் போறது இல்லை. அங்கே இருக்கிறதெல்லாம் விஷ ஜந்துக்கள்னு தெரிந்தும், ரிஸ்க் எடுக்க என்னால் முடியாது.” என்றான்.

ஸோ.. அதுக்கும் பேச்சு வரும்.” என்று தயாளன் கூற,

மகிழ் கொற்றவன், சற்றே கவலையுடன் தன்னவளைப் பார்த்தான்.

அவளோ விரிந்த புன்னகையுடன், யூ டோன்ட் வொர்ரி கிங்.. உங்க லயனி லயமா சமாளிப்பா.” என்றாள்.

அப்போ ரெண்டு பேரும், நாளைக்கு கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டீங்க!” என்று கூறிச் சிரித்தான்.

லயனிகாஸ்ரீ, அடபாவி கிங்!” என்று கூற, அவனோ வசீகரப் புன்னகையுடன் கண்ணடித்தான்.

தயாளன், பாப்பா, கல்யாணத்தைப் பற்றி அம்மா கிட்ட இப்போதைக்கு சொல்ல வேணாம்.. ஒரு முக்கியமான வேலை விசயமா, ரெண்டு வாரத்துக்கு நீயும் நானும் வெளியூர் போறதாவும், வொர்க்ஸ் எல்லாம் நீ அங்கிருந்தே பார்த்துப்பனும் அஃபிசியல் மெயில் மட்டும் அனுப்பு.. வீட்டிலும் ஆஃபீஸிலும் யார் யார் எப்படி இருக்காங்கனு, என்னோட ஆட்களை வைத்து மானிட்டர் செய்துக்கிறேன்.” என்றான்.

அதன் பிறகு சிறிது நேரத்தில் மருத்துவ மனையில் இருந்து கிளம்பியவர்கள், நேரே வசந்தாம்பாள் வீட்டிற்குச் சென்றனர்.

முன்தினமே, தயாளன் மகிழ் கொற்றவன் பற்றி அவரிடம் மின்னஞ்சல் மூலம் கூறி இருந்ததால், மகிழ்ச்சியுடன் அவனை வரவேற்றவர், பேத்தியின் நலனை பார்வையால் உறுதி செய்து கொண்டார்.

பின் யோசனையுடன், ஏதும் பிரச்சனையா? சொல்லாம நேரில் வந்து இருக்கிறீங்க?” என்று கேட்டார்.

மகிழ் கொற்றவன், நீங்க செம ஷார்ப் பாட்டி.. ஆனா, நல்ல விசயத்துக்கு, உங்க அனுமதி கேட்டு தான் வந்து இருக்கோம்.” என்றான்.

அவர் சிரிப்புடன், உங்க கல்யாணத்தில், எனக்கு பூரண சம்மதம்” என்றார்.

ரொம்ப சந்தோசம் பாட்டி.. அப்படியே நாளைக்கே கல்யாணத்தை செய்துக்கிறதுக்கும் சம்மதம் சொல்லிடுங்க.”

அவர் யோசனையுடன், என்ன பிரச்சனை? உடைத்து சொல்லுங்க தம்பி” என்றார்.

அவன் மருத்துவ மனையில் கூறிய அனைத்தையும் கூறி முடித்தான்.

பொறுமையாகக் கேட்டவர், உங்க எண்ணத்தை முழுமையா தவறுனு என்னால் சொல்ல முடியல.. அதே நேரத்தில், சரின்னும் சொல்ல முடியாது. என்ன தான் காரணங்களை நீங்க அடுக்கினாலும், உங்க வீட்டு பெரியவங்களுக்கும் பெத்தவங்களுக்கும் தெரியாம கல்யாணத்தை செய்றது, தவறு தான்.” என்றார்.

அடுத்த அரை மணி நேரம் போராடி, லயனிகாஸ்ரீயின் உயிரை முன் நிறுத்திப் பேசி, திருமணத்திற்கு அவரை சம்மதிக்க வைத்தவன்,

பெரியவங்கனு… நீங்களாவது வந்து எங்க கல்யாணத்தை பார்த்து, அட்சதை தூவி ஆசீர்வாதம் செய்தா தானே, எங்க வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்! ப்ளீஸ் பாட்டி, வாங்க.. எங்க வாழ்க்கை செழிக்க உங்க ஆசீர்வாதம் ரொம்ப முக்கியம்.” என்று உணர்ச்சிகரமாகப் பேசி, அவரை கல்யாணத்துக்கு வருவதற்கும் ஒத்துக்கொள்ள வைத்தான்.

அதன் பின், அவனது திட்டப்படியே அனைத்தும் நடந்தது.

சரியாக முகூர்த்த நேரத்திற்குத் தான், ரிதன்யாவின் திருமணத்திற்குச் சென்றவர்கள், திருமணம் முடிந்து மேடைக்கு செல்லும் வரை, அவர்கள் கண்ணில் படாதபடி தான் அமர்ந்து இருந்தனர். நவீனா, ரிதன்யா அருகிலேயே இருந்ததால், அவளும் இவர்களைப் பார்க்கவில்லை.

மேடைக்கு, மூவரும் சென்றனர். இவர்களின் திருமணக் கோலத்தைப் பார்த்து அதிர்ந்த ரிதன்யா, நவீனா மற்றும் ராஜீவ் கிருஷ்ணாவிடம்…

மகிழ் கொற்றவன், நாளைக்கு டிட்டேல்டா போனில் சொல்றோம்.. லயனிக்கு, புது போன் அண்ட் நம்பர் நாளைக்கு  வாங்கிடுவேன்.  அதுவரை, எனக்கே போன் செய்து பேசுங்க.. இப்போதைக்கு ஒன்றை மட்டும் தெரிஞ்சுக்கோங்க.. லயனி  உயிருக்கு  ஆபத்து இருக்குது. அதான், இன்னைக்கே கல்யாணம் செய்து எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். ஸோ… யாரும் என்னைப் பற்றியோ.. லயனி பற்றியோ விசாரித்தா… எதுவும் சொல்லாதீங்க.

எங்க கல்யாணத்தைப் பற்றியும் சொல்லாதீங்க.. முக்கியமா, என்னோட விவரங்களை யார் கேட்டாலும் சொல்லாதீங்க. உங்க கல்யாண வீடியோ அண்ட் ஆல்பம், வெளி ஆட்களுக்கு கொஞ்ச நாட்களுக்கு காட்டாதீங்க ப்ளீஸ்.. ஹோட்டல் சிசிடிவி புட்டேஜ் கரப்ட் செய்றது தயா பார்த்துப்பார். அப்புறம் என்னைப் பற்றி காண்ஃபரென்ஸ் டீட்டேல்ஸ்ஸில் கூட இருக்காது.. ஏன்னா, நான் வேற ஒருத்தருக்குப் பதில் தான் வந்தேன்.. அண்ட் ரூம் சந்தோஷ் பெயரில் தான் புக் ஆகி இருக்குது.” என்று வேகமாக கூறி முடித்தான்.  

மூவரும் அதிர்ச்சி விலகாமல் அவனையே பார்த்துக் கொண்டு இருக்க,

ஷாக்கை குறை! ஷாக்கை குறை!” என்ற லயனிகாஸ்ரீ, தோழிகள் அவளை முறைக்கவும்,

ஓகே, இப்போ போட்டோ டைம்.. ஸே சீஸ்” என்றபடி பல்லைக் காட்டிச் சிரித்தாள்.

அவளது கலாட்டாவில், மகிழ் கொற்றவனும் தயாளனும் இயல்பாகச் சிரிக்க, மற்ற மூவரும் வேறு வழியின்றி சிரிக்க, அது எண்ம கருவியில் புகைப்படமாகப்  பதிவாகியது.

அதன் பிறகு, அங்கிருந்து கிளம்பி திருமணத்தை பதிவு செய்து விட்டு, ராஜீவ் கிருஷ்ணாவின் ஐந்து நட்சத்திர உணவகத்திற்குச் சென்றனர்.

அங்கே தயாளன் மறைகாணி பதிவுகளில் தனது வேலையை முடித்ததும், அங்கிருந்து கிளம்பி, சென்னையில் இருக்கும் மகிழ் கொற்றவனின் வீட்டை நோக்கிப் பயணத்தை தொடங்கினர்.   

கீதம் இசைக்க காத்திருப்போம்…

error: Content is protected !!