காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 9.5

தயாளன் பக்கம் திரும்பியவன், இத்தனை வருசம் ஆகியும், யாரால் இவ உயிருக்கு ஆபத்துனு கண்டுபிடிக்க முடியலையா?” என்று கேட்டான்.

நான் களத்தில் இறங்கி முயற்சித்து இருந்தா, கண்டு பிடித்து இருப்பேன்.. ஆனா பாப்பாவை விட்டுட்டு என்னால் சென்னைக்குப் போய் தேட முடியலை.. அதுக்கு ரெண்டு காரணங்கள்.. !

ஒன்னு, ஒருவேளை என்னை அங்கே யாரும் பார்த்து, என்னை தொடர்ந்து வந்து பாப்பாவை கண்டு பிடிக்க வாய்ப்பு இருக்குது. இன்னொன்னு, பாப்பாவோட பாதுகாப்பு.. அதனால் நான் பாப்பாவை விட்டு நகரவே இல்லை.”

அங்கே உன்னோட அப்பா வீட்டில், உன்னை காணாம எதுவும் சொல்லலையா?”

அப்பா இறந்ததுக்கு நாலு நாட்கள் முன்னாடி தான், உயில் எழுதி வச்சு இருக்காங்க.. அதை வைத்து தான் அப்பா இறப்பு கொலைனு தயா சொல்லிட்டு இருக்கான். இறந்த வீட்டில் சொந்தபந்தங்கள் எல்லோர் முன்னாடியும், வக்கீல் அங்கிள் சொத்துக்கள் அனைத்தையும் அப்பா என் பெயரில் உயில் எழுதி இருப்பதாவும், என் உயிருக்கு ஆபத்து இருப்பதால், என்னை பாதுக்காப்பா ஒரு இடத்துக்கு அனுப்பி வச்சு இருப்பதாவும், எனக்கு 25 வயசு முடிந்ததும், நான் வந்து சொத்துக்களை டேக் ஓவர் செய்வேன்னும் அப்பா சொன்னதா சொல்லி இருக்காங்க. நான் எங்கே இருக்கேன்னு அவருக்கே தெரியாதுனு சொல்லி இருக்கார். ஸோ… என்னோட 25வது பிறந்த நாள் வரை, அவர் எங்களை தொடர்புகொள்ளவே இல்லை.

அப்புறம் பதினாறாவது நாள் விசேஷம் முடிந்ததும், குடும்ப உறுப்பினர்கள் மட்டும் இருக்கும் போது, உயிலை வாசித்து இருக்காங்க..! நீங்க கெஸ் செய்தது போல் தான், உயிலில் இருந்தது.. அதான் என் இறப்பு இயற்கையா இருக்கிற மாதிரி தெரிய, என்னோட இன்டர்னல் ஆர்கன்ஸ்ஸில் கை வைத்து இருக்காங்க போல…”

நீ இப்போ, சென்னையில் உங்க வீட்டில் தான் இருக்கிறியா?”

அது என் வீடுன்னு எனக்கு தோனவே இல்லை.. பாட்டி வீடு தான் என்னோட வீடா எனக்கு தோணுது.”

எப்போ, அங்கே போன?”

ஒரு மாசமா தான் அங்கே இருக்கிறேன்.. இத்தனை நாள் தயா சொன்னதை என்னால் முழுசா நம்ப முடியலை.. ஆனா, இந்த பணம் பத்தும் செய்யுங்கிறது உண்மை தான் இல்ல!” என்று விரக்தியாகச் சிரித்தவள்,

அடுத்த நொடியே, நோ லயு! அன்புக்காக மட்டும் எதையும் செய்யும் பாட்டி போன்ற ஆட்களும், தந்தை சொல்லை வேதவாக்கா எடுத்து நடக்கும் தயா போன்ற ஆட்களும், உன்னை உனக்காக விரும்பும் உன் கிங் போன்ற ஆட்களும் இருக்காங்க தான்.” என்று நேர்மறையாக யோசித்து புன்னகை புரிந்தாள்.

இவங்களுக்கு எல்லாம் ஒரு படி மேல, கோடிகளுக்கு அதிபதியா இருந்தாலும், பணத்தை பெரிதாக நினைக்காம அன்பு மட்டுமே நிலையானதுனு நினைக்கும், என் லயனெஸ் இருக்காளே!” என்று மகிழ் கொற்றவன் கூற,

அவள் வேண்டுமென்றே, அச்’ என்று தும்மினாள்.

அவளது செயலில், மூவரின் முகத்திலும் மென்னகை அரும்பியது.

மகிழ் கொற்றவன், எதை வைத்து, கொலையாளி சென்னை வீட்டில் இருக்கும் ஆள் தான்னு சொல்ற?” என்று கேட்டான்.

நான் ரெகுலரா ப்ளட் டொனேட் செய்ற ஆள்.. அதனால் வருஷத்துக்கு ஒரு முறை ஃபுல் பாடி செக்கப் செய்வேன்.. சென்னை போறதுக்கு ஒரு வாரம் முன்னாடி தான், செக்கப் செய்தேன்.. நீங்க சொல்ற வைடல்ஸ் எல்லாம் நார்மலா தான் இருந்தது.”

அப்போ, உன் சாப்பாட்டில் ஸ்லோ பாய்சன் கலந்து கொடுத்து இருக்க வாய்ப்பு இருக்குது.”

வீட்டில் சாப்பாடு எல்லோரும் ஒன்னா தான் சாப்பிட்டோம்.. எனக்கு தனி சமையல் இல்லையே! மதியம் நானும் தயாவும் ஒன்னா சாப்பிட்டோம்.”

அப்போ, இதே டெஸ்ட்ஸ் தயாக்கும் செய்தால் தெரிந்து விடும்.. தயாக்கும் இதே மாதிரி வைடல்ஸ் வேரி ஆச்சுனா, மதிய சாப்பாட்டில் தான் ஏதோ கலந்து இருக்கணும்.. தயாக்கு நார்மல்னா உனக்கு வேறு வழியில் கலந்து கொடுத்து இருக்கணும்.. உனக்கு நைட் பால் குடிக்கிற பழக்கம் இருக்கா?”

இங்கே பாட்டி கம்பெல் செய்தா குடிப்பேன்.. அங்கே அம்மா, டெய்லி கொடுத்தாங்க.”

பாலில் கலந்து கொடுத்து இருக்க வாய்ப்பு இருக்குது.”

ஆனா, அம்மா தானே எனக்கு கொடுத்தாங்க”

உன் அம்மாவே பாலை காச்சி இருக்க மாட்டாங்க தானே!” என்றவன்,

பாலில் தான் கலந்து இருக்கணும்னு இல்லை.. தயாக்கும், டெஸ்ட் எடுப்போம்” என்றான்.

இப்பவே எடுக்கலாம்” என்று இருவருமே ஒன்றாகக் கூறினர். பதில் ஒன்றாக இருந்தாலும், நினைப்பு மற்றவர் மீது கொண்ட அக்கறையாக இருந்தது.

இல்லை.. இங்கே சரி வராது.. அல்ரெடி நாம போலீஸ்கு சொல்லாம, ஒரு ட்ரீட்மென்ட் கொடுத்து இருக்கோம்.. இப்போ தயாக்கு அதே டெஸ்ட் எடுத்தா, பல கேள்விகள், சந்தேகங்கள் வரும். இன்னும் மூனே நாள் பொறுத்துபோம்.. நாளைக்கு நைட் சென்னை போய்டுவோம். நாளான்னைக்கு மார்னிங் டெஸ்ட் கொடுப்போம்.”

ஓகே” என்று மற்ற இருவரும் கூறவும்,

தன்னவளைப் பார்த்து, ஆனா இனி உன்னை அந்த வீட்டுக்கு அனுப்புறதா இல்லை.” என்ற மகிழ் கொற்றவன், தயாளனைப் பார்த்து,

முதல்ல, அந்த கொலையாளியை கண்டு பிடிங்க.” என்றான்.

நான் தான், பாப்பாவை விட்டுட்டு போக முடியாதுனு சொன்னேனே!”

இங்கே விட்டுட்டு தானே போக முடியாது! சென்னையில் நம்ம வீட்டில், என் மனைவியா லயனி என்னோடு இருக்கும் போது, நீங்க நிம்மதியா செயல்படலாமே!”

ஆனா..” என்று லயனிகாஸ்ரீ ஆரம்பிக்க,

ஆனாக்குலாம் இடமில்லை.. நாளைக்கே நமக்கு கல்யாணம்.. இப்போ நேரா பாட்டி வீட்டுக்கு தான் போறோம்.. நான் பாட்டி கிட்ட பேசி சம்மதம் வாங்குறேன்.” என்றான்.

இருவரின் அதிர்ச்சியை சிறிதும் பொருட் படுத்தாமல், நான் போய் டிஸ்சார்ஜ் சம்மரி ரெடியானு பார்த்துட்டு வரேன்.. அப்புறம் தயா, பாட்டி கிட்ட சம்மதம் வாங்கியதும், நானும் நீங்களும் போய் லயனிக்கு முகூர்த்த புடவை, தாலி, மெட்டி, எனக்கும் உங்களுக்கும் பட்டு வேஷ்டி சட்டை, பாட்டிக்கு பட்டுப் புடவைனு எல்லாம் வாங்கிட்டு வந்திருவோம்.

ரிதன்யா கல்யாண முகூர்த்தம் 9.3௦க்கு தானே சொன்னாங்க! அது ஒன்னும் பிரச்சனை இல்லை.. நாளைக்கு புதன் கிழமை தானே! 6 டு 7.30 ஒரு முகூர்த்தம் இருக்கும்.. அதில் நாம கல்யாணம் செய்துட்டு, ரிதன்யா கல்யாணத்தை அட்டென்ட் செய்துட்டு, நம்ம கல்யாணத்தை ரெஜிஸ்டர் செய்துக்கலாம். ரெஜிஸ்டர் ஆஃபிஸ் ஃபார்மாலிட்டீஸ் நீங்க பார்த்துக்கோங்க தயா.. உங்க ஊர் தானே! ஸோ, உங்களுக்கு யாரை எப்படி பிடிக்கணும்னு தெரியும்.” என்று அடுத்தடுத்த திட்டங்களை தீட்டினான்.

கொஞ்சம் மூச்செடுத்துக்கோங்க மகிழ்.” என்று தயாளன் கூற,

இப்போ இவையே உங்கள் கட்டளைகள்.. உங்கள் கட்டளைகளே சாசனங்கள்னு எடுத்துகிட்டு, நாங்க செயல் படனுமா அரசே!” என்று லயனிகாஸ்ரீ கிண்டலாகக் கேட்டாள்.

error: Content is protected !!