காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 9.4

சிறு அதிர்வுடன் அவளைப் பார்த்தவன், அவள் கண்ணில் இருந்த குறும்பைக் கண்டு கொண்டான். விரிந்த மென்னகையுடன் ஆள்காட்டி விரலை ஆட்டியபடி, சேட்டை! உனக்கு தெரிந்தாலும் தெளிவு படுத்திடுறேன்.. எனக்கு இந்த பிஸ்னெஸ் எல்லாம் செட்டே ஆகாது. ஸோ.. என்னை எதிர் பார்க்காதே.. நான் எப்பவும் டாக்டர் மட்டும் தான். என் அப்பாவோட பிஸ்னெஸ் பற்றி தெரிந்து கொள்ள நான் நினைத்ததும் இல்லை. நானே நினைத்தாலும் விட மாட்டாங்க.. அது வேற விசயம்!” என்று சிரித்தான்.

பின், உனக்கு விருப்பம் இருந்தா, உன்னோட அடையாளத்தைச் சொல்லு” என்றான்.

உங்களிடம் மறைக்க எதுவும் இல்லைனு சொன்னேனே! அன்னைக்கு சும்மா தான், முழுசா சொல்ல மாட்டேன்னு சொன்னேன்.. ஆர்.எஸ் குரூப்!”

அவன் சந்தேகமாக, ஆர்.எஸ்..னு ஷார்ட்டா சொல்றியா?” என்று வினவ,

ஹும்ம்…” என்றாள்.

அவன் அப்பொழுதும் சந்தேகமாக,, ஆர்.எஸ்… ‘ரைசிங் ஸ்டார்’ குரூப்பா?” என்று கேட்டான்.

அவள் ‘ஆம்’ என்பது போல் தலையை ஆட்டவும், அவன் பெரும் அதிர்வுடன் அவளைப் பார்த்தான். ஏனெனில், அந்தக் குழுமம் தமிழ்நாடு மட்டுமின்றி, மற்ற மாநிலங்களிலும் பல கிளைகளைக் கொண்டதோடு, கடல் கடந்தும் வாணிபம் செய்யும் குழுமம் ஆகும்.

அவளோ, சிறிதும் அலட்டிக் கொள்ளாமல், என்னோட பன்னிரெண்டாவது வயது வரை தான், அந்த அடையாளத்துடன் நான் வளர்ந்தேன். அதுக்கு அப்புறம், பாட்டியோட ஸ்கூல் தான் என்னோட அடையாளம்.. ரிது, நவீக்குக் கூட இந்த உண்மை தெரியாது.” என்றாள்.

இன்னும் சில கேள்விகள் எனக்கு இருக்குது”

கேளுங்க”

இங்கே எப்படி வசந்தா பாட்டி பேத்தியா, உன்னை ஊர் ஏத்துக்கிட்டாங்க? பாட்டி எப்படி இவ்ளோ பெரிய ஹெல்ப் செய்தாங்க? அங்கே சென்னையில் உன் அப்பா இறந்த வீட்டில், உன்னை தேடி இருப்பாங்க தானே! நீ காணும்னு சொத்தை அவங்க எடுத்துக்கிட்டு, உன்னை தேடிட்டு இருக்காங்களா? உன் ரிபோர்ட்! இது எப்படி? அதுக்கும், அவங்களுக்கும் சம்பந்தம் இருக்கா? நீ சென்னையில் தான் இப்போ இருக்கியா?”

வசந்தா பாட்டி, அந்தக் காலத்திலேயே வீட்டை எதிர்த்து காதல் கல்யாணம் செய்தவங்க. ஸோ.. அவங்களுக்கு சொந்தம்னு யாரும் தொடர்பில் இல்லை. அவங்க முதல்ல சேலம் தான் போய் இருக்காங்க. அங்கே தான் அப்பாவோட பெரியம்மாவும் அவங்களும் நெருங்கிய தோழியாகி இருக்காங்க. அதே மாதிரி, அந்த ரெண்டு தாத்தாவும் பிரெண்ட்ஸ் ஆகி இருக்காங்க.. வசந்தா  பாட்டிக்கும் தாத்தாக்கும், அப்பாவோட பெரியம்மா பெரியப்பா தான் உறுதுணையா இருந்து இருக்காங்க. அப்பா சின்ன வயசில் பெரியம்மா வீட்டுக்கு போறப்ப, இவங்க கூட நல்ல பழக்கம் போல..! அவங்களுக்கும் என் அப்பாவை ரொம்ப பிடிக்குமாம். அவங்களுக்கு ஒரு பையன் தான்.

அப்புறம் கணபதி தாத்தா.. வசந்தா பாட்டி கணவர், வேலை விசயமா திருச்சி வந்து செட்டிலாகுற முடிவிற்கு வந்து இருக்காங்க.. ஸோ, பாட்டி குடும்பம் இங்கே வந்துட்டாங்க போல.. இங்கே வந்த கொஞ்ச நாளில், பாட்டி சின்னதா நர்சரி மாதிரி ஆரம்பிச்சு இருக்காங்க.. பாட்டிக்கு ஸ்கூல் ஆரம்பிக்க ஆசை இருந்தாலும், பணம் இல்லாததால் நர்சரி தான் ஆரம்பித்து இருக்காங்க.

அந்த நேரத்தில், சொந்தத்தில் கல்யாணத்துக்காக இங்கே வந்த என் அப்பாவோட பெரியம்மா, இவங்க வீட்டுக்கு வந்து இருக்காங்க.. வசந்தா பாட்டியோட ஆசையை புரிஞ்சுக்கிட்டு, பண உதவி செய்து ஸ்கூல் ஆரம்பிக்க உதவி இருக்காங்க. முதல்ல பிரைமரி ஸ்கூல் தான் ஆரம்பித்து இருக்காங்க. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி தான்… டென்த், டுவெல்த் வரை கொண்டு வந்து இருக்காங்க. அந்த நேரம் அப்பா கொஞ்சம் உதவி இருப்பாங்க போல.. அண்ட் அப்பா, வசந்தா பாட்டி கூட தொடர்பில் இருந்தது, வீட்டில் யாருக்கும் தெரியாது போல…”

உன் அம்மாக்குக் கூட தெரியாதா?”

இதெல்லாம் அப்பா  கல்யாணத்துக்கு  முன்னாடி நடந்தது.. அப்பாவோட சின்ன வயசில் இருந்தே, அப்பா தான் அதிகம் அவங்க பெரியம்மா வீட்டுக்கு போய் இருக்காங்க. பெரியம்மானா அப்பாவோட அம்மாவோட அக்கா.. ஸோ, சித்தப்பாக்கள் அதாவது சின்ன தாத்தா பாமிலி போனது இல்லை. ஆனா, என்னோட பெரியப்பாவும் அத்தையுமே எப்பவாவது தான் போவாங்கலாம்..”

ஸோ.. யாரும் கெஸ் செய்யாத இடம்னு, வசந்தா பாட்டி கிட்ட உன்னை அனுப்பி இருக்காங்க.”

எக்ஸாக்ட்லி! வசந்தா பாட்டி பையன் கிறிஸ்டியன் பொண்ணை காதலிச்சு இருக்காங்க.. அவங்க காதலை பாட்டி தாத்தா ஏத்துக்கிட்டாலும், அந்த பொண்ணு வீட்டில் ஏத்துக்கலை.. பொண்ணு வீட்டில் கொலை மிரட்டல் வேற.. ஸோ அவங்க ரெண்டு பேரும் வீட்டில் சொல்லாம கல்யாணம் செய்து ஊரை விட்டே போயிட்டாங்க..! மும்பை போய் இருக்காங்க. முதல்ல அவங்க எங்க போனாங்கனு பாட்டி தாத்தாக்கு கூட தெரியாதாம். சில வருசம் கழிச்சு, பாட்டியோட பையன் மட்டும் வந்து இருக்காங்க.. ஆனா அப்பவும் அந்த பொண்ணு வீட்டில் கோபமா இருக்கவும், பாட்டி தாத்தா அவரை உடனே அனுப்பிட்டாங்களாம்.

அடுத்த சில வருசத்தில், ஒரு கலவரத்தில் அந்த பொண்ணோட அப்பா இறக்கவும், அதுக்காக பாட்டியோட பையன் பாமிலி கிளம்பி இருக்காங்க. ஆனா, கிளம்பிய கொஞ்ச நேரத்திலேயே அக்சிடென்ட்டில் அந்த குடும்பம் மொத்தமும் இறந்துட்டாங்க.. ரொம்ப மோசமா அடி பட்டதால், பாட்டி தாத்தா அங்கேயே எல்லா காரியமும் செய்துட்டாங்க. பாட்டிக்கு ஒரு பேத்தியும் ஒரு பேரனும் இருந்தாங்களாம். பொண்ணு, என்னை விட ஒரு வயசு பெரியவ.. பையன் நாலு வயசு சின்னவன்.

இது நடந்து ஒரு வாரத்தில்… ஒரு நாள் நடு ராத்திரி தயா என்னை கூட்டிட்டு இங்கே வரவும், பாட்டி என்னை அவங்களோட சொந்த பேத்தினு சொல்லீட்டாங்க. போலியா என் தலையில் கட்டு போட்ட பாட்டி, ஊராரிடம் அந்த ஒரு வாரமும் நான் மருத்துவ மனையில் உயிருக்குப் போராடிட்டு இருந்ததாவும்பாட்டியோட மருமக வீட்டு ஆட்களால் என் உயிருக்கு ஆபத்து வந்திடக் கூடாதுனு உண்மையை மறைத்ததா சொல்லிட்டாங்க.. நானும் சோகமா தனிமை விரும்பியா இருந்ததால், யாருக்கும் சந்தேகம் வரலை.. பாட்டியோட மருமக அம்மா மட்டும் அடிகடி வந்து என்னைப் பார்த்தாங்க.. ஆனா,  என்னால்   அவங்க  கூட பெருசா ஒட்ட முடியலை. அப்புறம் அவங்க அடுத்த ஒரு வருசத்தில் இறந்ததும், அந்த குடும்பத்தில் இருந்து இப்பவரை யாரும் வந்து என்னை பார்க்கல.. கணபதி தாத்தா, நான் இங்கே வந்த மூனாவது வருசம் ஹார்ட் அட்டாக்கில் இறந்துட்டாங்க.”

error: Content is protected !!