காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 9.3

அவன் அறையினுள் சென்றதும் தயாளன், டாக்டர் என்ன சொன்னார்?” என்று கேட்க,

லயனிகாஸ்ரீ, அமைதியாக அவன் முகத்தைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

இப்போதைக்கு ஹெல்த்தில் பிரச்சனை இல்லை.” என்று தயாளனைப் பார்த்து சொன்னவன், அவளைப் பார்த்து, உன்னோட உயிருக்கு யாரால் ஆபத்து?” என்று கேட்டான்.  

ஏன்?” என்று அவள் கேட்க,

தயாளனோ, இப்போதைக்கு பிரச்சனை இல்லைனா… என்ன சொல்ல வர்றீங்க மகிழ்? தெளிவா சொல்லுங்க.” என்றான்.

அவன் அவளையே தீர்க்கமாகப் பார்க்க, அவள், உங்க கிட்ட மறைக்க எனக்கு எதுவும் இல்லை கிங்.. இன்ஃபாக்ட் அல்ரெடி சொல்றேன்னு சொன்ன விசயம் தான்.. நான் அதைப் பற்றி சொல்றதுக்கு முன்னாடி, தயா கேள்விக்கு பதில் சொல்லிடுங்க. அப்போ தான், அவன் அமைதியாவான்.” என்றாள்.

அவன் மருத்துவர் கூறியதை கூறி முடித்ததும், தயாளன், “இதுக்கு காரணமான ஆளோட சாவு என் கையில் தான்.” என்று கோபத்துடன் கொந்தளித்தான்.

லயனிகாஸ்ரீ, தயா இப்படி பேசாதனு சொல்லி இருக்கிறேன்.. யாரோட உயிரையும், எடுக்கும் உரிமை நமக்கு இல்லை.” என்றாள்.

சாரை கொன்றவன் உன் முன்னால் நின்றாலும், இதைத் தான் சொல்லுவியா பாப்பா?”

கண்டிப்பா.. அப்புறம் எதுக்கு சட்டம் இருக்குது? ஆனா உறுதியா தெரியாததைப் பற்றி பேசாத தயா.”

பொல்லாத சட்டம்! நான் இப்படி தான் பாப்பா.. என்னை திருத்த முயற்சிக்காதே..! உனக்கு சின்னதா ஒன்னுனாலே, அதுக்கு காரணமானவனை சும்மா விட மாட்டேன்.. உன் உயிரையே எடுக்கத் துணிந்தவனை, நான் சும்மா விடுவேன்னு எப்படி எதிர்பார்க்கிற…?”

நீ உயிரை காப்பவன்.. எடுப்பவன் இல்லை.”

என் பாப்பா உயிரை காக்க, எத்தனை உயிரை வேணாலும் எடுப்பேன்”

அவள் அவனை முறைக்க,

அவனோ அலட்சியமாகத் தான் அமர்ந்து இருந்தான்.

மகிழ் கொற்றவன், உன்னோட அப்பா அம்மா இயற்கையா இறக்கலையா? அவங்களை கொன்றவர்களால் தான், உன் உயிருக்கும் ஆபத்தா?” என்று வினவினான்.

அப்பா அக்சிடென்ட்டில் இறந்தாங்க.. அது கொலைனு தயா சொல்றான்.. அதுக்கு வாய்ப்பு இருக்குது என்றாலும், அதை உறுதியா சொல்லவும் முடியாது.”

உன்னோட அம்மா?” என்று அவன் இழுத்து நிறுத்த,

அவங்க உயிரோட தான் இருக்கிறாங்க”.

என்ன சொல்ற? ஆனா, அன்னைக்கு நீ அப்பா அம்மாவை இழந்துட்டு பாட்டி வீட்டுக்கு வந்த நேரம்னு சொன்னியே!” என்று அதிர்வுடன் கூறினான்.

இருங்க, நான் முழுசா சொன்னா தான் உங்களுக்குப் புரியும்.. இங்கே திருச்சியில் என்னை வளர்த்த வசந்தாம்பாள் பாட்டி, என்னோட சொந்த பாட்டி இல்லை. இன்ஃபாக்ட் அவங்க எனக்கு சொந்தமே இல்லை. என்னோட அப்பாவோட பெரியம்மாவோட நெருங்கிய தோழி.. !

எனக்கு பன்னிரெண்டு வயசு இருக்கும் போது, என்னோட அப்பாவும், அவருக்கு பாதுகாவலரா இருந்த தயாளன் அப்பாவும், ஒரு அக்சிடென்ட்டில் இருந்துட்டாங்க. அப்பா இறக்கிறதுக்கு முன்னாடி ஹாஸ்பிடலில் வச்சு, அவரோட நம்பிக்கையான நெருங்கிய வக்கீல் நண்பர் பரதனைக் கூப்பிட்டு, என் உயிருக்கு ஆபத்து இருக்குதுனு சொல்லி, என்னை யாருக்கும் தெரியாம, என்னோட அம்மாக்குக் கூட தெரியாம, வசந்தாம்பாள் பாட்டி கிட்ட ஒப்படைக்கச் சொல்லிட்டாங்க.. என்னை ஸ்கூலில் இருந்து நேரா பாட்டி வீட்டுக்கு, இவன் தான் கூட்டிட்டு போனான்.. என் அப்பா முகத்தைக் கூட கடைசியா நான் பார்க்கலை..! அந்த கோபமும் சேர்ந்து தான், முதல்ல இவன் கூட பேசாமயே இருந்தேன்.” என்று முடித்தாள்.

வேணும்னு தான் அப்படி செய்தேன்னு சொன்னேனே பாப்பா.. இப்போ, உன் மனசில் சாரோட சிரித்த முகம் தான் பதிந்து இருக்கும்.. ஆனா, அன்னைக்கு நீ பார்த்து இருந்தா, அது உன்னோட பல நாள் தூக்கத்தைக் காவு வாங்கி இருக்கும்.”

நீங்க அப்படி தான் கஷ்டப் பட்டீங்களா…” என்று மகிழ் கொற்றவன் கேட்கவும்,

கசந்த சிரிப்புடன், பல இல்ல.. சில நாட்கள் கஷ்டப்பட்டேன்.. அப்புறம் ஓவர் கம் செய்து வந்துட்டேன்.” என்றான். 

சில நொடிகள் மௌனத்தில் கழிய, பேச்சை மாற்ற மகிழ் கொற்றவன், ஏன், நீ இருக்கிற இடம், உன் அம்மாக்குக் கூட தெரியக் கூடாதுனு சொல்லி இருக்காங்க?” என்று கேட்டான்.

அம்மா இன்னசென்ட்.. லூஸ் டாக் விட்டுடுவாங்க.. அதான்.”

அப்போ உங்களுக்கு நெருக்கமா இருந்தவங்க… ஆர் ஸ்டில் இருக்கிறவங்களால் தான், உனக்கு ஆபத்து?”

அப்படி தான் தயாவும் சொல்றான். ஆனா, எனக்கு தெரியலை.. இங்கே நம்ம வீடு மாதிரி, எங்க வீடும் ஜாயின்ட் பாமிலி தான். சொல்லப் போனால், நம்ம குடும்பத்தை விட பெருசு.. தாத்தா பாட்டி.. சின்ன தாத்தா, சின்ன பாட்டி.. அதாவது தாத்தாவோட தம்பி.. பெரியப்பா, அப்பா, ரெண்டு சித்தப்பா, அத்தைனு எல்லோர் குடும்பமும் ஒன்னா, ஒரே வீட்டில் தான் இருந்தோம். எல்லோருமே என் கிட்ட அன்பா தான் இருந்தாங்க. அவ்ளோ சந்தோஷமா இருந்தேன்.. அதில் யாரையும் சந்தேகப்பட என்னால் முடியலை.”

அவ்ளோ பெரிய குடும்பத்தில், குறிப்பா உங்களை மட்டும் ஏன் டார்கெட் செய்றாங்க?”

ஏன்னா, சொத்துக்கள் எல்லாமே அப்பாவோட சுய சம்பாத்தியம்.”

ஸோ, இப்போ சொத்துக்கள் உன்னோட பெயரில் இருக்குது.”

எப்படி சரியா சொல்றீங்க?”

உன்னை மட்டும் தான் பாதுகாத்து இருக்கிறாங்க.. ஐ மீன் உன்னோட அம்மா, அங்கே தானே இருக்கிறாங்க! ஸோ… கெஸ் செய்தேன்.. மே பி, உன் மரணம் இயற்கையா இல்லைனா சொத்துக்கள் ஏதும் சேரிட்டி(charity) போறது போல் உயில் எழுதி இருக்கலாம்.” என்றவன் சட்டென்று நிறுத்தி, அப்போ, உன்னோட அப்பாக்கு முன்னாடியே ஏதோ தெரிந்து இருக்கும்.. அதான் முன்னேற்பாடா, உயில் எழுதி வைத்து இருக்காங்க.. ரைட்!” என்றான்.

அப்பா இறந்ததுக்கு நாலு நாட்கள் முன்னாடி தான், உயில் எழுதி வச்சு இருக்காங்க.. அதை வைத்து தான் அப்பா இறப்பு கொலைனு தயா சொல்லிட்டு இருக்கான். பெரியப்பா, சித்தப்பாக்கள், அத்தை குடும்பத்துக்கு சமமா சொத்துக்கள் எழுதி இருந்தாலும், சொத்துக்களின் பெரும் பங்கு என் பெயரில் தான் இருக்குது.”

அதானே நியாயமும் கூட.. உன் அப்பாவோட சம்பாத்தியம் உனக்கு தானே!”

ப்ச்.. யாருக்கு வேணும் இந்த சொத்து! எனக்கு அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்த நிம்மதியான வாழ்க்கை தான் வேண்டும்.”

புன்னகையுடன், அப்படி ஒரு வாழ்க்கையைத் தானே நாம வாழப் போறோம்.” என்றான்.

அப்போ, இந்த சொத்துக்களை என்ன செய்ய?”

அது உன் விருப்பம்.. அதை நீ யாருக்கும் கொடுத்தாலும் சரி.. இல்லை, உன் உரிமையா நினைத்து வேணும் என்று நினைத்தாலும் சரி.. உன் முடிவு தான். ஆனா, எதா இருந்தாலும் உனக்கு துணையா நான் இருப்பேன்.”

துணையா இருப்பீங்கனா, நான் சொத்துக்களை டேக் ஓவர் செய்தா, நீங்க என்னுடன் சேர்ந்து பார்த்துப்பீங்க ரைட்!”

error: Content is protected !!