காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 9.2

புகைப்படம் மற்றும் காணொளி எடுத்தவர்களிடம் பேசிவிட்டு வந்த தயாளன், கிளம்பலாமா பாப்பா? இப்போ கிளம்பினா தான், ரிதன்யா கல்யாணத்தில் தலையை காட்டிட்டு, ரெஜிஸ்டர் ஆஃபீஸ் போக சரியா இருக்கும்.” என்றான்.

லயனிகாஸ்ரீ ‘சரி’ என்பது போல் தலையை அசைக்க,

மகிழ் கொற்றவனோ, தலையை காட்டுறதுனா எப்படி தயா… தலையை மட்டும் உள்ளே நீட்டி காட்டிட்டு கிளம்பிடுவோமா?” என்று வினவ,

தயாளனோ லயனிகாஸ்ரீயைப் பார்த்து, ரெண்டே நாளில் எப்படி மாத்தி வச்சு இருக்க பாப்பா!” என்றான்.

சந்தோஷோ, அட நீங்க வேற பாஸ்! காலேஜ் டேஸில் சிஸ்டருக்கே டஃப் கொடுக்கிற அளவுக்கு பேசிட்டு இருந்தவன் தான்.. என்ன… அது, எனக்கும் ஒரு சில பிரெண்ட்ஸ் லெவெலில் மட்டும் தான் தெரியும்.” என்றான்.

அப்போ, இந்த அம்பிக்குள்ள அந்நியனும், ரெமோவும் ஒளிந்து இருக்காங்கனு சொல்லுங்க!” என்று தயாளன் கூற,

அதே தான்!” என்றான்.

வசந்தாம்பாள், சரி.. சரி.. நல்ல நேரத்தில் கிளம்புங்க” என்று கூறவும், நால்வரும் கிளம்பினர். 

சந்தோஷ், ராஜீவ் கிருஷ்ணாவின் ஐந்து நட்சத்திர உணவகத்திற்குச் செல்ல, இவர்கள் ரிதன்யா திருமணத்திற்குச் சென்றனர்.

இவர்கள் ரிதன்யா ராஜீவ் கிருஷ்ணா திருமணத்திற்கு செல்லும் நேரத்தில், இவர்களின் அவசர திருமணத்திற்கான காரணத்தை பார்த்து விடுவோம் வாங்க………………..

முன்தினம் காலை பதினொரு மணி போல், லயனிகாஸ்ரீயைப் பார்க்க, அவளுக்கு மருத்துவம் செய்த மருத்துவர் வந்தார்.

வந்தவர் மென்னகையுடன், குட் மார்னிங் மிசஸ் மகிழ்.. எப்படி இருக்கிறீங்க?” என்று கேட்டார்

குட் மார்னிங் டாக்டர்.. நல்லா இருக்கிறேன்”

குட்.. உங்க ப்ளட் டெஸ்ட் ரிப்போர்ட்ஸ் பார்த்தேன்.. எல்லாம் ஓகே” என்றவர் அவளிடம் உடல் ரீதியான வேறு சில கேள்விகளைக் கேட்க, அவளும் பதில்களைக் கூறினாள்.

பைன்.. இன்னைக்கே நீங்க டிஸ்சார்ஜ் ஆகிடலாம்.”

தேங்க்யூ டாக்டர்.”

புன்னகையுடன் அவளிடம் தலை அசைத்தவர்.. மகிழ் கொற்றவனிடம், என்னோட ரூமுக்கு வாங்க மகிழ். சில ஃபார்மாலிட்டீஸ் பற்றி பேசணும். அப்படியே ப்ளட் டெஸ்ட் ரிப்போர்ட்ஸ் வாங்கிக்கோங்க.” என்றார்.

எதுக்கு தனியா வரச் சொல்றார்!’ என்று மனதினுள் யோசித்தவன், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல்… “ஓகே டாக்டர்.” என்றான்.

அவர் வெளியேறியதும் லயனிகாஸ்ரீ, எதுவும் பிரச்சனையா?” என்று கேட்டாள்.

அதெல்லாம் இல்ல.. அப்படி எதுவும் தெரியல…”

அப்போ, எதுக்கு உங்களை தனியா வரச் சொல்றார்?”

ஃபார்மாலிட்டீஸ்னு சொன்னாரே…! நமக்கு கொடுத்த ட்ரீட்மென்ட் அன்அஃபிசியல். அதைப் பற்றி பேச இருக்கும்.. நான் என்னனு கேட்டுட்டு வரேன்.” என்றபடி மருத்துவமனை உணவகத்திற்குச் சென்றிருந்த தயாளனுக்கு கைபேசியில் அழைத்தான்.

அழைப்பை எடுத்த தயாளன், வேற எதுவும் வாங்கிட்டு வரணுமா?” என்று கேட்டான்.

இல்லை.. டாக்டர் வந்து செக் செய்துட்டு போனார்.. லயனி நல்லா இருக்கான்னும், இன்னைக்கே டிஸ்சார்ஜ் செய்திடலாம்னும் சொல்லிட்டார். ஆனா, ஏதோ ஃபார்மாலிட்டீஸ் பற்றி பேச என்னை அவர் ரூமுக்கு வர சொன்னார்.. அதான் நீங்க அஞ்சு நிமிஷத்தில் வந்திருவீங்களா?”

டூ மினிட்ஸ், வந்துடுவேன்.. என்ன ஃபார்மாலிட்டீஸ்? உண்மையை சொல்லுங்க.. பாப்பாக்கு வேற எதுவும் பிரச்சனை இல்லையே! ப்ளட் டெஸ்ட் ரிப்போர்ட்ஸ் என்னாச்சு?”

லயனி நல்லா இருக்கா தயா.. ரிப்போர்ட்ஸ் ஓகேனு தான் சொன்னார்.. நான் டாக்டர் கிட்ட பேசிட்டு வந்து சொல்றேன்.. அவர் ஃபார்மாலிட்டீஸ்னு தான் சொன்னார்.. நம்ம ட்ரீட்மென்ட் பத்தி இருக்கலாமே! அவர் இந்த ஹாஸ்பிடல் டீன் தான், ஓனர் இல்லையே!” என்று அவனுக்கு சொல்வது போல் தனக்கும் சேர்த்தே சமாதானம் சொல்லிக் கொண்டாலும், அவனது மனம் சமாதானம் அடைய மறுத்தது.

அந்த மருத்துவரின் பார்வை மற்றும் உடல் மொழியில் இருந்தே, நிச்சயம் லயனிகாஸ்ரீ உடல் நிலையில் ஏதோ பிரச்சனை என்றே அவனுக்குத் தோன்றியது.

கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த தயாளன், நீங்க டாக்டர் கிட்ட பேசிட்டு வாங்க.” என்றான்.

லயனிகாஸ்ரீ, ஜூஸ் குடிச்சுட்டு போங்க கிங்.” என்றாள்.

அவன் மறுத்துப் பேசும் முன், இந்த ரெண்டு நிமிஷத்தில் எதுவும் மாறிடப் போறது இல்லை” என்றவள் தயாளனைப் பார்த்தாள்.

தயாளன் அவனுக்கென வாங்கிய பழச்சாறை நீட்டவும், அதை வாங்கிக் குடித்த மகிழ் கொற்றவன், தன்னவளைப் பார்த்து புன்னகையுடன், ஹாப்பி!” என்றான்.

அவளும் புன்னகையுடன், எஸ்” என்று விட்டு, நிஜமாவே ஃபார்மாலிட்டீஸ்ஸா… இல்லை, என்னோட ரிப்போர்ட்டில் பிரச்சனையோ…! எந்த பிரச்சனையா இருந்தாலும், தீர்வுனு ஒன்னு கண்டிப்பா இருக்கும்.. ஸோ ரிலாக்ஸ்டா போயிட்டு வாங்க..” என்றாள்.

அவளது திடத்திலும் நம்பிக்கையிலும் சட்டென்று பதற்றம் நீங்கி, நிதானம் அடைந்தவன், அவள் அருகே சென்று அவளது நெற்றியில் இதழ் பதித்து, மென்னகையுடன் லேசாக நெற்றியில் முட்டி விட்டு, டாக்டரை பார்த்துட்டு வரேன். என்றான்.

லவ் யூ கிங்.” என்று அவள் புன்னகையுடன் கூற, அவனும் புன்னகையுடனே விடை பெற்று சென்றான்.

மருத்தவர் கண்டிப்பாக நல்ல செய்தியை சொல்லப் போறது இல்லை என்பதை அவன் அறிந்து இருந்தாலும், இப்போது திடமாகத் தான் உள்ளே சென்றான்.

மருத்துவர், சிட் மகிழ்..” என்றதும்,

என் மனைவி ரிப்போர்ட்டில் என்ன பிரச்சனை டாக்டர்?” என்று நேரடியாக விசயத்திற்கு வந்தான்.

உங்க மனைவியோட ப்ளட் டெஸ்ட் ரிபோர்ட்ஸ்…” என்றபடி அதை கொடுத்தவர், வெல்.. பிரச்சனைனு கேட்டா, இப்போதைக்கு எதுவும் இல்லை தான்.. ஆனா, சம்திங் பிஷ்ஷி!” என்றார்.

என்னாச்சு டாக்டர்?”

லிவர் அண்ட் கிட்னியோட வைடல்ஸ் ஸ்லைட்டா வேரி ஆகி இருக்குது. ஆனா, காரணம் தான் என்னனு தெரியலை.. உங்க மனைவிக்கு கொடுக்கப்பட்ட ட்ரக்(drug) மைல்டு டோஸ் தான்.. அதுவும், அது இந்த வைடல்ஸ் டிஸ்டர்ப் செய்யாது.. ஸோ எதனால் இந்த சேஞ்சஸ்னு தெரியலை.”

அந்த ட்ரக்னால(drug)கண்டிப்பா இல்லைனு சொல்றீங்களா?”

ஷுர்.”

லிவர் அண்ட் கிட்னி டேமேஜ் ஆகி இருக்குதா?”

இல்லை.. வைடல்ஸ் ஸ்லைட் வேரியேஷன் தான் காட்டுது.. பட், அதை கவனிக்காம விட்டா, பின்னாடி ஆபத்தில் போய் முடிய வாய்ப்பு அதிகம்.”

அதாவது, லிவர் கிட்னி செயலிழப்பில் போய் முடியும்.”

எஸ்.. லீடிங் டு..” என்று அவர் நிறுத்த, டெத்” என்று முடித்தவன், உங்களுக்கு ஏதாவது கெஸ் இருக்குதா டாக்டர்?” என்று கேட்டான்.

மறுப்பாக தலையை ஆட்டியவர், மே பி.. இன்னும் டீப்பர் ஸ்டடி செய்தால் கண்டு பிடிக்கலாம்.”

நான் இந்த ரிபோர்ட்ஸ் பார்க்கட்டுமா?”

ஷுர்.. பாருங்க”

அதை பார்த்து முடித்துவிட்டு சில நொடிகள் மௌனித்தவன், ஓகே டாக்டர்.. நான் சென்னையில் எங்க பாமிலி டாக்டரை கன்சல்ட் செய்றேன்.. தேங்யூ வெரி மச் ஃபார் யுவர் டைம்லி ஹெல்ப் டாக்டர். உங்களோட, இந்த உதவியை என்னால் மறக்கவே முடியாது.” என்றான்.

இட்ஸ் ஓகே மகிழ்.. அப்போ இப்போ டிஸ்சார்ஜ் ஆகிக்கிறீங்களா?”

எஸ் டாக்டர்.”

ஓகே.. நான் சொல்லிடுறேன்.. டேக் கேர்!”  “தேங்க்ஸ் அகேன் டாக்டர்.” என்றபடி அவரிடம் கை குலுக்கியவன், வெளியேறி தங்கள் அறைக்குச் சென்றான்.

error: Content is protected !!