காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 8.4

லயனிகாஸ்ரீ, நன்றே செய்.. அதுவும் இன்றே செய்..! ஸோ நம்மோட மதுரகீதத்தை ஆரம்பிப்போமா?” என்று கேட்டு குறும்புப் புன்னகையுடன் கண் சிமிட்டினாள்.

அவனும் புன்னகையுடன், வேணாம்னா கேட்கவா போற?” என்றான்.

ஏன் இசையை கேட்க கசக்குமா என்ன?”

அது எப்படி கசக்கும்! இசைனாலே இனிமை தான்.. அதுவும் இனிமையே உருவா இருக்கும் என்னோட லயனெஸ் வேற என்னோட இருக்கும் போது!” என்றவன்,

ஒரு இனிய மனது

இசையை அணைத்துச் செல்லும்

இன்பம் புது வெள்ளம்

அந்த சுகம் இன்பசுகம்

அந்த மனம் எந்தன் வசம்” என்று பாடி கண் சிமிட்டினான். அதிலும் இறுதி வரியில் மனம் என்றபோது அவளை சுட்டி காட்டி, ‘எந்தன் வசம்’ என்று பாடியபோது தனது நெஞ்சத்தை சுட்டிக் காட்டினான்.

இன்ப அதிர்ச்சியும், காதலும், சிறு வெட்கமும் கலந்த நிலையில், செம கிங்!” என்றவள், உண்மையில் புது வெள்ள இன்பசுகம் தான்.. என் மனமும் உங்கள் வசம் தான்” என்றாள்.

பின், அக்சுவலி.. நீங்க பொண்ணுகளை விட்டு விலகியே இருப்பதை.. இல்ல.. இருந்ததை வச்சு ‘கம்பன் ஏமாந்தான்.. இளம் கன்னியரை மலர் என்றானே’னு பாடுவீங்கனு நினைத்தேன்” என்றாள்.

நான் இசையை தான் கேட்பேன்.. அதில் வரும் லிரிக்ஸ் பெருசா கவனிக்க மாட்டேன்.. முதல் முதல்ல லிரிக்ஸ் பார்த்து பாடியது இப்போ உனக்காக தான்.” என்றவன் யோசனையுடன், அது என்ன பொண்ணுங்களை விட்டு விலகியே இருந்தேன்னு சொல்ற?” என்று கேட்டான்.

பின்ன! என் முகம்.. உங்க மூளையில் ரெஜிஸ்டரே ஆகலையே! ஸ்கல் கிட்ட கூட நெருங்கல போல, அப்புறம் எங்கிருந்து மூளையில் பதிய!”

ஹே! எனக்கு உன்னை ஞாபகம் இருக்கே! அக்சுவலி சென்னை ஏர்போர்ட்டில் வச்சே உன்னை நான் பார்த்தேன்.. போர்டிங் பாஸோட லைனில் நின்னப்ப, நீ எனக்கு முன்னாடி தான் நின்னுட்டு இருந்த.. அப்போ நீ போன் பேசிட்டு இருந்த.. நவீனா கூடனு நினைக்கிறேன். அதில், நீ பேசியதை லைட்டா கேட்டதை வச்சு தான், அந்த எஸ்.ஐ கிட்ட 3 நாள் ரூம் புக் செய்து இருக்குதுனுலாம் சொன்னேன்.”

ஆனா, நீங்க பத்து நாள் முன்னாடி என் கூட பேசி இருக்கிறீங்களே!”

என்ன?”

எஸ்.. சரியா சொல்லணும்னா, ஜஸ்ட் மிஸ்ல நான் உங்க அடியில் இருந்தும், நீங்க தயா அடியில் இருந்தும் தப்பிச்சோம்.”

என்னது! நான் உன்ன அடிக்க வந்தேனா?”

எஸ் யுவர் ஹானர்.”

ஹே! ஒழுங்கா இன்சிடென்ட்ட சொல்லு”

அது நடந்தது ஃபினிக்ஸ் மாலில்.. அங்க ஒரு இடத்தில்  நடந்து  போற  இடத்துக்குநடுவில்   கார்   போற பாத்வே  வருமே! அங்க  தான் அந்த இன்சிடென்ட் நடந்தது. நான் மால் உள்ள வரதுக்கு நடந்து வந்துட்டு இருந்தேன். நீங்க  வெளியே  வரதுக்கு எனக்கு எதிரில் நடந்து வந்துட்டு இருந்தீங்க.. கார் ஒன்னு வரதை கவனிக்காம ஒரு குழந்தை வேகமா ஓடுச்சு.. குழந்தையோட அம்மா போன் பேசிட்டு இருந்தாங்க.. நான் குழந்தையை பிடிக்க வேகமா ஓடிப் போனேன். ஆனா, எனக்கு முன்னாடி நீங்க பிடிச்சு தூக்கிட்டீங்க.. காரும் சரியா நின்னுடுச்சு.. ஆனா, ஒரு செகண்ட் திக் திக் மொமென்ட் தான்.. நீங்க அந்தக் குழந்தையை செக் பண்ணிட்டு, கோபமா அடிக்க கை ஓங்கியபடி எழுந்தீங்க.

ஆனா, என்ன நினைச்சீங்களோ அடிக்காம திட்டிட்டு, பினிஷிங் டச்சா ‘குழந்தையை பார்த்துக்க முடியலைனா, எதுக்கு பெத்துக்கிறீங்க?’னு சொல்லிட்டு வேகமா போயிட்டீங்க.. உங்களை அடிக்க கிளம்பிய தயாவை பிடிச்சு வைக்க தான், கொஞ்சம் கஷ்டமா போச்சு.”

சாரி டா.. நான் உன்னை அந்த குழந்தையோட அம்மாவா நினைச்சு தான் திட்டினேன்.. அந்த கடைசி வரி என்னோட பாதிப்பில் இருந்து வந்தது.”

நீங்க தப்பா புரிஞ்சுகிட்டது அப்போவே புரிஞ்சுது.. அதைச் சொல்லி தான், தயாவை தடுத்து நிறுத்தினேன். அந்த அம்மா உங்க கோபத்தைப் பார்த்துட்டு பயத்தில் என் பக்கத்தில் தான் நின்னுட்டு இருந்தது.. குழந்தையை கொடுத்துட்டு நான் மால் உள்ள போயிட்டேன்.. உங்க கடைசி வரிக்கான காரணம் உங்களை பத்தி நீங்க சொன்னப்பவே புரிஞ்சுடுச்சு.”

அந்த இன்சிடென்ட் ஞாபகம் இருக்குது. ஆனா நீ சொல்றதை கேட்ட பிறகும் கூட, யோசித்து பார்த்தாலும், நான் திட்டிய பொண்ணோட முகம் ஞாபகம் வரல…” என்றபடி அசடு வழிந்தான்.

ஸோ ஸ்வீட்” என்று கொஞ்சியவள், அதான் சொன்னேன்.. பொண்ணுங்க பற்றிய விசயம் எல்லாம், உங்க ஸ்கல் கிட்ட கூட நெருங்குறது இல்லைனு.. ஆனா, அப்பவே நான் உங்களை சைட் அடிச்சேன்.” என்று கூறி கண் சிமிட்டினாள்.

அடப்பாவி”

எஸ்”

நிறைய பேரை சைட் அடிச்சு இருக்கியோ?”

பொறாமை!!”

லைட்டா”

சத்தமாக சிரித்தவள், உண்மையாவே மனசில் பதியும் அளவுக்கு சைட் அடிச்சது உங்களை மட்டும் தான்.. ஸ்கூல் டேஸ்ஸில் பிரெண்ட்ஸ் கூட வெளியே போனப்ப சும்மா பார்த்து எங்களுக்குள் கமெண்ட் செய்து இருப்போம். ஆனா, அதெல்லாம் அங்கிருந்து கிளம்புறப்பவே மறந்தும் போய்டும்.. அப்புறம் காலேஜ் அப்ராட்.. அந்த மூஞ்சுகளை சைட் அடிக்கலாம் தோணலை.. ஸோ என்னோட ஒன் அண்ட் ஒன்லி சைட் நீங்க தான்” என்று கூறி கண்சிமிட்டி இதழ் அசைத்து முத்தம் கொடுத்தாள்.

அவன் அவளையே ரசித்தபடி இருக்கவும், அவள், அதே மாதிரி உங்களோட ஒன் அண்ட் ஒன்லி சைட் நான் தான்.” என்று கூறி மீண்டும் கண்ணடித்தாள்.

நன்றாக சிரித்தவன், சரி படுக்கலாம்.. உன்னோட மதுரகீதத்தை போட்டு விடு.” என்றான்.

போடலாமே!” என்றபடி அவள் பாடலை கைபேசியில் தேட ஆரம்பிக்க,

அவனோ மனதினுள், இவ டோனே சரி இல்லையே!’ என்று நினைத்தான்.

அதற்கு ஏற்றார் போல், பூங்கதவே தாழ் திறவாய்!” என்ற பாடலை ஒலிக்க விட்டவள், மெல்லிய குரலில் அவனை பார்த்தபடி பாட வேறு செய்தாள்.

அவன் மனதினுள், ஒரு முடிவோட தான் இருக்கா.. போற போக்கை பார்த்தா சீக்கிரம் காதல் கடலில் தொபுக்கடிர்னு விழுந்திடுவேன் போல’ என்று கூறிக் கொள்ள,

அவனது மனசாட்சியோ, இன்னும் விழலையா!’ என்று அவனை கிண்டல் செய்தது.

அந்த பாடல் முடிந்ததும் அவள், “அடுத்து நீங்க போடுறீங்களா?” என்று கேட்டாள்.

இல்ல, நீயே போடு.” என்றவன் கண்களை மூடிக் கொண்டான்.

அவள் புன்னகையுடன்,

தென்றல் வந்து என்னைத்தொடும்..

ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்”

என்ற பாடலை ஒலிக்க விட்டாள். அடுத்தடுத்து ஒலித்த மதுரகீதத்தில், காதல் மழையில் நனைந்தபடி, மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் இருவரும் உறங்கினர்.   

கீதம் இசைக்க காத்திருப்போம்…

error: Content is protected !!