அங்கே அறையில் தயாளன் சென்றதும் லயனிகாஸ்ரீ, “நீங்க காண்ஃபரென்ஸ் பாதி தானே அட்டென்ட் செய்து இருக்கிறீங்க? அதனால் ஏதும் பிரச்சனை ஆகுமா உங்களுக்கு?” என்று கேட்டாள்.
“இன்னைக்கு என்னோட ஃபீல்ட் சம்பந்தமானது இல்லை.. முதல்ல பொதுவா இருந்தது.. அப்புறம் ஆர்த்தோ பற்றி தான் இருந்தது.. அதான் நான் பிரேக் எடுக்க வெளியே வந்தேன்”
“அப்போ உங்க பிரெண்ட் மிஸ் செய்து இருப்பாரே!”
“இல்லை காண்ஃபரென்ஸ் முடியப் போற நேரத்தில் தான், நான் கூப்பிட்டு இருக்கிறேன்.. முடிந்து வெளியே வந்தப்ப தான், அந்த பன்னாடை சந்தோஷைப் பார்த்து கூட்டிட்டு வந்து இருக்கிறான்.. முதல்ல வேற ஒரு டாக்டர் கிட்ட தான் விசாரிச்சு இருக்கிறான்.. அதை கவனிச்சுட்டு, சந்தோஷ் தான் அந்த நாதாரி பக்கத்தில் எதேச்சியா போற மாதிரி போய் இருக்கான்.”
“ஓ.. நான் அவருக்கு தேங்க்ஸ் சொல்லவே இல்லை”
“திரும்ப ஹோட்டலில் பார்த்தா சொல்லு.. இல்ல நம்ம கல்யாணத்தில் சொல்லு.”
“நாளைக்கு காண்ஃபரென்ஸ் எப்போ?”
“அதைப் பற்றி கவலைப் படாத.. நான் பார்த்துக்கிறேன்.. கிருஷ்ணா கிட்ட வீடியோ கேட்டா கிடைக்கப் போகுது.. இல்லை சந்தோஷ் வச்சு மனேஜ் செய்துப்பேன்.”
“ஓகே”
அப்பொழுது கதவை தட்டிவிட்டு அனுமதியுடன் உள்ளே வந்த தயாளன், “உங்க காண்ஃபரென்ஸ்..” என்று ஆரம்பிக்க,
மகிழ் கொற்றவன் புன்னகையுடன், “இப்போ தான் லயனி கேட்டா.. கிருஷ்ணா கிட்ட வீடியோ கேட்டு வாங்கி பார்த்துக்கிறேன்.. இல்லையா, சந்தோஷ் அட்டென்ட் செய்யும் போது ரெகார்ட் செய்யச் சொல்லி கேட்டுக்கிறேன்” என்றான்.
“பைன்” என்றவன் லயனிகாஸ்ரீயைப் பார்த்து, “டிஸ்சார்ஜ் ஆகி ஹோட்டல் ரூமுக்கே போகலாம் பாப்பா.” என்றான்.
“ஓகே”
“நேத்து சாப்பிட்டது ஏதோ ஒத்துக்காம தொடர்ந்து வாமிட்டிங் இருக்கவும், இங்கே வந்ததா சொல்லிக்கலாம்.”
மகிழ் கொற்றவன், “டீன் மத்த டாக்டர்ஸ் கிட்ட ஃபுட் பாய்சன்னு தான் சொல்லி இருக்கார்.. டிஸ்சார்ஜ் சம்மரியில் கூட அதான் வரும்.. என்ன! கணவன்னு என் பெயர் வரும்.. பின்னாடி யாரும் கேட்டா, அது வருங்கால கணவர் என்ற முறையில் அப்படி சொல்லிட்டேன்னு சொல்லி சமாளிச்சுக்கலாம்” என்றான்.
மற்ற இருவரும் லேசாக சிரிக்க, “என்ன?” என்றவன் முகத்திலும் புன்னகை அரும்பியது.
தயாளன் புன்னகைத்தாலும், அவன் முகத்தில் யோசனையின் சாயலும் தெரிய,
லயனிகாஸ்ரீ, “என்னாச்சு தயா?” என்றாள்.
மகிழ் கொற்றவன் புரியாமல், “என்ன?” என்று வினவ,
“தயா மைண்டில் பேக்கிரௌண்டில் ஏதோ ஓடிட்டே இருக்குது” என்றவள், “அவங்களை என்ன செய்யனு யோசிக்கிறியா?” என்று கேட்டாள்.
மறுப்பாக தலை அசைத்தவன், “ஹோட்டல் சிசிடிவி ஃபுட்டேஜ் பத்தி யோசிச்சிட்டு இருக்கிறேன்.” என்றான்.
“எஸ்.. அதை என்ன செய்ய? பின்னாடி பிரச்சனை ஆகாம இருக்கணும்னா, அதை டெலிட் செய்றது தான் பெட்டர்” என்று மகிழ் கொற்றவன் கூற,
லயனிகாஸ்ரீ, “ஜஸ்ட் கரப்ட் செய்தா போதும்.. அதை நான் பார்த்துக்கிறேன் தயா.. நாளைக்கு ரூமுக்கு போயிட்டு பார்த்துக்கலாம்.” என்றாள்.
தயாளனோ, “அது மட்டும் போதாது பாப்பா.. ஒருவேளை யாரும் சிசிடிவி ஃபுட்டேஜ் மானிட்டர் செஞ்சுட்டே இருப்பாங்கனா, நமக்கு பிரச்சனை ஆக வாய்ப்பு இருக்குது.. எவனும் பிளக்மெயில் செய்யலாம்.. ஸோ கிருஷ்ணா கிட்ட கேட்கணும்.” என்றான்.
“ஸோ யாரும் மானிட்டர் செய்யலைனா, ஜஸ்ட் ஃபுட்டேஜ் மட்டும் கரப்ட் செய்தா போதும்”. என்றாள்.
மகிழ் கொற்றவன் யோசனையுடன், “மானிட்டர் செய்ய வாய்ப்பு இல்லைனு தான் நினைக்கிறேன்.. அப்படி இருந்து இருந்தால், நான் அவனை அடிச்சுட்டு இவளை தூக்கிட்டு போனது, அவன் இவளை தேடியது, எங்க ஆர்கியுமென்ட்னு எல்லாத்தையும் பார்க்கிறப்ப, ஏதோ பிரச்சனைனு தெரிந்து இருக்குமே! விசயம் கிருஷ்ணாவை எட்டி இருக்கும்..
ஒருவேளை அந்த நாதாரிக்கு ஹெல்ப் செய்ற ஆள் மானிட்டர் செய்து இருந்தாலும், நான் லயனியை தூக்கிட்டு போனதைப் பார்த்து, அவனுக்கு போன் செய்து நாங்க இருந்த இடத்தை சொல்லி இருப்பானே! அப்போ, அவன் தேடி அலைந்து இருக்க மாட்டானே!” என்றான்.
தயாளன், “எஸ்.. கரெக்ட்.. ஒருவேளை கிருஷ்ணா ஃபங்ஷனில் இருந்ததால், மெதுவா சொல்லிக்கலாம்னு நினைத்து இருந்தாலும், கிருஷ்ணா அங்கே வந்ததும் பார்த்துட்டு அட்மின் ஆள் யாரும் உடனே வந்து இருப்பாங்க.. ஸோ யாரும் மானிட்டர் செயலை.. அப்போ கிருஷ்ணா கிட்ட சொல்லிட்டு, ஜஸ்ட் ஃபுட்டேஜ் கரப்ட் செய்தா போதும்..
அப்புறம் அந்த சர்வருக்கு, ராகேஷ் என்ன கலந்தான்னு தெரியாது.. அவன் பாப்பாவை கூட்டிட்டு போனதும் தெரியாது.. ஸோ சர்வரும் பிரச்சனை இல்லை.. என்ன இப்போதைக்கு கிருஷ்ணா சர்வரை தண்டிக்க முடியாது.. வேற எதிலாவது வெச்சு செய்ய சொல்லணும்”. என்றான்.
லயனிகாஸ்ரீ, “கிருஷ்ணாவே கண்டிப்பா வெச்சு செய்வார்” என்றாள்.
அப்பொழுது மகிழ் கொற்றவன் கைபேசிக்கு சந்தோஷிடம் இருந்து அழைப்பு வரவும், “பேசிட்டு வரேன்” என்று கூறி வெளியே சென்றான்.
அவன் வெளியே சென்றதும் தயாளன், “மகிழ் ஏற்கனவே உனக்கு அவரை தெரியுமானு கேட்டார்” என்றான்.
“எதை வைத்து அப்படி கேட்டார்?”
மருத்துவமனை உணவகத்தில் பேசியதை சுருக்கமாக அவன் கூறியதும் அவள் மென்னகையுடன், “நான் பார்த்துக்கிறேன்” என்றாள்.
உள்ளே வந்த மகிழ் கொற்றவன், “நீ எப்படி இருக்கனு கேட்டுட்டு என்னோட பிளான் என்னனு கேட்டான்.. அதான் பேசிட்டு வர கொஞ்சம் லேட் ஆகிருச்சு” என்றான்.
“என்ன சொல்றார் உங்க பிரெண்ட்?”
“அவன் என்ன சொல்ல! நான் கல்யாணம் பற்றி சொன்னதும் ஷாக் ஆனவன் தான்.. நாளைக்கு நேரில் போய் தான் தெளிய வைக்கணும் நினைக்கிறேன்!”
“ஏன்! என்னைப் பற்றி எதுவும் தெரியாம..” என்றவளின் பேச்சை இடையிட்டு,
“நான் ஓகே சொன்னதில் தான் அவன் ஷாக்கில் இருப்பான்.. அதில் இருந்து தெளிஞ்ச அப்புறம் தானே இதை பற்றிலாம் யோசிக்கிறது!”
அவள் சந்தேகமாக பார்க்க, “அட நிஜமா தான் சொல்றேன்.. ஏன்னா என்னோட ஹிஸ்ட்ரி அப்படி”
அவள் மென்னகையுடன், “யூ மீன் எஸ்டிடி” என.
“அதே தான்” அவனும் புன்னகையுடன் கூற…
இவர்களுடன் சேர்ந்து புன்னகைத்த தயாளன், “நீங்க அட்டென்டர் பெட்டில் படுத்துக்கோங்க மகிழ்.. நான் வெளியே சேரில் இருந்துக்குவேன்.” என்றான்.
மகிழ் கொற்றவன் லேசாக தயங்க, தயாளன் மென்னகையுடன், “நீங்க பாப்பாவோட வருங்கால கணவர் மட்டுமில்லை.. ஒரு டாக்டரும் கூட.. ஸோ நீங்க இருப்பது தான் சரி வரும்” என்றவன், “கொஞ்ச நேரம் பேசிட்டு நல்லா தூங்கு பாப்பா” என்றான்.
அவள் புன்னகையுடன், “குட் நைட்.. நீயும் தூங்கு” என்றாள்.
இருவரிடம் தலையசைத்து வெளியேறியவன், முதல் வேலையாக ராஜீவ் கிருஷ்ணாவிடம் தான் பேசினான்.