காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 8.2

மகிழ் கொற்றவன் முறைப்புடன், அதான் அப்படி எதுவும் நடக்கலையே! அப்புறம் என்ன?”

அதுக்கும் வாய்ப்பு இருக்குது தானே!”

எந்த ஒரு விசயத்துக்கும் பல கோணங்கள் இருக்கும்.. அப்படி நடந்து இருந்தால், இப்படி நடந்து இருந்தால்னு நடந்து முடிந்த பிறகு பேசி என்ன பயன் சொல்லுங்க?”

நீங்க சொல்றது சரி தான்.. ஆனா இது ஒன்னு மட்டும் கேட்கிறேனே! ப்ளீஸ்.. ப்ளீஸ்…”

லேசாக பெருமூச்சை வெளியிட்டவன், கேளுங்க” என்று கூற,

லயனிகாஸ்ரீ, இதை இப்படி சொல்லக் கூடாது.. நம்ம புலிகேசி ஸ்டைலில் ‘கேளும், கேட்டுத் தொலையும்’னு சொல்லணும்.” என்றாள்.

மகிழ் கொற்றவன் புன்னகைக்க,

நவீனா தோழியை முறைத்துவிட்டு, வந்த போன் வேற யாரோ செய்ததோ, இல்லை உங்க பிரெண்ட் போனே செய்யல…! எதுவோ.. மொத்தத்தில் போன் மூலமா உங்க பிரெண்டை நீங்க கான்டாக்ட் செய்ய முடியாம போய் இருந்தால், இரண்டு விஷயம் நடந்து இருக்க வாய்ப்பு இருக்குது..

ஒன்னுவேற டாக்டர் வந்து இருப்பார்.. என்ன செய்து இருப்பீங்க? ரெண்டு, சூழ்நிலை புரியாம, உங்க பிரெண்ட் வந்து இருப்பார். அப்போ என்ன செய்து லயா உங்க மனைவினு அவரை சொல்ல வச்சு இருப்பீங்க?” என்று கேட்டாள்.

பொதுவா யாரோடும் நான் அதிகம் பேச மாட்டேன்.. அதுவும் இந்த காண்ஃபரென்ஸ், நான் வொர்க் பண்ற ஹாஸ்பிடலில் என்னோட சீஃப் வர வேண்டியது.. லாஸ்ட் மினிட்டில் அவருக்கு ஒரு எமர்ஜென்சி ஆபரேஷன் வரவும், அவர் சார்பா என்னை அனுப்பினார்.. ஸோ இங்கே சந்தோஷைத் தவிர மத்த யாருக்கும் என்னை பெருசா தெரியாது.. அதான் தைரியமா சொன்னேன்.. என்னோட பழக்கமே இல்லாதப்ப, என் பெர்சனல் டிட்டேல்ஸ் எப்படி வந்தவருக்கு தெரியும்னு, எஸ்.ஐ கிட்ட கேட்டு இருப்பேன்..

அடுத்தது.. ஸோ சிம்பிள்.. சந்தோஷ் எந்த ஒரு கேள்விக்கும் சட்டுனுலாம் பதில் சொல்லி இருக்க மாட்டான்.. நான் ஏதாவது கோட் வொர்ட் சொல்லி, அவனுக்கு ஹின்ட் கொடுத்து இருப்பேன். என்ன கோட் வொர்ட்னு கேட்காதீங்க.. அதெல்லாம் அந்த நேரம் இன்ஸ்டென்ட்டா தோன்றது தான்.”

வாவ்.. செம டாக்டர்!”

அவன் மென்னகைக்கவும்,

தயாளன், இதை மாதிரி உங்க காலேஜ் லைஃபில் நடந்து இருக்குது தானே!” என்று கிண்டலாகக் கேட்டான்.

உங்க டோனே சரி இல்லையே! இப்போ நான் என்ன பதிலை சொல்றது!” என்று மகிழ் கொற்றவன் கூற, அனைவர் முகத்திலும் புன்னகை பூத்தது.

பின் தயாளன், நவீனா, நீ வீட்டுக்கு கிளம்பு” என்றான்.

அவள் தயங்கவும், லயனிகாஸ்ரீ, நான் தான் நார்மல்னு சொல்றேனே! அப்புறம் என்ன?” என்றாள்.

இருந்தாலும் இன்னைக்கு ஒரு நாள் உனக்கு பெண் துணை தேவையா இருக்கும் தானே! ரெஸ்ட்ரூம் போகணும்னா என்ன செய்வ?” என்று குரலை தழைத்து கேட்டாள்.

நான் பார்த்துக்கிறேன் நவீ.. நான் அந்த அளவுக்கு வீக் இல்ல.. நீ கிளம்பு.. வீட்டுக்கு போயிட்டு போன் செய்”

ஆர் யூ ஷுர்”

எஸ்”

நாளைக்கு மார்னிங் என்ன செய்யப் போற? டிஸ்சார்ஜ் ஆகி எங்க போற?”

டிசைட் ஆனதும் சொல்றேன்.. பாட்டிக்கு இன்னும் விசயம் தெரியாது.”

நான் வாயே திறக்கலை.. ஆனா இவ்ளோ நேரம் உனக்கு போன் வராமலா இருக்குது?”

பாட்டி கிட்டயும் மெயில் கான்டாக்ட் தான்”

அப்படி என்ன சிதம்பர ரகசியமோ!”

லயனிகாஸ்ரீ புன்னகையை பதிலாகத் தர,

நவீனா முறைப்புடன், இப்ப மட்டும் வாயே திறக்க மாட்டியே!” என்றாள்.

லயனிகாஸ்ரீ பார்வையால் கதவைக் காட்டவும்,

என்னை கிளம்புனு இன்டேரெக்ட்டா சொல்றியா?” 

மகிழ் கொற்றவன், டேரெக்ட்டா தான் சொல்றா” என்றான்.

அவன் பக்கம் திரும்பிய நவீனா, அது எப்புடி டாக்டர்! அதிகம் பேச மாட்டேன்னு சொல்றீங்க.. ஆனா, என்னை கலாய்க்கணும்னா மட்டும் வார்த்தை அருவி மாதிரி கொட்டுமோ!”

இப்பவும் நான் உங்க கிட்ட அதிகம் பேசலையே!”

எதே!” என்று நெஞ்சில் கை வைத்தவள், நான் கிளம்பிடுறேன்.” என்றாள்.

மகிழ் கொற்றவன் மென்னகையுடன், “தேங்க்ஸ் ஃபார் கமிங்.. சேஃபா வீட்டுக்கு போயிட்டு லயனிக்கு போன் செய்யுங்க” என்றான்.

என் பிரெண்டை நான் பார்க்க வந்ததுக்கு தேங்க்ஸ் சொல்லுவீங்களா?” என்று அவள் சண்டையிடுவது போல் கேட்க,

அவனோ அலட்டிக் கொள்ளாமல் அமைதியான குரலில், சொல்லுவேன்.. இந்த காலத்தில் இது பெரிய விஷயம் தான்.. உங்க ரெண்டு பேர் பிரெண்ட்ஷிப் கிடைக்க, லயனி கொடுத்து வச்சு இருக்கணும்.. ஸோ என்னோட மனைவியைப் பார்க்க வந்ததுக்கு நான் தானே தேங்க்ஸ் சொல்லணும்” என்றான்.

லயாவோட பிரெண்ட்ஷிப் கிடைக்க நாங்க தான் கொடுத்து வச்சு இருக்கணும்.. அண்ட் ஒரு விசயத்தை ஞாபகப்படுத்துறேன் டாக்டரே! உங்க லயனி, இனி தான் உங்களுக்கு மனைவி ஆகணும்.. அப்படியே மனைவியாவே இருந்தாலும், முதல்ல அவ எங்க பிரெண்ட்.. அப்புறம் தான் உங்க மனைவி.”

அவன் மென்னகையுடன், மனசளவில் நாங்க இப்பவே கணவன் மனைவி தான்.. நீங்க அவ வாழ்க்கைக்குள் முதல்ல வந்து இருக்கலாம். ஆனா, இனி அவ வாழ்க்கையே நான் தானே!” என்றான்.

நவீனா தோழியைப் பார்க்க, அவளோ காதலுடன் தன்னவனைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

யாரை நம்பினாலும் இந்த காதலிக்கிற மனுஷங்களை மட்டும் நம்பவே கூடாது.” என்று அவள் முணுமுணுக்க,

தயாளன், அடுத்து மொக்கை வாங்குறதுக்குள் கிளம்பிடு” என்றான்.

யூ டூ தயா சார்!”

என்ன செய்ய! நீ கிளம்ப மாட்டிக்கிறியே!”

ஆள்காட்டி விரலை தன்னை நோக்கியே வைத்தபடி, இந்த அவமானம் உனக்கு தேவையா!” என்றவள், நான் நிஜமாவே கிளம்புறேன்” என்றபடி கிளம்பினாள்.

தயாளன், கார் ஏற்றி விட்டுட்டு வரேன்” என்றுவிட்டு கிளம்பினான்.

பின் அவளுடன் நடந்தபடி, ஜோக்ஸ் அபார்ட்.. சேஃபா வீட்டுக்கு போயிட்டு போன் செய்.. பாப்பா பிளைட் டிலேனு சொல்றதுக்கு ஒரு நம்பரில் இருந்து கூப்பிட்டாளே! அந்த நம்பருக்கு கூப்பிடு.. அது என் கிட்ட தான் இருக்கும்.” என்றான்.

ஓகே சார்”

எப்போதும் வர ஜோசஃப் தானே!” என்று ஓட்டுநரைப் பற்றி விசாரித்தான்.

ஆமா சார்”

வீட்டில் என்ன சொல்லி இருக்க?”

இன்னும் எதுவும் சொல்லலை”

பாப்பா, பார்ட்டியில் இருந்து சீக்கிரம்  கிளம்பியது, அப்படியே சொல்லு.. அதுக்கு அப்புறம் ரூமுக்கு வந்ததும் தான்… பாப்பாக்கு அங்கே  சாப்பிட்டது ஒத்துக்கலைனு ட்ரீட்மென்ட்கு நான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்தேன்னும், வீட்டுக்கு கிளம்புறப்ப தான் உனக்கு விசயம் தெரிந்து பார்க்க வந்ததா சொல்லு..! இதையே ரிதன்யா கிட்ட சொல்லிடு.. கிருஷ்ணா கிட்டயும் சொல்லச் சொல்லிடு.” 

ஹும்ம்.. ஓகே சார்”

அவள் மகிழுந்தில் ஏறியதும், டேக் கேர்” என்றுவன் வண்டி கிளம்பியதும் உள்ளே சென்றான்.

error: Content is protected !!