
கீதம் 8
மன்னிக்கவும் தோழமைகளே!!! திடீர் வேலை வந்துவிட்டது.. அதான் ரொம்பவே தாமதம் ஆகிடுச்சு..
“ட்ரிப் முடியப் போகுது.. அதை கவனிக்காம என்ன கதை!” என்று கடிந்தபடி உள்ளே வந்த மகிழ் கொற்றவன், வேகமாக லயனிகாஸ்ரீ அருகே சென்று, அவளது கையில் இருந்து சொட்டு குழாயை எடுத்து விட்டான்.
லயனிகாஸ்ரீ அவனையே பார்த்தபடி இருக்க,
அவளைப் பார்க்காமலேயே அதை உணர்ந்த அவன், அந்த சொட்டு குழாயை கட்டில் அருகே இருந்த தாங்கியில் சுற்றியபடி, “என்ன?” என்றான்.
அவள் அப்பொழுதும் அவனையே பார்த்தபடி, “கோபமா?” என்று கேட்டாள்.
“ஆமா” என்றவன் அப்பொழுதும் அவளைப் பார்க்கவில்லை.
“இதுக்கும், லவ் யூ கிங்.” என்று அவள் மெல்லிய குரலில் கூற, அவன் தன்னையும் மீறி அவளைப் பார்த்து இருந்தான்.
“உங்க கோபத்துக்கு பின்னாடி, என் மீதான அக்கறை தானே இருக்குது.. அதான் லவ் யூ!” என்று கூறி அவள் கண் சிமிட்ட,
அவனோ, “ஐ அங்ரி யூ” என்றான்.
“அப்போ உங்களுக்கு நீங்களே சாரி சொல்லிக்கோங்க.. எனக்காக நீங்க தானே சொல்லுவீங்க” என்று கூறி, மீண்டும் கண் சிமிட்டினாள்.
சிரிப்பு வந்தாலும் சிரிக்காமல், “சரி” என்று விட்டு தள்ளி நின்றான்.
அவளோ மென்னகையுடன், “சிரிப்பு வந்தா சிரிக்கணும்.. வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்னு சொல்லி நீங்க கேள்விப் பட்டது இல்லையா?”
“அப்புறம் எப்படி அவருக்கு பேஷன்ட்ஸ் வருவாங்க?” என்ற நவீனா, “நானும் தயா சாரும் இங்கே தான் இருக்கோம்.. கொஞ்சம் எங்களையும் கவனி மேடம்.” என்றாள்.
மகிழ் கொற்றவன் மேசை மீது வைத்த பாலை நவீனாவிடம் நீட்டினான்.
“மூடிட்டு குடினு சொல்றீங்களா?” என்றபடி அதை எட்டிப் பார்த்தவள் முறைப்புடன், “நான் உங்க கிட்ட பால் கேட்டேனா?” என்றாள்.
“பேசி பேசி களைத்துப் போய் இருப்பீங்க.. குடிங்க.. ஆனா மூடிட்டு இல்ல, வாயைத் திறந்து.”
நவீனா இன்னும் முறைக்க,
லயனிகாஸ்ரீ சிரிப்புடன், “மேடமுக்கு பால் பிடிக்காது.. அதான் விசயம்” என்றாள்.
“ஓ! நைட் நேரம் ஜூஸ் விட, பால் பெட்டர்னு நினைத்தேன்.. இது உடம்புக்கு நல்லதும் கூட.. கொஞ்சமா தரேன், நீங்க குடித்து பாருங்க.. பிடித்தால் குடிங்க, இல்லை நான் குடிச்சுக்கிறேன்.” என்றபடி கூடுதலாக வாங்கி வந்திருந்த காகித கோப்பையில் பாலை சிறிதளவு ஊற்றிக் கொடுத்தான்.
மறுக்க முடியாமல், தோழியை சிணுங்கலாகப் பார்த்தபடி குடித்த நவீனா கண்களை விரித்தபடி, “நல்லா இருக்குது.. கொடுங்க நானே குடிக்கிறேன்.”
மகிழ் கொற்றவன் மென்னகையுடன், “கொஞ்சம் சூடா இருக்குது.. பார்த்து குடிங்க” என்றபடி கொடுத்தான்.
பாலை ஊதி குடித்தபடி, “நீங்க என்ன ஸ்பெஷலிஸ்ட்?” என்று கேட்டாள்.
அவன் யோசனையுடன் பார்க்க, லயனிகாஸ்ரீ, “பாலை குடிக்க வச்சதுக்காக கேட்கல.. டாக்டர் லைனில் கேட்கிறா…” என்று விளக்கினாள்.
“ஈ.என்.டீ”
“ஆனா மத்ததும் தெரிந்து வச்சு இருக்கிறீங்க?”
“முதல்ல எல்லோரும் பேசிக்ஸ் படிப்போம் தானே!”
“ஓ”
தயாளன், “மகிழ் தன்னடக்கத்துடன் பேசுறார்.. என்ன தான் பேசிக்ஸ் படிச்சாலும், எல்லோருக்கும் எல்லாம் தெரிந்து இருக்காது.. இது இவரோட தனித் திறமை.. அதுவும், சைக்காலாஜில.. தனியா டிப்ளோமோ கோர்ஸ் வேற செய்து இருக்கார்.. இவர் திறமைக்கு இன்னும் வெகு சில வருடங்களில் நிச்சயம் ஃபேமஸ் டாக்டர் ஆவார்.” என்றான்.
“ரொம்ப அதிகமா சொல்றீங்க” என்று மகிழ் கொற்றவன் கூற,
“பார்றா!” என்ற நவீனா, “அப்போ இன்னும் கொஞ்ச நாளில் டாக்டருக்கு மௌஸ் கூடிரும்னு சொல்றீங்க!” என்றாள்.
“ஓய்! என்ன கிண்டலா?” என்று லயனிகாஸ்ரீ தோழியை மிரட்ட,
அவளோ, “கோச்சுட்டியா குமாரு! கோச்சுக்கோ கோச்சுக்கோ!” என்றாள்.
“போடி காபிகேட்(copy cat)”
தயாளன் மகிழ் கொற்றவனிடம், “நீங்க ஏன் தனியா ஒரு கிளினிக் ஆரம்பிக்கல..?” என்று கேட்டான்.
“இன்னும் ஒரு வருஷம் போகட்டும்னு நினைத்தேன்”
“இப்பவே ஆரம்பிங்க, சரியா வரும்.”
“ஹும்ம்.. முதல்ல சரியான இடம் பார்க்கிறேன்.”
“உங்க வீட்டிலேயே வைக்கலாமே!”
“இல்லை, அது சரி வராது.”
“வீட்டில் பிரச்சனை செய்வாங்கனு, யோசிக்கிறீங்களா?”
“இல்லை.. வீட்டுக்கு வந்துட்டா, அது முழுக்க முழுக்க எனக்கும் லயனிக்குமான நேரமா இருக்கணும்.. அதாவது என் பெர்சனல் ஸ்பேஸ், என்னோட குடும்பத்துக்கான நேரமா இருக்கணும்.”
“புரியுது.. வீட்டில் கிளினிக் இருந்தா, அங்கே பேஷன்ட்ஸ் வந்தா தவிர்க்க முடியாது.. ஸோ, நீங்க இருபத்து நாலு மணி நேரமும் டாக்டரா தான் இருக்கிற மாதிரி இருக்கும்.”
“ஹும்ம்”
நவீனா, “டாக்டர் சார்.. எனக்கு ஒரு டவுட்” என…
“என்ன?”
“அந்த டாக்டர் உங்க பிரெண்ட்னு தயா சார் சொன்னார்”
“ஹும்ம்.. சந்தோஷ் என்னோட பிரெண்ட் தான்.. எம்.பி.பி.எஸ் ஒன்னா படிச்சோம்.. அவன் ஆர்த்தோ டாக்டர்.”
“என் டவுட் என்னனா, எப்படி அவர் தான் வருவார்னு உறுதியா நினைச்சீங்க?”
“அதான், நான் போனில் சொன்னேனே! ஸோ எப்படியாவது அவன் தான் வந்து இருப்பான்.”
“அவர் உங்க போனை அட்டென்ட் செய்தார்னு உங்களுக்கு எப்படி தெரியும்?”
“நீங்க சொல்றது போல் அந்த சிட்சுவேஷனில் அவன் எடுத்தானா இல்லையானு எனக்கு தெரியாது தான்.. ஆனா, அதை தவிர்க்க தான், நான் அவனுக்கு போன் செஞ்சுட்டு ரிங் போனதும் கட் செய்துட்டேன்.. ரிங் போனது எப்படி தெரியும்னு கேட்காதீங்க.. சும்மா ஒரு கெஸ் தான்.. அவன் அட்டென்டு செய்தே இருந்தாலும் எனக்கு தெரியாது, நான் கட் தான் செய்து இருப்பேன்..
அவன் உடனே எனக்குக் கூப்பிடுவான்னு, அகேன் ஒரு கெஸ் தான்.. நாங்க ரெண்டு பேருமே எப்போதும் போனை சைலென்ட் மோடில் வைபிரேஷனில் தான் வைத்து இருப்போம், ஸோ கால் வந்தா தெரியும்.. நான் எதிர்பார்த்தபடி போன் வரவும், கால் அட்டென்ட் செய்து, தேவையான மெசேஜ் பாஸ் செஞ்சுட்டேன்..
ராகேஷ் கிட்ட இருந்து தப்பிக்க முயற்சி செய்தப்பவே, எங்க ரெண்டு பேரோட போனை சைலென்ட்டில் போட்டுட்டேன். கூடுதலா எதுக்கும் இருக்கட்டும்னு, லாஸ்ட் டயல்டு சந்தோஷ் நம்பர் இருக்கிற மாதிரி, அவனுக்கு கால் போட்டு ரிங் போறதுக்கு முன்னாடியே கட் செய்துட்டேன்.”
“சூப்பர்.. இப்போ இன்னொரு டவுட்.. ஒருவேளை உங்க போனை அவர் எடுக்கவே இல்லைனா?” என்றவளின் பேச்சை இடையிட்ட மகிழ் கொற்றவன்,
“அவன் போன் செய்யலைனா, திரும்ப மிஸ்டு கால் கொடுத்து இருப்பேன்.. இங்கே எங்க நல்ல நேரம், அவன் உடனே எனக்கு கூப்பிட்டுட்டான். அவன் போன் போடுறவரை, ராகேஷிடம் பேச்சு கொடுத்து, முடிந்தளவு இழுத்து பிடித்து மிஸ்டு கால் திரும்ப திரும்ப கொடுத்து இருப்பேன்.”
“ஒருவேளை நீங்க எவ்ளோ முயற்சி செய்தும் உங்க பிரெண்ட் போனே செய்யலைனா? இல்ல… ராகேஷ் உங்க கிட்ட பேசாம கிளம்பி இருந்தா? இல்ல… உங்களுக்கு வந்த போன் வேற யாரோ செய்ததா இருந்து இருந்தால்…?”