காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 7.3

கண்டிப்பா.. இங்கே லயனி சேஃப்.. ஆனா, சில கேஸஸ் நான் கேள்விப்பட்டு இருக்கிறேன்.. அதிக டோஸ் கொடுக்கப்பட்டு, என்ன ட்ரக்னு(drug)தெரியாம வைடல்ஸ் டெஸ்ட் வச்சு ட்ரீட்மென்ட் கொடுத்து காப்பாத்த முடியாம போய் இருக்குது. ஏன்னா அதிக டோஸ் கொடுத்தால், பின் விளைவுகள் அதிகமா இருக்கும்.. அப்போ சரியான அன்டிடோட் கொடுத்தா பேஷன்ட் சேஃப்.. இல்லனா, பொதுவான அன்டிடோட் வச்சு, ஓரளவுக்கு தான் சமாளிக்க முடியும். ஒன்னு பேஷன்ட் இறப்பாங்க… இல்லை பேஷன்ட் உயிருடன் இருந்தாலும், இயல்பு வாழ்க்கை வாழ முடியாத படி, உள்ளுக்குள் உடலுறுப்பு பாதிக்கப்பட்டு இருக்கும்.”

ஹும்ம்.. ட்ரக்(drug) ப்ரீ ஸோசைட்டி தான் ஒரே வழி.”

எங்கே…? இப்போ இருக்க காலகட்டத்தில், பெண்கள் ரொம்பவே கவனமா இருக்க வேண்டியது இருக்குது.. இப்பலாம் கணவன் கூட போனா கூட, சில நேரம் கயவன் கிட்ட மாட்டுறது நடக்குது.. ஸோ பெண்கள் தனியா வெளியே போறப்ப, ரொம்ப ரொம்ப கவனமா இருக்கணும்.. நம்ம லயனியையே எடுத்துக்கோங்க! நெருங்கிய தோழியோட பார்ட்டி தான், ஆனா என்னாச்சு!”

உண்மை தான்” என்ற தயாளன், அந்த பொறுக்கி, பாப்பா கிட்ட என்ன சொன்னான்?” என.. 

முதல்ல அவளை செயலற்ற நிலையில் வைத்து அனுபவிச்சிட்டு, அடுத்து இணைவான இணைவை எதிர்பார்த்து டோஸ் கம்மியா கொடுத்து இருக்கிறான். ஆனா, இதை லயனி கிட்ட.. அந்த எச்சை… விலாவாரியா கொச்சையா பேசி இருக்கிறான்.” என்றான் கோபத்தை அடக்கிய குரலில்.

தயாளன் இறுகிய குரலில், எல்லாத்துக்கும் சேர்த்து அனுபவிப்பான்.” என்றான்.

அவனுங்களை என்ன செஞ்சீங்க?”

இப்போதைக்கு என்னோட இடத்தில் வச்சிருக்கிறேன்.. என் இடத்தை யாரும் லேசில் கண்டு பிடிக்க முடியாது.. அடுத்து என்னனு, இனி தான் முடிவு செய்யணும்.”

நீங்களே போனீங்களா? அதான் நீங்க வர லேட்டா?”

ஹும்ம்.. விசயம் வெளியே போகக் கூடாதுனு பார்ட்டி பிளான் செய்தபடியே நடக்கணும்னு சொன்னேன்.. அதான் நவீனாவும், இப்போ தான் வந்து இருக்கா.”

ஹும்ம்”

உங்க பிரெண்ட் எப்போ கிளம்பினார்?”

லயனி தெளிவானதும் கிளம்பிட்டான்.. சந்தோஷ் என்னோட பிரெண்ட்னு, உங்களுக்கு எப்படி தெரியும்?”

லேசாக சிரித்த தயாளன், நான் வெல் ட்ரைன்டு பாடிகாட்.. ஒருத்தரோட அசைவுகள், பேச்சை வைத்தே… சூழ்நிலை மற்றும் உண்மையை கண்டு பிடிச்சிடுவேன்.” என்றான்.

ஹும்ம்.. நீங்க எப்படி என்னை லயனியோட கணவன்னு சொன்னீங்க?”

பாப்பா போனை எடுக்கலைன்னு பார்க்க கிளம்ப நினைச்சப்ப, ரூம் வாசலில் பேச்சு குரல்கள் கேட்டுது.. என்னனு பார்க்க லேசா கதவை திறந்து கவனிச்சேன்.. அப்போ தான், நீங்க உங்க பிரெண்டுக்கு போன் மூலம் தகவல் சொல்லிட்டு இருந்தீங்க.. உங்க கை பாக்கெட்டில் இருந்தது அண்ட் நீங்க அழுத்தம் திருத்தமா பேசியது, அதில் சொல்லப்பட்ட செய்தி.. இதை எல்லாம் வைத்து தான் கண்டு பிடித்தேன்.”

லயனி சொன்னபடி, நீங்க ப்ரில்லியன்ட்”

பாப்பா வேற என்ன சொன்னா?”

இந்நேரம், என் ஜாதகம் உங்க கையில் இருக்கும்னு சொன்னா..”

லேசாக சிரித்த தயாளன், வேற?” என்றான்.

நீங்க ஓகே சொல்லிட்டா, பாட்டி நோ சொல்ல மாட்டாங்கனு சொன்னா.”

எதுக்கு நான் ஓகே சொல்லணும்?”

உங்களுக்கு புரியலைனு, நான் நம்பனுமா?”

நன்றாக சிரித்த தயாளன், ஒரே ஒரு கேள்வி தான்” என்றான்.

என்ன?”

எப்படி பாப்பா கேட்டதும் கல்யாணத்துக்கு ஓகே சொன்னீங்க?”

ஏன்! நான் கூட கேட்டு இருக்கலாமே!”

மறுப்பாக தலை அசைத்தவன், எனக்கு பாப்பா பற்றி தெரியும்.. பாப்பாக்கு உங்களை பிடிக்கும்.”

மகிழ் கொற்றவன் யோசனையுடன் பார்க்க,

தயாளன், என்ன?” என்றான்.

லயனிக்கு, என்னை முன்னாடியே தெரியுமா?”

ஏன் இப்படி கேட்கிறீங்க?”

லயனிக்கு என்னை பிடிக்கும்னு நீங்க சொன்னதை வைத்து தான். உங்க அளவுக்கு இல்லை என்றாலும், நானும் பேச்சு மற்றும் உடல்மொழியில் இருந்து கொஞ்சம் சரியாகவே கணிப்பேன்.. ஸோ சமாளிக்காம உண்மையைச் சொல்லுங்க” என்றான்.

சமாளிக்க, என்ன இருக்குது? மறைக்கணும்னு எல்லாம் நினைக்கலை.. பாப்பா சொல்லாதப்ப, நான் சொல்றது சரியா இருக்காதுனு நினைத்தேன்.”

ஸோ.. தெரியும்.”

அதை எப்படி சொல்ல… தெரியும், ஆனா உங்க பெயர்லாம் தெரியாது.. ஜஸ்ட் ஒரு மீட்..! அதை பற்றி பாப்பா கிட்டயே கேட்டுக்கோங்க.”

ஆமாவா, இல்லையா.. மட்டும் தான்  கேட்டேன்.. அந்த இன்சிடென்ட் பற்றி  சொல்லணும்னு நினைக்கிறப்ப, அவளே சொல்லுவா.”

மென்னகையுடன், பாப்பா தேர்வு எப்போதும் பெஸ்ட் தான்.” என்றான்.

அவனும் மென்னகையுடன், தேங்க்ஸ்” என்றான்.

இப்போ என் கேள்விக்கு பதில் சொல்லுங்க”

எதனால் இப்படி கேட்டீங்க?”

பாப்பா சொன்னது போல், உங்களையும் உங்க குடும்பத்தைப் பற்றியும் விசாரித்தேன்.. கல்யாணத்தில் நாட்டம் இல்லாத நீங்க எப்படி சரி சொன்னீங்க?”

லயனியோட அன்பையும் காதலையும் இழக்க நான் விரும்பலை.. என்னையும் அறியாம என்னோட மனம் அவளோட அருகாமையை ரொம்பவே விரும்புது.. அதான் காரணம்.” என்றவன் புன்னகையுடன்,

உண்மையை சொல்லணும்னா, லயனி தான் பேசி பேசியே என்னை கரெக்ட் பண்ணிட்டா!” என்றான்.

தயாளன் சிரிக்கவும்,

என் குடும்பத்தைப் பற்றி விசாரித்தும், எப்படி நீங்க ஓகே சொன்னீங்க?”

தயாளன் மென்னகையுடன், எந்த குடும்பத்தில் தான் பிரச்சனை இல்லைனு சொல்லுங்க?” என்றான்.

குடும்பத்தில் பிரச்சனை இருக்கலாம்.. இங்கே குடும்பமே பிரச்சனையா தான் இருக்குது.”

இதெல்லாம் பாப்பா கிட்டயும் சொல்லி இருப்பீங்க தானே!”

அவன் சிறு அதிர்வுடன் ‘ஆம்’ என்பது போல் தலையை ஆட்ட,

தயாளன், இந்த மாணிக்கத்துக்காக எதையும் சமாளிக்கலாம்னு பாப்பா நினைத்து இருப்பா.. சமாளிப்பா.” என்றான்.

பின், சொல்லத் தேவை இல்லை.. இருந்தாலும் சொல்றேன்.. பாப்பாவை நல்லா பார்த்துக்கோங்க.. பாப்பாவும் உங்களை நல்லா பார்த்துப்பா.” என்றான்.

கண்டிப்பா” என்ற மகிழ் கொற்றவன், நீங்க தான் கூடவே இருந்து பார்க்கப் போறீங்களே! அப்புறம் என்ன?”

தயாளன் அதிர்வுடன் பார்க்க, மகிழ் கொற்றவன், எப்படியும் லயனி உங்களை கூட்டிட்டு தான் வருவா.. இல்லைனாலும் நீங்க வீட்டுக்கு பக்கத்தில் வந்து தங்கி இருக்கப் போறீங்க.. அதான் நானே சொல்லிட்டேன்.”

ஆனா, உங்க வீட்டில் என்னனு சொல்ல?”

“அதை பற்றி அப்புறம் யோசிப்போம்.. இப்போ வாங்க ரூமுக்கு போகலாம்.”  என்றவன் மறக்காமல், நவீனாவிற்கு பனங்கற்கண்டு பால் வாங்கிச் சென்றான்.

கீதம் இசைக்க காத்திருப்போம்…

error: Content is protected !!