காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 7.2

நவீ!” என்று ரிதன்யா அழைக்க,

நவீனா, மனைவியை யாரும் பன்மையில் பேச மாட்டாங்கனு சொன்னார்.” என்றாள்.

லயனிகாஸ்ரீ செல்ல முறைப்புடன், இதையா சொல்லச் சொன்னேன்!” என்றாள்.

உதட்டை பிதுக்கிய நவீனா ரிதன்யாவிடம்,

என் முன்னாடி இவ பெர்சனல் குவெஸ்டீன் கேட்கவும், அவர் பதில் சொல்லாம ‘சில உணர்வுகள் நமக்கே நமக்கானது’னு சொன்னார்.. உடனே இவ சாரி சொல்லவும் அவர், ‘என்னோட லயனெஸ் எங்கேயும், யார் கிட்டயும் சாரி கேட்கக் கூடாது.. அது அவளோட கிங்கா இருந்தாலும்’ னு சொன்னார்.. மேடம் அவரை கிங், அரசேனு தான் கூப்பிடுறாங்க.. பதிலுக்கு அவர் லயனெஸ்னு கூப்பிடுவார் போல.. ஆனா, அவர் ஒருமுறை தான் கூப்பிட்டார்.. இவ தான் உருகுறா..” என்றாள்.

ரிதன்யா, அம் ஹாப்பி ஃபார் யூ லயா.” என…

லயனிகாஸ்ரீ, தேங்க் யூ” என்றும்,

நவீனா, என்ன ரிது! நீயும்!” என்றும் ஒரே நேரத்தில் கூறினர்.

ரிதன்யா, உனக்கு புரியலை நவீ.. மகிழோட ப்ரெசென்ஸ் ஆஃப் மைண்டு சூப்பர்.. அதனால் மட்டுமே, இப்போ நம்ம லயா நமக்கு அப்படியே கிடைச்சு இருக்கா..! அவர் தைரியமானவரும் கூட.. யாருனே தெரியாத ஒருத்திக்காக இவ்ளோ ரிஸ்க் எடுத்தவர், தன்னவளுக்காக எவ்ளோ ரிஸ்க் எடுப்பார்! அவர் லயாவை நல்லா பார்த்துப்பார்.” என்றாள்.

நவீனா, இது மட்டும் போதுமா?” என்று வினவ,

ரிதன்யா, இல்லை தான்.. அன்பும் காதலும் வேண்டும்.. என்னை கேட்டால், மகிழை நல்ல மனிதர்னு சொல்லுவேன்.. என்ன பார்க்கிற! கிருஷ் ஈகோ பார்க்காம சாரி கேட்பான் தான். ஆனா நானும் கேட்கணும்னு எதிர்பார்ப்பான்.. அதில் தவறு எதுவும் இல்லை தான். ஆனா, தன்னோட மனைவி தன்னிடம் கூட சுயமரியாதையை இழக்கக் கூடாதுனு நினைக்கிற மகிழ் போன்ற ஆண்கள், வெகு அபூர்வம்.. இதை விட வேற என்ன வேணும்னு நினைக்கிற?” என்றாள்.

ஒருவேளை நடிப்பா இருந்தால்…?”

தயா சார் விசாரிக்காம லயாக்கு பிளைண்டா ஓகே சொல்ல மாட்டார்.. அண்ட் லயாவும் அப்படி ஏமாறுற ஆள் இல்லை.. ஏன் நீயே சொல்லு, மகிழை பார்த்தால் நடிக்கிற மாதிரியா இருக்குது?”

இல்லை…”

மென்னகையுடன் தங்கள் உரையாடல்களை பார்த்துக் கொண்டு இருந்த லயனிகாஸ்ரீயைப் பார்த்து ரிதன்யா, ஹெலோ மேடம், நியாயமா பார்த்தா, டாக்டருக்கு நீ தான் வக்காலத்து வாங்கணும்.. இங்கே நான் தொண்டை தண்ணி வத்த பேசிட்டு இருக்கிறேன்.. நீ சிரிச்சிட்டு இருக்க.”

முதல்ல கிருஷ்ணாக்கு நான் வக்காலத்து வாங்கல..!”

அடிப்பாவி!”

சும்மா டா.. நான் சொல்றதை விட நீ சொல்றது பெட்டர்னு நினைத்தேன்.. இதை எல்லாம் நான் சொன்னா, காதல் கண்ணை மறைக்குதுனு சொல்லுவா” என்றாள் சிரிப்புடன்.

ரிதன்யாவும் சிரிப்புடன், கண்டிப்பா சொல்லுவா” என்று விட்டு, அவ மகிழை நடிக்கிறார்னு சொன்னப்ப, உனக்கு கோபம் வரலையா?” என்று கேட்டாள்.

மறுப்பாக தலையசைத்தவள், அதில் அவ என் மேல் வைத்து இருக்க அக்கறை தான் தெரிந்தது. ஆனா, இனி சொன்னா அடி தான்.” என்று முடித்த போது, நவீனாவைப் பார்த்தாள்.

ரொம்பத் தான்” என்று நொடித்தாள், அவள்.

ரிதன்யா, ட்ரீட் எப்போ தர?” என்று வினவ,

நீ ஹனிமூன் போயிட்டு வா.. அப்புறம் தரேன்” என்று கூற,

இவ ட்ரீட்னு கல்யாண சாப்பாட்டை போடப் போறா” என்ற நவீனாவிடம்,

இப்போ நீ யாரை ஓட்டுற! ரிது அவ்ளோ நாள் ஹனிமூனில் இருப்பானு சொல்றியா? இல்லை, நான் ட்ரீட் தராம எஸ் ஆகப் போறேன்னு சொல்றியா?” என்று கேட்டாள்.

நவீனா, ரெண்டும் தான்” என்று கூறி கண் சிமிட்ட,

ரிதன்யா, ஹே!” என்று வெட்கத்துடன் மிரட்டினாள்.

அதன் பிறகு அவர்களின் பேச்சு, கேலியும் கிண்டலுமாகச் சென்றது.

இங்கே தோழிகள் மூவரும் பேசிக் கொண்டு இருந்த நேரத்தில், தயாளனும் மகிழ் கொற்றவனும் மருத்துவ உணவகத்தில் பேசியபடியே உண்டனர்.

தயாளன், பாப்பா, இப்போ ஓகே தானே!” என்று கேட்டான்.

எஸ்.. கெட்டதில் நல்லதுனு சொல்றது மாதிரி, அவன் கம்மி டோஸ் தான் கொடுத்து இருக்கிறான்.. அதுக்கு அந்த பன்னாடை சொன்ன காரணம்..” என்று நிறுத்தி கோபத்தில் பல்லைக் கடித்தான்.

என்ன சொன்னான்? எப்போ சொன்னான்? உங்களுக்கு எப்படி தெரியும்?”

லயனி தான் சொன்னா.. அவ கிட்ட சொல்லி இருப்பான் போல..”

என்ன சொன்னான்?”

முதல்ல லயனி ஹெல்த் பத்தி சொல்லி முடிச்சிடுறேன்.”

அவன் கொடுத்த டோஸ்க்கு, ரெண்டு மணி நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமா லயனி தெளிய ஆரம்பித்து இருப்பா.. நான் இங்கே கூட்டிட்டு வந்தப்பவே, கிட்டத்திட்ட ஒன்னரை மணி நேரம் நெருங்கி இருந்தது.. உடனே சரியான ட்ரீட்மென்ட் ஆரம்பித்து இருந்ததால், அடுத்த அரை மணி நேரத்திலேயே லயனி தெளிஞ்சிட்டா.. நடந்ததை பற்றி அவ கிட்ட நான் சொன்னப்ப தான், அவ அந்த பொறம்போக்கு சொன்னதை சொன்னா…”

அப்புறம் ஏன் ட்ரிப்ஸ் இன்னும் கொடுக்கிறாங்க?”

மெடிசின் ட்ரிப் முடிந்து, இது ஜஸ்ட் பாடி டிஹைட்ரேட் ஆகாம இருக்க கொடுக்கிற சாதாரண சலைன் ட்ரிப்.. இதுவும் கூட இன்னும் அரை மணி நேரத்தில் முடிஞ்சிடும். நைட் ஆகிட்டதால், நாளைக்கு மார்னிங் டிஸ்சார்ஜ். எதுக்கும் கூடுதல் அப்சர்வேஷனில் இருப்பது நல்லது தானேனு, நானுமே காலையில் டிஸ்சார்ஜ் பெட்டர்னு தான் சொல்லுவேன். அது போக, பிளட் டெஸ்ட் ரிப்போர்ட்ஸ் நாளைக்கு வந்திடும்.”

என்ன டெஸ்ட்? அது எனக்கு தெரியாதே! எதுக்கு டெஸ்ட்?”

ரிலாக்ஸ்.. நீங்க ட்ரக்(drug) நேம் சொல்றதுக்கு முன்னாடி டாக்டர் எதுக்கும் இருக்கட்டும்னு ஃபுல் பாடி வைடல்ஸ் செக் செய்ய, பிளட் டெஸ்ட் எடுக்கச் சொன்னார்.. டோன்ட் வொர்ரி, அது நார்மல்னு தான் வரும்.”

வைடல்ஸ்னா, என்ன மீன் செய்றீங்க?”

லிவர், கிட்னினு ஒவ்வொரு பார்ட்ஸ் ஃபங்சன்(function)சரியா இருக்கானு அதோட வைடலிட்டி செக் செய்றது.” என்றவன், டைம் ரொம்ப முக்கியம்.. நாம வொர்ஸ்ட் கேஸ்கும் ரெடியா இருக்கணும் இல்லையா! அதான் டாக்டர் பிளட் டெஸ்ட் சொன்னதும், நான் சரி சொல்லிட்டேன்..

ஒருவேளை எந்த ட்ரக்னு(drug)பெயர் தெரியலைனா, இப்படி தான் வைடல்ஸ் செக் செய்து, எந்தெந்த பார்ட்ஸ்ஸோட வைடல்ஸ் வேரி(vary)ஆகுதுனு பார்த்து, அதை சரி செய்றதுக்கான ட்ரீட்மென்ட் கொடுப்போம்.. நோ அதர் கோ(go).. எவ்வளவோ ட்ரக்ஸ்(drug) இருக்கிறப்ப, பெயர் தெரியலைனா இப்படி தான் செய்ய முடியும்.” என்றான்.“அப்போ.. தலைக்கு வந்தது, தலைப் பாகையோடு போச்சுனு சொல்றீங்க!”

error: Content is protected !!