காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 7.1

கீதம் 7

மகிழ் கொற்றவன் சென்றதும், அறையினுள் வந்த நவீனா லயனிகாஸ்ரீயை முறைக்க,

அவளோ, ரிதுக்கு ‘வீடியோ கால்’ போடு.. ரீ-டெலிகாஸ்ட் செய்யாம, ஒரே முறையா சொல்லி முடிச்சிடலாம் பாரு.” என்று கூறி கண் சிமிட்டினாள்.

உனக்கு கொழுப்பு ஜாஸ்தியாகி போச்சுடி.” என்று முறைப்புடன் கூறிய படி, ரிதன்யாவிற்கு கைபேசியில் காணொளி அழைப்பு விடுத்தாள்.

அழைப்பு வந்த உடனே எடுத்த ரிதன்யா, போன் செய்ய இவ்ளோ நேரமா?” என்று கடிந்தாள்.

நவீனா, நீயே பேசு..” என்று கைபேசியை தோழியிடம் கொடுத்து விட்டு, அவள் அருகே அமர்ந்து கொண்டாள்.

எப்படி இருக்க லயா? ஓகே தானே! இப்போ தான் முழிச்சியா? அதான் லேட்டா போன் செய்தாளா?”

ரிலாக்ஸ்.. ரிலாக்ஸ்.. ரிது..! நான் ரொம்பவே நல்லா இருக்கிறேன்.. இன்ஃபாக்ட், நார்மல்னு கூட சொல்லலாம். சரியான நேரத்தில் சரியான அன்டிடோட் கொடுத்ததால், இங்கே வந்த அரை மணி நேரத்திலேயே நான் தெளிவாகிட்டேன். இப்போ ஜஸ்ட் சலைன் தான் ஏறிட்டு இருக்குது. இதுவும், கொஞ்ச நேரத்தில் முடிஞ்சிடும்.. நாளைக்கு மார்னிங் டிஸ்சார்ஜ் ஆகிடுவேன்.”

தேங்க் காட்”

தேங்க், மகிழ்”

ஹும்ம்.. கரெக்ட் தான்.. அவர் கிட்ட என்னோட தேங்க்ஸ் சொல்லிடு.. நான் நேரிலும் சொல்றேன்.”

அதெல்லாம் அவர் எதிர் பார்க்க மாட்டார்.. சரி, நீ ஏன் கிருஷ்ணா கிட்ட பேச மாட்டிக்கிற?”

நவீ சொன்னாளா? எங்க அவ?”

அவ சொல்லலை.. அவ கிட்ட நான் தான் கேட்டேன். உன்னைப் பற்றி எனக்கு தெரியாதா!”

ரிதன்யா அமைதியாக இருக்கவும், ஸ்பீக் அவுட் ரிது.” என்றாள்.

நான் இப்படி தான்னு, உனக்கு தெரியும் தானே! அப்புறம் என்ன?”

அடி வாங்கப் போற.. இதில் கிருஷ்ணா என்ன செய்தார்? ஹான்!”

நவீ தான் விசயம் தெரியாம பேசுறானா, நீயும் இப்படி சொல்ற…!”

சட்டென்று தனது முகமும் காணொளியில் தெரிவது போல் நெருங்கி அமர்ந்த நவீனா, எனக்கு என்ன தெரியாது? என்ன மறைக்கிறீங்க? சொல்லு ரிது.” என்றாள்.

லயனிகாஸ்ரீ, ப்ச்.. கிருஷ்ணா சொன்னாரா?” என்று கேட்டாள்.

ரிதன்யா அமைதியாக இருக்க, லயனிகாஸ்ரீ, சொல்லு ரிது.. கிருஷ்ணா சொன்னாரா? தயா சொல்லி இருக்க மாட்டான்.. கிருஷ்ணா கிட்டயும் சொல்ல வேணாம்னு தான் சொல்லி இருப்பான்.”

நவீனா பொறுமை இழந்து, என்னனு இப்போ சொல்லப் போறீங்களா, இல்லையா?” என்றாள்.

ரிதன்யா கோபமும், ஆதங்கமும், சிறு அழுகையுமாக, அந்த ரோக் லயாக்கு ட்ரக்(drug)கொடுத்து இருக்கான்.. அதுவும் எப்படி கொடுத்து இருக்கான்னு தெரியுமா! கிருஷ்ணா ஹோட்டல் சர்வர் ஒருத்தன் தான் ஹெல்ப் செய்து இருக்கான்.. லயா குடித்த ஜூஸில் ட்ரக்(drug)கலந்து கொடுத்து இருக்கிறான்.” என்று வெடித்தவள், இப்போ சொல்லு.. கிருஷ்ணா மேல் என் கோபம் நியாயம் தானே!” என்றாள்.

நவீனா, அதிர்ச்சியுடன் பேச்சற்று இருக்க,

லயனிகாஸ்ரீ, இப்பவும் சொல்றேன், இதில் கிருஷ்ணா மேல் எந்த தவறும் இல்லை. அந்த ரோக் கிருஷ்ணாக்கு, க்ளோஸ் பிரெண்ட் இல்லையே! ஸோ, அவனைப் பற்றி ஓரளவிற்கு தெரிந்து இருக்குமே தவிர, இந்தளவிற்கு அவன் கேடு கெட்டவன்னு, எப்படி அவருக்கு தெரியும் சொல்லு…?

சர்வர் விசயம் கூட எடுத்ததும், அவரை எப்படி நீ சொல்லுவ! இதை அவர் கண்டுக்காம விட்டா, நீ அவரை பிளேம் செய்யலாம்.. நீ வேணா பார், அவனை அவர் கடுமையா தண்டிப்பார்.. இனி இப்படி நடக்காதபடி பார்த்துப்பார்.” என்றாள்.

இனி பார்த்து என்ன?”

ரிது.. இந்த விசயம், அவர் சொல்லாம உனக்கு தெரிய வாய்ப்பே இல்லை.. கண்டிப்பா, தயாவோ நானோ சொல்லி இருக்க மாட்டோம்.. சொல்ல வேண்டாம்னு சொல்லியும், உனக்கு உண்மையா இருக்க நினைத்து சொன்ன மனுஷனை, நீ தண்டிச்சிட்டு இருக்க.. சொன்னா, நீ கோபப்படுவனு அவருக்கு தெரியாதா என்ன? ஆனாலும், சொல்லி இருக்கார்.. காரணம் உன் கிட்ட அவர் உண்மையா இருக்கணும்னு நினைக்கிறார்.

அவரால் தான், அந்த சுதீப்பையும் சேர்த்து பிடிக்க முடிந்தது.. அவன்களுக்கு அவர் சப்போர்ட் செய்யாம, நியாயமா நடந்து இருக்கார். அதுக்கு மேல போய் ரிஸ்க் எடுத்து, தயா கிட்ட அவன்களை ஒப்படைத்து இருக்கார். நாளைக்கு அந்த ராகேஷை காணும்னு கிருஷ்ணாவை தான் விசாரிப்பாங்க. அது தெரிந்தும், உனக்காக மட்டும் தான், அவனை தயா கிட்ட ஒப்படைத்து இருக்கார். என்ன தான் நியாயமானவரா இருந்தாலும், யாரும் இந்தளவுக்கு ரிஸ்க் எடுக்க மாட்டாங்க. அவர் எடுத்து இருக்கார்னா, அதுக்குக் காரணம், நான் உன்னோட பிரெண்ட்.. அவருக்கு உன்னோட நிம்மதி முக்கியம்.”

ரிதன்யா அமைதியாக இருக்க,

என்ன புரியுதா?”

ஹும்ம்..”

ஸோ… இப்போ போனை வச்சதும், அவர் கிட்ட பேசுற…”

ஹும்ம்”

கொஞ்சம் சிரியேன்.”

ஈஈ.. போதுமா?”

போதும்.. போதும்.. நான் நைட் தூங்க வேணாமா?”

ஓய்…!”

நவீனா, இல்லைனாலும், மேடம் நைட் தூங்க மாட்டாங்க.. ரீசன் கேளு ரிது.” என்றாள்.

ஏன் என்னாச்சு? உடம்பு எதுவும் செய்யுதா?” என்று அவள் பதற,

நவீனா, இவ ஒருத்தி.. அதை விட்டு வெளிய வாடி.. மேடம் காதல் கடலில் குதித்து இருக்காங்க.. அதைப் பற்றி கேளு.” என்றாள்.

ரிதன்யா அதிர்ச்சியுடன், லயா நிஜமாவா? யாரு?” என்று கேட்டாள்.

மை கிங்! மை லவ்!”

ஹப்பா! கண்ணில் எவ்ளோ லவ்! நான் கூட கிருஷ்ஷ இப்படி பார்த்தது இல்லை.. யாருடி அந்த லக்கி ஃபெல்லோ?”

டாக்டர் மகிழ் கொற்றவன்.”

ரிதன்யா அதிர்வுடன், ஹே! என்னடி சொல்ற?”

நவீனா, லயனிகாஸ்ரீயை முறைத்தபடி, நல்லா கேளு.. காப்பாத்தினதும் லவ் வந்துடுச்சு போல! ரெண்டு பேர் கல்யாணம் வரை பேசியாச்சு.. இதுக்கு தயா சார் வேற ஒத்து ஊதுவார் போல!” என்றாள்.

லயனிகாஸ்ரீ சிரிப்புடன் தோழிகளைப் பார்க்க, ரிதன்யா நவீனா போல் அல்லாமல், நிதானமாகப் பேசினாள்.

நீ யோசிக்காம முடிவெடுக்க மாட்ட தான்.. ஆனாலும், யாரு என்னனு தெரியாம, எப்படி லயா?” என்று கேட்டாள்.

அவளோ வெகு நிதானமாக, நீ கிருஷ்ணாவை காதலிக்க ஆரம்பிச்சப்ப, அவரைப் பற்றி எல்லாம் தெரிந்து தான் காதலிச்சியா?” என்று கேட்டாள்.

இல்லை தான்.. ரெண்டு பேருமே யாரு என்னனு பேக்கிரௌண்ட்(background)தெரியாம, குணத்தைப் பார்த்து தான் காதலித்தோம்.. ஆனா, அது ஒரே நாளில் நடக்கலயே!”

நீங்க புரிந்துகொள்ள சில நாட்கள் எடுத்துக் கிட்டீங்க.. எங்களுக்கு, இந்த ஒரு நாளே.. போதுமானதா இருக்குது.. நான் இந்த ஒரு நாள்லேயே, அவரோட வெவ்வேறு பரிமாணங்களை பார்த்துட்டேன்.. எனக்கு அவரோட குணம் ரொம்பப் பிடித்து இருக்குது. அண்ட் காதல் அதுவா மலர்வது.. அது மலர நாட் கணக்கோ, வருடக் கணக்கோ தேவை இல்லை..! நிஜமாவே சொல்றேன், அவர் ரொம்ப நல்லவர். தயா, சரி சொல்றப்பவே தெரியலையா?”

“அவரும் உன்னை காதலிக்கிறாரா?”

“அவர் என்ன சொன்னார்னு நவீ கிட்ட நீயே கேளு.”

error: Content is protected !!