காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 6.3

புன்னகையுடன் தலையை இருபுறமும் ஆட்டிய படி, ஆள் காட்டி விரலை ஆட்டி மிரட்டினான்.

இதுக்கே இப்படினா எப்படி! உம்மா எங்கே தருவேன்னு சொல்லவே இல்லையே!”

சிரிப்புடன், நீ இப்படியே தான் பேசிட்டு இருப்ப.. நான் போய் தயாவையும் நவீனாவையும் அனுப்புறேன்.” என்றான்.

நேரமாச்சு.. அதனால் விடுறேன்.. ஆனா, கல்யாணத்துக்கு அப்புறம் என்ன செய்றீங்கனு பார்க்கிறேன்?”

என்னுள் காதல் வர்ற வரை தான், உன் வேகத்திற்கு ஈடு கொடுக்க நான் திணறுவேன்.”

அதாவது…!”

அவள் புரியாமல் தான் கேட்கிறாள் என்பதை புரிந்து கொண்டவன்… விஷமப் புன்னகையுடன், நான் சொன்னதை இன்னொரு முறை சொல்லிப் பாரு, புரியும்!” என்றான்.

சில நொடிகளில் கண்களை விரித்தவள், கிங், டபிள் மீனிங்கா!” என்றாள்.

சத்தமாகச் சிரித்தவன், அது நீ எடுத்துக்கிறதை பொறுத்து!”

யூ நாட்டி!”

உன்னை விடவா!”

மே பி.. போக போகத் தான் தெரியும்.”

எது! இந்த பூவின் வாசமா?”

ஹே!” என்று உற்சாகமாக குரலை எழுப்பியவள், உங்களுக்கும் பழைய பாட்டு பிடிக்குமா?”

ஹும்ம்.. பிடிக்கும்.. எனக்கு நைட் தூங்குறதுக்கு முன்னாடி டெய்லி பாட்டு கேட்கணும். அப்போ தான் தூக்கமே வரும்.”

மீண்டும் கையை நீட்டி, அவனது கையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டவள், செம.. எனக்கும் அப்படி தான்.. இந்த நொடி எவ்ளோ சந்தோஷமா இருக்கிறேன் தெரியுமா? வார்த்தைகளில் எக்ஸ்ப்ரெஸ் செய்ய முடியலை…” என்றாள்.

அவளது மகிழ்ச்சியை ரசித்த படி மென்னகையுடன், தேவையில்லை.. உன்னோட கண்ணே போதும்.. அதை விட வார்த்தைகள் பெட்டரா எக்ஸ்ப்ரெஸ் செய்திடாதுனு நினைக்கிறேன்.”

ஸோ… கல்யாணத்துக்கு அப்புறம், நம்ம இரவுகளில் மதுரகீதம் இசைக்கும்.”

ஹும்ம்.. அது என்ன மதுரகீதம்?”

இனிமையான இரவுக்காக, இன்மையான பாடல். அதான் மதுரகீதம்.” என்றவள் கண்ணில் குறும்புடன், நான் காதல் பாட்டா போட்டா.. ‘காதல் சிந்தும் மதுரகீதம்’னு கூட சொல்லலாம்.” என்று கூறி கண் சிமிட்டினாள்.

ஸோ, ஒரு முடிவோட இருக்க!”

எஸ், யார் வேகத்திற்கு யார் திணறுறாங்கனு பார்க்கலாம்.” என்று கூறி மீண்டும் கண் சிமிட்டினாள்.

சட்டென்று வாய் விட்டுச் சிரித்தவன், சில நொடிகள் கழித்து, என்னோட இந்த 32 வருடங்களில், இன்னைக்கு தான் இவ்ளோ சிரித்து இருக்கிறேன்.” என்று முடித்த போது, அவனையும் மீறி அவனது குரல் நெகிழ்ந்திருந்தது.

இனி எல்லா நாளுமே, இனிமையான நாள் தான்.” என்றவள் அவனை இயல்பிற்கு திருப்பும் பொருட்டு, தயா, சாப்பிட்டு இருக்க மாட்டான்.. நீங்களும் தயாவும் சாப்டுட்டு வாங்க.. அதுக்குள்ள நான் ரிது கிட்ட பேசிடுறேன்.” என்றாள்.

கேட்கணும்னு நினைச்சேன்.. தயாக்கும் உனக்கும் எத்தனை வயசு வித்யாசம்? நவீனா, தயாவை ஏன் சார்னு சொல்றாங்க?”

நான் ஒருமையில் பேசுறதை வச்சு கேட்கிறீங்களா? தயா என்னை விட பன்னிரண்டு வயசு மூப்பு. ஆனா, பார்க்க அப்படி தெரியாது.. உடம்பை அவ்ளோ ஃபிட்டா வச்சு இருப்பான்.. எனக்கு பாடிகாடா(bodyguard) வந்தப்ப, அவனுக்கு 24 வயசு.. அதான் என்னை எப்போதும் பாப்பானு கூப்பிடுவான்.

பாட்டி அண்ணானு தான் கூப்பிடச் சொன்னாங்க, ஆனா நான் கூப்பிடல.. அந்த டைம், அம்மா அப்பாவை இழந்து, யாரோடும் பேசாம நான் தனிமையை விரும்பிய நேரம். பாட்டி வீடு கூட அப்போ எனக்கு புதுசு தான்.. தயா என்னை பேச வைக்க போராடிட்டு, கடைசியா…

எனக்கும் அப்பா அம்மா இல்லை.. உனக்காவது பாட்டி இருக்காங்க.. என்னை உன் பிரெண்டா ஏத்துக்க மாட்டியா’னு பாவமா முகத்தை வச்சுகிட்டு கேட்டான். அவன் பேசியது மனசை என்னவோ செய்தாலும், சட்டுன்னு ஒட்ட முடியாதபடி, ஏதோ தடுத்துது.. ஸோ… அவனை விலக்கி வைக்க, ‘உன்னை பெயர் சொல்லி தான் கூப்பிடுவேன்.. நீ வா போனு தான் பேசுவேன்’னு சொன்னேன்.. அவனோ, ‘பிரெண்ட்ஸ்னா அப்படி தானே பேசிப்பாங்க!’னு சிரிச்சிட்டே சொன்னான்.. அதுக்கு அப்புறம் என்னால் அவனை விலக்கி வைக்க முடியல.. விளையாட்டா ஒருமையில் கூப்பிட ஆரம்பிச்சது, பழக்கமா மாறிடுச்சு.. இன்ஃபாக்ட் நான் மாத்த முயற்சி செய்தப்ப, அவன் விடலை.

எனக்காக தான் கல்யாணம் செய்யாம இருக்கான்.. ஆனா இல்லைனு சொல்லுவான். என் கூடவே இருக்கணும்னு எம்.பி.ஏ கிரஜூவேட்டான அவன், எங்க ஸ்கூலில் பி.டீ மாஸ்டரா வேலை பார்த்தான். அதான், ரிதுவும் நவீயும் சார்னு சொல்றாங்க.. ஊரைப் பொறுத்தவரை, அவன் எங்களுக்கு தூரத்துச் சொந்தம்.

நான் அப்ராட் போய் படிச்சப்ப, அதே கோர்சை அவனும் படிச்சான். ஸோ… சார் ரெண்டு எம்.பி.ஏ டிகிரீ வச்சு இருக்கார். அவன் செம ஆளு.. படிப்பு, ஸ்போர்ட்ஸ்னு எதிலும் டாப் தான்.”

எப்படி இந்தத் துறைக்கு வந்தார்?”

எது! பாடிகாட்(bodyguard)வேலையா?”

ஹும்ம்…”

தயாவோட அப்பா, என்னோட அப்பாக்கு பாடிகாட்(bodyguard).. அவர் தான் இவனை சின்னதில் இருந்து ட்ரேன் செய்து இருக்கார்.. இந்தத் துறைக்கு அனுப்பும் எண்ணம் எல்லாம் இல்லை. ஜஸ்ட் இவன் ஆர்வத்தை பார்த்து சொல்லிக் கொடுத்து இருக்கார். ஆனா… அவர் இறக்கிறதுக்கு முன்னாடி, என்னை பாதுகாக்கிறது அவனோட பொறுப்புனு சொல்லியிருக்கார்.”

கொஞ்சம் லேட் தான்.. ஆனா பெட்டர் லேட் தன்(than) நெவர்.. உன்னோட வயசு என்ன?”

சத்தமாக சிரித்தவள், “25.. ஆனா…”

உன்னை விட ஏழு வயசு மூப்பு.. உனக்கு ஓகேயா?”

இனி வயசை ஏத்தி இறக்கவா முடியும்! உங்களை பார்க்கவும் அப்படி ஒன்னும் வயசான லுக் இல்லை. அப்படி இருந்து இருந்தாலும், ஐ டோன்ட் மைண்ட்.. வயசுலாம் ஜஸ்ட் அ நம்பர்.. என் பாட்டியை கேட்டீங்கனா, ‘ஸ்டில் அம் யங்’னு தான் சொல்லுவாங்க. ஏன் நம்ம அழகி கூட, அப்படி தான் சொல்லுவாங்கனு நினைக்கிறேன்.” என்று கூறி கண் சிமிட்டினாள்.

அவன் புன்னகையுடன், கண்டிப்பா” என்றான்.  

பின், “சரி, நான் கிளம்புறேன்.” என்று கூறி வெளியேறியவன், தயாளனுடன் மருத்துவமனை உணவகத்திற்குச் சென்றான்.

கீதம் இசைக்க காத்திருப்போம்…

error: Content is protected !!