காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 6.2

அவள் கையை நீட்ட, அவனோ அசையாமல் அப்படியே நின்றிருந்தான்.

மென்னகையுடன் நீட்டிய கையை இறக்காமல், அக்சுவலி எனக்கு உங்களை இறுக்கி அணைச்சு லவ் சொல்லணும்னு தான் ஆசை..! ஆனா, உங்க உணர்வுகளுக்கும் நான் மதிப்பு கொடுக்கணும் இல்லையா..? அதான் இந்த கையை மட்டும் நீட்டுறேன்.” என்றவள் சிரிப்புடன், லவ் சொல்றதுக்கு முன்னாடி, கையை உடனே உடனே இறுக்கிப் பிடிச்சீங்க! லவ்னா, அவ்ளோ பயமா கிங்!” என்று கேட்டு கண் சிமிட்டினாள்.

அவளது கையை இறுக்கமாகப் பற்றியவன், உண்மையைச் சொல்லணும்னா, பயமா தான் இருக்குது.. உன்னோட இந்த வேகத்தைக் கண்டு…”

அவள் அதற்கும் சிரிக்க,

சிறு தயக்கத்துடன், ஒன்னு கேட்கனும்.. நான் கேட்கப் போறது உன்னை ஹர்ட் செய்தா, சாரி.”

அவள் முறைப்புடன், நீங்க மட்டும் சாரி சொல்லலாமோ? என்னோட கிங்கும் யார் கிட்டயும் சாரி கேட்கக் கூடாது.. அவரோட லயனெஸ் கிட்ட கூட…”

அவனோ மறுப்பாக தலையசைத்து அழுத்தமான குரலில், உன்னோட கிங், அவனோட லயனெஸ்காக தேவைப்பட்டால், யார் கிட்ட வேணாலும் சாரி கேட்பான். அவமானங்கள் எனக்கு புதுசு இல்லை, ஆனா… என்னோட லயனெஸ் அப்படி இல்லை.” என்றான்.

இப்பொழுது அவள் பேச்சற்றுப் போக,

அவன், என்ன?” என்றான்.

உங்களை இன்னும் இன்னும் அதிகமா பிடிக்குது.. லவ் யூ கிங்!” என்றவள்,காதல் இல்லைனு சொல்றீங்க.. ஆனா, இதை விட அழகா யாராலும் காதலைச் சொல்ல முடியாது.” என்றாள்.

மறுபடியும் மறுப்பாக தலையசைத்தவன், இது காதல் இல்லை.. என்னை நம்பி வரும் என் மனைவியின் கௌரவத்தை, ஒரு கணவனா நான் காக்கும் செயல்.” என்றான்.

அவள் சிறு கோபத்துடன், அப்போ, இந்த இடத்தில் எந்த பொண்ணு இருந்தாலும், இதைத் தான் செய்வீங்க, ரைட்!” என்றாள்.

அவளது பொறாமையைக் கண்டு வசீகரத்துடன் சிரித்தவன், என் மனைவினா, லயனி தவிர வேற யாரும் இருக்க 0.1% கூட வாய்ப்பே இல்லை.. ஸோ.. இன்னொரு பொண்ணு என்ற பேச்சுக்கே இடம் இல்லை.. பேச்சு என்ன? கற்பனைக்கு கூட இடம் இல்லை.” என்றான்.

லவ் யூ ஸோ மச் கிங்.” என்று கூறி இதழசைத்து முத்தம் கொடுத்தாள்.

அவள் கண்களையும் இதழையும் பார்த்தவன், இப்போ லைட்டா டிஸ்டர்ப் ஆகுது தான்.” என்றான்.

எது! கண்ணடிக்கிறதா, முத்தம்மா?”

லிப் டிஸ்டர்பே செய்யலன்னு பொய் சொல்ல மாட்டேன். ஆனா, அதை விட கண் தான்.. அதிகம் டிஸ்டர்ப் செய்யுது.” என்றவன் இடது கை ஆள்காட்டி விரலை நெஞ்சின் மீது வைத்த படி, இங்கே ஏதோ செய்யுது.” என்றான்.

நிஜமா!”

ஹும்ம்.. நீ முத்தம் கொடுக்கிறதுக்கு முன்னாடியே உன்னோட விழிகள் காதலை சொல்லிடுச்சு. அதில் தான், நான் முதல் முதலில் டிஸ்டர்ப் ஆனேன்.. அதனால் தான் எதுவும் சொல்லாம கிளம்பப் பார்த்தேன்.. ஏன்னா, நான் சொன்னதும், இதோ உன் கண்ணு காதலும் சந்தோஷமும் போட்டிப் போட இப்படி ஜொலிக்குதே! இது எனக்கே எனக்கானது. எஸ், எனக்கு மட்டுமே உரியது. இப்பவும் நான் டிஸ்டர்ப் ஆகிறேன் தான்.. யுவர் ஐஸ் ஆர் மெஸ்மரைஸிங்!” என்றவன் சில நொடிகளில், தன்னைத் தானே சுதாரித்துக் கொண்டு, இப்போ நான் கேட்க நினைத்ததைக் கேட்கவா?” என்று கேட்டான்.

அவளும் தன்னை இயல்பிற்குக் கொண்டு வந்து, தயங்காம கேளுங்க.. எப்பவுமே நமக்குள் ஒளிவு மறைவு இருக்கவே கூடாது.. இதை கேட்டால் ஹர்ட் ஆகிடுவாளோனு நினைச்சு கேட்காம இருக்கிறதை விட, கேட்டு தெளிவுப் படுத்திக்கிறது தான் நல்லது. ஏன்னா, இப்படி கேட்காம விடுற சில கேள்விகள் தான், பின்னாடி பெரிய பிரச்சனையா வரலாம்.” என்றாள்.

புரியுது, எப்படி ஒரே நாளில் என் மேல் இப்படி காதல் வந்தது?” என்று கேட்டான்.

மென்னகையுடன், தனக்கு எப்படிப்பட்ட இணை வரணும்னு ஒரு பொண்ணு நினைப்பா? அதாவது, காதலன் அல்லது வருங்கால கணவனிடம், அவளுக்கு என்னென்ன எதிர்பார்ப்புகள் இருக்கும்?” என்று கேட்டாள்.

பொண்ணுங்களைப் பற்றி எனக்கு தெரியாது. நீயே சொல்லிடு.”

அன்பு, காதல், சமமாக நடத்துவது, பாதுகாப்பு. இதெல்லாம் தான் முக்கியமா நான் எதிர்பார்த்தது.. இதற்கும் மேல போய், என் சுயமரியாதையை காப்பது போல், நீங்க என்னை சாரி கேட்க கூடாதுனு சொன்ன நொடியில், என்னை அறியாம உங்க கிட்ட மொத்தமா விழுந்துட்டேன் கிங்…”

நீ சொன்னதில் முக்கியமான ஒன்னு, என் கிட்ட இல்லையே!”

காதல் தானே! வராம எங்க போயிடப் போகுது! வர வச்சிடலாம்.. அது என் டிப்பார்ட்மென்ட், யூ டோன்ட் வொரி கிங்.” என்று கூறி கண் சிமிட்டினாள்.

அவள் சொன்ன விதத்தில், அவன் மென்னகைக்கவும், இப்பவும் என் வேகத்தை பார்த்து, பயமா இருக்குதா?” என்று கேட்டாள்.

கொஞ்சம் பயமா தான் இருக்குது. இந்த தூய காதல் என்னோட இறுதி மூச்சு வரை, எனக்கே எனக்கு இருக்குமானு கொஞ்சம் பயமா தான் இருக்குது.. ஏன்னா எனக்கு..” என்றவனின் பேச்சை நிறுத்துவது போல், அவனது கையை வேகமாக இழுத்து, தன் முகத்திற்கு நேரே அவன் முகத்தை கொண்டு வந்தவள், அவனது நெற்றியில் மென்மையாக இதழ் பதித்து, லவ் யூ கிங்.” என்றிருந்தாள்.

அவன் நிமிரக் கூட செய்யாமல், அவளைப் பார்த்தது பார்த்தபடியே இருக்க,

அவள், கிங்” என்று மென்மையாக அழைத்தாள்.

அவன் சிறு தவிப்புடன், நான்.. ஐ மீன்.. எனக்கு இப்போ..” என்று திணற,

புன்னகையுடன், நீங்க இப்போ ஈர்ப்பு நிலைக்கு வந்து இருக்கிறீங்க.. எப்போ காதல் வருதோ, அப்போ சொல்லுங்க.” என்றபடி அவனது நெற்றியில் லேசாக முட்டியவள், அவன் மென்னகையுடன் விலகி நின்றதும், ஆனா நான் சொல்லிட்டே தான் இருப்பேன்.” என்று கூறி கண் சிமிட்டினாள்.

விரிந்த புன்னகையுடன், தேங்க்ஸ்” என்றான்.

அவள் செல்லமாக முறைக்க, அவனோ மென்னகையுடன், தேங்க்ஸ் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லித் தான் ஆகணும்.” என்றான்.

அப்போ நானும் சொல்லுவேன்.”

சொல்லிக்கோ.”

சட்டென்று உதித்த குறும்பு புன்னகையுடன், ஆனா, என்னோட ஸ்டைலில்.. இறுக்கி அணைச்சு ஒரு உம்மா கொடுத்து..” என்று கூறி கண் சிமிட்டினாள்.

error: Content is protected !!