காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 6.1

கீதம் 6

மருத்துவமனை அறையில் லயனிகாஸ்ரீ தன்னைப் பார்க்க வந்த நவீனாவை முறைத்தபடி, இந்த நேரத்தில் எதுக்கு வந்த? நான் தான் நல்லா இருக்கிறேன், நாளைக்கு காலையில் வந்தா போதும்னு சொன்னேனே! இப்போ, ரிது கூட இருக்காம எதுக்கு வந்த?” என்றாள்.

நவீனா முறைப்புடன் இடுப்பில் கை வைத்தபடி, உங்க ரெண்டு பேருக்கும் என்னைப் பார்த்தா, எப்படி தெரியுது? அவ உன் கூட இருக்கச் சொல்லி அனுப்புறா, நீ அவ கூட இருக்கச் சொல்லி அனுப்புற…! ஆளாளுக்கு பந்தாட, நான் என்ன ஃபுட்பாலா? ஹான்..!” என்றாள்.

லயனிகாஸ்ரீ சிரிப்பை அடக்கியபடி, பார்வையால் தனக்கு பின்னால் இருக்கும் மகிழ் கொற்றவனிடம், வேண்டாம்’ என்பது போல் கூறவும், நவீனா சட்டென்று கழுத்தை திரும்பிப் பார்த்தாள். சத்தமின்றி சிரித்துக் கொண்டிருந்தவன், சட்டென்று சிரிப்பை அடக்கியபடி நின்றான்.

இப்பொழுது அவன் புறம் முழுவதுமாக திரும்பியவள், ஹலோ! என்ன? என்னை ஃபுட்பால் மாதிரி கற்பனை செய்து பார்க்கிறீங்களா?” என்று மிரட்டும் தொனியில் கேட்டாள்.

சிரிப்பை அடக்கியபடி, கோச்சுக்காதீங்க.. ஆனா, நிஜமா ஆமா.” என்றான்.

நவீனா, எது…” என்றபடி அவனை முறைக்க,

லயனிகாஸ்ரீ சத்தமாகச் சிரித்தபடி, அசிங்கப் பட்டான் ஆட்டோக்காரன்!” என்று விட்டு, ஓ மாத்தி சொல்லிட்டேனோ… அசிங்கப் பட்டாள், ஆட்டோக்காரி!” என்றாள்.

நவீனா இப்பொழுது, இருவரையும் மாற்றி மாற்றி முறைக்க,

இன்னமும் சிரித்துக் கொண்டு இருந்த லயனிகாஸ்ரீ, என்ன நவீ, கோச்சுக்கிட்டியா? கோச்சுக்கோ.. கோச்சுக்கோ!” என்று வேறு சொல்லிச் சிரித்தாள்.

மகிழ் கொற்றவன், நீ வேற ஏன் லயனி!” என்றபடி சிரிப்பை அடக்க முடியாமல் லேசாகச் சிரித்தான்.

அவளோ, நட்பில், இதெல்லாம் சாதாரணமப்பா!” என்றாள்.

நவீனா, இருவரும் பேசிக் கொள்வதை யோசனையுடன் பார்க்க,

லயனிகாஸ்ரீ, என்ன?” என்றாள்.

அவர்களுக்குள் இருக்கும் நெருக்கத்தை, அவளால் உணர முடிந்தாலும், அதை வெளிப்படையாகக் கேட்க முடியாமல், ஒன்னும் இல்லை.” என்றாள்.

லயனிகாஸ்ரீ, ரிதுக்கு ‘வீடியோ கால்’ போடு.. பேசிடுறேன்.. அப்போ தான் நிம்மதியா இருப்பா.. இல்லை, கிருஷ்ணாவை ஒரு வழி ஆக்கிடுவா.”

இப்போவே, கிருஷ்ணா நிலை அப்படி தான் இருக்குது.. முகம் கொடுத்து பேசக் கூட மாட்டிக்கிறா.. நான் எவ்வளவோ சொல்லிட்டேன். இதில் அவர் மேல் எந்த தப்பும் இல்லனு.. கேட்கவே மாட்டிக்கிறா…”

நான் பேசுறேன்.. சரியாகிடுவா.”

மகிழ் கொற்றவன், நான் கேன்டீன் போய் சாப்டுட்டு, நவீனாக்கு வாங்கிட்டு வரேன்.” என்றான்.

நவீனா, பார்ட்டியில் நான் சாப்டுட்டு தான் கிளம்பினேன்.” என்றாள்.

மகிழ் கொற்றவன், பரவாயில்லை.. பால் இல்லை ஜூஸ் எது வேணும்னு சொல்லுங்க, வாங்கிட்டு வரேன்.” என்றான்.

அது என்ன, இவளை மட்டும் ஒருமையில் பேசுறீங்க?”

அதை உங்க பிரெண்ட் சொல்லுவாங்க.” என்று அவன் கூற,

லயனிகாஸ்ரீ, அவன் கண்களையே ஆழமாகப் பார்த்த படி, ஏன் நீங்க சொல்ல மாட்டீங்களா?” என்றாள்.

மென்னகையுடன், சொல்லலாமே!” என்றவன்,

நவீனாவைப் பார்த்து, மனைவியை யாரும் பன்மையில் பேச மாட்டாங்க.” என்று விட்டு, தன்னவளைப் பார்த்து வசீகரப் புன்னகையுடன் புருவத்தை ஏற்றி இறக்கினான்.

அடிபொலி அரசே…!” என்றபடி கண் சிமிட்டியவள், லேசாக உதட்டசைத்து முத்தம் கொடுக்க, மகிழ் கொற்றவன் அமைதியாக நின்றான்.

லயனிகாஸ்ரீ சிரிப்புடன், இப்போ, இந்த லயனி டிஸ்டர்ப் செய்றேனா கிங்!” என்று கேட்டு கண் சிமிட்டினாள்.

அவனோ, அவளது கேள்விக்கு பதில் கூறாமல், நான் கேன்டீன் போயிட்டு வரேன்.. நீ நவீனாவை தெளியவை.” என்று விட்டு கிளம்ப,

பதில் சொல்லிட்டு போங்க அரசே!” என்றாள்.

திரும்பி நின்று, அவள் கண்களை ஆழ்ந்து நோக்கியவன், சில உணர்வுகள், நமக்கே நமக்கானது மட்டுமே..” என்றான் அழுத்தமான குரலில்.

அப்பொழுது தான், அவனது அமைதிக்கான காரணத்தையும், தனது தவறையும் புரிந்து கொண்டவள், சிறு தவிப்பு கலந்த மெல்லிய குரலில், சாரி” என்றாள்.

அவன் அழுத்தமான குரலில், என்னோட லயனெஸ் எங்கேயும், யார் கிட்டயும் சாரி கேட்கக் கூடாது.. அது அவளோட கிங்கா இருந்தாலும்!” என்ற நொடியில், அவளது முகம் பூவாக மலர, அதில் அவன் அகமும் கூட மலர்ந்தது.

இவனை பார்த்தபடியே, நவீ, ஒரு டூ மினிட்ஸ் வெளியே இரு.” என்றாள்.

நவீனாவை திரும்பிப் பார்த்தவன், அவங்க இப்போதைக்கு நகர மாட்டாங்க.. அவ்ளோ அதிர்ச்சியில் இருக்காங்க.. நான் கேன்டீன் போயிட்டு வரேன்.. நீ அவங்களை தெளிய வை.” என்று நகர,

அவசரமாக, இல்ல.. இந்த மொமென்ட் எனக்கு உங்களோட வேணும்.. நான் மிஸ் செய்ய விரும்பல…”

அப்பொழுது சரியாக, எப்படி இருக்க பாப்பா?” என்றபடி தயாளன் உள்ளே வர,

மகிழ் கொற்றவனைப் பார்த்தபடியே, நல்லா இருக்கிறேன்.. தயா, டூ மினிட்ஸ் நவீய வெளிய கூட்டிட்டு போ.” என்றாள்.

மகிழ் கொற்றவன், சிறு சங்கோசத்துடன் தயாளனைப் பார்க்க,

அவனோ, சரி பாப்பா” என்று விட்டு, இன்னமும் அதிர்வுடன் நின்றிருந்த நவீனாவை கை பிடித்து அழைத்துச் சென்றான். செல்லும் போது, தயாளன் கதவை மூடி விட்டே சென்றான்.

வெளியே சென்ற சில நொடிகள் கழித்து தயாளன், எதுக்கு இப்படி இருக்கிற?” என்று கேட்டான்.

மகிழ்.. லயா.. ப்ச்.. அவங்க ரெண்டு பேரும் என்ன சொன்னாங்க தெரியுமா?” என்று விலகாத அதிர்ச்சியுடனே கேட்டாள்.

கல்யாணம் செய்துக்கப் போறதா சொன்னாங்களா?”

இன்னும் அதிர்ந்தவள்.. நெஞ்சில் கை வைத்த படி, போற போக்கைப் பார்த்தால், லயா பக்கத்தில் எனக்கு ஒரு பெட் ரெடி செய்யணும் போல…!”

தயாளன் சிரிக்கவும்,

சிரிக்காதீங்க.. இன்னைக்கு எல்லோரும் அதிர்ச்சி மேல அதிர்ச்சியா தரீங்க.. கொஞ்சமாச்சும் தெளிறதுக்கு கேப்(gap)கொடுக்கிறீங்களா? எதுக்கும் கிளம்புறதுக்கு முன்னாடி, ஒரு எக்கோ டெஸ்ட் எடுக்கிறது தான், என் ஹார்ட்க்கு நல்லது.”

அப்படி, என்ன அதிர்ச்சி?”

ஒன்னா ரெண்டா..!” என்று அவள் ஒவ்வொன்றாகக் கூறி, சிலவற்றிற்கு அவன் விளக்கம் கேட்க ஆரம்பிக்க,

அங்கே அறையின் உள்ளே…….

என்ன லயனி இது!” என்று மகிழ் கொற்றவன் வினவ,

அவளோ கண்ணில் காதலுடனும், இதழில் புன்னகையுடனும், ஐ லவ் யூ கிங்!” என்றிருந்தாள்.

மகிழ் கொற்றவன் பேச்சற்றுப் போனான். அவள் சொல்லும் முன்பே, அவளது விழிகளில் காதலை கண்டவனின் மனம், அவள் காதலை சொன்ன நொடியில், அவனையும் மீறி தடம் புரளத் தொடங்கியதோ…!

error: Content is protected !!