மதியம் 2 மணி.
காரில் சூர்யா, ஹ்ருதயா, கார்த்திக் மூவரும் சூர்யா வீட்டுக்குள் நுழைகின்றனர்.
முன்வாசல் கோலத்தில் வெண்கல கலசம், துலங்கும் தாமரை குடம் – ஹ்ருதயாவின் கண்கள் சற்று நேரம் அதிலேயே தொங்கின.
வீட்டுக்கு உள்ளே நுழைந்தவுடனே ஒரு நிம்மதியான சந்தோஷம் அவளைக் தொற்றிக்கொண்டது.
ஹ்ருதயாவுக்கான ஒரு மெதுவான அழைப்பு அவன் பார்வையிலேயே தெரிந்தது. “வா… முதலில் என் வீட்டுல யாரெல்லாம் இருக்காங்கனு உனக்கு அறிமுகம் பண்றேன்” என்றவாறே அவ பக்கத்துல நடந்தபடி, வீட்டுக்குள் அழைத்துச்சென்றான்.
உள்வரண்டாவில் ஈசி சேரில் சாய்ந்திருந்த பெரியசாமி தாத்தாவயை நோக்கி சென்ற சூர்யா ,
“தாத்தா… இவங்க ஹ்ருதயா… நம்ம ஆபீஸ்ல புதுசா சேர்ந்தவங்க .. மாமாக்கு வேண்டப்பட்ட ப்ரெண்ட் பொண்ணு. இப்போ வண்டிபெரியார்ல அத்த வீட்ல தான் இருக்காங்க.”
தாத்தா மெதுவாய் நிமிர்ந்து பார்த்து, அருகே வந்தவளைக் கண்களாலேயே அளவிட்டார். ஹ்ருதயா பாதம் பணிந்து வணக்கம் சொன்னாள்.
” சந்தோஷமா இருக்கணும்மா…” என நெற்றி தொட்டு ஆசிர்வதித்தார்.
பக்கத்திலிருந்த சமையல் அறையில் இருந்து , கையிலே இனிப்புடன் வந்த அமிர்தம் பாட்டி – அவளைக் கண்டவுடனே முகம் முழுக்க கனிவு.
இவங்கதான் அமிர்தம் பாட்டி… எனக்கு ரொம்ப குளோஸ். அடிக்கடி செல்ல சண்டை போடுவேன், ஆனா அவங்க இல்லாம இருக்க முடியாது.
“பாட்டி கண்களில் ஒரு பாசக்கணிக்கட்டி. அவளை கன்னங்கிள்ளி உச்சி முகர்ந்து
” ஹ்ருதயா தானே உன் பேரு… என் பேரன் வாயில எப்பபாரு உன் பெயர் தான் வந்துட்டு இருக்கும், எப்படடா உன்ன கண்ணுல காட்டுவான்னு இருந்தேன். இந்தா இப்ப பார்த்துட்டேன்ல , நல்ல ஜோடி தான். என்னடா ஓகே வா”
பாட்டி பக்கமாய் லேசாய் சரிந்த சூர்யா “ம்பச் , பாட்டி இத அப்ரோ பேசலாம் நீ வா எனக்கு பசிக்குது ”
“என்ன சூர்யா என்ன சொல்றாங்க பாட்டி .”
உடனே பாட்டி ” அது ஒண்ணுமில்லடா கண்ணு வீட்டுக்கு வந்த பொண்ணுக்கு சாப்ட எதுவும் தரலயெனு கேக்குறான் வேற ஒன்னுமில்லை”
“ஓ, இல்ல, பரவால்ல பாட்டி, அவசரம் இல்ல” என சொல்லி புன்னகையோடு, மெதுவாக பாட்டியின் பாதம் தொட்டு “வணக்கம் பாட்டி…” என சொன்னாள்.
“நல்லா இருக்கணும் என் ராசாத்தி, மனசுக்கு பிடிச்சவனோட நூறு வருஷம் நல்லா வாழணும்”.
“….”
“ஹி ஹி” பாட்டி கொஞ்சம் அடக்கிவாசி, வீட்ல யாராச்சும் பாத்த மாட்டிப்போம்”
“ஹான் சரி சரி டா “
இவங்க தான் எங்க அம்மா… ராமேஷ்வரி. எப்போமே ஜாலியா இருப்பாங்க. ஆனா நேரம் வந்தா ஸ்ட்ரிக்டவும் இருப்பாங்க.
ராமேஷ்வரி வந்து ஹ்ருதயாவோட கை பிடிச்சு, மெதுவா பேச ஆரம்பிக்குறாங்க,
“எப்படி இருக்கடாமா, சூர்யா சொன்னத விட அழகா இருக்க நீ! இந்த ஊரு பிடிச்சிருக்கா? உங்கம்மா அப்பா என்ன பண்றாங்க?”
” நல்லா இருக்கேன் மா.அம்மா டீச்சர் அப்பா spices business கோட்டயம்ல இருக்காங்க. நீங்க எப்படி இருக்கீங்க?. ரொம்ப பிடிச்சிருக்கு. இந்த ஊரும் அப்ரோ இந்த வீடும்.. ரொம்பவே பீஸ்புல்லா இருக்கு மா… இங்க வீட்டுக்குள்ளே கால் பதிச்சது என்னவோ பழகின இடத்துக்கு வந்த பீல் என்று கூற
ஹ்ருதயாவை, ராமேஷ்வரி மனமுவந்தவளாய் சிறு அணைப்பை தந்தார்.
அந்த நேரத்தில் சந்திரசேகர் வெளியிலிருந்து வந்தார்.
இவர் என் அப்பா, சந்திரசேகர். அமைதியின் சிகரம். ரொம்ப பேசமாட்டாங்க, ஆனா ஒரு வார்த்தை பேசுனாலும் அப்படி இருக்கும் யாரும் மீற முடியாது.
“நீ தான் மதுவோடா பிரெண்ட் பொண்ணாமா, புஷ்பா சொன்னா , நல்லா இருக்கா அங்க? இங்க வீடு கேட்டிருந்தா , அது உனக்கு தானா மா”
“ஆமா அங்கிள்”
“தனியா இருந்துப்பியாமா”
“அதெல்லாம் ஒன்னும் பயம் இல்ல அங்கிள்,”
“ம்ம் ..பயப்படாத பொண்ணு போல, இன்னைக்கு உன்ன பார்ப்பேன் நினைக்கல. நானே புஷ்பா கிட்ட பேசணும்னு இருந்தேன். இங்க ரெண்டு வீடு தள்ளி நம்ம சதாசிவம் வீடு காலியா தான் இருக்கு. நல்ல வசதியும் கூட.”
“ம்ம் சரி அங்கிள்.. வாடகை அப்புறம் அட்வான்ஸ் எவ்வளவு தரணும் அங்கிள்”.
“மொத நீ வீட்ட வந்து பாருமா.. மேற்கொண்டு அப்ரோ பாத்துக்கலாம்.”
“ஏன்டா சேகரா, வயசு பொண்ணு தனியா தங்குரேணு சொல்றதுலா நல்லா இருக்காது. ஏன் இவ்ளோ பெரிய வீட்ல அந்த ஒத்த பொண்ணு தங்க ஒரு ரூம் கூடவா இல்ல. நாளப்பின்ன வெளியாளுங்க என்ன, புஷ்பாவே கேக்கமாட்டா, உன்னோட பரந்த மனசுல எப்பத்துல ஈரம் இல்லாம போச்சு”என கண்ணுகலங்க ஹை-பிச் லா பேச ,
அதே நேரம் கார்த்திக் பக்கத்தில் உள்ள துளசிமாடதுல இருந்து இலையை வாயில் போட்டு மென்று கொண்டே, “ஏன் தாத்தா, நேரமாச்சு சோறு திங்க வாங்கன்னு போன போட்டு வர சொல்லிட்டு இங்க என்ன படம் காட்டிட்டு இருக்காங்க. நீங்க இதெல்லா கேக்கறது இல்லையா தாத்தா ”
தாத்தவோ” வெயிட் அண்ட் வாட்ச் “
” விளங்கிடும் என்னமோ பண்ணுங்க”
சேகரோ, “மா மா.. கொஞ்சம் மூச்சு விடு, நா எப்போ அந்த பொண்ணுக்கு நம்ம வீட்ல இடம் இல்லனு சொன்னேன். என்ன ஈஸ் ( ரமேஷ்வரிshort form).. நீயும் அமைதியா இருக்க, புஷ்பா தானே கேட்டா, சரி அந்த பொண்ணுக்கு ப்ரய்வசி வேணும் போல அதான் அழுத்தி சொல்லுறா தனிவீடு அப்படின்னு நெனச்சேன்..”
” அம்மாடி ஹ்ரித்யா, நீ இங்கேயே தங்கிக்கோ நா புஷ்பா கிட்ட பேசுகிறேன் சரியா.. இந்த வார கடைசில போய் உன்னோட திங்ஸ்லா கொண்டு வந்துக்கலாம். சரியா இப்ப வா சாப்ட போலாம்.”
“சரிங்க அங்கிள்.,”
பாட்டியோ “அது என்ன அங்கிள், டிவிங்கில்ன்னு. அழகா ‘மாமா’னு அழைச்சு பாரு, எவ்ளோ நல்லா இருக்கும் என்னடா சேகரா சரி தானே”.
“ம்ம் ஆமாமா”,
ஹ்ருதயா சிரிப்போட, அழகா கண்ணை தாழ்த்தி
“சரிங்க மாமா…” என்றாள்.
அந்த ஒலி சூர்யா கண்ணில் ஓர் ஒளியை தோற்றுவித்தது.
அந்த ஒரு வார்த்தை,
அந்த ஒரு நிமிடம்,
ஒட்டுமொத்த வீட்டுக்குள்ளும் சூர்யாவின் உள்ளத்திலும் ஓர் புது வாசல் திறக்கிறது…
‘எது எப்படி இருந்தாலும்… இந்த வீட்டு மருமக நீ தான் தயா… என் இதயா…’
—
பேரனும் பாட்டியும் ஒரு ஓரமாய்
“ஐயோ.. பாட்டி, நீ ஓவர்ஸ்பீட்ல போற, மாட்டிக்க போற பாரு.”
” டேய், பொறுமையா பேசுனா, உங்கப்பன் கேள்வி கேட்பான்.. கேப்பே விடாம அடிச்சோம்ன்னு வை அமைதியா ஓகே சொல்லிடுவான்.. அவனுக்கே அவன் பேசுனதுல டவுட் வந்துரும்.”
” ஹையோ.. சூப்பர் பாட்டி நீங்க… லவ் யூ பாட்டி… “
” மடசம்பிராணி, நீயும் உங்கப்பன் மாதிரி இருக்காம அந்த பொண்ணு கிட்ட மொத சொல்லுடா.. வந்துட்டான் லவ் யூ பாட்டி கிவ் யூ பாட்டின்னு “
” ஏதே அப்பாவுமா..”
” ஷாக்க குறை ஷாக்க குறை … அதெல்லாம் அப்ரோ சொல்றேன். மொத இங்க கவனி. வாடா சாப்ட போவோம்.”
கார்த்திக் அப்படியே சூர்யா பக்கம் வந்து காதுகுள்ள மெதுவா
“மச்சி… ஒரு டவுட் கேக்கலாமா…”
“என்னடா?”
“இவுங்க எல்லாரும் ஹிருத்யாவ ரொம்ப தெரிஞ்ச மாதிரி ரியாக்ட் பண்றாங்க டா… அவ நம்ம ஆஃபிஸ்ல இப்போதானே ஜாயின் பண்ணுனா ஆனா பாட்டி சொல்லுறாங்க – நல்ல ஜோடி னு!
யாரு ஜோடி…. யாருக்கு ஜோடி , ஒன்னும் புரியலையே… இதுல எதாச்சும் உள்குத்து இருக்கா சொல்லு மச்சான்”
சூர்யா சிரிப்பை அதக்கிக்கொண்டு “நீயும் ஒரு நாள் தெரிஞ்சுக்குவ மச்சி… வா சூடா சாப்டலாம்… ஆனா, அவ பிரைட் தான்”
கார்த்திக் ஷாக்காகி,
“அடேய்! நம்ம வீட்டுல எப்பதுல இருந்துடா சின்ன திரை லவ் ஸ்டோரி ஓடுது ?”
சூர்யா இவன கண்டுக்காம டைனிங் ஹால் நோக்கி சென்றான்.
—+——-
உணவு நேரம்
குடும்பத்துடன் சேர்ந்து இலை போட்டு சாப்பிடும் உணவில் ஒரு அழகான பாசம், நம் பாரம்பரியத்தின் வாசனை வீசும் .
பசுமையான ஒன்று. ஒரு நாளில் ஒருவேளை உணவாவது ஒன்றாக அமர்ந்து உண்ண வேண்டும் என்பது அந்த வீட்டின் எழுதப்படாத ஒன்று.
வீட்டின் சாப்பாட்டு அறையில் ,ஒரு இயற்கையான அமைதி தான் நிறைந்திருந்தது. தேக்கு மரத்தில் செதுக்கப்பட்ட மேஜை, அதனை சுற்றி நன்கு பராமரிக்கப்பட்ட மரநாற்காலிகள்.
சுவர்களில் எதுவும் அதிக அலங்காரம் இல்லை, ஆனாலும் ஒரு பக்க ஜன்னல் வழியாக வரும் மெல்லிய காற்றும் சூரிய ஒளியும் அந்த இடத்துக்கே ஒரு தனி உயிர் கொடுத்தது.
அவரவர்களுக்கு விரிக்கப்பட்டிருந்த பசுமையான வாழை இலைகளில், பரிமாறப்பட்டிருந்த உணவின் வாசனை மெல்ல பசும் காற்றோடு கலந்து எல்லா சுவாசத்தையும் வசியப்படுத்தியது.
அழகா இருக்கே! அவளுக்குள் ஒரு சிறு சுகமுணர்வு. இப்போதே இந்த வீட்டோட ஒருதாரா ஆகிட்டேனா என்னவோ!
அந்த நேரம் பாட்டி சொல்லும் பரிட்சயமான சொல்
“இலையில சாப்பிடுறதுக்கே ஒரு மணம் இருக்கு… கைவெளியில் வாழைப்பழ குடிகிற மாதிரி. இலையில சாப்பிடுறதுல ஒரு சுகம் இருக்கு, அது தட்டுலல கிடையாது” எனச் சொல்லும் போது,
சூடான சாதத்தை தாங்கிய வாழை இலை வாசனை , அவர் சொன்னது நூத்துக்கு நூறு உண்மை தான் என உணர்த்தியது.
——————
சூர்யா உக்காரு பா… வா ஹ்ருதயா நீ இங்கே வா, சாய்த்த இடத்துக்கு பக்கத்துல உக்காரு…”
மழலைப் போல் சிரித்துக்கொண்டே ஹ்ருதயா சாய்ந்த இடத்துக்கு அருகில் அமர்ந்தாள்.
“விருந்தோம்பல்” என்பது நூற்றாண்டுகளாக வந்த மரபு.
பெரியசாமி தாத்தா இடமிருந்து ஆரம்பித்த பாட்டி, அவரவர்களுக்கு ஒரு புது இலை விரித்து, இலையின் மேல் ஒரு சிறு துளி தண்ணீர் தெளித்து, அதைப் புனிதமென உணர்ந்து, முதலில் உவர்ப்பு, பிறகு குழம்பு, முடிவில் தயிர் வரை பாசமாய் வைக்கும் அம்மாவின் கைநடையை ஹ்ருதயா மௌனமாக கவனிக்கிறாள்.
சுவையான சாதம், மூக்கில் வாசனை பறக்கும் சாம்பார், மோர்குழம்பு , உருளைக்கிழங்கு பொரியல், வெண்டைக்காய் மசாலா, பட்டாணி சுண்டல், அவியல், பப்படம் என வரிசையாக வந்தன.
ஈஸ்வரி அம்மா சேமியா பாயசம் ஒரு கிண்ணத்தில் வைக்கிற போது, ஹ்ருதயாவிடம் சிரித்தபடியே கேட்கிறார்
“உனக்கு என்ன மாதிரியான சாப்பாடு பிடிக்கும் ஹ்ருதயா? காரம் அதிகமாவா இல்ல லைட்டவா”
ஹ்ருதயா, புது வீட்டில் கூட பாசத்தை உணர்ந்து மெதுவா பதிலளிக்கிறாள்: “அது அத்த… எனக்கு சௌத் சைட் லைட் மில்ஸ் தான் ரொம்ப பிடிக்கும். சாம்பார், நல்ல கொத்தமல்லி தூவி போட்ட தக்காளி ரசம், மோர்குழம்பு, நெல்லிக்காய் ஊறுகாய், பச்சைபாயசம்… அது போதும். சின்ன சின்ன சுவைதான் என் பிடிப்பு… காரமா இருந்தா உடனே மூக்கு சிவப்பாயிடும்!”.
அவங்க எல்லாரும் சிரிக்கிறாங்க.
சந்திரசேகர் சின்ன சிரிப்போடு “அப்போ இந்த வீட்டு சமையல் தான் உனக்கு பொருந்தும் …
ஹ்ருதயா, எப்போ என்ன வேணும்னாலும் கேக்கலாம் .”
தாத்தவோ,” இங்க பாட்டி நாளும் இப்படி தான் மணப்புகை விக்கற மாதிரி சமைக்கறா.”
அமிர்தம் பாட்டி, பக்கத்திலிருந்த கிண்ணத்தில் மோர்குழம்பு ஊற்றிக்கொண்டே
“என்ன சொன்னீங்க ஜமீன்தாரே, சரியா கேக்கல, இருங்க கிட்ட வரேன். எங்க அந்த கட்ட இங்க தானே இருந்துச்சு ” என மெல்ல முணுமுணுக்க,
” ஹையோ… ஒன்னும் இல்லடா அமிர்தம்.. நீ உன் பேரு போல அமிர்தமா சமைப்பேனு சொன்னே வேற ஒன்னும் இல்ல.. நீ அங்கேயே இரு எதுக்கு நடந்துக்கிட்டு”என சமாளிக்கிறார்.
அந்த இடத்தில் சூர்யாவின் பார்வை மெதுவா ஹ்ருதயாவைத் தேடுகிறது. அவளோ, சிறு சிரிப்புடன் இலை மேல் கருவேப்பிலை எடுத்து சாப்பாட்டில் கலந்து சாப்பிடுகிறாள்.
அந்த சின்ன செயலுக்கு பின்னாலே, ஒரு “இனி நானும் இந்த வீட்டின் ஒரு பகுதி” என்ற உள் உணர்வு விளங்கியது சூர்யாவுக்கு.
———-
“இங்கே சாப்பாடு கொடுப்பது வெறும் ‘சாப்பாடு’ கிடையாது, அதில் காதலும் கலந்திருக்கும்” — ஹ்ருதயா உள்ளுக்குள்ளே நினைத்தாள்.
சாப்பிடும் போது, தாத்தா அடிக்கடி சொல்வதாம்
“ஓரளவுக்கு உணவை அளக்கிறது வயிற்றுக்கு, அதற்கு மேலே பரிமாறுவது மனசுக்கே.”
அந்த உணர்வோடே ஹ்ருதயா அந்த வீட்டில் மனதார ஏற்கப்படுகிறாள்.
———–
உண்மையா சொல்லணும்னா…அந்த ஒரு இலையில் பரிமாறப்பட்ட சோறும் சுவையும் விட, அந்த நாளில் பரிமாறப்பட்ட பாசம் தான் ஹ்ருதயாவை பசித்தவளாக மாற்றியிருந்தது.அம்மாவின் அன்பான குரலும்,பாட்டியின் நெஜமா நிறைய சாப்பிடு… இந்த மேனிக்கு பசிக்காம போகுமா என்ற தாய்மையுமா, அவளுக்குள்ளே ஒரு புது இடத்தை உருவாக்கின.
“இல்லே பாட்டி… இது போதும் பாட்டி…” என்று அடம் பிடிக்கும் ஹ்ருதயாவை,
“நீயே காத்துல பறக்குற நிலா மாதிரி இருக்கே… ஒரு முறை அவியல் நனைச்சு சாப்பிடு பாரேன்,” என்று சமாதானம் செய்கிறார் அமிர்தம்.
அந்த நேரம் கார்த்திக் பின்னாலிருந்து கிண்டலடிக்க ஆரம்பித்து விடுகிறான்.
“பாரு சூர்யா… ஒரு நாளில் குண்டம்மா ஆக்காம விடமாடங்க போல இருக்கு! இப்படி சாப்பிடுறத பாத்தா , நம்ம ஃபேக்டரில ரூம் டோர்லா இடிச்சு பெருசாக்கணும் போல,”
அவன் வார்த்தைகளுக்கு சிரிப்பையும், ஓரளவு வெட்கத்தையும் முகத்தில் மறைக்க முடியாமல்,
“அய்யய்யோ… என்னடா இப்படி எல்லாம் சொல்ற?” என்று புன்னகையோடு ஹ்ருதயா பதிலளிக்க,
அந்த சிரிப்போட சத்தத்துக்குள்ளே ஒரு வீட்டின் மனசுக்குரிய சந்தோஷம் ஒலிக்கிறது.
சூர்யா, மற்றவர்களுக்கு தெரியாமல் அவளை பார்த்துக்கொண்டே,
“இவ இங்கதான் இருக்கணும்… எப்போமே…” என்ற எண்ணம் அவனோட மனதில ஒரு குடிசையை கட்ட ஆரம்பிக்கிறது…
மெல்ல, கனிவாய் அந்த வீட்டின் காற்றோடு கலந்து போகிறாள் ஹ்ருதயா.
உறவு …. உணர்ச்சி …. உணவு…..
ஒரு தொடக்கமாக இருந்தது.
Song
இந்தப் பொறப்புதான்
நல்லா ருசிச்சு சாப்பிடக் கெடச்சது
அத நெனச்சுதான்
மனம் ஒலகம் முழுவதும் பறக்குது…!