நேரம் -காலை 11.45
ஹ்ருதயா, தன் கணினியில் நேற்றைய பிரச்சனை குறித்து தேடிக்கொண்டு இருக்கும் போது, சூர்யாவிடம் இருந்து மெயில் வருகிறது.
📬 . “QA Team Urgent Meeting – Seal/Leakage IssueTime: 12.30 PM. Assemble in Meeting HallAll QA team.
ரிசென்ட் பேட்ச் சோதனைல ஒரு சில leakage மற்றும் seal loosening related complaints வந்துள்ளன.இது எக்ஸ்போர்ட் தரத்தக்கு தீங்கு விளைவிக்கும் அளவுக்கு இருக்கலாம் என்பதால், விரிவான கலந்துரையாடல் மற்றும் troubleshooting purpose-ஆ ஒரு special meeting இருக்கு.
சர்க்குலர் பாத்துட்டு ஹ்ருதய சூர்யா ரூம்க்கு போறா ,
” Excuse me சார், உள்ள வரலாமா”
“ம்ம்.. வாங்க ஹ்ருதய”
” சார் சர்க்குலர் பார்த்தேன், இது முன்னவே பாக்க வேண்டிய விஷயம் போல இருக்கு. இந்த ப்ராப்ளம் இப்போ ரிசெண்ட் டேஸா தான் அப்பியர் ஆகியிருக்கு. இதுக்கு பின்னாடி யாரோ இருக்காங்கன்னு தோணுது, எந்த பேட்ச்ல தப்பு நடக்குதுனு கண்டுபிடிக்கணும் அண்ட் இன்டர்னல் லீகேஜாவே இருந்தாலும்… இதுல நம்ம கம்பெனி பேரு தான் ரொம்ப பாதிக்கும்.”
சூர்யா சிறு ஆச்சர்யத்துடன் அவளது அறிவு கூர்மை எண்ணி வியந்து பார்த்தான் .”நீங்க இந்த ப்ராப்ளம் கேச கையாள முடியும்ன்னு நம்புறீங்களா?”
” எஸ் சார். கண்டிப்பா என்னால முடியும்”
“ஓகே, யூ மே ப்ரோசீட். இஃப் யூ ஹவ் எனி டவுட் பிளீஸ் கண்டிப்பா அத என்னோட பார்வைக்கு கொண்டு வாங்க”
“sure சார் . தாங்யூ”
” ம்ம் மீட்டிங்கள பாக்கலாம். உங்களோட முதல் டாஸ்க் நல்லபடியா பண்ணுங்க”
“நிச்சயமா சார் “
…………
தனக்குள் எழுந்த சந்தேகங்களை, தீர்க்க ஹ்ருதயா நேரம் வீணாக்காம மெயில உள்ள டிஃபிக்ட் டீடெயில்சை ஆழமா படிக்க ஆரம்பித்தாள்.
பழைய QA பேட்ச் ரெகார்ட், டெக்னிக்கல் சான் ஷீட் மற்றும் வேர்ஹவுஸ் மூவ்மெண்ட் லாக் எல்லாம் அவளோட டெஸ்க்கு வந்துச்சு.
திடீரென ஒரு ரெகார்ட்ல அவ பார்வை நிறுத்திக்கொண்டது . அந்த ஷீட்ல சீல் செக் காலம் பிளாங்ஹா இருந்தது. யாரோ சைன் பண்ணாமல் ஸ்கிப் பண்ணி விட்டது போல!
“இதுக்குப்பின்ன ஏதாச்சு இருக்குமோ…” என்ற எண்ணமே மூச்சைப் பிடிக்க வைத்தது.
அவள் பைல்ஸ் மூடி , ஒரு நகல் பென்டிரைவ்ல சேமித்தாள்.
நேரம் 12.15…
இன்னும் 15 நிமிஷத்தில் QA meeting.சூர்யாவோட சர்க்குலர் படி, QA team ஆட்கள் மீட்டிங் ரூம்க்கு வந்துக்கொண்டிருந்தார்கள்.
ஹ்ருதய ஓரமாய் நின்று வருபவர்களை கவனிக்கிறாள், சூர்யா மீட்டிங் ரூமில இருந்த ஹிட்டன் டோர் வழியா , அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தார்.
அவளோட கடமையுணர்வும், புத்திக்கூர்மை எல்லாவற்றையும் மதிப்பீடு பண்ணிக் கொண்டான்.
மீட்டிங் ஆரம்பிக்க இன்னும் சில நிமிஷங்கள்…ஆனால் அந்த QC ஃபைல்க்கு பின்னால் ஒளிந்திருந்த ஒரு சின்ன USB stick ஹ்ருதயவோட பார்வையில் பளிச்சென மாற்றியது.
அவளோட கண்கள் ஒரு விஷயம் சொல்லிவிட்டது. இந்த மீட்டிங்ல கண்டிப்பா யாரோ ஒன்று மறைக்க முயற்சி பண்றாங்க… அத வெளியக்கொண்டு வரணும்.. வரவைப்பேன்…
——-
நேரம் மதியம் 12.30
மீட்டிங் ரூம்
அனைவரும் வந்து காத்திருந்தனர்..
சிலர் பதட்டமாக, சிலர் அலச்சியமாக, சிலர் அமைதியாக..
எல்லாம் ஓகே செய்தி வந்ததும் சூர்யா கார்த்திகோடு ஹால்ல இருந்த ஹிட்டன் ரூம் வழியா உள்ள வராங்க..”
“குட் நூன் எல்லாருக்கும், ஓ !! அப்படி சொல்ல முடியாதோ, சரி பேட் நூன்னு வெச்சுக்கலாம்..”
“சரி இப்போ நேரா விஷயத்துக்கு வருவோம்.. உங்க எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்கும் நேத்து நம்ம ஃபேக்டரில நடந்த issue பத்தி.. so, அத பத்தி நீங்க சொல்ல நினைக்கிறீங்க, எதனால இப்பிடி ஆகியிருக்கும் சொல்ல முடியுமா.. எங்க மிஸ்டேக் நடந்திருக்கும்.. 5mins டைம் அதுக்குள்ள நீங்களா சொல்லிட்டா fine. இல்ல, நானே சொல்லணும்ன்னு எதிர்பார்த்தா, அதுவும் எனக்கு ஓகே தான். The decision is yours”
ஒரு சிலர் பதட்டமாக பார்த்து கொண்டனர் அவங்களுக்குள்ளே பேசிக்கிறாங்க..ஆனாலும் யாரும் முன்வந்து எதுவும் சொல்லவில்லை.
கார்த்தி ” என்னப்பா ஆச்சு… யாருனு தெரியுமா தெரியாதா?”
Discussion நடந்துகொண்டே இருந்தது. அவளோட கண்கள் அந்த QC file பக்கத்துல இருந்த ஒரு USB ஸ்டிக் மேலேயே.வெறும் ஒரு pen-drive மாதிரியே இருந்தது.ஆனா, அதுல ஏதோ ஃபேக்டரிக்கு வெளியே அனுப்பக்கூடிய உள்துறை படிவங்கள் இருக்கின்றன.
ஹ்ருதய யாருக்கும் தெரியாம, பென்டிரைவ் எடுத்துக் அட்மின் சிஸ்டம்ல கனெக்ட் பண்ணினாள். சூர்யா ஒரு பார்வை பார்த்தான். என்னதா பண்றா பாக்கலாம். Maybe, he trusted her instinct.
💻USB ஓபன் ஆகும் தருணம்…
ஒரு encrypted folder.
அதுக்கு login “Anand2909″அவள் முகத்துல அவ்வளோ ஷாக் … ஆனந்தஹா? இவன் QC Head-ல இருக்கும் ஆள் ஆச்சே..
பைல்ஸ் ஓபன் பண்ணினதும்… ஃபேக்டரி சீல் மற்றும் லாஸ்ட் பேட்ச் தகவல் , லீக் ஆதாரம் போட்டோ எல்லாம் இருந்தது.
அதுக்கும் மேல ,ஒரு ரகசிய அஞ்சல் வரைவு . இந்த தகவல் “kprlogistics@…” அனுப்பப்பட்டுள்ளது அந்த மெயில் வரைவுப்பாத்ததும், ஹ்ருதயவோட நெஞ்சில் பசப்பு!“
இது எதிரான எக்ஸ்போர்ட் rival… சூர்யாவோட பிசினெஸ்க்கு போட்டி போடுற ஆளோட குரூப்…
“என்ன கண்டுபிடிச்சீங்க ஹ்ருதயா?”
சார் என இழுத்து, “ Sir… QC failure மட்டும் இல்ல. இங்க betrayal நடக்குது. ஆனந்த் ஸ்ட்ராங்கா இன்வோல் ஆகியிருக்கு மட்டும் தெளிவா தெரியுது. ட்ராப்ட் and ஸ்கிப்பிடு பைல்ஸ், வெளியே அனுப்ப யாரோ சொல்லிருக்காங்க.”
சூர்யா முகம் யோசனைக்குள்ளாக, அப்போது தான் ஆனந்த் உள்ளே வர, சூர்யா அவரை நேர் கொண்டு பார்க்க , அவரால சூர்யாவை எதிர்கொள்ள இயலவில்லை.”
சரி , இன்னைக்கு QA discussion முடிச்சதும்… நாம ரெண்டுபேரும் தனியா பேசணும் ஆனந்தா என்னோட ரூம்க்கு வாங்க…”
ஆனந்த் முகத்தில் ஒரு சின்ன வியர்வை…அவளுக்கு புரிஞ்சிடுச்சு –இந்த ஃபேக்டரில ஒரு கருப்பு நதி ஓடுது… அதுல யாரெல்லாம் கால் வைத்திருக்காங்கன்னு கண்டுபிடிக்கறது தான் என்னோட பணிமூலம்!
” ஆல் ஆஃப் யூ பிளீஸ் லிசன், இந்த மாதிரி நடந்த தப்பு இதுவே கடைசியா இருக்கணும். வேலையில் இன்னும் கவனமா இருங்க, இந்த தப்பு மறுபடி நடந்தா, நீங்க வேற சூர்யாவ பாக்க வேண்டி வரும். Got it.”
இப்போ எல்லாரும் அவங்கவங்க வேலைய ஆரம்பிங்க .
டீம் ஆட்கள் கலைந்து சென்று விட்டனர் மூவர் கூட்டணி சூர்யா ரூம்க்கு சென்றனர்.
———–
சூர்யா மெல்ல பேச ஆரம்பித்தான் , “ஆனந்த் … QC சீல் இஷூ பத்தி எல்லா சாட்சியமும் உங்கள தான் காமிக்குது. நீங்கதான் அந்த அப்ரூவல ஸ்கிப் பண்ணினதா?”
அவரோ மவுனமா நிற்கிறார்.
கார்த்தியோ “உங்களை பத்தி பெர்சனலா தெரியாது இருந்தாலும்,இந்த ஃபேக்டரில உங்க உழைப்பு எப்படி இருந்துச்சுனு தெரியும்.அப்படி இருந்த நீங்க இந்த மாதிரி சைன் ஸ்கிப் பண்ணது, தற்செயலான்னு சொல்றதுக்கு ஆதாரம் வேணும்.”
ஹ்ருதய ஃபைல் ஓபன் பண்ணி ஒரு ஷீட் காட்டினா – அது ஆனந்தோட சிஸ்டம்ல உபயோகப்படுத்தபட்ட லாகின் டைமிங்.
“இதில் நீங்க சீல் வெரிபிகேஷன் , மெயிலை டெலிட் பண்ணது கிளியரா இருக்கே. இந்த மாதிரியான ஆக்க்ஷன், எப்படி மிஸ்சாச்சுனு சொல்ல முடியுமா?”
கார்த்தியோ “சொல்றீங்களா இல்ல வேறமாதிரி விசாரிக்கணுமா என்ன ஆனந்த் சார் ஆரம்பிக்கலாமா”என அவரின் கையை முறுக்க அவரோ வலியில் துடிக்க ஆரம்பிக்கிறரார்.
சூர்யாவோ,” ம்ச், கார்த்தி விடு, யாரையும் நாம துன்புறுத்த முடியாது.
ஒரு இரண்டுநிமிஷம் யாரும் பேசல.
” சரி கடைசியா ஒரு சான்ஸ்… யாரு உங்ககிட்ட இப்படி செய்ய சொன்னாங்க சொல்லிடுங்க?
நீங்க ஏன் QC ரிப்போர்ட்ல மனுப்ளேட் பண்ணிங்க ?
நீங்களே மாஸ்டர்மைன்டா இல்லையென்றா… யாருக்காக?”
——-
நேரம் கடந்து போனது..
ஆனந்த் மெல்ல ஒரு சுவாசம் எடுத்து
“நான் ஒத்துக்கிறேன் சார்…நான் தான் QA ஸ்கிப் பண்ணேன். ஆனா அது என்னால மட்டும் இல்ல. ஒரு பெரிய பிரஷர் இருந்துச்சு.”
” என்ன சொல்றிங்க, என்ன பிரஷர். கொஞ்சம் தெளிவா சொல்லுங்க”
” KPR குரூப்ல இருந்து ஒரு ஆள் – அவர், முன்னால் அமைச்சர் ராமச்சந்திரன் அவரோட மச்சான்.”
“அவங்க, உங்கள இந்த பிசினஸ்ல இருந்து தள்ளி வைக்கணும், நம்ம ஃபேக்டரி இமேஜை தரைமட்டமா ஆக்கணும் அப்படின்னு ரொம்ப நாளா திட்டம் போட்டாங்க சார்”.
“சார் நானுமே சூழ்நிலை கைதி தான் சார்.. என்னோட பசங்க அவங்களோட கண்ட்ரோல இருக்காங்க. எனக்கும் வேற வழி தெரியல சார்.. என்ன மன்னிச்சிடுங்க சார்…”
ஹிருத்யா கார்த்திய காண அவனோ சூர்யாவ கண்ண காட்ட அவனை பார்த்தா ,
சூர்யாவோ ஒரு நிமிடம் அமைதிக்கு பிறகு,
“நா சும்மா பேசறவனு நினைக்காத. யாராவது என்ன கீழ இருக்கணும்னு முயற்சி பண்ணாங்கனா..
ஒரு தடவ நான் கட்டம் கட்டி அடிச்சேனா. அதுக்கப்புறம் அவங்க எல்லாரும் அந்த கட்டத்தை தாண்ட மாட்டாங்க. “
கார்த்தி ,” நேரா மோத தைரியம் இல்லாம இப்படி பின்னால இருந்து முதுகுல குத்துரானா . அவனுக்கு இருக்கு ஒரு நாள். “
சூர்யா, இண்டர்காம் பட்டனை அழுத்த, செக்யூரிட்டி வந்தார்.
“செக்யூரிட்டி, ஆனந்துக்கு எஸ்கார்ட் ஏற்பாடு பண்ணுங்க.”
” ஏன்டா இப்போ எஸ்கார்ட்லாம்”
“அந்த kpr எவ்ளோ தூரம் போறான்னு நானும் பாக்க ஆசைபடுறேன். “
ஆனந்த் அமைதியா வெளியே போனார்.
ஒரு பலமான நிசப்தம் அவ்வறையில்.
அதைமுதலில் கலைந்தது வேற யாரு நம்ம கார்த்தி தான்.😂😂
———
-சரி ஃப்ரீயா விடு மச்சி பாத்துக்கலாம் , அதான் ஆள் யாருனு தெரிஞ்சு போச்சுல இனி அவனா நாமலானு ஒரு கை பாக்குறோம்.”
“ம்ம் “
” மச்சி அம்மா கிட்ட இருந்து கால் வந்துட்டே இருக்கு.”
” மே பீ வீட்ல விஷயம் தெரிஞ்சு இருக்கும் போல. ம்ம் சமாளிப்போம்”
———-
கார்த்தி போன் ரிங் ஆகுது
” டேய் அம்மாடா “
“ம்ம் பேசு ”
” ஹலோ மா, சொல்லுங்க”
” என்னதடா சொல்லணும், தடிமாடு, என்ன பண்ணிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும். எத்தனவாட்டி போன் போடுறது. ஒரு போன எடுத்து பேச முடியலையோ துரைக்கு.. எங்க அவன்.. மத்திய சாப்பாடுக்கு வந்து சேருங்க வீட்டுக்கு. அப்போ கவனிச்சுகிறேன். வை போன எப்பபாரு நசநசன்னு பேசிக்கிட்டு ” . ‘ஏன்டா, போன் போட்டா கால் எடுத்தவங்களும் பதில் சொல்ல வேணாமா, கேப்பே விடாம பேசிட்டு என்ன நசநசன்னு பேசுறேன்னு சொல்றாங்க. இதெல்லா எங்கயாச்சு அடுக்குமா..நல்லா இல்ல மச்சி சொல்லிவை .. “
” வீட்டுக்கு தானே மச்சான் போறோம், வா நீயே வந்து சொல்லி வை “
“எப்படி கோத்துவிட்ரான் பாரு. சிறுத்த சிக்கும் சில்வண்டு சிக்காது, யாருகிட்ட “
” நீ விட்டா ரொம்ப பேசுவா வா வீட்டுக்கு போலாம்.”
அவங்க இரண்டுபேரும் கிளம்பும் போது தான் ஹ்ருதயவை கவனித்தார்கள், டேபிள் மேல தலை சாய்த்திருந்தாள்.
“ஹலோ ஹ்ருதய, வாங்க லஞ்ச் சாப்ட போலாம். “
” இல்ல பரவலா நீங்க போயிட்டு வாங்க, லைட்டா தலைவலிக்குது நா கொஞ்ச நேரம் படுக்கிறேன்.”
அவளை இப்படி பார்க்க சூர்யாவுக்கு கஷ்டமா இருந்தது.
” அட வீட்டுக்கு வாங்க, வீட்டு சாப்பாடு சாப்பிட்டா தலைவலிலா தன்னால போயிடும். எங்க அம்மா சமையல் அப்படி இருக்கும்..”
Song
உயிரே
உன் உயிரென
நான் இருப்பேன் அன்பே
இனிமேல் உன் இதழினில்
நான் சிரிப்பேன்
இதமாய் உன்இதயத்தில்
காத்திருப்பேன் கனவே
கனவாய் உன் விழிகளைப் பாத்திருப்பேன் தினமே…