பக்கத்துல உள்ள திருவிழா கேட்டுக்கு ரூட் மாத்தி ஷார்ட்கட்ல அடுத்த டோல்ல குதிச்சுட்டான்.
5 நிமிஷம் கழித்து…
தொலைவில் வண்டி வரும் அரவம் ஒரு சிவந்த வெளிச்சத்தோட கார்த்தி பாய்ந்து வந்து,
“Seal form daaa!” என்று zip pouch காட்டினான்.
சூர்யா அதை எடுத்துக்கிட்டு கஸ்டம்ஸ் கவுன்டர்க்கு ஓடினான்…
“Sir… original seal form. On time.”
Officer sign பண்ணி, “Ok Let me give a declaration letter and I can verify the original seal through soft photo . this is your last chance. Hereafter never repeat this otherwise you will lose the whole consignment.Board the cargo immediately “
” Oh thank you sir.. my pleasure 😊.. I won’t repeat this again.”
“Mm”.
————–
கடந்த சில மணி நேரமா, நேரம் என்னவென்று கூட அறியாமலே — ஒருபக்கம் export papers, இன்னொரு பக்கம் airport procedures… இருவரும் நிற்க நேரமில்லாம ஓடிக்கிட்டிருந்தாங்க.
இப்போ தான் கொஞ்சமா மூச்சு விடமுடிஞ்சுது.ஏர்போர்ட் பார்க்கிங்கை அடைந்ததும், கார்த்திக் ஹெல்மெட்டை தூக்கி காருக்குள்ளே போட்டு மெதுவா சீட்ல சாய்வோடு உட்கார்ந்தான்.
இரவு முழுக்க தூக்கமின்றி சாலையில் ஓட்டினதால, ரெண்டு பேரின் கண்களும் சிவந்தும், பாரமாயும் தெரிந்தது.
“என்ன மச்சி கிளம்பலாமா. ” சூர்யா கேட்ட உடனே
“எது, போறதா, மனுஷனடா நீ, தூங்கிட்டு இருந்தவன எழுப்பி வேலை வாங்கிட்டு, ரத்திரிலா வண்டி ஓட்டி டயர்டா இருக்கு மச்சி . எனக்கு தூங்கணும். புரிஞ்சுகோ மச்சி ஒரு ஒரு மனுஷனுக்கு ஒரு ஒரு பீலிங்கிங்ஸ்…” என்றான் Karthick,
சூர்யா, ஒரு சிரிப்போடு தலையாட்டினான்.
“ம்… ரொம்ப பேசாத டா… சரி இரு… பக்கத்துல ஏதாவது நல்ல ஹோட்டல் இருக்கா பாக்குறேன்…”
அவர்கள் இருவரும் மெதுவாக நடக்க ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு நடையிலும் சோர்வும், மனசுக்குள்ள ஒரு நிம்மதியும் கலந்திருந்தது.
அதே நேரம், போன்ல ஹோட்டல் அறை பாத்துட்டு
“டேய்… இங்க இருந்து ஏர்போர்ட் பின்னாடி ஒரு ஹோட்டல் இருக்கு… வா வண்டி எடு… கொஞ்சம் தூங்கி எழுந்து கிளம்பலாம். ஃபேக்டரில வேலையும் இருக்கு… கண்னுலா எரியுது டா…”
கார்த்திக், வானம் மெல்ல வெளிச்சமாவதை பார்த்தபடி,
“மணி இப்பவே ஆறு… விடிஞ்சுருச்சே…” என்றான்.
சூர்யா ஆழமான மூச்சை இழுத்து விட்டு ‘பேசாம வாடா… ரொம்ப தான்…”
இருவரும் அவர் அவர் வண்டியில் ஹோட்டலை அடைந்து அறை எடுத்து ரெஃப்ரேஷ் செய்து தூங்கிவிட்டனர்.
——–
அடுத்த நாள் காலை,
புஷ்பவல்லி அத்தை வீடு எப்பவும் போல பிஸியா இருந்துச்சு. ஹ்ருதய கிச்சனில காபி போட பால் அடுப்புல வெச்சுட்டு காபி தூள் சக்கர எடுக்கும் போது , அத்தை வராங்க.
“அடடே காஃபி நீயே போடுறியாமா?”
“ஹா ஹா… ஆமா அத்தை, 5mins பால் காயட்டும்.நான் போடுறேன்… நீங்க ரெஸ்ட் எடுத்துக்கோங்க,” .
புஷ்பவல்லி ஒரு நிமிஷம் மெதுவா சுவாசிச்சு,
” ஆமான்டா நேத்து ராத்திரி தூங்க 3மணிக்கு பக்கம் ஆச்சு. “
” ஏன் அத்த, என்னாச்சு. “
” நேத்து ஃப்ளைட்க்கு அனுப்புன export grapesல கொஞ்சம் பிரச்சனை வந்துச்சு… பெட்டில லீக் இருந்துச்சுனு அப்றோ seal form Miss ஆகியிருக்கு. 2.30 மணிக்கே மதுரைக்கு கிளம்பிட்டான்டா, கார்த்தி இங்க வந்து சீல் ஃபார்ம் கொண்டுபோனான். அவன அனுப்பிட்டு அப்றோ தான் படுத்தேன். பாதில எழுந்து படுத்தேன். அதான் காலைல நேரமா எழமுடியல.. “
காபி வாசனையோட ப்ரெஷா இருந்த முகம், ஓரமா “என்னாச்சோனு கவலைல மாறிச்சு.
” ஐயய்யோ… நெஜமாவா?”.
“அதான்… எல்லாம் கடைசி நேர டென்ஷன் . கார்த்தி இங்க இருந்து நேர மதுரைக்கு போயிட்டான் . ஹ்ருதய கையில கப்பை மெதுவா தொட்டுக்கொண்டே,
“ஹம்… சரி, எல்லாம் சரியா ஆச்சா?”
“ஆச்சு டா, சரி ஆச்சு…” சிரிச்சுட்டு கப் கழுவி வெச்சுட்டு, நீ போய் ரெடி ஆகு நா அதுக்குள்ள டிபன் பண்றேன். “
Hridhaya மனசுல “இருந்தாலும்பாவம் பாஸ் நீங்க, ஒரு ராத்திரி ஃபுல்லா எக்ஸ்போர்ட்க்காக தூங்காம ஓடியிருக்கிங்க…”
அவள் சின்ன சிரிப்போட காபி குடித்து முடித்தாள் ஆனா மனசு ஆழமா சூர்யாவப்பத்தி நெனச்சுட்டே இருக்கிறது.
————
காலை 9.30 ஆகிவிட்டது.
ஹ்ருதய எப்பவும் போலவே வேலைல கவனம் இருந்தாலும் அவள் மனசுக்குள்ள ஓடிக்கிட்டே இருந்தது — “இந்த கார்த்தி, சூர்யா இன்னும் ஃபேக்டரிக்கே வரலையே?”
ஓட்டத்தில் முகம் சீரியஸா இருந்தாலும், கண்கள் கதவு நோக்கி தானாகவே போய்ட்டே இருந்தது.
கார்த்திக்குக்கு கால் பண்ணினா . கால் அட்டென்ட் ஆகுது. ஆனா எதிர்பாராதவே நடக்குது!
“நீங்கள் டயல் செய்யும் நபர் தற்போது தூங்கி கொண்டுள்ளார். தயவு செய்து போன் வைங்க…”
அவளுக்கு ஒரு நிமிஷம் ஒன்னும் புரியல, , சரியான நம்பர் தானே போட்டேன்.”
10 நிமிஷம் கழிச்சு மீண்டும் try பண்ணினாங்க.
கார்த்தி அட்டென்ட் பண்ணிட்டான்… ” ஹே இன்னும் ஃபேக்டரி வரலையே?” ” ஹே கூல் டா, நாங்க வந்துடே இருக்கோம். 30 மினிட்ஸ்ல வந்துறேன்,”
“அப்போ முன்னாடி யாரோ போல பேசுனே?”
“அதுவா சும்மா பொழுது போல அதான்…”
“போடா இவனே ” கால் கட் பண்ணி பண்ணிட்டா.
10.30 AM – ஃபேக்டரி கேட்
சூர்யா, கார கேட் தாண்டி உள்ள கொண்டு வந்து பார்க்கிங் la நிறுத்தினான்.
ரெண்டு பேர் முகம்மும் சோர்வும் கண்களில் சிவப்பும் பாக்கவே ரொம்ப டயர்டா இருக்கு.
வாயிலிலே இருந்து கவனிச்சுட்டே இருந்த ஹ்ருதயா , சூர்யா முன்னே போய் “குட் மார்னிங் பாஸ், ப்ராப்ளம் ஒன்னும் இல்லையே,”
” ஹான் அதெல்லாம் ஒன்னும் இல்ல, ஆல் கிளியர். டயர்டா இருக்கு நாங்க ரெப்ரேஷ் ஆகிட்டு வரோம்.”
ஓகே பாஸ்
கார்த்திக்கு கூட பழைய சோர்ந்த பஞ்சவேளி மாதிரி அவனுக்கான ரூம்க்கு போனான்.
ரெண்டு பேரும் ஃப்ரெஷ் ஆகி டிரஸ் மாத்தி வெளிய வந்தப்போ, ஹ்ருதயா கையில சுட சுட டீயும், சூடா டிப்பனும் தயாரா இருந்துச்சு.
இஞ்சி, ஏலக்காய் வாசனைல டீ ஆளையே தூக்கும். லேசா பரபரவென பொடி தூவி நெய் வாசனைல தோசையும் கூடவே சாம்பார் சட்னி பார்த்ததும் பசியே கிளம்பி வந்தது.
கார்த்தி மேஜைக்கு பாய்ந்து வந்து “தெய்வமே தெய்வமே… நன்றி சொல்வேன் தெய்வமே…” பாடிட்டே சீக்கிரமா எடுத்துவைமா பசி வயத்த கிள்ளுது..
ஹ்ருதயா கிளுக்கி சிரித்து , சூர்யாவ பார்த்து “வாங்க பாஸ்… முகம் டயர்டா இருக்கு… வந்து சாப்பிடுங்க. உங்க ஃபேவரிட் மசாலா டீ கூட இருக்கு. குடிச்சா சோர்வெல்லாம் ஓடிரும்.”
Karthick உடனே:“யாரு கூட ஓடிரும்?”
“ஹ்ம் என்ன?”
“சோர்வெல்லாம் ஓடிரும்னு சொன்னியே… யாருக்கூட ஓடிருச்சுன்னு கேட்டேன்…”
“போடா இவனே!”
பக்கத்துல இருந்த பில்லோவை எடுத்து அவன மொத்த,
“காப்பாத்துங்க !! காப்பாத்துங்க!. கொலை கொலை”
சூர்யா ரெண்டு பேரும் பண்றத சிரிப்பதோடு பாத்திட்டே டிபன் சாப்பிட்டான்.l
கை வலிக்க, சோர்ந்து சோபா மீது அமர்ந்தா, கார்த்தி முதுக தடவிக்கிட்டே ” “எப்பா என்னா அடி.. உங்க வருங்காலத்த நெனச்சா இப்பவே கண்ணு வேர்க்குது. எங்க இருக்கோ அந்த பச்சமண்ணு “
சட்டென சூர்யா நிமிர்ந்து அவளை பார்க்க, அவளும் அவளை தான் பார்த்தாள்..
கண்கள் இரண்டும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ள, மீள முடியா ஆழி பேரலைக்குள் மூழ்கி கொண்டன இரு உயிர்கள்…..
song
ஏன் கொள்கிறாய் என்னை கண்ணாலே…
நீ நிற்கிறாய் உள்ளே கல் போலே…
ஏன் கொள்கிறாய் என்னை கண்ணாலே…
நீ நிற்கிறாய் உள்ளே கல் போலே…
கடல் தேடும் நதியாய் உன்னை தேடி…
நதி வென்ற போதும் நான் ஏன் இங்கே…