நேரம் – இரவு 2:07 AM
இரவின் இருள் நம்மை மெதுவாய் கட்டியணைக்கும் அந்த அமைதியான வேளையில் அவன் தொலைபேசியின் குரல்… அந்த அமைதியை துளைக்கும் விதமாக ஒலித்தது .
பார்த்தவுடன் தெரிந்தது – ராஜேஷிடமிருந்து போன். அதுவும் இந்த நேரம் என்றால், கண்டிப்பாக ஏதாவது பிரச்சனை தான்.
“சொல்லு ராஜேஷ்…” என்றதும், அடுத்த 30 வினாடிகள் சூர்யாவுக்கு உயிர் நடுங்கச் செய்தது.
“அண்ணா… கிரேப்ஸ் கிரேட்ல ஒரு பக்கம் லீக் ஆகுது போல இருக்கு… கஸ்டம்ஸ் செக்கு முன்னாடி final customs seal attach பண்ண form வந்தே இல்ல…”
அவன் மூச்சு நழுவிட வந்துச்சு.
அடப்பாவீ… எப்படி மிஸ் பண்ணீங்க. என்ன ராஜேஷ் இவ்ளோ ஈசியா சொல்ற, ஏன் அது செக் பண்ணாம ஃப்ளைட்க்கு அனுப்பினீங்க? நாம எக்ஸ்போர்ட் ஃபார்ம் சப்மிட் பண்ணலேன்னா, அது கஸ்டம்ஸ்ல நேரா பிராப்ளம் ஆகும்! நான் சொன்னேனா இல்லையா , ஃபைனல் ஃபார்ம் செக் பண்ணாம அனுப்பாதீங்கன்னு! இவ்ளோ கேர்-லெஸாவா இருப்பாங்க”. குரல் சத்தம் தானாகவே எழுந்தது.“
“அது வண்டிப்பெரியார்ல scanner copy போட்டா ஒத்துப்பாங்க… original seal form customs gate-ல வேணும்.
“ஆமா அண்ணா flight board பண்ணவே விடல. கடைசி வார்னிங் குடுத்து கேட்டுலையே நிறுத்திடாங்க. ஃப்ளைட் டிலே ஆகும்போல இருக்கு. அதை HR டேபிள் மேல வெச்சுட்டு மறந்துட்டாங்க மன்னிச்சிருங்கனா!”
சரி… சரிபண்ண என்னால பாசிபிள் இருக்கும்னு பாருங்க. நான் இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ள அங்க இருக்கேன். ஒண்ணும் ஹேண்டில் பண்ணாதீங்க… நா வர வர வெயிட் பண்ணுங்க!”
அடுத்த போன் கார்த்திக்கு ” எப்படி டா இது மிஸ் ஆகும்? நாம ஃபார்ம் செக் பண்ணாம எப்படி அனுப்புறதுக்கு பெர்மிஷன் குடுத்திங்க?! இது எக்ஸ்போர்ட் ஃப்ளைட்.
ஒரு டிலே ஆச்சுனா மொத்த கான்ட்ராக்டும் கைய விட்டு போயிடும்.Japan export contract full-ஆ cancel ஆகும். சீக்கிரமா கெளம்பி இங்க வா. ஏர்போர்ட் போகணும்!
சட்டென, ஆடை மாற்றி லேப்டாப், டாக்குமெண்ட் இருக்க ஃபைல், கார் சாவி எல்லாம் எடுத்து இரண்டுடிரண்டு படிகளா தாவி பார்க்கிங் வந்தடைந்தான்.அதற்குள் கார்த்திக்கும் வந்துவிட்டான்.
2:25AM.
மச்சி… seal original வண்டிப்பெரியார்ல தான் இருக்கு. நீ பைக்ல கிளம்பு நா மாமாக்கு தகவல்சொல்லுறேன்.” “ராசா… ராத்திரி 2.30 மணிக்கு பைக்லயா?”
“காண்ட்ராக்ட் போச்சுனா 6 லட்சம் கோவிந்தா . உனக்கு ஓகே வா”
“ம்ம்… மாட்டேன்னு சொன்னா விடவா போற எல்லாத்தையும் எடுத்து வரேன்.”
“தெரியுதுல, கெளம்புடா மொத “
இரண்டுபேரும் வெவ்வேறு திசையில் சீறி பாய்ந்தனர்
………
🛣️ வண்டிப்பெரியார் – மதுரை
3 AM
கார்த்திக் கையில புல்லட் பறக்க, மாமா ஆஃபிஸ் வந்து சேர்ந்தான். ”
மாமாவோட அத்தையும் பதட்டமா காத்திருந்தார்,
“இதெல்லாம் என்னடா நடுராத்திரில”
“Seal form, அத்த… கஸ்டம்ஸ் ஆஃபிஸ்க்கு export seal ஒரிஜினலா இல்லனா ஃப்ளைட்ல ஏத்த மாட்டாங்க “
“நா வரேன் அத்த. “
“சரி பாத்து பத்திரமா போ பறக்காத”
எல்லா டாக்குமெண்ட் zip bag la போட்டு கெளம்பிட்டான் சிட்டாக ..
சூர்யா போன்ல situation கேக்க
“10 நிமிஷம் மச்சி தேனி கிராஸ் பண்ணிடுவேன் டா “
அதேநேரம் சூர்யா மதுரை பைபாஸ் பக்கம் வந்துட்டு இருக்கான். அவன் ஃபைல், அப்டேட் பண்ண QC ஸ்லிப், கிரேப்ஸ் மாத்தி வைக்கும் அட்டைபெட்டி டீடெயில்ஸ் எல்லாத்தையும் டஷ்போர்ட்ல வெச்சு வரும் வழியில் ஒரு போன்கால் –
ராஜா, வேர்ஹவுஸ்ல இருந்து
“Crate B3 லீக் உறுதி. B5 தயாரா இருக்கு. . ரீபிளாஸ் பண்ணிட்டு வெயிட் பண்றேன்.”
…………..
சூர்யாவோட ஃபேக்டரி கம்பம்ல தான் -ஆனா export seal form, customs clearance official signatures எல்லாமே மாமாவோட வண்டிப்பெரியார்ல இருக்க export admin office la handle ஆகுது.
அங்க தான் Govt-approved hardcopy seal forms வைச்சிருப்பாங்க.அதை ஒவ்வொரு load-க்கும் courier பண்ணி factory-க்கு அனுப்பணும்.இந்தமுறை ஒரு உள்ள நடந்த தவறால அந்த courier miss ஆயிருச்சு.
-++++
மதுரை பன்னாட்டு விமான நிலையம் .
✈️ 4:40 AM
சூர்யா சோதனை சாவடி தாண்டி
Cargo gate முன்னால் காரை நிறுத்தி, உள்ளே வேகமாக நடந்து சென்றான். கையில் documents, QC report, alternate packing list – எல்லாமே scan copy-யும் hard copy-யும் தயாரா இருந்தது. ஆனா அந்த ஒரு missing seal form தான் இப்போ எல்லா tension-க்கும் காரணம்.
அதோ கஸ்டம்ஸ் ஆபீசர் மேசையில ஒரு ஃபைல் பார்த்து இருக்காரு ,
“Final seal form இல்லனா board panna முடியாது சார். 6.30-ku கார்கோ கேட் மூடிடுவோம் ,” என்று கட்டியான குரலில் சொன்னாரு.
சூர்யா, மெதுவா சுவாசிச்சுட்டு பேச ஆரம்பித்தான்.
“சார், seal form வண்டிப்பெரியார் ஆஃபீஸ்ல மிஸ் ஆகிடுச்சு. Hard copy வழில இருக்கு. Scan copy அப்டேட் பண்ணிருக்கேன்.
ப்ளீஸ் sir, கிரேட்ம் மாத்தி வெச்சுடாங்க , export list updated, QC proof attached… நீங்க பாத்து அட்லீஸ்ட் இன்டர்னல் ப்ரோசெஸ் ஆரம்பிங்க சார்.”
Officer, வேறொரு senior staff-வைக் கூப்பிட்டு,
“இந்த Soorya தான் கம்பம் எக்ஸ்போர்ட்ர். இவங்க ஸ்டாண்டர்ட் நமக்கே தெரியும்… ஆனா ரூல் ரூல் தான்…”
அந்த senior sir கொஞ்சம் soften ஆகி,
“ஓகே சூர்யா seal form 6.00க்கு முன்னாடி ஒரிஜினல் வந்து சேர்ந்தா… போர்டிங் பண்ண நேரம் இருக்கும். இல்லனா, But final approval form signature seal அட்டாச் பண்றதுக்கு கஸ்டம்ஸ் ஹெட் வர டைம் வேணும். ரிஸ்க் இருக்குப்பா
“கண்டிப்பா சார், அதுக்குள்ள seal form வரும்.”
அவன் உள்ளுக்குள்ளவே – ‘டேய் கார்த்தி… மச்சி எங்கடா இருக்க ‘என பதட்டத்தோட எண்ணினான்.
தேனி பைபாஸ் அருகில் –
காலை 5:10
கார்த்திக் வண்டில பறக்குறான். கண்களில் தூக்கம் இல்ல, ஆனா பார்வை மொத்தமும் ரோடுல.
சூர்யாவுக்கு கால் பண்ணி ” நா இன்னும் 20 நிமிஷதுல இருபேண்டா “