மழைத்துளி -6.2

மதியத்திற்குப் பிறகு

சூரிய ஒளி சற்று மென்மையாய் மாறி, வண்டி சத்தங்கள் சிதறிய அந்த சிற்றூரின் வழியே கடந்து, நால்வர் அணி ஒரு கருப்பு நிற thar ஜீப்பில் கோடி லிங்கம் கோவில் நோக்கிப் பயணித்தனர்.

சாலையோரம் அடர்ந்த மரங்கள், காட்டின் நடுவே வழி காட்டும் சின்ன சின்ன கற்கள், மழையில் நனைந்த மன்ரோட்டில் வீசிய மண்வாசனை என எல்லாமும் ஒரு நொடியில் அவர்கள் மனதை நிம்மதிக்குள் தள்ளியது.

10 நிமிட நேரத்தில் வண்டி சற்று இடுக்கான வழியில் நுழைந்ததும், கார்த்திக் சுவாரசியமாய் சொன்னான்

“இதை தான் சொன்னேன், இங்க வந்த உடனே ஒரு அமைதி வருது பாரு , அதுக்கு ஈடு இல்ல”.

ஹ்ருதயா, கடந்து சென்ற நிழல்களுக்குள் பார்வை ஊன்றியபடி சொன்னாள்

“மனசுக்கு ஒரு மாதிரி இருக்கு… நாம நடந்து போலாம்னு தோணுது.”

சூர்யா வண்டியை ஒரு பக்கத்தில் நிறுத்திவிட்டு, “நீ சொன்னாலும் சொல்லலைனாலும் நாம இங்க இருந்து நடந்து தான் போகணும். பாதை கிட்டத்தட்ட காடு மாதிரி தான்…

ஆனா காட்டு அழகு இல்லாம நாம ,நம்ம பூமி இருக்க முடியாதுனு நீ இப்போ பார்ப்ப” என்றான்.

அவர்கள் நான்கு பேருமே மெதுவாக நடக்க ஆரம்பித்தனர். இடைவிடாது தாவரங்கள், மரங்களின் கீழ் விழும் ஒளிக்கதிர்கள், பச்சை நிலத்தின் மேல் நடக்கும் நிழல் நாடகம்… எல்லாமே அந்த பயணத்தை அலங்கரித்தது.

மூடுபனி மறைத்த மலை வழிகள், பசுமைத் தொளிரும் மரவனம்… நுழையும்போதே, ஒரு ஆனந்த அலை மனதை ஆட்கொள்கிறது.

இது தான் சுருளி கோடி லிங்கம் கோவில் என அழைக்கப்படும், சுருளி மலையின் இதயத்திலிருக்கும் ஆன்மீகக் கோடாரம்.

கோடி லிங்கம் கோவில் சுருளி அருவியின் அருகே, சுருளி மலைக் கோடியில் அமைந்துள்ள இந்தத் தலம், பக்தர்களின் மனதை கவரும் ஒரு ஆனந்தத் தரிசனமாக விளங்குகிறது.

இங்கு பிரதான தெய்வமாக கைலாச லிங்கம் அருள்புரிகிறார். அவருடன், பரம சக்தியான பர்வத வர்தினி அம்மனும் பக்தர்களுக்கு கருணை வழங்குகிறாள்.

உள்ளே நுழைந்தவுடன், திரட்டிப் பதித்த சிவலிங்கங்கள் வரிசையாக கண்ணைக் கவருகின்றன. ஒவ்வொன்றும் தலையாய அமைப்புடன், அதன் முன் அமைந்திருக்கும் நந்திகள், அந்த புனிதத்திலிருந்து கண்களை பிய்க்க முடியாத சூழலை உருவாக்குகின்றன.

முன்னால் இருக்கும் காட்டுப் பாதையை பின் தொடர்ந்தால், மரத்தடியில் மௌனமாய் நிற்கும் கருப்பு கற்களில் செதுக்கிய நடராஜர், பல சித்தர்களின் சிற்பங்கள் நம்மை வரவேற்கின்றன.

அவற்றுள் சிலர் பவழ மலர்களால் அலங்கரிக்கப்பட்ட, சிலர் சாந்தம் பூசப்பட்டு ஆழ்மனதைக் கவருகின்றனர்.

ஓர் இடத்தில், பலகையில் கோவிலின் தொன்மையை விளக்கும் எழுத்துக்கள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கின்றன.

அனைத்தையும் தாண்டி, மலை உச்சிக்குச் செல்லும் வழியில், 70 அடி உயரமுடைய தியான லிங்கம் பக்தர்களை மெய்சிலிர்க்கச் செய்கின்றன. மர வனத்தின் நடுவே மிளிர்கிறது.

மேலிருந்து பார்க்கும் போது, சுற்றி பச்சைபசெலேன காட்டுக்கு நடுவே கம்பீரமாய் வீற்றிருக்கும் லிங்கம் , இயற்கையின் மடியில் யோகமும் பிரார்த்தனையும் ஒன்றாய் கலந்து உருவான ஓர் அமைதி அரண்மனை போல தோற்றுவிக்கும்.

கோவில் வளாகத்தில் முப்பதாயிரம் சிவலிங்கங்கள் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன. அதையும் மிஞ்சி, விரைவில் ஒரு கோடி லிங்கங்கள் நிறுவும் திட்டத்துடன் இந்தத் தலம் வளர்ச்சியடைந்து வருகிறது.

இதனைத் தவிர, இங்கு நவபாஷாண லிங்கம் என்னும் அரிய வஸ்துவில் ஆன லிங்கமும், மேலும், விநாயகர், ஆஞ்சநேயர், சரஸ்வதி ஆகிய தெய்வங்களின் சிற்பங்களும் இங்குள்ளன.

ஹ்ருதயா அதையெல்லாம் கண்ணிமைக்க மறந்து பார்த்து கொண்டு இருந்தாள்.

வருடத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் விழா – மகா சிவராத்திரி. அந்த நாளில் பக்தர்கள் இரவெல்லாம் பக்தியுடன், சிவபெருமானை மனதில் பதிய செய்கிறார்கள்

……………

சந்தோஷ் கோவிலின் சுவர்களை பார்த்தபடி மெதுவா “எனக்கு இந்த இடத்துக்கு சின்ன வயசுல வந்தமாதிரி ஞாபகம் பாட்டி கூட . ஆனா அப்போ இதையெல்லாம் பாத்த மாதிரி ஞாபகத்துல இல்ல, இப்போ தான் கண்ணுல பதியுது மனசுக்கு புரிகிறது.”

கார்த்திக் சோர்வாக ஒரு கம்பத்தில் சாய்ந்தபடி, முகத்தை மெல்ல தூக்கி லிங்கத்தை பார்த்தான்.

“நாம சிட்டில வாழ்றவங்க. இங்க அமைதில நெஜமா வாழ்றாங்க . ஒரு நொடி கூட ஒரு ஃபோன் சத்தம் கூட இல்ல. எனக்கு இந்த இடம் ரொம்ப பிடிச்ச இடம். மனசு சரியலான கூட இங்க வந்து கண்ண மூடி கொஞ்ச நேரம் இருந்தா மனசுக்கு அப்படி ஒரு relaxation கிடைக்கும்.

“ஹ்ருதயா அந்த இடத்தை சுற்றி வந்தவளாக, கண்ணைக் மூடி அமர்ந்து கொண்டாள். பின் கண் திறந்து மூவரையும் பார்த்தாள். அவளுக்குள் ஏதோ புதுசா சத்தமில்லாத ஓசையைக் கேட்பது போல உணர்வு.

அவள் மெதுவாக கார்த்திக்கிடம் நெருங்கி, மெல்லிய குரலில் கேட்டாள்,

” இங்க இருக்கும் போது கொஞ்சம் மாயணர்வு மனசுக்குள்ள வருது . இந்த கோவில் பத்தி மேல எதாவது தெரியுமா? “

கார்த்திக், ஆச்சரியத்தோடு அவளைப் பார்த்து,” நீங்க நெஜமாவே கேக்கறீங்களா? இந்த கோவில் பத்தி உள்ளூர் புராணக்கதைகள் ரொம்ப இருக்கு…” என்றதும்,

பக்கத்தில் இருந்த சூர்யா உடனே “சொல்வாங்கலே, இங்க கோடி லிங்கங்கள் இருந்ததுனு. அதனால தான் இந்த கோவிலுக்கு பேர அப்படி இருக்கு. ஆனா இப்போ அந்த மூலஸ்தானத்தில் இருக்குறது மட்டுமே மக்கள் பாக்க அனுமதி இருக்கு. “

இன்னும் காட்டுக்குள்ளேயும் சில இடங்கள்ல சிலைகள் இருக்கும்னு ஊர் பெரியவங்க சொல்லுவாங்க. கொஞ்சம் பேருக்கு மட்டும் தெரிஞ்ச ரகசிய இடம் இங்க இருக்கு.

ஹ்ருதயா மெல்ல சிரித்து,”இப்பவும் இப்படிலா ஒரு இடம் இருக்கா… இத தெரிஞ்சுக்காம நான் இவ்வளவு நாள் இருந்தேனே?” என்றாள்.

அந்தக் கணம் அவளுக்கு அந்த இடம் வெறும் ஒரு கோவிலா இல்லை. அது பல ரகசியங்கள் உள்ளடக்கிய ஒரு இடமா தெரிஞ்சுது.

சந்தோஷ் அதை உணர்ந்த மாதிரி சொன்னான்”நமக்கு தெரிஞ்ச இடம் எப்பவுமே நமக்கு பிடிச்ச இடமா இருக்காது. புதுசா தெரிஞ்ச இடம் தான் மனசுல மாறாத இடம் பிடிக்கும்.”

……..

சன்னதியில் கைகூப்பி நின்ற ஹ்ருதயா, சுவாமி சிலையின் அந்த நிம்மதியான பார்வையை காணும்போது, சில வினாடிகள் அவள் கண்கள் மூடிய நிலையில் நின்றாள். ஒரு விதமான அமைதி அவளைச் சூழ்ந்தது. பின்னர் மெதுவாகக் கண்களைத் திறந்தாள்.

அந்த நேரத்தில் பூசாரி மற்றவர்களுக்கு திருநீறு, வில்வ இலை, மற்றும் பிரசாதம் வழங்கிக் கொண்டிருந்தார். ஹ்ருதயா கை நீட்டிக் காத்திருந்த போது, அவர் அவளை கவனிக்காமல் உள்ளே திரும்பி விட்டார்.

அவளது முகத்தில் ஒரு சிறிய ஏமாற்றம். அதை கவனித்த சூர்யா. தன் கையில் இருந்த திருநீற்றை உடனே அவளிடம் நீட்டி, இது போதும்… வைங்க…” என்ற ஒரு மெதுவான சத்தத்தில், திரும்பி பார்க்க, கண்கள் மட்டும் அவளை பார்த்து பேசின.

அவள் திருநீற்றை நெற்றியில் வைத்தவுடனே, சூர்யாவின் பார்வை சற்று காதலாக அவள் மீது பட்டு அடங்கியது.

அவள் நெற்றியிலிருந்த திருநீறு மெதுவாக சிதறி அவள் கண்ணில் விழ, அதைக் கவனித்த சூர்யா, அவளது அருகில் வந்தான்.

” ஸ்ஸ் வைக்கும்போது லைட்டா கண்ணுல பட்டுச்சு…” என்றாள் புன்னகையுடன்.

அவளது கண்ணில் விழுந்த அந்த சிறிய திருநீறை, தனது காற்றால் , மெதுவாக ஊதி விட்டான்.

ஹ்ருதயா சிறிது நேரம் சத்தமில்லாமல் நின்று விட்டாள். அவளுக்குள் ஏதோ புது உணர்ச்சி கனிந்து கொண்டிருந்தது. ஆனால், அவள் அதை வெளிப்படுத்தவில்லை.

அந்த இடைவெளி… அந்த மெளனம்… அது ஒரு வார்த்தையில்லாத உரையாடல்.

சந்தோஷ் பின்னாலிருந்து கத்தினான்,

“எப்பா டேய், ரெடியா , டீ கடை பக்கம் போயிட்டு போலாம். கடைல சுட சுட உருளைக்கிழங்கு போண்டா, மிர்ச்சி பஜ்ஜி , எல்லாம் வெயிட்டிங். இப்போ தான் நம்ம இன்போர்மர் msg பண்ணான்.

அந்த சத்தத்துடன், அந்த மௌன நிமிடம் பின்னால் தங்கிவிட்டது. ஆனால், அந்த தொடுகை… அந்த நேரம்… இருவருக்கும் மட்டும் தெரிந்த சின்ன ragasiyamaai அழிந்துவிட்டது.

……………

கம்பம் பேருந்து நிலையத்தை தாண்டி, சந்தியா டீ கடை, சூர்யா தன்னோட காரை மெதுவா நிறுத்தினான். இந்த டீக்கடை—அவனுக்கு பிடிச்ச இடம்.

அங்கே போனா, டீயோட வாசனையிலேயே மனசு உருகும். பக்கத்தில நிறைய கூட்டம் இருந்தாலும், சூர்யா வந்தது தெரிய சொல்லாமலே ஒரு மேசை காலி ஆகிடுச்சு.

“அண்ணா… நாலு மசாலா டீ… நல்லா இஞ்சி ஏலக்காய் தட்டி போட்டு சூடா டீ வேணும்,”

பக்கத்தில இருந்த இடத்தில், ஹ்ருதயா கார்த்திக், சந்தோஷ் மூவரும் ரிலாக்ஸா அமர்ந்தாங்க.

“அண்ணா மேடம் நம்ம ஊருக்கு புதுசு. இன்னைக்கு என்ன ஸ்பெசலா இருக்கு?”

அவரோ, ” இன்றைக்கு தான் நீங்க எல்லாரும் வரணும் போல, உங்களுக்காகவே தயாரா இருக்கு காளான் பஜ்ஜி, கத்திரிக்காய் பஜ்ஜி, குடைமிளகாய் பஜ்ஜி, புடலங்காய் பஜ்ஜி, வெண்டைக்காய் பஜ்ஜி, வாழைப்பூ வடை, கீரை வடை, மெது வடை, மசால் வடை… இப்போ என்ன வேணும் சொல்லுங்க. சூடா போட்டு கொண்டுவரேன்.

கேக்கற சந்தோஷ் சிரிச்சுக்கிட்டே, “அண்ணா இந்த லிஸ்டா பாத்தா ஹோட்டல் மெனுகார்ட் கூட வேற பக்கம் போயிடும் போல,”

கார்த்திக்கோ, ” அண்ணா நீங்க சொன்னதிலேயே எனக்கு பசி வந்துருச்சு சீக்கிரமா போய் எல்லாம் ஒரு ஒரு ப்ளேட் கொண்டு வாங்க”.

சந்தோஷ், ” ஹே சூப்பர். இன்னைக்கு எல்லாத்தையும் ஒரு கை பாக்குறோம்.” 😋”

சிறிது நேரத்தில் சுட சுட பஜ்ஜி வர, கார்த்திக், குடைமிளகாய் பஜ்ஜியை கையில் எடுத்துக்கிட்டு, “இது பஜ்ஜியா இல்ல வளையலா, நல்ல மொறு மொறு இருக்கு ஷேப் சும்மா அள்ளுது.” ,சாந்தோஷ் உடனே வாழைப்பூ வடையை ஒரு கடி கடித்து, “என்ன சுவை என்ன சுவை, சாப்பிட்டே இருக்கலாம் போல.

ஹ்ரிதயா , காளான் பஜ்ஜியை சுவைத்து நா இதுவரைக்கும் இந்த பஜ்ஜி டேஸ்ட் பண்ணது இல்ல, இது தான் முதல் தடவ, ரொம்ப சூப்பரா இருக்கு.

சந்தோஷ் கூட அப்டியா “இரு நானும் காளான் பஜ்ஜி try பண்றேன்… நீங்க வெண்டைக்காய் பஜ்ஜி try பண்ணுங்க கார்த்தினா .

கார்த்திக் அப்படியே ஷாக் ஆகி ” எது வெண்டைக்காயா, போடா இவனே , எனக்கு ஸ்கூல் டைம்லேயே வெண்டைக்காய் கொஞ்சம் இல்ல ரொம்பவே அலர்ஜி. அது கனவுல கூட என்ன தொரத்தும். எனக்கும் அதுக்கும்சின்னதுல இருந்தேஆகாது. சந்தோஷ் இத கேட்டு விழுந்து விழுந்து சிரித்து கொண்டு” அண்ணா, உங்க வருங்காலம் வெண்டைக்காய் ஃபேன்ஆக இருந்தா டெய்லி டிபன் ku வெண்டைக்காய் டிஷ் தான்.

கார்த்திக் “வாய கழுவுடா, ஏன்டா என் இந்த கொலவெறி, அப்புற நான் தனியா போயிடுவேன்.

சூர்யா டீ கிளாஸ தூக்கி, “மாஸ்டர்ஜி… உங்க பஜ்ஜிய வெச்சு இங்க ஒரு பட்டிமன்றே நடக்குது.

இது உங்க ஆர்ட்னா, மாஸ்டரோ சிரித்து கொண்டே, “நா ஒரு புதுமைப்பித்தன் தம்பி! பஜ்ஜி போட்றதும் ஒரு கலை தான் தம்பி

கார்த்தி “சியர்ஸ் டூ பஜ்ஜி ஆர்ட் .

இந்த காலாட்டக்களை பார்த்து சிரித்து கொண்டு ஹ்ரிதயா மெதுவா சூர்யாவை பார்த்து புன்னகை பூக்க, சூர்யா சிறிது சிரிப்பை உதிர்த்தான். அவள் அந்த பக்க திரும்ப, அவளையே யாரும் பார்க்காமல் பார்த்தான்.

error: Content is protected !!