மழைத்துளி -5

வண்டிப்பேரியாரின் பசுமை மேடுகளுக்கு மேலாக மெதுவாக மூடியிருந்த பனி இப்போது காற்றோடு நெளிந்து விலகியது.

புது நாள் ஆரம்பம்.

காலை எழுச்சியோடு எழுந்த ஹ்ரிதயா, சூடான காப்பியுடன் தயாராகிப் வந்தாள். முதல் நாள் வேலை முடித்து சாந்தோஷ் உடன் வந்துவிட்டாள். இப்போது, தன் பணி ஆரம்பிக்க தயாராகிருந்தாள்.

வைகறை நேரம்.

கம்பம் சூரியனை மெதுவாகக் கொஞ்சிக்கொண்டிருந்தது. தோட்டத்தின் பக்கம் , சூர்யா பார்க்கிங்கில் பைக்கை நிறுத்தி, கொஞ்ச நேரம் அதிலே சாய்ந்து அங்கேயே நின்றான்.

தூரத்தில் கார்கிழக்கு வாசலில் இருந்து ஹ்ரிதயா சின்ன பாக்கெட் டைரியோடு நடந்து வந்துக் கொண்டிருந்தாள் . வலது கையில் டயரியை பிடித்தபடி, பணியாளர்களை ஒன்று சேர்த்தாள்.

கொஞ்சம் பதட்டமா இருந்த மேனிலாளர்களையும், கம்பம் பசுமையைப் போல பழக்கப்பட்ட பெண்களையும் பார்த்து மென்மையான குரலில் பேச ஆரம்பித்தாள்.

“வணக்கம் நா ஹ்ருதயா , இங்க புதுசா co-ordinator ah ஜாயின் பண்ணிருக்கேன். நீங்க எல்லாரும் தான் இந்த ஃபேக்டரியோடா ஹார்ட் பீட்! உங்ககிட்ட இருந்து நா நிறைய கத்துக்கணும் .. கண்டிப்பா நீங்க எல்லாரும் ஒத்துழைப்பு தரணும். மெசின் வேலை மட்டும்தான் பண்ணும். ஆனா அதுக்கு உயிர் கொடுக்கிறது நீங்களும் தான். நம்ம ஒண்ணா சேர்ந்து வேலை பண்ணனும். நாம எல்லாம் ஒரே டீம். இந்த உற்பத்தி யூனிட்டை உயிரோட வைக்கிறதுக்கு, உங்க எல்லோருடைய பங்களிப்பும் முக்கியம்.

நா இங்க இருப்பது மேல இருந்து கட்டளை குடுக்க அல்ல… உங்க வேலைக்கு மதிப்பு இருக்கு, அத நா மதிக்கிறேன். அதுக்காகத்தான்!”

அவள் பேச்சு நேர்த்தியா, விளக்கமா இருந்தது. ஒரு மெதுவான ஆச்சரிய கலந்த மரியாதை பொங்கும் பார்வைகள் அவளைக் சுற்றி இருந்தன.

புரொடக்ஷன்ல மிஷின் மட்டும் இல்லங்க… அதுக்குள்ள பீல் இருக்கணும். உற்சாகம் வேணும்… ஆற்றல் இருக்கணும் … அதுக்கு தான் உங்கள மோடிவேட் பண்ண நா இங்க இருக்கேன்..

“உங்களுக்கு என்ன உதவினாலும் தாராளமா கேக்கலாம்.. இங்க ஒர்க் பண்றதுல என்ன வசதி வேணும்னாலும் மேலிடத்துல சொல்லி பண்ணிடலாம். “

ஒரு இரண்டு பேர் சிரிச்சாங்க, சிலர் தலைய ஆட்டினாங்க. வேற என்ன தேவையா இருந்தாலும் உங்கள ஒருத்தியா நினைச்சு என்கிட்ட சொல்லலாம்.

நா ரவுண்ட்ஸ் போயிட்டு வரேன். நீங்க வேலைய ஆரம்பிங்க. ரவுண்ட்ஸ் போக வெளியே வந்த ஹ்ரிதயா, முன்பக்க இடத்தில் யாரோ ஷாக் அடிச்ச மாதிரி அசையாம நின்னுட்டு இருக்கிறத பாத்து யாருனு பாக்க நெருங்கி போனவுடன் தெரிஞ்சது…

அது கார்த்திக்

அவள் புன்னகையோட,”ஹலோ சார்… நீங்க என்ன இங்கே ,நின்னுட்டு தூங்கிட்டு இருக்கீங்க”

கார்த்திக் தீவிரமான பாவனைல “எது துங்குறேனா… நீ பேசுன பேச்சுலே நானே சிலையாகிட்டேன். சத்தியமா சொல்லு, இந்த மாதிரி பேசுறதுக்கு நேத்து ராத்திரி முழுக்க எழுதினியா நீ ?”

அவளோ உடனே சிரிச்சு,”சார், போங்க கிண்டல் பண்றீங்க பாத்தீங்களா… இப்போ தான் நான் சும்மா இண்ட்ரா பண்ணிகிட்டேன்!”

கார்த்திக் ” நல்ல பண்ணற, ரொம்ப நல்லா பண்ணற… நீ மேல போற வேலை எல்லாம் விட்டுட்டு, பக்கத்து பிரிவுல போய் எல்லாரையும் confuse பண்ணுற!”

அவளோ ” அதான் co-ordinator job-னே! ஸ்டாஃப் கூட ஒரு பாண்டிங் இருக்கணும்ல , அதான் நான் மோடிவேட் பண்ணுறேன்!”

இது கேட்ட கார்த்திக் சிரிச்சுட்டு,”அது மோட்டிவேஷனா, நான் கூட என்னடா இது, எலன் மஸ்க் லேடி கெட்டப்புல இருக்கேன்னு நினைச்சேன் . நா தான் பார்த்தேனே எல்லாரும் மோடிவேட் ஆனமாதிரி தெரியல… மீட்டிங்ல தூக்கம் வந்தமாதிரி இருந்தாங்க.”

ஹ்ருதயா சிரிச்சுடே , அத சொல்லுறதுக்காக தான் நீங்க இவ்வளவு நேரமா வெயிட் பண்ணிட்டு இருந்தீங்களா ?”

கார்த்திக் சிரிச்சுக்கிட்டே “நா வெயிட் பண்ணல… நீ பேசுனது கேட்டு நா அப்டியே ஷாக் ஆயிடேன்.

ஹ்ருதயா (புஸ் புஸ் என்று மூச்சுவிட்டு) “போங்க… இன்னும் கிண்டல் பண்ணீங்கனா, அடுத்த மோடிவேட் ஸ்பீச் உங்க மேல தான்.

கார்த்திக் (கை தூக்கி) –“அப்போ நான் கிளம்புறேன். எனக்கு லைஃப்ல மோட்டிவேஷன் இல்லாம இருந்தாலும் பரவால்ல உங்க ஸ்பீச் தாங்காது இந்த பாடி.. வெளிய பார்க்க தான் பில்டப்பா இருக்கு. உள்ள பிஞ்சு மனசு!”

” அந்த பயம் இருக்கணும் சாரே”

“சார் லா வேணாம், அண்ணா கூப்பிட்டாலே போதும்.

ஹ்ருதயா சின்ன சிரிபோட “சரிங்க எலன் மஸ்க் ஃபேன் கிளப் செக்ரட்ரி , நான் கிளம்புறேன். ”

அவங்க இருவரும் யாரையும் கவனிக்காம பேசிக் கொண்டிருந்தாலும், சூர்யா அதை தூரத்தில் நின்றுக்கொண்டே பார்த்திருந்தான் .

ஹ்ரிதயாவை பார்த்ததிலிருந்தே, அவனுக்குள் ஒரு கிளை கிளையா தாக்கி வரும் பழைய உணர்வுகள்.

இன்னொரு பக்கம், அவளும் கார்த்திக்கும் இடையிலான அந்த பாண்டிங்யைப் பார்த்து ஒரு ஏக்கம்…சின்ன சிரிப்போடு தன்னுடைய கவலையை மறைத்துக்கொண்டு, ஃபேக்டரி உள்ள போறான்.

நீங்க சீரியஸா பேசுறீங்கனா, நானும் சீரியஸா வேலை பாக்க ஆரம்பிக்க வேண்டியதுதான்!”

ஹ்ரிதயா புன்னகையோடு தலையை தூக்கி, கார்த்திக்கை பார்த்தாள்.

“நீ சீரியஸா வேலை பாக்க ஆரம்பிச்சா, இங்க எல்லாரும் ரிசைன் பண்ண ஆரம்பிப்பாங்க!”

அவனோ பதிலுக்கு பெரிய சிரிப்பு.

“ஓகே… Mr. Comedian of the Year! நாம நம்ம வேலைய கொஞ்சம் பாக்கலாமா..அவங்க இருவரும் லாஃப்பில் தொலைந்து போன அந்த நேரம்…

சூர்யாவோட அப்பா வந்தாங்க, “கார்த்திக் கண்ணா, நீ டெயிலி ரவுண்ட் போய்டு வாங்க… பக்கத்தில சாம்பிள் சாக் கொஞ்சம் சரியில்லனு சொல்றாங்க.”

“ஓகே பா, நா என்னனு பாக்கிறேன் ஹ்ருதயா கை வீசிப் புன்னகையுடன் “Hey, don’t get lost in the fields, okay? பாம்பு இருக்குறதாம்!”

“நீ இருக்கே, அத விட பயங்கரமா யாரும் இல்ல!”கார்த்திக் சிரிச்சுக்கிட்டு போனதும்,

அவளோ வேலையை கவனிக்க ஆரம்பிச்சாள்.தோட்டத்துக்குள்ள சூர்யா மட்டும் இருந்தான். சில பழைய திராட்சை படர் கொடிகளை தாவரத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப வடிவமைத்து கொண்டிருந்தான்.

கொடிகள் என்பவை தரையில் கிடைமட்டமாகவோ அல்லது தரையில் இருந்து தாழ்வாகவோ வளரும் பலவீனமான தண்டுகளைக் கொண்ட தாவரங்கள்.

அதை, விரும்பிய திசையில் அல்லது வடிவத்தில் வளர வழிகாட்டுவதையும், ஆதரவை வழங்குவதன் மூலமும், கத்தரித்தல் போன்ற பயிற்சி நுட்பங்களைப் பயன்படுத்துவதையும் குறிக்கிறது.

அடிப்படையில், இது அழகியல், செயல்பாடு அல்லது இடத்தை அதிகப்படுத்துதல் என உங்கள் தேவைகளுக்கு ஏற்ப இயக்குவது பற்றியது. நேரத்துக்கு முன்னாடியே எல்லா வேலைகளையும் பார்த்து வைக்கவேண்டும் . எப்போதும் சூர்யாவுக்கு punctuality ரொம்ப முக்கியம்.

ஹ்ரிதயா சூடான காஃபி கப் ஒன்றுடன் தோட்டத்துக்குள்ளே நுழைந்தாள். ‘ ஹலோ சார், நான் டிஸ்டர்ப் பண்றேனா?”

அவளுடைய மென்மையான குரல் , அவன் உள்ளத்தில் ஓர் அதிர்வை கிளப்பியது என்னவோ உண்மை.

ஒரு நொடி அவன் கண்ணில் அவள் மீதான நேசம் மின்னிமறைந்தது. நொடிநேரத்தில் அதை மறைத்து, தன்னை சமன்ப்படுத்தி ஒரு லீடரா பேசினான்.

” நீங்க சார்னுலா கூப்பிட வேண்டாம் ஹ்ருதயா…just சூர்யானு கூப்டா போதும்.”

” ஓகே… சூர்யா!”அவள் கண்ணில் சின்ன புன்னகை. அப்போதுதான் சூர்யாவும், அவளுக்கும் தனக்கும் இடையிலான அந்த அமைதி… அவனுக்கு பழைய நினைவுகளை கொண்டு வந்தது.

ஹ்ருதயா”, நீங்க இங்க தோட்டத்தில அதிக நேரம் செலவழிக்கிறீங்க போல?”

ஆமா … இது எனக்கு ரொம்ப பிடிச்ச இடம். தோட்டத்தில என்னோட நேரத்த கழிச்சா மனசுக்கு சும்மா லேசா இருக்கும்.

திராட்சைய வெறும் பழமா பாக்காம , அவங்க வளர்ற தன்மை பாக்குறேன். ”

நீங்க பேசுறது கேக்கவே நல்லா இருக்கு… எந்த காலேஜ் என்ன படிச்சீங்க?”

சூர்யாவோ சிரிச்சுக்கிட்டே ” இயற்கைய ரசிக்க நிறைய படிச்சுருக்க வேண்டிய அவசியம் இல்ல ஹ்ரிதயா… ஆனால் சில பேர் வந்த உடனே, மனசு பேச ஆரம்பிக்குது. அதான் பாஷை இல்லாமையும் கவிதையா இருக்கற மாதிரி தோன்றுது.”

ஹ்ருதயாவுக்கு அது ரசனையா இருந்தாலும், சில நொடி அவன் பார்த்த பார்வையில ஏதோ அவனுள் ரகசியம் ஒளிந்திருப்பது போல தோனியது.

அந்த மௌன நிமிடத்தை கார்த்திக் தொலைவில் இருந்து கத்தி களைத்தான்.

” ஏ ஹ்ருதயா! நீங்க எனக்காக ஒரு கூடை ஃபுல்லா திராட்சை எடுத்துட்டு வருவீங்கலா?”

” கண்டிப்பா எடுத்துட்டு வரேன். என்ன செய்ய வேணும். “

“ம்ம் உனக்கு 🍷 wine எப்டி செய்யுறாங்கனு காமிக்க “

” சூப்பர் ஜி. I’m waiting”.

“வெயிட் பண்ணுங்க, நா மீதி பிரிவுலா ஒருவாட்டி பாத்துட்டு வரேன். “

சூர்யாவோட முகத்துல கடந்த கால நினைவுகள் , தற்போதைய உணர்வுகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டது.

வானம் நிழலோட, வெயிலோட விளையாடும் நேரம்.

ஃபேக்டரி விசிட் முடிச்சபின், தோட்டத்து பக்கத்துல கொஞ்ச நேரம் ரிலாக்ஸாக சுத்திபாக்க நினைத்து நடந்து சென்றாள்.

ஹ்ரிதயா வியப்போடு சுத்தி பாத்தபடி ,” சூர்யா சார்… உங்கள் ஊர் ரொம்ப அமைதியா இருக்கே! சூரியா ஒரு பக்கத்து நெடுஞ்சோலையை பாத்தபடி, இது சுருளிபட்டி. நம்ம கம்பத்துக்கு அடுத்ததா, ஆனா மனசுக்கே நெருக்கமா இருக்குற ஊர். சின்ன ஊர் தான், ஆனா இப்போ ஃபேக்டரி டெவலப்மெண்ட் ஆனதும் தான் நிறைய பேருக்கு நிறைய விஷயங்க கிடைக்குது.”

” நீங்க விவசாயம் பண்ணறீங்கன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க!”

அவன் சிரிப்போடு ” தாத்தா காலத்துல ஆரம்பிச்சது. நாம இப்ப grapes export பண்ணுறோம். ஆனா அதுக்கு அடியில் இந்த மண்ணும், இந்த தண்ணியும் தான்.”

அவளோ “இந்தமாதிரி இடத்துல இருந்தா, மனசே நிம்மதியா இருக்கு… ஆனா நீங்க சொல்லும் விவசாயம் எப்படி ஒர்க் ஆகுது இங்க?”

” நீ பாரேன்… அந்த தாழ்வாரத்தில் ஒழுகுற சேணையில் எவ்வளவு தண்ணி இருக்குன்னு, அதுவே நமக்கு விளைச்சல் எவ்வளவுனு சொல்லும். அங்க நீர்ப்பாசன தொட்டி இருக்கு. பக்கத்துல பழைய சிவன் கோவில் இருக்கு. நம்ம வீட்டுல எந்த நல்ல விஷயமா இருந்தாலும் இங்க இருந்து எல்லா பூஜையும் பண்ணி தான் பண்ணைக்கு போவாங்க.”

ஹ்ருதயா ஆச்சர்யமா “உங்க ஊர்ல எங்க போனாலும் ஒரு ஆத்மார்த்தமான உணர்வு ஏற்ப்படுது.

எனக்கு நெஜமாவே இந்த இடம் கொஞ்சம் கொஞ்சமா பிடிக்க ஆரம்பிச்சுடுச்சு.”

சூர்யா பரவசமா “இந்த ஊர்ல இன்னும் நிறைய இருக்கே உனக்கு காண்பிக்க. ஒண்ணு செய்றியா… நாளை ஃப்ரீயா இருந்தா, நீ ரெஸ்ட் எடுத்தபின் நம்ம அருகே இருக்குற சின்ன பால்ஸ் தோப்புக்காடு முனை, கோவில் , காட்டு பாதை எல்லாம் சுற்றி வரலாமா?”

ஹ்ருதயா சிரித்து கொண்டே “நீங்க சத்தியமா local tourist guide மாதிரி பேசறீங்க சூர்யா சார்.I’m in! நாளைக்கு நீங்க சொல்ற எல்லாமே பாக்கலாம். நா ரெடி..

————-

மாலை நேரம் …

வண்டிப்பெரியார்

சூரியன் சற்று தாழ்ந்துக்கொண்டு, மெல்ல மழைக்கு முன் காற்று வீசும் நேரம்.

ஹ்ரிதயா வீடு திரும்பி வந்தவுடன், வாசலில் சந்தோஷ் சோம்பலாக அமர்ந்து இருந்தான்.

“ஹாய் ஹ்ரிதயா அக்கா… ஆபீஸ்ல இன்னைக்கு எப்படி போச்சு?”

“ஹாய் டா சந்தோஷ்! நல்லாப் போச்சு. ஆனா நீ இவ்ளோ நேரம் எங்க வெளிய போனே?”

“கடை வரைக்கும் போனேன்… ஃப்ரண்ட்ஸ்கிட்ட கொஞ்சம் டெலிவரி இருந்துச்சு. இன்னிக்கு free!”

மனதுக்கு ஒரு சுகமான இடமாக இருந்தது அந்த வீடு.

அத்தை வீட்டு வாசலில் , சந்தோஷ் கையில் கடலைபொடி ஸ்நாக்ஸும், கையில் சுட சுட தேநீரும் எடுத்து வந்தான்.

” நா டீ போட்டேன். நீங்க வந்ததும் குடிப்பிங்கணு. “

இருவரும் வரந்த பாம்பிர் மேஜையில் அமர்ந்தபடி, மெல்லச் சாப்பிடத் தொடங்கினார்கள். பேசும்போதும் சிரிப்புக்கு பஞ்சமில்லை.

“சந்தோஷ், degree முடிஞ்சுடும். அப்புறம் என்ன ப்ளான்?”

“நீங்க எப்பவுமே சீரியஸா தான் கேப்பீங்க! Actually, நான் Chennaiல MBA try பண்ணலாம் என நினைக்கிறேன்…

” ம்ம்… ஆனா அம்மா சொல்றது போல, சூர்யா அண்ணா ஃபேக்ட்ரில hands-on work பண்ணாலும் experience கிடைக்கும். அது கூட நல்லதுதான்.”

“உனக்கு suit ஆகுறதான் முக்கியம். Passion இருக்குறதெல்லாம் try பண்ணி பார்.”

அப்புறம், இருவரும் சமையலறைக்கு போனார்கள்.

புஷ்பவள்ளி அத்தை , ராத்திரிக்கு என்ன வேணும் சாப்ட, உனக்கு என்ன வேணுமோ சொல்லு தங்கம், நா செஞ்சு தரேன்.

“நிச்சயமா அத்தை! எனக்கு நம்ம ஊரு இட்லி சாம்பார் தான் வேணும். நல்ல கார சாரமா நா உங்களுக்கு காய் வெட்டி தரேன் ” என சிரித்தபடி, மெல்ல காய்கறிகளை வெட்டி, உதவினாள்.

சமையல்கட்டின் வாயிலில் ஒருத்தன், கை கட்டியபடி ரெண்டுபேரையும் முறைச்சு கொண்டு இருந்தான்..

வேற யாரு நம்ம சந்தோஷ் தான்.

“அம்மா தாயே, நானும் இங்க தான் இருக்கேன். உனக்கு என்னாலம் கண்ணுக்கு தெரியல ல, ஏன் என்னால கேக்க மாட்டிங்களோ, என்ன வேணும்னு .”

“மூஞ்ச ஏன்டா இப்படி வெச்சுருக்க.. உன்கிட்ட கேட்டா , வாயிலேயே வராத பேர சொல்லி வேணும்னு சொல்லுவ , தெரியாது சொன்னா, இதுகூட தெரியலனு காலாய்ப்ப, எனக்கு எதுக்கு இதெல்லாம். வா வந்து இந்த தேங்காய் தோண்டி குடு சட்னி அரைக்கணும். ”

என்ன வாய்ல வராத பேரா, யம்மோவ் Kimchi Jjigae, Gong Bao Chicken, Jajangmyeon, Mapo Tofu இதுலா என்னனு தெரியாம பேசுற..

Kimchi Jjigae கொரியன்ஸ் காய்கறி சூப். புளிப்பா இருக்கும்.

Gong Bao Chicken – சைனீஸ் ஸ்பைசி சிக்கன் டிஷ்.

Jajangmyeon – கொரியன் பீன் 🫛 🫘 சாஸ் நூடுல்ஸ்.

Mapo Tofu – சைனீஸ் ஸ்டைல் சில்லி பன்னீர்.

மூச்சு வாங்க சொல்லிவிட்டு அம்மாவ பார்த்தான்

அவங்க அடுப்பைச் சிம்மர்ல வச்சிட்டு, “டேய் சந்தோஷே, எங்க காலத்துல, சூடா வடிச்ச சோரோடு வத்தக்குழம்பு கிடைச்சா நல்லணனை ஊத்தி சாப்டா ருசி அப்படி இருக்கும்.

இவன் என்னமோ Kimchi Jjigae, Jajangmyeon கேட்டுக்கிறான் பாரு… அவனுக்கு புளிக்காயிலே போடுற புளிக்கூட நல்லா தெரியாது!

“கழுத்தைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்று தோள்பட்டையில் மோவாய் இடித்து கொண்டார்.

“அத்தை… சந்தோஷ் லா இன்டர்நேஷனல் லெவல்” “

இன்டர்நேஷனலாவே இருக்கட்டும், சாப்பாடு வரப்போறது கம்பம் நேஷனல் ஒன்லி. . இட்லி சாம்பார், தேங்காய் சட்னி, அதுக்கூடா பட்டாணி மசாலா . அவ்வளவு தான்.

ஆனா இந்த Mapo Tofu அப்பறம் Gong Bao Chickenன்னு கேட்டா… அதுக்கு நான் ஆளில்ல. அவங்க கண்ணாடிய மேல நிமிர்த்தி, சிரிச்சாங்க.

சந்தோஷ், “தாயே பராசக்தி உன்னோட சாம்பார் சேவைலயே சந்தோஷ் ஹேப்பி அண்ணாச்சி !”னு கத்திகிட்டு சல்யூட் அடிச்சான்!

………….

அந்த சமையல் நேரமும், சுவையாக உரையாடும் நேரமாகவே மாறியது.சாப்பாட்டுக்கு பிறகு, மூவர் ரூமில் அமர்ந்தபடி பழைய ஆல்பங்களை பார்க்க தொடங்கியன “அத்தை! இந்த போட்டோல நீங்க ரொம்ப இளமையா இருக்கீங்க!”

அவரோ சிரிச்சபடி, “அது ரொம்ப பழைய விசேஷம்… சூர்யா அப்போ 5th படிக்கிறான் “

அடப்பாவி… இப்போ கூட அந்த smile மாறல .”

அவர்கள் மூவரும் சிரிச்சுக்கொண்டே, ஒரு பக்கக் கட்டிலில் சாய்ந்தபடி பழைய நினைவுகளை பகிர்ந்தார்கள்.

அந்த தருணத்தில் ஹ்ரிதயா சற்று மௌனமாய்த் தலையை சாய்த்தாள்.

அவர் கவனித்து, “என்னம்மா… சோர்வா இருக்கா. நீ தூங்கு, மீதியை நாளைக்கு பாத்துக்கலாம்”.

“சோர்வா இல்ல அத்தை… அங்கிருந்து இங்க வரும் பயணம் கொஞ்சம் கடினமா இருக்கு.

நாளை மறுநாள் வேலை இருக்குது. அத்தை…

அங்க ஊருக்குள்ளேயே ஒரு accommodation பாக்க முடியுமா?

“அத்தை அந்த வார்த்தைகளை கேட்டு ஒரு நிமிடம் நிலைக்க, அப்புறம் மெதுவா சிரிச்சா…

“நிச்சயமா டா கண்ணு. நீங்க எங்க பொண்ணு போல, நீ தங்க ஏற்பாடு பண்ண சொல்றேன்.

இரவு பத்து மணிக்குப் பிறகு வீடு முழுக்க அமைதி சூழ்ந்தது.

சின்ன சின்ன சத்தங்களா, சட்னி கிண்ணங்களை எடுத்து கழுவி வைத்து விட்டு, கிச்சனில் விளக்கை அணைத்தபின் புஷ்பவள்ளி மெதுவாக வெளியே வந்தார்.

நண்பகல் முழுக்க ரசித்த நகைச்சுவை, வீண் வாதங்கள் எல்லாம் பின் தள்ளப்பட்டு, அந்த நேரம் ஒரு அமைதியின் மறுசுழற்சி போலிருந்தது.

வீட்டின் மாடி பால்கனியில் நின்று கொண்டிருந்த ஹ்ருதயா, கம்பத்துக்கும் வண்டிப்பேரியிற்கும் நடுவில் அலைந்து கொண்டிருந்த நிழல் காட்டை நோக்கி புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.

வெள்ளை நிலவொளியில், மரங்களின் மேலே விழும் ஒளி ஒரு பச்சை மேகம் போல இருந்தது. மெல்ல காற்று ஒரு பக்கமாக அவளது முடியை அசைத்தது.

அந்தத் தருணம், நம்ம ஊரு மண்வாசனை, சாம்பார் வாசனை, பாசமான தங்கம்னு கூப்பிடும் குரல், இந்த வீட்டுக்குள் இருந்த சிரிப்புகள்—அவளுக்கு மனதுக்குள் ஒரு இடம் கொடுத்தது.

அவள் விழிகளிலிருந்து அந்த நிலாவை நோக்கி ஒரு அமைதியான பார்வை விட்டபடியே…

song

பூஞ்சோலையில் வாடைக்காற்றும் ஆட

சந்தம் பாட கூடாதென்றுகூறும்

பூவும் ஏது மண்ணின் மீது

ஒரே ஒரு பார்வை தந்தால்

என்ன தேனே

ஒரேஒரு வார்த்தை சொன்னால்

என்ன மானே

ஆகாயம் தாங்காத மேகம் ஏது கண்ணே

நிலாவே வா

செல்லாதே வா

எந்நாளும் உன் பொன்வானம் நான்

எனை நீ தான் பிரிந்தாலும்

நினைவாலே அணைப்பேன்……

error: Content is protected !!