மழைத்துளி -4

மலைச்சுழலில் வீசும் குளிர்ந்த காற்று… நெற்றி மேல் விழும் சாமந்திப்பூ மாதிரி.

புஷ்பவல்லி, வீட்டின் பின்தராசில் ஒருபக்கம் கடலை குழம்பு கொதிக்க, மறுபக்கம் இடியாப்பம் ஊத்திட்டு, மணக்க மணக்க பில்டர் காபி போட்டு கொண்டு இருந்தார்.

சமையல்கட்டின் வாயிலில் நிழலாட பார்த்தவர். “அட ஹ்ரிதயா.. என்ன நேரமாவே எழுந்துட்ட. நல்லா துங்குனியா இல்லையா”

“அதல்ல, இதே புதிய ஸ்தலமாயதின் எனிக்கு உறங்கான் பட்டில்ல … குறைச்சு திவாசங்கள் கழியும்போல் எனிக்கு அது சீலமாகும். அத்த மலையாள மனசிலயோ அல்ல எனிக்கு குறைச்சு தமிழ் மட்டும் அறியும் அதே “

” ஒன்னும் பிரச்சன இல்லா மோலே, இந்தா காபி குடி. அப்புறமா ஆஃபிஸ் போக ரெடி ஆகலாம்.

“ம்ம் .. கோலம் சூப்பரா ஆணும் உங்க ஃபில்டர் காபி அதுவும் சூப்பரா இருக்கு!

“புஷ்பவல்லி (சிரிச்சு): “அதே எண்டே ஸ்பெசல்.. ஊரு புடிச்சிருக்கா?”

அவளோ புன்னகையுடன் ,“ஆமா அத்த.. ராத்ரி , மலையோர பாத வலரே மனோஹரமாயிருன்னு. வளர் இருண்டதாயிருன்னு… பக்ஷே ஷாந்தமாயிருன்னு ”

“சரி டா கண்ணு, நேரமாகிட போது.. போய் ரெடி ஆகு. நா உனக்கு இடியாப்பம் கடலைகறி செஞ்சு வெச்சிருக்கேன்.. உனக்கு ரொம்ப பிடிக்கும்ல.. ”

“ஓகே அத்த 15mins . சீக்கிரமா வந்துறேன்.”…..

சந்தோஷ் ரூமில்….

“டேய் சந்தோஷ், எழுந்திரிடா, நேரமாச்சு .. எருமமாடு எப்படி தூங்குறான் பார். ஒரு ரூம கூட ஒழுங்கா வெச்சிருக்கான சீக்கிரமா கிளம்பிவா.. ஹ்ரிதயாக்கு இன்னைக்கு முதல் நாள் ஆஃபிஸ் போகனும்ல.”

டைனிங் ஹாலில்….

அத்தை,” வாடா கண்ணு, ஆபீஸ் போக எல்லா ரெடியா இருக்கா. நல்லா இரு. நிறைய கத்துக்கணும், புது இடம்னு தயங்காத, எந்த சந்தேகமாக இருந்தாலும் அங்க கார்த்தி இருப்பான் , அவன்ட கேளு.. அவனும் என் பிள்ளை மாதிரி தான்.. ரொம்ப சுட்டி.. ஜாலியா பேசுவான்..”

“கண்டிப்பா அத்த, முதல் நாள்ல அதான் கொரச்சு டென்ஷன் கொரச்சு ஆர்வமா இருக்கானு. புதுசா நிறைய கத்துக்கணும், ”

அவள் தலைமீது கை வைத்து“உங்க அப்பா பாஸ்கரன் இவரோட நல்ல நண்பர். நீ இங்க வேலை செய்யறதுல எனக்கும் பெருமைதான். நம்ம சூர்யாகூட பாக்டரியில வேலை பாக்கப்போற…இனிமே நல்ல ஆரம்பம் தான் பார்த்துக்கோ பாப்பா.”

அவசரம் இல்லாம உண்மையா கலந்த வாழ்க்கை சூழ்நிலை தான் எனக்குப் பிடிக்கும் அத்தை. இங்க அதை உணர்கிறேன். ரொம்ப நல்லா இருக்கு மனசுக்கு அமைதியா கண்ணுக்கு குளிர்ச்சியா..

சந்தோஷ், ஒரு பாக்பாக் போட்டுட்டு, “நாங்கலா எப்பவோ ரெடி கா! தெய்வமே எனக்கு ஒரு காபி, சீக்கிரமா டிபன் எடுத்துவைமா.. பசில்ல கண்ண கட்டுது..”

“ஆமா உனக்கு பசிச்சா எதுவும் காதுல ஏறாது, நீயும் வாடாமா சாப்டுட்டு கிளம்புனா சரியா இருக்கும்”.

சந்தோஷ் பெரிய ஏப்பம் விட்டு, “அப்பாடா, ஏதோ அக்கா நீ வந்ததால நல்ல சாப்பாடு கிடைச்சுது,

“என்னடா அங்க சத்தம்” அம்மா கிச்சன்ல இருந்து கேக்க,

“ஒன்னும் இல்லமா, சும்மா பேசிட்டு இருக்கோம், நீ வா நாம கிளம்பிடலாம் இல்லனா மாட்டிக்கபோறோம். Let’s go. இன்னைக்கு சூர்யா அண்ணா ஆபீஸ்ல ஆபீஸ் டூர் பண்ணலாம் அப்புறம் நான் அக்கவுண்ட் டிபார்ட்மெண்ட் கூட செக் பண்ணப்போறேன்.”

‘”மா! அத்த! நாங்க கிளம்புறோம்..” அவன் கார் எடுத்து வர ஹ்ரிதயா முன்னாடி அமர, வண்டிப்பெரியார்ல இருந்து கம்பம் நோக்கி புறப்படுறாங்க.

——–

Kambam

PS Grapes Factory ..

சூர்யாவும் கார்த்தியும் ஃபேக்டரி உள்ள அவங்க ஆபீஸ் ரூம்ல ஜன்னல் பக்க சோபால ஃபைல் பார்த்துக்கிட்டே ,”ஏன்டா சூர்யா, நேத்து டீ கடை பக்கம் ஒரு இன்னோவா கார் வந்து நின்னத பாத்தியா? ஃபூல் டின்ட் கிளாஸ், சென்னை ரெஜிஸ்டர் வண்டி. யார்ரா அது புதுசா நம்மூருக்கு வந்திருக்காங்க?”

சூர்யா தோளை குலுக்கி “நா பாக்கல . உங்கன்னுல இருந்து மட்டும் எதுவும் தப்ப மாட்டுது.. கூடவே தானே இருந்த கரெக்டா நம்பர் பிளேட் பாத்துருக்க “. Karthick (அசடு வழிய):“ரொம்ப புகழாத மச்சி, எனக்கு புகழ்ச்சி புடிக்காதுனு உனக்கு தெரியும்ல , அதுலா கம்பெனி சீக்ரெட்டா.உனக்கு தான் வராதே… நீ இன்னும் வளரனும் மச்சான் “

சூர்யா கேவலமா ஒரு லுக் விட்டு, “நீயெல்லா திருந்தவே மாட்ட போடா போய் பொழப்ப பாரு “

“இப்போ நா திருந்தி அம்பானியா ஆகப்போறேன். போடா போடா ” “அடிவாங்காம போகமாட்டல இரு உன்ன”

கையில் இருந்த ஃபைல் கொண்டு அடிச்சு விளையாட.. ,

ஃபேக்டரி மெயின் கேட் தொரக்கற சத்தத்துல விளையாட்ட கை விட்டு ஜன்னல் வழியா எட்டி பாக்குறாங்க… Black Tata Texon car வந்து நின்றது.

கார்த்திக் –” என்னடா சந்தோஷ் கார் மாதிரி இருக்கு. வரேன்னு சொல்லவே இல்ல, “

அப்போ, ஹிரிதயா காரிலிருந்து கீழே இறங்க, அவளோட சந்தோஷ் கூட வந்தான்.

“ஓ.. இவங்க தான் மாமா சொன்ன அவர் பிரெண்ட் பொண்ணு போலடா?!”

சூர்யா –” யாராயிருந்தா நமக்கு என்ன, வேலை ஒழுங்கா நடந்தா சரி.” வெளிய இப்படி சொன்னாலும், கொஞ்சம் சீரியசாவும் கொஞ்சம் ஆர்வமாவும் அவள பாத்துட்டு இருந்த சூர்யா (தனக்குள்ளாக):

“கேரள வாசம் வண்ணமையமா இங்க நுழைஞ்சிருச்சு… இது ஒரு புதிய அத்தியாயம் போல.”

ஹிரிதயா மெதுவாக வாசல் கடந்து உள்ளே நுழைந்த போது, மெல்ல கண்ணை மூடிப் பருகியது அந்த ஃபேக்டரி வாசனை. கம்பத்தின் பழுத்த திராட்சைப் பழங்களின் வாசனை காற்றில் கலந்துகொண்டு, இளந்தேறல் மாதிரி அவளது நாசியை நனைத்தது.

கண்ணுக்கெட்டுன தூரம் முழுக்க பரந்த விரிந்திருந்த பிளாஸ்டிக் கிரேட்ஸ், அதனுள் மிதமான அளவில் அடுக்கப்பட்டிருந்த வெவ்வேறு நிறங்களில் கனிந்து குமிழ்ந்திருந்த திராட்சை கனிகள்…

ஒவ்வொன்றும் தனி அழகு.ஒரு பக்கம் பெண்கள் சிலர் பசுமை சுண்ணாம்பு சேர்ந்த சுவர் ஓரத்தில் அமர்ந்துகொண்டு சுத்தம் செய்யும் வேலை — கவனமாக முகத்தை மூடிய மாஸ்க், கையில் கைத்தறி கைத்தோலை போலவே இருந்த துணியால் ஒவ்வொன்றையும் நேர்த்தியாக துடைத்துக்கொண்டு இருந்தார்கள்.

ஒருபக்கம், சில ஆண்கள் டிராக்டரில் கிரேப்ஸ் பொட்டி ஏற்றும் வேலை – ஒருவரொருவர் இடையே “ஏய், ரெண்டு பொட்டி பக்கமா வைடா!” என அங்கிருந்த இருநூறு மீட்டர் நிலம், ஒரு நேர்த்தியான திராட்சைகளின் கோட்டை போலத் தெரிந்தது.

சந்தோஷ்: “அண்ணா! எப்படி இருக்கீங்க, இவங்க தான் பாஸ்கரன் அங்கிள் பொண்ணு – ஹிரிதயா . நம்ம ஃபேக்ட்ரில புதுசா ஜாயின் பண்ணப்போறாங்க.”

சூர்யா (அவளை ஒரு நிமிஷம் ஆழ்ந்து பார்த்து ):

“வாங்க ஹிரிதயா… உங்க அப்பாவை நான் நேரில பார்த்தது இல்லை, ஆனா அவரோட நம்பிக்கையை நீங்க தாங்கிட்டு வந்திருக்கீங்க. அத காப்பாதுவிங்கணு நம்புறேன். இங்க வேலை பாக்குறது ஒரு நல்ல ஆரம்பமா இருக்கும்.”

சூர்யா, சற்றே அருகிலிருந்த லோட் logsheet-ஐ படிக்கிற மாதிரி நடந்து கொண்டான் ஆனால் நெஞ்சுக்குள்ள அந்த ஷனம் ஒரு வெண்ணிற ஒளி பரவி விட்டது.

மனசுக்குள்ள” நம்ம ஊரு காற்றில கேரள வாசம் கலக்குது போலயே..”

” உங்கள சந்திச்சத்துல ரொம்ப சந்தோசம். This is my first industry-side experience. நிறைய கத்துக்கணும் இங்க இருந்து. Thanks for the opportunity “.

சூர்யா,” நல்ல communication இருக்குது உங்களுக்கு. நம்மோட factoryல் உங்க role – coordination between production, logistics & quality. Documents handling – export side updates… You’ll be working with me and Karthick.”,

“நான் தயாராக இருக்கிறேன், கத்துக்கிறது . என்னோட பிளஸ் ஆக நம்புறேன்.

Suriya (நிமிர்ந்து): “Good,அது தான் ஒரு நல்ல leadership-க்கு foundation. நீங்க இன்னைக்கே கூட நம்மோட system use பண்ணி checklists பாக்கலாம்.

சந்தோஷ் வண்டிப்பெரியார் – லாஜிஸ்டிக் டிரெய்னிங்கு வருவாறு அவரோட உங்க சந்தேகம் கேட்டு தெரிஞ்சுக்கோங்க.”

கார்த்திக் (தோழனோட காதுல மெதுவா ஹிர்தயாவ பார்த்தகிட்டே):

“இவங்களும் நம்ம கிரேப்ஸ் டேஸ்டுக்கு செட் ஆகுற லெவல்டா மச்சி, நம்ம ஆஃபிஸ் இன்னும் ஸ்டைலா மாறப்போது போல!”

சூர்யா:“அது மாறலாம்… ஆனால் punctuality மிஸ்ஸாகாம இருக்கனும்.”

சூர்யா, தன்னுள்ளே ஒரு சுழலில் சிக்கிக்கொண்டுடான்.

இந்த கண்கள்… இந்த முகம்…

இது தான் இதே புன்னகை,

அந்த ஆலப்புழா ட்ரிப்ல சிறிய புன்னகையோடு மனதில் பதிந்த மௌனக்காதல்.

மீண்டும் ஆழ் மனத்திலிருந்து வெளிவர தொடங்கியது.

அந்த முகம், அவனது கல்லூரி காலத்தில் சந்தித்த முகம் தான்!நினைவுகள் அவளை கடைசியாக சந்தித்த நாளை நோக்கி நகர்ந்தது .

அன்று –

கேரளா – கோட்டயம் பேருந்து நிலையத்தில்,

சூர்யா தன்னுடைய கடைசி வருட பரீட்சைக்கு பிறகு ஒரு நாள் வெறும் கல்லூரி பேருந்து வைத்து அவளது கல்லூரி வந்து காத்திருந்தான்.

முகம் மழையில் நனைய, காலில் நீர்துளிகள் தத்தி ஓட அவள் பேருந்தில் ஏறிக் கொண்டிருந்த போது, அவனது கண்கள் அவளைத் தொட்டன. அவளுக்குத் தெரியாமலே, அவளை பின்தொடர்ந்தன..

அதுவே அவன் இறுதியாக பார்த்தது.. அதே புன்னகை, அவளை முதல் முறை பார்த்த நாளுக்குள் தள்ளியது.

அவள் பெயரோ ஊரோ எதுவும் தெரியாது.. கல்லூரி சுற்றுலா வந்த மாணவிகளில் அவளை கண்டான். அங்கே அந்த நொடி நின்றுபோனது அவனது கால்கள்.

மனதில் ஆழ பதிந்து போனது அவள் முகமும் கழுத்தோர மச்சமும்.மீண்டும் ஸ்திரம்பெற்று தேடுவதற்குள் படபட பட்டாம்பூச்சியா பறந்து மறைந்து விட்டாள்.

அதன் பிறகு, என்ன முயன்றும் அவளை பற்றி அறியமுடியவில்லை. இவனும் கல்லூரி காலம் நிறைவடைந்து சொந்த ஊர் திரும்பிவிட்டான்.

பகல் முழுவதும் வேலையில் தன்னை இழுத்துகொண்டான். ஆனால் பல இரவுகளில் இவன் தூக்கத்தை விழுங்கி கொண்டது அவள் முகம்.

இன்று….

மீண்டும் அந்த முகம், அவன் கொஞ்சும் அந்த மச்சம், கனவோ என நினைக்க…

இப்போ அவனுக்கு நேரில் வந்து நிற்கிறது.

உ ஃப்… மூச்சை இழுத்து விட்டு நொடி நேரதில் அவன் தன்னை சமன் செய்ய வெகுவாக போராடினான்.

கார்த்திக் “சூர்யா… ஓரியண்டேஷன் ஃபைல்கள் குடுக்கலாமா?”

சூர்யா (சற்று தவித்தபடி):”ஹ்ம்ம்… ஆமாம். கார்த்திக், அவளுக்கு HR புக்லெட்டைக் கொண்டு வா.

ஹிருதயா, நீ செட்டில் ஆன பிறகு எங்களுடைய செயல்முறைகளை நான் உனக்குக் காட்டுகிறேன்.”

ஹிருதயா: “ம்ம்… நன்றாக இருக்கிறது.”

சூர்யா, தொழில் ரீதியாக அமைதியானவன் ஆனால் உள்ளே… அவன் மனசுக்குள் அந்த நிமிடம் கோட்டயம் மீட்ஸ் கம்பம் மனதிற்குள் சொல்லி பார்த்துக்கொண்டான்.

ஹ்ருதயா, அவளது இடம் நோக்கி முன்னால் கடந்து செல்கிறாள்.

சூர்யா மெதுவாக சிரிக்கிறான். அவனோட கண்ணாடி பின்னணியில் அவளது பிரதிபலிப்பு தோன்றுக்கிறது

………

PS Factory – Admin Block

ஹ்ருதயா ஆபிஸ் அறையை அடைந்து, தன் மேசையிலேயே அமர்ந்தாள். ஏற்கனவே சுருக்கமான பயிற்சிப்பணி திட்டம் கார்த்திக் மற்றும் HR மூலம் வழங்கப்பட்டது.பிறகு, சூர்யா அவளுக்கு திட்ட விளக்கம் கொடுக்க வந்தான். அவன் குரலில் சீரான நிதானம், ஆனால் உள்ளுக்குள்ள ராகம்.

“இந்த 3 நாள் நீ இங்கே எல்லாம் கவனிங்க , நம்ம grape drying unit, packing zone, export documentation எல்லாத்தையும் புரிஞ்சுக்கணும். இன்னைக்கு உங்களுக்கு வேலை logistics coordinator ஆக இருக்கும். அவ்வளவுதான்.”அவள் தலையசைத்தாள்.

சாந்தோஷ் நடுவே வந்து: “நீங்க என்ன ஃபேக்டரில மட்டும் இருக்க போறீங்க? நம்ம கிரேப் ஃபார்ம் ஒரு ஸ்பெசல் சோன் இருக்கே… அங்கே போயி ஒரு ஸ்டாப் டூர் எடுத்துட்டு வரலாம் வாங்க அக்கா. நா உங்களுக்கு எல்லாம் சுத்தி காற்றேன்.”

அவன் excitement இன்னும் ஓயல போல…” ஹிரிதயா சிரிக்க,

பக்கத்துல நின்ற சூர்யாவுக்கு அந்த சிரிப்பு மழைச்சாரலாய் வீசியது.

கம்பம் – மாலை 4:30

திராட்சை தோட்டங்கள், கடைசிச் சூரிய ஒளியில் பொலிவுடன் காட்சியளிக்கின்றன. நந்தவனம் போல் இருந்த அந்த தோட்டத்துல,

ஹிரிதயா முதன்முறையாக தனக்கென ஓரமாய் நின்றாள்.அவள் பாதிகள் உருட்டிய திராட்சைகளை கவனித்து பார்க்க, அருகே சூர்யா வந்தான்.

“வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் ஒவ்வொரு திராட்சையும் இங்கிருந்து தான் கிளம்புகிறது. வெளிநாட்டவர்களுக்கு அதைப் பெறுவதில் பெருமை காண்கிறார்கள், நாமும் அதை தரமாக வழங்கும் பொறுப்பில் ஒரு முக்கியமான பாத்திரமாக இருக்கிறோம். சுருக்கமாக சொன்னால் “அவங்களுக்கு அது பெருமை, நமக்கு அது பொறுப்பு!”

அவள் ஆழமா அந்த வார்த்தைகளை கேட்டு, “இதுவே ஒரு கவிதையா இருக்கு, சார்.”

சூர்யா, “கவிதைதான்னு நீங்க சொன்னதுலயே ஒரு கவிதை இருக்கு.”

அவள் திகைத்து சிரித்தாள்.

—இரவு –

புஷ்பவல்லி வீடு

அந்த நாள் உணவுக்கடையில் வெங்காயக் குழம்பு, முட்டை பொரியல், பாசிப்பருப்பு ரசம், அவல் பாயசம்.

சாந்தோஷ்: “இன்னைக்கு இவங்க எல்லாம் போதும். அக்காவோட first day office ku என்னோட ட்ரீட் ஐஸ் கிரீம் வாங்கியிருக்கேன்.”

ஹிரிதயா: “என்னடா இது… கம்பம்ல இருக்க ஃபிளேவர் எல்லாத்தையும் எடுத்துட்டு வந்த போல இருக்கு.”

ஒரே கொண்டாட்டம் தான் போல அவளுக்கு ஒரு குடும்பம் போல இந்த வீட்டும், தொழிலும், இந்த ஊருமா ஆகிட்டது போல… மனசு ஒட்ட ஆரம்பிச்சது.

—Late Night

சூர்யா மெதுவாக டெர்ரஸ் மேல நின்று இரவின் அமைதியைக் கேட்டுக்கொண்டிருந்தான். கம்பம் ஒலி கூட அந்நேரத்தில் ஒரு இசை மாதிரி கேட்டது.அவன் நினைவுகளில் அவளது முகம்,

ஒரு மெல்லிய ஆசை துளிர்விட ..

தேடல் துவங்குகிறது..

–Song

இதயம் ஒரு கண்ணாடி…

உனது பிம்பம் விழுந்ததடி…

இதுதான் உன் சொந்தம்

இதயம் சொன்னதடி…

கண்ணாடி பிம்பம் கட்ட…

கயிர் ஒன்றும் இல்லையடி…

கண்ணாடி ஊஞ்சல்

பிம்பம் ஆடுதடி…!!!

error: Content is protected !!