வண்டிப்பெரியாரின் கிழக்கே…
மெல்ல கடந்து செல்கிறது ஒரு கார். அவளது முகத்தில் சிறு புன்னகை. வாழ்க்கையின் புதிய அத்தியாயம் ஆரம்பிக்கப்போகும் அந்த நாளின் உணர்வோடு.
கடல் மேகமா ஆன வானத்துல, மழை பிசும்பி இருந்தாலும்… வண்டிபெய்யார் சாலைகள் மேல் ஒரு தண்ணி சாயல் பரவி இருந்தது. கறுப்புச்சிவப்பு கலந்த கார் மெதுவா சின்ன சாலைகள் வழியா ஊருக்குள் நுழைந்துச்சு.
வண்டி, ஒரு பழைய வீடாக இருந்தாலும் பராமரிப்புல பள்ளிசுனு இருக்கும் வீட்டு முன் நின்றுச்சு.
அந்த வீடு தான்…
புஷ்பவல்லி அத்தை வீடு.
“வா பாப்பா… வண்டிலே வந்துட்டியா? ஹாங், ரோடு எல்லாம் ஓகே வா இருந்துச்சு தானே. சோர்ந்து போயிட்ட போல? உள்ள வா வா…!
“அவள் பக்கம் சந்தோஷ் ஓடி வந்து, இரு கையாளும் hi-fi குடுத்து,”ஹாய் ஹ்ருதயா அக்கா! நா தான்… சந்தோஷ். ஒருவழியா நேர்ல பார்த்தாச்சு… எப்ப பாப்போம்னு நெனச்சுட்டே இருப்பேன்!” .
பல முறை வீடியோ கால பேசிக்கிருக்கான். ஆனா இது தான் முதல் சந்திப்பு.
ஹிரிதயா சிரிப்போட அவனைப் பார்த்தா.
புஷ்பவல்லி “இது உன்னோட வீடு மாதிரி தான் பாப்பா. தயங்காம இருக்கணும். எதுவா வேண்டும்னாலும், என்னோட பொண்ணா கேக்கணும்.
ஹிரிதயா கண்களிலே ஒரு மெதுவான நன்றியும், நிம்மதியும் தெரிஞ்சது.
“தேங்க்ஸ் அத்தை… உண்மையிலேயே நான் பதட்டமா இருந்தேன், ஆனா இப்போ ரொம்ப நிம்மதியா இருக்கு.”
சந்தோஷ்:” தாங்கள் வந்ததே எங்கள் வீட்டின் பாக்கியம் இளவரசி … வருக..! வருக..!”
” என்னடா கிண்டலா, நீ சினிமால நடிக்க எங்கிட்ட பிராக்டீஸ் பன்றபோல.. அடி வாங்குவ ”
” ஹா ஹா சும்மாகா .. நீங்க சாப்டுட்டு நல்ல ரெஸ்ட் எடுங்க. நாளைக்கு முதல் நாள் ஆஃபிஸ் போகனும்ல. நா கூட்டிட்டு போறேன். அப்டியே திராட்சை தோட்டம் டூர் போலாம் என்ன ஓகே வா..
“ஹ்ருதயா”டபிள் ஓகே டா”.
“சரி சரி விட்டா நாள் ஃபுல்லா பேசிட்டே இருப்பான். நீ போய் ரெஃப்ரேஷ் ஆகிட்டுவாமா சூடா தோசை ஊத்தித்தரேன் .
“ஓகே அத்த’..
டேய் சந்தோஷ் கதபேசாம அக்காக்கு மேல மாடில ரெண்டாவது ரூம் காட்டு..
“மா ரொம்ப டேமேஜ் பண்ற, உன்ன வந்து பேசிக்கிறேன். நீ வா அக்கா நாம போலாம்”.
“சிறிது நேரத்தில் அவள் வந்ததும், வா சுட சுட சாப்பிட்டா நல்லா இருக்கும்…
அவள் தட்டிலோ, பொடி தோசை தொட்டுக்க உரப்பனா காரசட்னி, தேங்காய் சட்னி, புதினா சட்னி,சாம்பார் வைத்து பரிமாறினார்.
அடுத்து, வெங்காய தோசை, முட்ட தோசை, மசால் தோசை என்று பரிமாற,
“தாயே, புஷ் உனக்கு இவ்ளோ தோசை போட வரும்னு இன்னைக்கு தான் தெரியுது.. இதையெல்லா எங்க மறைச்சு வெச்சிருந்த இவ்ளோநாளா “
” பேசாம சாப்பிட்றா, “
” எங்க வெறும் தட்ட சாபிட்றா அளவுக்கு இன்னும் நா வளர்ல தாயே, மேடம் எதாச்சு மிச்சம் வெச்சா பாக்கிறேன். உனக்கு நா எங்க கண்ணுல தெரிச்சேன். ஒரு தோசை கூட வைக்காம சாப்டனுமாம்ல, நல்ல கதையா இருக்கே “
“ஐயகோ, இத கேக்க யாரும் இல்லையா…
டேய் ரொம்ப சீன் போடாத.. தோசை வேணுமா வேணாமா,
(ரொம்ப பேசிடோமோ, சரி சமாளிப்போம். நம்ம பாக்காததா.. அப்டியே கெத்த மெயின்டெய்ன் பண்ணுவோம்)
” Oh my dear Flower,
why angry..
I’m very hungry
I’m ur Lovable son u know…
Pls கருணை காட்டு ..
“சரி சரி நம்பிட்டேன்..பேசாம சாப்பிட்ற.
“உத்தரவு ராஜமாதா, ஆணையிடுங்கள் அடியேன் காத்திருக்கிறேன்”
இதெல்லாம் பார்க்க ஹ்ருதயா கண்ணுல தண்ணிவர வரைக்கும் சிரிச்சுடு இருக்க…பார்த்த புஷ் ku, மனசே நிறைஞ்சு போச்சு
………
கம்பம் – மாலை 3:30
சூர்யா கார்த்திக் உடன் தொழிற்சாலைக்கு சென்று கொண்டிருந்தான் பக்கத்தில் விரிந்திருக்கும் திராட்சை தோட்டங்கள் காற்றில் புதிய வாழ்வின் வாசனை பரப்புகின்றன.
பசுமை நிறைந்த கம்பம், சூர்யாவின் உயிர்க்கான மூலதனம்.
தொழிற்சாலை வாயிலில் PS Grapes Exports” என்று பெரிய பேனர் கம்பம் வணிக வரலாற்றின் நினைவாகத் தோற்றம் கொடுக்கிறது.
PS என்பது சூர்யாவின் தாத்தா பெரியசாமி அவர்களின் பெயரின் சுருக்கம்.
மூன்று பட்டாம்பூச்சிகள் போல, தொழிலாளர்கள் திராட்சை பைகள் மற்றும் கிரேட்டுகளை எடுத்து தொழிற்சாலைக்கு கொண்டு செல்கின்றனர்.
தொழிற்சாலை உள்ளே சூர்யா கணக்குப் பத்திரங்களைப் பார்த்து, கார்த்திக் உடன் அடுத்த ஏற்றுமதி திட்டங்களைப் பற்றி விவாதிக்கிறான்..
கார்த்திக்“இன்னைக்கு 3 consignments இருக்குடா– ஒண்ணு கேரளா, இரண்டு சென்னை & ஹைதராபாத்.”
சூர்யா “Cold truck-க்கு timing strict. முன்னாடியே சொல்லிருக்கேன். கேரளா பார்டர்க்கு வழக்கம்போல அந்த அவனியாபுரம் செக்போஸ்ட்ல fast-pass arrange பண்ணியிருக்கே?”
கார்த்திக்“ஆமாடா அந்த பக்கம், மாமாவோட மசாலா லோட் இருக்கும். இரண்டையும் சேர்த்து அனுபிடலாம்னு, சொன்னாங்க.”
சூர்யா“இந்த பேட்ச் கேரளாவுக்கு நேரம் தவறாம சென்று சேர்த்துக்கொள்ள வேண்டும். அதோடு அத்தையோட பக்கத்து ஏலக்காய் உற்பத்தியை கூட ஒரே சமயத்தில் முடிச்சுகனும்.”
கார்த்திக்:“அந்த வேலை வண்டிபெரியார்ல தான், இல்லையா?”
சூர்யா (சிரித்து): “ஆமாடா, அத்தை குடும்பம் தான் நம்ம மசாலா பொருள் பிசினஸ்க்கு வலுவான ஆதாரம். அங்க போனா சந்தோஷ் கிட்ட நம்ம தொழிலுக்கு தேவையான தகவல் கிடைக்கும்.”
இப்படியே சூர்யா மற்றும் கார்த்திக் தொழில் அசுர வேகத்திலும் வளர நண்பர்களிடையே உள்ள இனிய நட்பு மற்றும் நம்பிக்கையையும் உடன் வளர்ந்துகொண்டே போனது.
சூர்யா & கார்த்திக் லோட் வண்டி ட்ராக் செய்துட்டு மீதி வேலைய பண்ணுறாங்க.
கார்த்திக் “லோட் போய் சேர்ந்துச்சாம்டா .. மாமா போன் பண்ணாரு. மாமா சொன்னாங்க… அவருக்குத் தெரிஞ்ச பிரெண்ட் பஸ்கரன் , கேரளாவுல இருக்காரே… அவரோட பொண்ணு நம்ம ஃபேக்டரில சேர நாளைக்கு வர போறாங்களாம்.
English Literature முடிச்சு இருக்காம்.
சூர்யா (ஒரு நிமிஷம் யோசிச்சு):
“ஓ… ஆள பாத்த மாதிரி ஞாபகம் இல்ல . மலைச்சுழலில் வளர்ந்தவங்க நம்ம பூமிக்கு யோசிக்கிறதுல நிறைய படிச்சு புரிஞ்சு தெரிஞ்சுபாங்க பாக்கலாம்…
கேரளாலிருந்து வந்தாலும், இப்போ இவங்க பயணம்… கம்பத்துல தானே ஆரம்பிக்குது!”
Song….
காட்டுக்குள்ள
நீயும் போகாதே
உன்ன பார்த்தாலே
கொட்டுகிற தேனீக்கூட்டம்
தேனெடுக்க உதட்டைசுத்துமடி…!!!