அதிகாலை நேரம்…
5.30மணி
சூர்யாவின் அறை.
ஜன்னல் வழியாக மெதுவாய் புகும் கம்பம் காற்றும், சுவர் மீது பட்டு விழும் செம்மஞ்சள் வெளிச்சமும்… அறையில் ஒரு அமைதியைக் கொண்டு வந்தன.
உடற்பயிற்சி செய்து வேர்க்க விறுவிறுக்க கீழே இறங்கி வந்தான். தனக்கான கிரீன் டீயுடன் தொலைக்காட்சியை ஆன் செய்து ஷோபாவில் அமர காலைநேர அமைதியை கிழித்து கொண்டு வந்தது
📺 தொலைக்காட்சியில் எதிர்பாராத Breaking News
“முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரனின் மச்சான் பாண்டியன் இன்று காலை சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார்…”
பல்வேறு கல்வி நிறுவனங்களின் மூலம் போதைப் பொருட்கள் விநியோகம்.
அரசுக்கு சுமார் 83 கோடி இழப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல். கடந்த 7 வருடங்களாக, தன்னுடைய ‘தாயார் அறக்கட்டளை’ என்ற பெயரில் உருவாக்கப்பட்ட பவுண்டேஷன் மூலம் பள்ளி, கல்லூரிகளுக்கு மாற்றுக்கால நன்கொடைகள் அளிப்பது போல செய்து பின்னணியில் ஒரு பெரிய நெட்வொர்க் செயல்பட்டு வந்தது, அந்த இடங்களில்…
🔴 போதைப் பொருள் விற்பனை,
🔴 அரசுக்கு சொந்தமான டெண்டர் சம்பந்தமான தகவல்களை ரகசியமாக வெளியிட்டு பணம் பார்த்தல் போன்றவை நடத்தப்பட்டதற்கான முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன.”
📍 காவல் துறையின் தெரிவிப்பின்படி, இதனால் கடந்த 3 வருடங்களில் மட்டும் தரவரிசை உயர்ந்த கல்லூரி மாணவர்களில், 18% மாணவர்கள் போதைபொருள் வழக்குகளில் முதல் தரம் செயல்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.
மாணவர்களின் நம்பிக்கையை பயன்படுத்தி, போதைப் பொருட்கள், தவறான தனியார் டீல்களால் அரசுக்கு ஏற்பட்ட பல கோடி நஷ்டம்,மற்றும் மாணவர்களின் மனநலத்துக்கும் எதிர்மறையான தாக்கங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது .
📌 அரசுத் தரப்பின் தகவல், பாண்டியன் நடத்திய கல்வி அறக்கட்டளையின் மூலமாக, முக்கிய மாநிலக் கல்வி நிறுவனங்களில் போதைப் பொருள் விற்பனை, அரசுத் திட்டங்களில் உள்ளூர் தரவுகள் கசியும் சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளன.
இந்தச் சூழலால் பாதிக்கப்பட்ட மாணவர் எண்ணிக்கை 5000-ஐ கடந்துவிட்டதாக, மாணவர் நல அமைப்புகள் தெரிவித்துள்ளன.
📉 “மத்திய & மாநிலம் சார்ந்த அரசு நிதி கல்லூரிகளுக்கு கொடுக்கப்பட்ட துணை உதவித்தொகை – தவறான வழியில் பயன்படுத்தபட்ட புகாரும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.”
📌 “இந்த விவகாரத்தில் முக்கிய ஆதாரங்களை வழங்கிய ‘தகவல் அளிப்பவர்’ தன்னுடைய பெயரை வெளியிட மறுத்துள்ளார். ஆனால் அவரால் கிடைத்த இந்த வீடியோ பதிவு, ஆடியோ தகவல் , சட்ட விரோத ஒப்பந்தம் கோப்பு இந்த கைதுக்கு முக்கிய காரணம்.”
சூர்யா மெதுவாய் திரும்பிப் பார்த்தான். அவன் முன்னே ஒரு பெரிய அறிக்கையைப்போல நகர்ந்தது அந்த செய்தி.
📽️ சில வாரங்களுக்கு முன்னால்…
சந்தோஷோட நண்பன் அருண், சூர்யாவோட திராட்சை குடோன்க்கு பகுதிநேர வேலைக்கு வருவான் கல்லூரி முடிச்சு.
ஒருநாள் மாலைநேரம், ஆபீஸ் வந்த சந்தோஷ் “அண்ணா… நம்ம அருண் தெரியும்ல.. அவன் காலேஜ்ல ஒரு புது பிளேஸ்மென்ட் கம்பெனி வந்திருக்காங்க… ஏதோ புதுசா scheme பத்தி சொல்லி முன்பணம் கட்டணும்னு டென்ஷன் ஆகுறான்.”
சூர்யா “என்ன scheme?”
“ஓரு கம்பெனி வந்துச்சு… அமெரிக்கால internship, வங்கி கடன் கூட அவங்களே ஏற்பாடு பண்ணி தரங்கலாம். overseas skill training எல்லாம் சொல்லிதரேன் சொன்னாங்க.., பசங்ககிட்ட புதுசா கிளம்பிவிடுறாங்க. ..Cash advance பண்ணா… சீக்கிரம் signup பண்ணி visa-க்கு ரெடி பண்ணுவங்களம் “
“அந்த கம்பெனி பேரு?”
“Smart Uplift Alliance… சென்னைல மெயின் ஆஃபிஸ் இருக்குனு சொன்னா. அருண்கிட்ட brochure இருக்குன்னா கொண்டுவர சொல்லாட்ட “.
“Brochureல Soorya-க்கு சில வரிகள் strike ஆகுது
*பின்னணி சரிபார்ப்பு இல்லை”
*ஆவணங்கள் இல்லாமல் கடன்
*துபாய்/பிலிப்பைன்ஸ்/தாய்லாந்தில் வேலைவாய்ப்பு
பாண்டியன் அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் கையாளப்படுகிறது
சூர்யா யோசனையாக பாண்டியனா???.
“சந்தோஷ் நீ அருணுக்கு கால் பண்ணி நம்ம ஃபேக்டரி வர சொல்லு.. அவன்ட்ட பேசணும்.”
“ம்ம் சரி நா வர சொல்றேன்”
……..
சிறிது நேரத்தில் அருண் வர அவனிடம் தன்னோட சந்தேகத்தை கூறி என்ன செய்ய போறனும் சொல்றான்.
சூர்யா அருணை ” உள் மாணவர் சாட்சியாக” அனுப்ப முடிவு செய்து- project explain பண்ண பாண்டியன் குழு வரும் போது அவங்க பேசுறத ரெகார்ட் பண்ண சொல்றார்.
Project team meet day
அருண், அவனோட போன்ல சூர்யா சொன்னமாதிரி ஆடியோ ரெகார்ட் பண்ணிட்டு வந்து சூர்யாகிட்ட ஆபீஸ்ல வந்து பார்க்கிறான்.
சூர்யா, “அருண்-நோட ஃபோன்ல ஆடியோ பிளேபேக் பண்ணுகிறான்
அதில்
“சார், டெஸ்ட் பேட்ச் ல காலேஜ் பாய்ஸ் ரெடி ஆ இருக்காங்க…”
“இந்த பக்கம் HRக்கு சொல்லாம முதல்வர கன்வின்ஸ் பண்ணுங்க…”
“Drugs plan soft-aa தான் தொடங்கும், அவனுங்க கிட்ட விழிப்புணர்வு பயிற்சி னு சொல்லுங்க…”
நாம collegeல பார்த்த பசங்க… இதுக்காக தான் use ஆகுறாங்களா?”
…….
சூர்யா, கார்த்திக்கு call பண்றான்
“ஹலோ.. சொல்லு மச்சி”
“மச்சி… ஒரு முக்கியமான விஷயம் , இந்த பாண்டியன், காலேஜ் பசங்கள ஒரு போதைபொருள் சப்ளை நெட்வொர்கா பயன் படுத்துறான்.”
“எப்படிடா அவ்ளோ உறுதியா சொல்ற “
மதுரை வட்டார கல்லூரிகளுக்கு” புதிய டெவலப்மெண்ட் ப்ராஜெக்ட்” என்ற பெயரில் கல்லூரிகளுக்கு வந்து, மாணவர்களுக்கு placement support, skill training, foreign internships மாதிரி பொய்யான வாய்ப்புகள் காட்டி, அதை வைத்து தன்னுடைய drugs traffic & illegal influence யூஸ் பண்ணுகிறான். மாணவர்களின் ஆர்வத்தை தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன.”
“அடப்பாவிங்களா.. வெளிய பெரிய சமூக சேவை செய்ற மாதிரி இந்த வேலை தான் செய்றானுங்களா..”
ம்ம் ஆமாடா கல்லூரி மாணவர்களுக்கு கிடைத்த மாதிரி பாக்கெட்டை நேரில் வாங்கி மருத்துவ ஆய்வகம் மூலமாக இரசாயன பகுப்பாய்வு பண்ணினேன். நம்ம கிட்ட இப்போ ஆடியோ வீடியோ தகவல் இருக்கு. அவன எதாச்சும் செய்யணும்டா”
“மச்சி பேசாம இந்த ஆதாரம், நாம சிபிஐக்கு குடுத்தா, அவங்களே அவன மொத்தமா முடிச்சுவிட்டுவாங்க “..
” ம்ம் அதுவும் சரிதான்”
……….
📂 முழு அறிக்கை, மின்னஞ்சல்களின் சங்கிலி, போலி மாணவர் கருத்துப் படிவங்களுடன், ஒரு ட்ரோன் மூலம் எடுக்கப்பட்ட கலவை பின்புற கிடங்கு படங்கள்… அனைத்தும் email மூலமா சிபிஐ அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
CBI legal team அந்த மெயில் பாத்த உடனே, ஷாக் ஆகி உடனடியா நடவடிக்கை எடுத்து விட்டார்கள்.
————
📺 Back to Present
அவன் முகத்தில் பதற்றமோ, பரபரப்போ இல்லை…
மாறாக, ஓர் அமைதி… ஆனால் அந்த அமைதி தானாக வந்ததல்ல. ஒரு நீண்ட நாள் சுமையை இறக்கிய பின் கிடைக்கும் ஓய்வாக இருந்தது.
காலைநேர பரபரப்பில்,
சமையல் வாசனையோடு காபி மனமும் வந்துகொண்டிருந்த நேரம்… வாசல் கதவு திறந்து “தட் தட் தட்” னு ஓசையோட கார்த்திக் உள்ள வந்தான்.
“மச்சி… நியூஸ் பாத்தியா?”
சூர்யா நிமிர்ந்து பார்த்தான்.
“ஹ்ம்ம்…” னு சிரிப்பில்லாமல் தலை ஆட்டினான்.
“விடியகாலைலேயே வீட்டுக்குள்ளே போய் தூக்கிட்டாங்கனு சொல்லிக்கிறாங்க… மொத்த ஏரியாவும் சுத்துபோட்டடங்க. ஆளே ஆடி போயிட்டான்… மூஞ்சி பேய் அரஞ்ச மாதிரி இருக்கு… டிபார்ட்மெண்ட்லயே யாருக்கும் சொல்லாமே இவ்வளோ சீக்கிரம் பிடிச்சிருக்கானுங்க. இன்னைக்கு மட்டும் இல்ல, வாழ்க்கை மொத்தமும் அவனுக்கு ஜெயில் தான் ,” என்றான் கார்த்தி.
சூர்யா மெதுவா ஒரு சுவாசம் விட்டான். தனிமையில் இருந்து வந்த குரல் மாதிரி
“இதுக்காகத்தான் இவ்வளவு நாளா காத்திருந்தேன். … அவன் பின் நடக்குற ஆழம் தெரியாம எல்லாரும் அவன் பக்கமா இருந்தாங்க. ஆனா என்ன பண்ணி வெச்சான் பாத்தியா கார்த்தி…”
கார்த்தி அவனை கவனித்தான்.
“சின்ன பசங்கடா படிக்க ஆசை, ஆர்வம் இருக்கு ஆனா fees கட்ட முடியாம இருக்க பசங்கல… ‘trust’ அப்படின்னு பெயர்ல ஸ்பான்சர் பண்ணற மாதிரி நடிச்சு… அந்த பசங்கள வெச்சு கடந்திருக்கணுங்க”
அவனோட குரல் கிண்டலோ, கோபமோ இல்லாத ஆழமோட வந்தது.
“யாருக்கும் தெரியாம, நல்லவனா இருந்துட்டு இப்படி மொத்த சமுதாயத்த விஷமா மாத்தி வெச்சுடாங்க “
கார்த்தி மெதுவா, “இப்போ தெரியுதுடா நீ என்ன ஃபீல் பண்ணி அந்த கேஸ்ல இன்வால்வ் ஆயிருக்கேன்னு… நீ மட்டும் தான் இந்த மாதிரி ஆள் முன்னாடி நிப்பே, ஆனாலும் உனக்கு தைரியம் ஜாஸ்தி தான் மச்சி”.
அவனோட கண்கள் சற்று தூரத்தை பார்த்தன.
காரிடார் ஒளியில் ஒரு நிமிடம் அமைதி.
“வாடா டிபன் ரெடி .. இன்னைக்கு நான்தான் குக் பண்ணேன். அத்தை வரங்காணு சொன்னாங்க.
“யாருகூட வாங்க அத்தை , ஹ்ரிதயாவ கூடவா? ன்னு கார்த்தி புன்னகையோட கேட்டான்.
“ஆமா அவங்கதான் …”
— —–
கிச்சனிலிருந்து வரும் காய்கறிகள் வதக்கும் சத்தமும், நெய் வாசனையோடு முந்திரி மிதக்கும் பொங்கலும் கூடவே சூர்யாவின் ஹம்மிங் சேர்ந்திருந்தது.
வீட்டு பெரியவர்கள் உணவுமேஜையில் அமர்ந்திருக்க, சூர்யா உள்ளே அடுப்பில் தோசைக்கல்லை சூடேற்றி அதன் மீது மாவை வட்டமாக ஊற்றிக் கொண்டிருந்தான்.
“தாத்தா… இன்னும் ஒரு இடியாப்பம் வெச்சுகோங்க?
அப்பா உங்களுக்கு தோசை போடவா?” என அவன் பாசமாய் விசாரிக்க, அனைவரும் சிரிப்புடன் தலையாட்டினர்.
அந்த நேரம் சர்ரென கார் வந்து நின்றது வெளியே..
பூஷ்பவல்லி அத்த, ஹ்ருதயா, சாந்தோஷ் காரிலிருந்து இறங்க சூர்யா வாசல் வந்து வரவேற்றான்.
“வாங்க அத்த! உங்களுக்கு தான் வெயிட்டிங்.. ரொம்ப நாளாச்சே நீங்க என் கையால சாப்டுட்டு இன்னைக்கு என்னோட ஸ்பெஷல்.”
அத்தை, சிரிச்சபடி “அடடா! சூர்யா சமையலா?!”
ஹ்ருதய ஒரு பக்கம் சிரிச்சுக்கிட்டு “நீங்க சமைப்பிங்களா? நிஜமாவா?”
“ஏன் நம்பிக்கை இல்லையா , சாப்ட்டு பார்த்து சொல்லுங்க!” என சூர்யா சிரிச்சபடி கேட்டான்.
குரல் சாதாரணமா இருந்தாலும், மனசுக்குள்ள அவள் வந்ததுலே ஒரு உற்சாகம் வந்து ஒட்டிக்கொண்டது. சந்தோஷ், ” எப்படி இன்னைக்கு முழுக்க வாசல்ல நின்னே பேச போறீங்களா.. உள்ள போற ஐடியா இருக்கா இல்லையா, வாசனைவேற மூக்கை துளைக்குது”.
சந்தோஷ் தோளில் தட்டி வாடா வாடா.. என அழைத்து சென்றார்
அத்த உள்ளே வந்து உக்கார்ந்தபடியே
” அப்டியே எங்க அம்மா செய்ற மாதிரி இருக்கு வாசனை… ஆனாலும் சூர்யா , இவ்ளோ மணமா நீ சமைக்கிறது, காரணம் எங்க அம்மா சொல்லி தந்ததால தானே.”
சூர்யா மெல்லப் புன்னகையோடு. “நிச்சயமா அத்த, பாட்டி தான் குக்கிங் குயின்.. அவங்களால தான் நான் இவ்வளோ நல்லா கத்துக்கிட்டேன்.” மேசையின் மேல் சூடான இடியாப்பம், தேங்காய் பால், கமகம வெஜ் குருமா, தேங்காய் சட்னி, சின்னவெங்காய சாம்பார், வென்பொங்கல்… இது எல்லாம் சூர்யாவின் டுடேஸ் மெனு!.
“சூர்யா… இது எல்லாம் நீயா பண்ண?” என்ற பாட்டி ஆச்சர்யத்தோடு கேட்டதும், அவனோ மெதுவா சிரிச்சபடி,
” அத்த வர்றாங்கல அதான் ஸ்பெஷல்” என சொல்லிவிட்டான்.
அம்மா சாப்பிட்டு விட்டு வாயைத் துடைத்தபடி
“உண்மையா சொல்றேன்… சாப்பாடு ரொம்ப நல்லா இருக்கு. அந்த வெஜ் குருமா… செம்ம டேஸ்ட் தேங்காபால் போட்டு நல்ல ருசியா.. ம்ம் ம்ம் “
அத்தா ” எங்க அம்மா கைபக்குவம் … அப்டியே உங்கைல இருக்குடா, உன்ன கட்டிக்க போற பொண்ணு கொடுத்து வெச்சிருக்கணும்!”
அந்த நிமிஷம்… சூர்யா சட்டென எச்சரிக்கையாய் சிரிப்பு அடக்கி, சும்மா நிமிர்ந்து அவளை பார்க்க…அந்த பார்வை…
அவளும் அவனைப் பார்த்துக்கொண்டே இருந்தாள்… ஏற்கனவே அவனை ரசித்துக் கொண்டிருந்த அவள் கண்கள், அந்த நொடி ஒரு பேச்சில்லா உரையாடலை ஏற்படுத்தின..
பின்னர் இருவரும் பாவிக்காதவர்களாக திரும்பிக்கொண்டனர். அத்தை கண்ணாடி துடைத்தபடியே, அவளிடம் மெதுவாக
“நம்ம வீட்டுல இருக்குற ஒவ்வொருத்தருக்கும் சூர்யா சமையல்னா ரொம்ப பிடிக்கும் … சாப்பாடு மட்டும் இல்லம்மா, அவனோட மனசும் நல்ல மனசு”.
மெல்ல ஒரு புன்னகை அவளிடம் , பக்குவமாயிருந்த அந்த இடியாப்பம் போல… அவள் மனதில் மெதுவாக சிக்கிக்கொள்ள ஆரம்பித்திருந்தான்.
—————–
சாப்பாடு முடிந்து, எல்லோரும் நிமிர்ந்த போது, அவனாகவே தட்டையும், கிண்ணங்களையும் எடுத்து, நா வச்சுடறேன் அத்த நீங்க ரெஸ்ட் எடுங்க…” என்று சின்ன குரலில் சொல்லிக்கொண்டே அவன் மேஜை மீதுவச்சிருந்த பாத்திரங்களை எடுத்துக்கொண்டான் கிச்சன் பக்கம் நடந்து செல்ல.
அவன் நடந்து செல்லும் நேரம்… அவளும் எழுந்து வந்தாள்.
“நானும் உதவி பண்றேன்…” என சொல்லிக்கொண்டு அவனுக்கு பக்கத்தில் வந்து நிற்க, சூர்யா ஒருநிமிடம் திரும்பிப் பார்த்தான்.
“அதுக்கு தான் நான் இருக்கேன்… நீ ஓய்வெடுக்கலாமே,” என்றான் சிரிப்போடு
.“ஓய்வு எதுக்கு… ஷேர் பண்ணி வேலை பண்ணா சட்டுனு முடிஞ்சுரும், வாங்க நா உதவுறேன்.. இதுவும் நம்ம வீடு தானே பாஸ்…” என்றாள் அவளும் சின்ன உளறலில், சிரித்தபடி.
அவள் கையில் மூடி, கிண்ணம், தட்டு என இருக்க…
அவன் கையிலோ பெரிய பாத்திரங்கள் பக்கத்துல இருந்த சந்தோஷ்
“அடடா! நல்ல ஜாடிக்கு ஏத்த மூடி போல இருக்கே உங்கள பாக்க!” என கிண்டல் பண்ண
சூர்யா வெட்கம் கலந்த முறையோடு, சந்தோஷை பார்த்து ,”வாய் கூடிபோச்சு உனக்கு .. இரு வந்து கவனிக்கிறேன்.”
கிச்சனுக்குள் போக, ஹ்ருதயா அவனை மெல்ல பின் தொடர்ந்தாள் . இருவருக்கும் நடுவே பகிரப்பட்ட இடம் , பேரமைதியாக தோன்றியது. கிண்ணங்கள் மேசையில வைக்கற அழுத்தம் இல்லாத மென்மையான சத்தம், ஓடும் தண்ணி, ஜன்னல் வழியாக வந்த தும்பி — எல்லாமே அப்படி ஒரு மனசைக் கிள்ளும் அமைதியோட இருந்தது.
அந்த அமைதியை கிழித்து கொண்டு வந்தது அவளின் மென்குரல்,
“பொதுவா நீங்க என்னென்ன சமைப்பீங்க ?” என்று அவள் கேட்க,
சூர்யா கிச்சன் கண்ணாடி ஷெல்பில் சாய்ந்தபடி மெதுவா சொன்னான்
“சின்ன வயசுல பாட்டி சமைக்கிற பார்த்து எனக்கும் ஆசையா இருக்கும்.. அவங்க சமைக்கும் போது கூட நின்னு எப்படி பண்றாங்கனு நிறையப் கத்துக்கிட்டேன்… Veg-னா வெண்டைக்காய் புளி குழம்பு, நெய்யில வதக்கிய பெருங்காய சாதம், சேப்பங்கிழங்கு ரோஸ்ட் , முருங்கை பச்சடி.. அப்புறோ Non-veg-னா நாட்டு கோழி குழம்பு, சிக்கன் எலும்பு சூப்ல சேமியா போட்டு பிரியாணி , பச்சை மிளகாயும் சின்ன வெங்காயம் தேங்காய் போட்டு வைக்கும் அயிரை மீன் குழம்பு, மட்டன் சுக்கா… இப்படி கொஞ்சம் கொஞ்சம் தெரியும். “
“ப்பா… உங்க list கேக்கும் போதே நாக்குல நீர் வருது. நான் நிஜமா சொல்லறேன்… இந்த மாதிரி அந்த ஃபுட்டோடா சுவை மாறாம , இவ்வளோ ஈடுபாட்டோடு இருக்க ஒருத்தரை நான் இப்போ தான் பார்க்கிறேன்.”
……
கிச்சன் சுத்தம் முடிந்ததும், ஹ்ருதயா கை துடைத்துக்கொண்டு வெளியே போனவுடன், சூர்யா மட்டும் அடுப்பில் , ஃபில்டர் காபி பண்ண ஆரம்பித்தான்.
மூடிய பித்தளை ஃபில்டரில் இருந்து தேனாக பாயும் டிகாஷனை மூடியைத் திறந்து, சற்று பக்கமாகக் கொஞ்சியபடி வாசனையை முகத்தோடு அருகில் கொண்டு வர,
Hridhaya முகத்திலேயே ஒரு மென்புன்னகை.
எத்தனை ஆண்கள் தான் இப்படிச் சமைக்க கற்றுக் கொள்வாங்க? அதுவும் ஒரு காபி மாதிரி சின்ன விஷயத்திலேயே இவ்வளவு அக்கறை காட்டுறவங்க…அப்படியே என் அப்பா நினைவுக்கு வராரு
….
சூர்யா, கப்பில் காபியை ஊற்றி, தட்டுடன் அவளுக்கு நீட்டினான்.
“முதல்ல நீ டிரை பண்ணு… குடிசிட்டு சொல்லு எப்படி இருக்குன்னு. அந்த காபி வாசனையோடு கலந்து வந்த அந்த நிமிடம்… ஹ்ருதயாவின் மனசுல ஒரு எளிமையான ஆனந்தம் பதிய ஆரம்பிச்சது.
சூர்யா காபி ட்ரேயை ஹ்ருதயவிடம் நீட்டி போ போய் எல்லாருக்கும் குடு ..
நானா? இல்லவேணாம்!”
“அட போப்பா! போருக்கா போக சொன்னா? காபி தான் தர சொன்னேன்!”
ஹ்ருதய காபி ட்ரேயையுடன் வெளிவர சந்தோஷ் திரும்பி பார்த்து
” அடடா ஏதோ பொண்ணு வரமாதிரி இருக்கு, அங்க பாருங்க “என சொல்ல அனைவரும் திரும்பி பார்த்து விட்டனர்.
சட்டென அனைவரும் பார்க்க, ஹ்ருதய சிறு வெட்கமுடன் “,சந்தோஷ்”…. என இழுத்து அத்தையிடம் நீட்ட,
அத்த மெதுவா வாங்கிக்க , அடுத்து தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, சந்தோஷ், தரும்போது எல்லோரும் சின்ன புன்னகையுடன் எடுத்து கொள்கிறார்கள்.
கடைசியாக… tray-யில் இருக்கும் அந்த கடைசி கப்பை , அவளே அவனிடம் நீட்டுகிறாள்.
சின்ன புன்னகையுடன்
“இந்தாங்க உங்க கப் வந்துடுச்சு பாஸ் எடுத்துக்கோங்க…”
சூர்யா கண்ணை அவளிடம் இருந்து எடுக்க முடியாமல் பார்த்துக்கொண்டே கப்பை எடுத்துக் கொள்கிறான்.
அவளிடம் இருந்து அந்த காப்பி கப்பை எடுத்துக்கொண்ட அந்த கணம்…
சூடான காபிக்கூட சில்லென்று மழைத்துளியாய் பாய்ந்தது .
அவனுக்கு என்னமோ பெண் பார்க்க வந்த எபெக்ட்… அவர்கள் இருவரும் இருவரையும் பார்ப்பது, அந்த வீட்ல உள்ளவர்களுக்கு இயல்பாக மாறிய அந்த காபி சந்திப்பாக்கவே தோன்றியது.
அங்கேயே சற்று நீண்ட பார்வை… சுவைக்கும் முன் வாசனையை சுவைக்கிற மாதிரி…
இவங்களோட கண்ணோடு கண் பேசும் பார்வை பரிமாற்றம் யாரும் பார்க்காத மாதிரி இருந்தாலும், அத்த மட்டும் அவங்களையும் அந்த காபி பரிமாற்றத்தை பார்த்து கொண்டு இருந்தார்.
கண்ணோடு கண் பேசும் ஒரு நேரம்…சொல்லாமலே சில நிமிடங்கள்,மனம் பேசிக் கொண்டதே!”
………….
Song
கள்ளுர பார்க்கும்பார்வை உள்ளுர பாயுமேதுள்ளாமல் துள்ளும்உள்ளம் சல்லாபமேவில்லோடு அம்பு ரெண்டுகொல்லாமல் கொல்லுதேபெண் பாவை கண்கள் என்றுபொய் சொல்லுதே