Epi 11
வெள்ளிக்கிழமை
காலை.
அத்த வீட்டு பூஜையறையில்,
” துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம்,
நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்,
நிஷ்டையுங் கைகூடும்,
நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை.”
குட்டி ரேடியோவில் பாட , தலையில் சுற்றிய துண்டோடு வாய் அதன் பாட்டிற்கு கவசம் பாட , ஃபில்டரில் இறங்கிய சூடான முதல் டிகாஷனில் காபி கலந்து கொண்டு இருந்தார் புஷ்பா அத்த.
ஜன்னல் வழியே நுழையும் பசுமை காற்று, வீட்டின் உள்ளங்கையை நனைய செய்தது.
அந்த அமைதியான காலையில், புடவையில் மெதுவாய் நடந்து வருகிறாள் ஹ்ருதயா.
இன்னும் நேற்று வரை புதியவளாக இருந்தவள், இன்று இந்த வீடு, இந்த நிசப்தம், இந்த வாசனையோடு தன்னை சேர்ந்தவளாக உணர ஆரம்பித்தாள்.
“அத்த…நேத்து சூர்யா சார் வீட்டுக்கு லஞ்ச் சாப்ட போனோம். அங்க அவங்க அப்பா தனியா வீட்ல தங்க வேணாம். எங்க வீட்டிலேயே தங்குகனு சொல்லிட்டாரு… “
அத்தையோ, காபியை இரண்டு டம்ளர்களில் ஊற்றிபடியே, மெதுவாய் சிரித்தபடி,
“ஆமாடா… அண்ணா நேத்தே கால் பண்ணி சொன்னார். அந்த வீடு… அந்த குடும்பம்… ஒரு பெண்குழந்தைக்கு வேண்டிய பாதுகாப்பும் பாசமும் இருக்கற இடம். நீ அங்கே இருக்கறதால எனக்கும் ஒரு பெரிய நிம்மதி. ரொம்ப சந்தோஷமா இருக்கு ராசாத்தி.. எனக்கும் முதலே இந்த யோசனை தான்.
ஆனா உங்க வீட்ல எப்டி எடுத்துப்பாங்க அப்டின்னு தான் இங்க இருந்து போக சொன்னோம்.. என்ன இருந்தாலும் வயசு பொண்ணு எடுத்தும் இன்னொருதவங்க வீட்ல விட யோசிப்பாங்கள அதனால தான் நானும் தனி வீடு சொல்லியிருந்தேன்.
“,ம்ம் “
அவர்கள் இரண்டு பேரும் காபி ட்ரேயை எடுத்துக்கொண்டு, மூடியிருந்த கிரில் கதவை திறந்து, காரிடாரில் போட்டிருந்த ஒரு பெரிய பீங்கான் மேசையை நோக்கி நகர்ந்தார்கள்.
மேசையின் மேல் சின்ன தொட்டிகளில் புதிதாக பூக்கத் தொடங்கிய 🌷 துலிப் செடிகள்.சூரியனின் வெயிலோடு போட்டிப் போட்டுச் சிரித்தது.
அத்தை, காபி கப்பை அவளிடம் நீட்டியபின் சொன்னார்,
“இன்னைக்கு வெள்ளிக்கிழமைல… வெள்ளிக்கிழமை என்பது மஹாலட்சுமிக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாள். வீட்டு பொண்ணுங்க மஹாலக்ஷ்மி அம்சம், வீடு விட்டு வெளிய போய் தங்க மாட்டாங்க.
நீயும் எனக்கு பொண்ணு தான்
அதனால் இன்னைக்கு வேண்டா நாளைக்கு சனிக்கிழமை போலாம் சூர்யா வீட்டுக்கு நானும் கூட வரேன். உனக்கும் எளிதா இருக்கும்… எனக்கும் எல்லாரையும் பாத்த மாதிரியும் இருக்கும்.”
ஹ்ருதயா காபி ஒரு சிப் எடுத்து வைக்க, உள்ளம் முழுக்க அந்தப் பாசம் குளித்துக் கொண்டது. அவள் கண்கள் எதையோ தேடியும், எதையோ அடைந்தும் போலக் காணப்பட்டது.
அந்த சமாதானத் துளிகளில், அவள் மனசு மெதுவாய் ஒரு வீட்டிலிருந்து “வீடாக” மாறும் பயணத்துக்குள் முன்னேறத் தொடங்கியது…
பின் அந்த காலை நேரத்தில், சமையல் பற்றிய உரையாடல் சுடுசுடுப்பாகதான் துவங்கியது.
“இன்னைக்கு பூசணிக்காய் 🎃 எரிச்சேரி பண்ணலாம்னு நினைக்கிறேன். பருப்பு சேர்த்து கொஞ்சமா தேங்காய் அரைச்சு விட்டா சுவை கூடும்.
அதோட சேர்த்து மோர்கறி , பீன்ஸ் 🫘 மிளகுபுரட்டி பண்ணிடலாம் , கூட தக்காளி 🍅 ரசம் 🍚 சாதம் வச்சுக்கலாம் ” என அத்த சொன்னபடியே சமையல் இடத்திற்கு நடக்கத் தொடங்கினார்.
“நீ காய்கறி கட் பண்ணிதரியா?” என்று அத்த கேட்டவுடன்,
“சொல்லுங்க அத்த, என்ன கட் பண்ணணும்னு … யாம் இருக்க பயமேன்!” என்றாள் ஹ்ருதயா,
ஒரு நட்பும் நெருக்கமும் கலந்த புன்னகையுடன்.அந்த சிரிப்பிலேயே சமையலின் வாசனை தொடங்கியது.
பூசணிக்காய்கள் சதுரங்களாக துண்டாக்க. அத்த அந்தப்பக்கம் ஒரு குக்கரில் பருப்பை வேக வைத்து, பீன்சை பொடியாக நறுக்க ஆரம்பித்தார்.
இரண்டு பேருக்கும் இடையில் நடக்கும் ஒவ்வொரு உரையாடலும், சுவை சேர்த்த பூண்டுப் பொடியைப் போல அந்த நெருக்கத்தை ஆழப்படுத்தியது.
“பூசணிக்காயில் கண்ணுக்கு தேவையான வைட்டமின் ஏ நிறைய இருக்கு… ஒட்டுமொத்த உடலுக்கு நலமும் தரும்.
அதோட கருப்பு காராமணி சேர்த்தா சத்து அதிகமா வரும்,” என்று ஆரம்பித்த அத்தை
“வெந்தயம் இருக்கிற தயிர்குழம்பு உடலுக்குள் உள்ள வெப்பத்தை குறைக்கும்… அதனாலதான் நம்ம முன்னோர் அதை அடிக்கடி சாப்பிடச்சொன்னாங்க,”
“பீன்ஸ் – எண்ணெய் நிறைய போடாம சாதாரணமா செய்தாலும், உடம்புக்கு வேண்டிய நார்ச்சத்து கிடைக்கும் என தொடர்ந்து பேசினார்.
ஹ்ருதயா, கையில் இருந்த கத்தியை கீழே வைத்து, சிரித்தபடி அத்தையை பார்த்தாள்.
“அத்த… நீங்க ஒரு நடமாடும் ஊட்டச்சத்து கையேடு”
அத்த மெதுவாகப் புன்னகைத்து,
“சமையல் அப்படின்னா சாப்பிட மட்டும் இல்லம்மா… . நம்ம குழந்தைகள் என்ன சாப்பிடுறாங்கன்னு நம்ம தெரிஞ்சிருக்கணும். உணவு என்ன தருதுன்னு புரிஞ்சி செய்தா, அதுதான் உண்மையான அன்பு,” என்றார்.
அந்த வார்த்தைகள், சமையலறையிலிருக்கும் வாடைகளைவிடக் கூட வலிமையான வாசனையை கொண்டு வந்தது.
வாசலின் பக்கத்தில் இருந்து சூரிய ஒளி படரும் அந்தச் சின்ன நேரம்… ஹ்ருதயாவின் மனதுக்குள் ஒரு பெரிய அமைதியை கிளப்பியது.
அத்தையின் கள்ளக்கபடமற்ற பாசமும், அந்த வீட்டின் நெஞ்சார்ந்த சூழ்நிலையும் பாசத்தை தேடி வந்தவளுக்கு ஒரு தாயகத்தைப் போலவே மாறியது.
மெல்லிய கடலை எண்ணெய் வாசனையும், வெந்தய மோர் குழம்பின் மணமும் கலந்து, வீட்டைச் சுற்றி பரவியது.
அத்த, அடுப்பில் வெந்தயக் குழம்பு கிளறிக் கொண்டிருந்தார். அதே நேரம் ஹ்ருதய, வெட்டிய பீன்ஸை எடுத்துக்கொண்டு, இன்னொரு பக்கம் கடாயில் தாளிக்க.
ரசம் கூட்டி மல்லித்தழை தூவி இறக்கி ருசி பார்த்த அத்தை, ஒரு சிறிய கிண்ணத்தில் ஊற்றி, அதை அவளிடம் நீட்டினார்.
“குடிச்சு பார்… இப்போ சரியா இருக்கா?”
அவள் அங்கிருந்த ஒரு 🥄 ஸ்பூனில் ரசத்தை குடித்து பார்த்தாள்.…
தக்காளி சாறு ருசியோட, மிளகு, ஜீரகம், பூண்டு சேர்ந்து ஒரு கார மசாலா சுகமா தாக்கும். கம்பி போன குரலுக்கு கூட மருந்தா இருக்க . கொஞ்சம் பெருங்காய வாசனையும் மல்லிதழையும் அப்படியே தேவாமிர்தம்.
அவளது கண்கள் சற்றே பனி சுமந்தன…அதை கவனித்தவர்
“என்னம்மா… காரமா இருக்கா? மிளகு அதிகமா போச்சா?”
அவளோ, மெதுவாக தலை இல்லை என்று ஆட்டி, விழிகளில் தோன்றும் துளிகளை மூடியபடியே சொன்னாள்.
“இல்ல அத்த…இந்த சுவை… அது என் அம்மாச்சி வச்ச மாதிரி… ஒரு நிமிஷம்…. அவங்க கிட்டதான் இருக்கேன்னு நெனச்சேன்…”
அத்த அவளது தோளில் கரம் வைத்தார் அணைத்து கொண்டார்.
“அம்மாச்சி அப்படிங்கிறவங்க ஒவ்வொரு பொண்ணின் மனதுலயும் ஒரு பகுதியா இருப்பாங்க ராசாத்தி…
அப்படியே அவர்கள் சமைச்ச சுவையிலும்… அவர்களோட வாசனையிலும்… சில நிமிடங்களுக்கு நம்மை முழுக்க குழந்தையாக்கி விடும்.
அந்த நினைவுகள் தான் வாழ்க்கை.
நீ யாரைப் பிரிந்து இங்க இருக்கறாய், அவங்க பாசத்த தாண்டி இங்க யாரும் இருக்க மாட்டாங்க. இந்த ரசம், இந்த வீடு… இனிமே உன் வீடும் தானே…”
அவளுக்கு வார்த்தை வரவில்லை. தொண்டையில் சிக்கிக்கொண்ட உணர்வு ஆனாலும் அந்த ரசம் போலவே, உள்ளம் முழுக்க பரவும் பாசத்தில் அவள் நனையத் தொடங்கினாள்.
அவர் மெதுவாக அவளது முதுகில் கைவைத்து அணைக்க, அவளோ அவரின் ஒருபக்க தோளில் வாகாய் சாய்ந்து கொண்டாள் .
மனதுக்குள் ஒரு நிலைத்த நிம்மதி ஏற்பட்டு விட்டது.
அந்த நேரம்தான், வாசல் கதவின் சத்தத்தோடு ஒரு அழுத்தமான குரல்.
“என்னடா இது அதிசயம் , அத்த வீட்ல இருந்து, கம கமன்னு வாசனை எல்லாம் வருது… வெளியேஇருந்து உள்ள இழுக்குது !!”
வாடா கார்த்தி… கரெக்ட் டைம்கு வந்த”
வீட்டிற்குள் வந்த கார்த்திக் கைல ஒரு பை – “ஆடிட்டர் கிட்ட ஃபைல் வாங்கிட்டு வந்தேந்த என்றான்.
அவன் நுழையும் போதே, பல வகை வாசனையால் அதிர்ந்து போய்
“ஓஹோ! இன்னைக்கு என்ன special யாரு இவ்ளோ சுவை சமைக்குறாங்க?”
அவரோ சிரிப்புடன்: “ஒண்ணும் விழா இல்ல டா… இன்னைக்கு ஹ்ருதய தான் கலக்கறா… நம்ம வீட்டில் !”
கார்த்திக்கோ தோளில் பையை தட்டியபடி, யோசனையோடு
“ஐய்யோ… தப்பான நேரத்துல வந்த போல இருக்கே… தெரியாம வந்து மாட்டிக்கிட்டேன் “
அதுவரைக்கும் வெளியில் வராமல் சமைத்து கொண்டிருந்த ஹ்ருதயவுக்கு மனதுக்குள் ஒரு சந்தோஷம்!
நம்ம சமையல டேஸ்ட் பாக்க ஒரு அடிமை சிக்கிருச்சு அப்டின்னு நெனச்சுக்கிட்டே வெளியில் வந்து
“அண்ணா எப்ப வந்தீங்க அண்ணா , அண்ணா எனக்கு இருக்க ஒரே ஒரு அண்ணா நீங்க தான் அண்ணா, நீங்க சாப்பிடு பாத்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க அண்ணா”
” கொஞ்சம் மூச்சு வங்கிகோமா, எதுக்கு இத்தன அண்ணா, நா வந்து மாட்டிக்கிடேனு நல்லா புரிஞ்சுடுச்சு.. இப்ப என்ன நீ சமச்சத நா சாப்டனும் அவ்ளோ தானே, கொண்டு வா .. “
வாங்க வாங்க சாப்ட போலாம் என கையோடு எழுப்பி உணவுமேஜையில் அமர்த்தி தட்டில் சூடான சாதம் போட்டு மோர்க்குழம்பு ஊத்தி, எரிச்சேரி பீன்ஸ் 🫘 மிளகுபுரட்டியும், வைத்து பரிமாறினாள்.
கார்த்தி அந்த தட்டை எடுத்துக் கொண்டு
“ம்ம்… நேரம் இன்னைக்கு உங்கையால சாப்பிடணும் எழுதியிருக்கு போல…
அவளோ சிரித்துக்கொண்டே “அவ்ளோ மோசமா இருக்காது… உங்க உயிருக்கு நா கேரண்டி!”
கார்த்தி ஒரு வாய் வைத்து, அதிர்ந்து நிமிர
” ஏத… கேரண்டியா… சரியா போச்சு. என்
சோலி இன்னையோடு முடிச்சு …”
ஹ ஹ ஹ ஹ……
……..
கார்த்தி , ஹ்ருதயாவிடம் அப்புறம் நாளைக்கு எப்போ கிளம்புற
நாளைக்கு மார்னிங் நானும் அத்தையும் வருவோம்.. சந்தோஷ் கொண்டு வந்து விடுறேனு சொன்னா ,
ஓகே ஓகே கம்பம் always welcome you…😊😊
—++++++
இவர்களும் சாப்பிட்டு கார்த்திக் கிளம்பினதும், எல்லாம் எடுத்து வெச்சு
“நா கொஞ்ச நேரம் படுக்கிறேன் கண்ணு . நீயும் படு .”
“இல்ல அத்த துக்கம் வரல நீங்க படுங்க நா ரூம்க்கு போறேன்னு போற,”
…..
மாலை நேரம்…
சூர்யா தனக்கு பிடித்த இடமான ஆபீஸ்ல அறையில் உள்ள பால்கனியில் நிற்கிறான்.
கம்பம் காற்று மெதுவாக முகத்தில் விழ, கையில் அவனோட போன்📱
அவன் முகத்தில் ஒரு அமைதியோடு கலந்த குழப்பம்.
கால் பண்ணலாமா? வேண்டாமா?
“தயா இனி நம்ம வீட்ல தான் தங்க போறாங்க… நம்ம வீட்ல சொன்னாங்கனு ஓகே சொன்னால… இல்ல அவளும் விருப்பப்பட்டு வரலா. அவ எப்படி உணரான்னு நாம நேர்ல கேக்கலாம்னா அதுக்கும் இடமில்லை. என்ன பண்றது …”
பக்கத்துலயே உன்ன வெச்சுட்டு தள்ளி நின்று யாரோ போல இருக்கணும்.. எவ்ளோ கொடுமையான விஷயம்..
என்னையறியான எதாச்சு நடந்துட்டா என்ன பண்ணுவேன்..எப்போ தயா என்ன உணருவ
அவன் கை தானாக Phone-ல் காண்டாக்ட் ஓபன் பண்ணி ஒரு பெயரை பார்த்தன
“En ♥️Daya”
அவளது பெயர், இவனுக்கு பிடித்த வகையில் .
அவளோட முகம் நினைவுக்கு வர, ஒரு அழுத்தமான புன்னகை சூர்யாவின் இதழ்களில் கவர்ந்தழிக்கிறது.
“Call பண்ணலாமா?
வேணாமா?
என்ன பேச?
அவன் கை ஏதோ பரபரப்பில் dial பண்ண, அடுத்த நிமிஷம் cancel பண்ண கையை பின் வாங்க முயற்சி செய்தான்.
ஆனா… கை தவறி call சென்று விட்டது!
அவளது screen-யில் incoming call…
📲 The Boss calling…
அவன் cut பண்ண முன்னே…
“Hello…”
குரல் மென்மையாய் வர. அவனை இம்சையிக்கும் சுகமான குரலில் கட்டுண்டு கிடக்க
“Hello… Boss irukingala?”
அவன் தடுமாறிய குரலில்,
“ஹான் ஹலோ தயா… சாரி, ஹ்ரித்யா.. டிஸ்டர்ப் பண்ணிட்டேனா
அவள் எதிர்பாராத சிரிப்புடன்
“ம்ம்… இல்ல இல்ல, சொல்லுங்க பாஸ். என்ன கூப்பிட்டிங்க?”
சூர்யா தனக்கே புரியாமல் அடங்கிய குழப்பத்தில்
“அது… file… அந்த பச்சக்கலர் ஃபோல்டர்… எங்கன்னு தெரியுமா?
“அதுவா? உங்க டேபிள் டிராயர்லயே வெச்சிருந்தீங்க Boss. நா பாத்தேன் நீங்க வைக்கும் போது”
என அவள் அமைதியாய் பதில் அளிக்கிறாள்.
சூர்யா நெற்றியிலேயே தட்டிக்கொள்கிறான்.
“Ohh ok… நா பாத்துக்கிறேன். Thanks…”
“Okay… bye?”
“Hmm bye.”
📱 Call cut.
அவன் கையை நெஞ்சின் மீது வைத்து மூச்சை இழுத்து விட…
அந்தப் பக்கத்தில…
போனை மேசையில் வைத்தபடியே யோசிக்கிறாள்.
“என்னாச்சு பாஸ்க்கு ?
அவரா 🤙 கால் பண்ணாரு
அவரா வெச்சுட்டாரு
“ஏதோ குழப்பமா இருக்காரு போல…என்னவா இருக்கும்.. சரி நாளைக்கு நேர்ல பார்க்கும் போது கேட்டுக்கலாம்”
அவளது கண்கள் எதிர்பார்ப்போடு தூக்கத்திற்குள் செல்லும் முன், அவன் எண்ணத்தில் நனையத் தொடங்கின.
…….
Song
உன்னை சேரும்
நாளை தினம் ஏங்கினேனே
நான் இங்கு தனியாக அழுதேன்
விடியும் வரை கனவின் நிலை
உனதாய்ங்கு தினம் ஏங்குது
மனம் உருகிடும் நிலை இது
எந்தன் முதல் முதல் வரும்
உயிர் காதலில்….