மாலை 5மணி
தேநீர் நேரம்,
மெல்லிய சோம்பல் படர்ந்த அந்த வேளையில், வீட்டில் தேநீர் வாசனை மூக்கை துளைக்க , பாட்டி சமையல் அறையிலிருந்து, இஞ்சி ஏலக்காய் மணம் கமழ மணக்கும் தேநீரும், வெந்தய கீரை வடையும் எடுத்து வந்தார்.
வீட்டு ஹாலில் அனைத்து உறுப்பினர்களும் ஓர் சுற்று அமைதியாக தேநீர் குடித்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
சந்தோஷமும் சிரிப்பும் கலந்த அந்த சந்திப்பு, ஹ்ருதயாவுக்கு ஒரு புதுவிதமான நிம்மதியை கொடுக்கிறது. ஆனால் அவள் உள்ளத்தில் மட்டும், அந்த மதிய உணவின் வாசம், கார்த்திக் சொன்ன வார்த்தைகள், சூர்யாவின் பார்வை, பாட்டியின் பாசம் எல்லாம் ரீவைண்டில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
ஒரே நாளில் அந்த குடும்பத்தின் ஒன்றான உணர்வு…
அவளே நம்ப முடியாமல் சிரித்துக் கொண்டாள்.
“என்ன தங்கம், தனியா சிரிக்கிறீங்க, சொன்னா இந்த பாட்டியும் சிரிப்பேன்ல”
“ஹான் ஒன்னும் இல்ல பாட்டி”
” ம்ம் நம்பிட்டேன் நம்பிட்டேன் ” பாட்டி அர்த்தமுள்ளதாய் தலையாட்டினார்.
———
ஹ்ருதயா சிறிது நேரம் முன்பு நடந்த நிகழ்வுகளை மனத்தில் அசைபோட்டு கொண்டு இருக்கிறாள்.
ஹாலில் இளைப்பாற அமர்ந்து ஹ்ருதயாவிடம், அவள் ஊரு ,படிப்பு ,சமையல் என பொதுவாக பேசிக்கொண்டு இருக்க, பாட்டி சூர்யாவிடம்,
“எங்ராசா பேத்திக்கு அவ தங்க போற ரூம கூட்டிட்டு போய் காட்டுப்பா, அவளுக்கும் பிடிக்கணும்ல போ ராசா ” எனக் குரல் கொடுக்க,
சூர்யா ஒரு நிமிடம் பாட்டியை பார்த்து சிரித்தான் “வா ஹ்ருதயா…” என்று மெதுவாய் அழைத்தபடி எழுந்தான்.
ஹ்ருதயா, கொஞ்சம் தயக்கத்துடன் எழுந்தாலும்… அந்த வார்த்தையில் இருந்த அழைப்பு, ஒரு அன்பு, ஒரு உரிமை…அவள் கால்கள் தானாய் பின்சென்றது.
பாட்டி சொல்லிக் கையால் சைகை செய்தபடி காட்ட, மேல் மாடி அறையை நோக்கி, சூர்யா முன்னால் நடக்க, ஹ்ருதயா அமைதியாக பின் தொடர்ந்தாள்.
அவர்களது காலடி ஒலி மறுமுனையில் ஒலிக்க, அந்த வீட்டின் காற்றோட்டத்தில் கூட பாசம் கலந்திருந்தது.
மேல்மாடிக்கு வந்தவுடன், ஒரு பழைய பூங்காற்று போல ஒரு வாசனை வீசியது. சூர்யா அவன் ரூமிற்க்கு எதிர்ப்புறம் இருந்த ஒரு கதவை திறந்தான் .
“இதுதான்… நாம இப்ப வரைக்கும் கெஸ்ட் வரும்போது தங்க தர ரூம். இனி உங்க ரூம்.”
அவள் உள்ளே நுழைந்தாள். மெல்லிய சாம்பல் நிற பீரோ, பழைய தேக்குமர கட்டில், சின்ன சோஃபா , ரூமை ஒட்டினார் போல இருக்கும் பால்கனி ஜன்னல் வழியே விழும் மாலை ஒளி – எல்லாம் அவளுக்கு ஒரு இதத்தை கொடுத்தது.
“பால்கனில எதாச்சு செடி வைக்கலாமா, வெறுமையா இருக்கும் போல இருக்கே?” அவள் கேட்க,
” ம்ம் ஏற்பாடு பண்ணிடலாம் உங்களுக்கு green shades பிடிக்குமா?”
ஹ்ருதயா, சற்றே ஆச்சரியத்துடன்,
“ஆமா… உங்களுக்கு எப்படி?” என இழுக்க
சூர்யா சிரித்தபடி,”எனக்குத் தெரியும்… பொதுவா இலக்கியம் படிச்சவங்க , நிறைய படிப்பாங்க அப்படி படிக்கும் போது அவங்களுக்கு அமைதியும், சுத்தமான காற்று ரொம்பவே அவசியம். Peace lily தாவரங்களின் இருப்பு ஒரு அமைதியான சூழ்நிலையை உருவாக்கும், மன அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் கவனத்தை அதிகரிக்கும், இது வாசிப்பை ரசிப்பவர்களுக்கு பயனளிக்கும். அப்ப தான் நெனைச்சேன் – Peace lily வச்சா நன்றா இருக்கும் போல”
” ஒரு செடிக்கு இவ்வளவு பெரிய விளக்கம், வியக்க வைக்குது பாஸ். நிஜமா எனக்கு இந்த அர்த்தம்லா தெரியாது. ஆனா இந்த செடி நா வீட்ல வெச்சிருக்கேன்.. அதோட பூ அழகா இருக்கும்னு வாங்கினேன்.”
” அட பரவலா விடுங்க, எத்தனை பேரு அர்த்தம் தெரிஞ்சு வீட்ல செடி வைக்கிறாங்க. ஏதோ எனக்கு தெரிஞ்சத நா சொன்னேன் அவ்வளவு தான்.
“ம்ம்….”
ஹ்ருதயாவுக்கு சற்று நெருக்கம் கூடிய அளவுக்கு ஆச்சரியம்… அவள் மனசுல,
“இவங்களுக்கு இவ்வளவு நுணுக்கமான விஷயமெல்லாம் தெரிஞ்சு இருக்கேன்னு…”
” ம்ம் சொல்ல மறந்துட்டேன்.. வீட்டு பின்னாடி சின்னதா காய்கறி செடிகள், பூந்தோட்டம் இருக்கு. நீ ப்ரீயா இருக்கும் போது பாட்டி கூட போய் பாரு”
” நிஜமாவா… நா இப்பவே போகட்டா “
சூர்யா சிரித்துக்கொண்டே
” ஏன் இவ்ளோ அவசரம், இனி இங்கதானே இருப்ப நிதானமா பாக்கலாம். உனக்கும் எதுவும் புதுசா வைக்க விருப்பம்னா சொல்லு இங்க டவுன்ல நர்சரி இருக்கு போய் வாங்கலாம்”
” ரொம்ப தேங்க்ஸ் பாஸ்”
” புடிச்சிருக்கா”
” ஹான்….. என்ன? “
” இல்ல ரூம்லா ஓகே வா, புடிச்சிருக்கா “
“ம்ம் ரொம்ப…..”
“சரி.. வாங்க கீழ போலாம்”
” நீங்க போங்க நா வரேன்”
சூர்யா ஒரு நிமிடம் நின்று அவளை ஆழ்ந்து பார்த்து விட்டு, மெதுவா கீழே வர, ஹ்ருதயா தனியாக அந்த அறையில் நின்று சுற்றி கண்களை பதிந்தன.
பீரோ பக்க சுவற்றில் இருக்கும் பழைய சட்டத்தில் இருக்கும் வாசகம் அவளை ஈர்த்தது…
“A house is made of walls and beams, a home is made of love and dreams.”
அந்த வரிகளை புன்னகையோடு பார்த்து விட்டு மெதுவாக கீழே வந்தாள்.
அப்படியே ஹாலுக்கு வரும்போது ஹாலில் அமர்ந்திருந்த அனிருத் – கவ்யா இருவரின் கவனமும் அவளிடம் சென்றது.
………
அனிருத், “வாங்க ஹ்ருதயா அக்கா… ரூம் டூர் போனீங்கனு கேள்விப்பட்டேன்… ரூம் எல்லாம் ஓகே வா ?”
” ஹ்ம்ம் நல்லா இருக்கு… நீங்க ரெண்டுபேரும் எப்படி இருக்கீங்க ?”
” சூப்பர் ”
” All good ”
” அப்ரோ அக்கா, எங்க ஊரு புடிச்சிருக்கா, இங்க என்ன பிளேஸ்லா பாத்தீங்க “
கண்களை தாழ்த்தி, “ஊரும் மக்களும் இந்த வீடும் ரொம்ப பிடிச்சிருக்கு. கோடி லிங்கம் கோவில் போனோம். அப்றோ boss-oda favourite டீ ஸ்பாட் போனோம். அவ்வளவு தான் “
” அவ்வளவுதானா, இங்க எவ்ளோ நல்ல இடம் லா இருக்கு தெரியுமா… இந்த வீக்எண்ட் நீங்க ஃப்ரீநா நாம எல்லாரும் ஒண்ணா போலாம். செம ஜாலியா இருக்கும்”
“ஹ்ம்ம் பாக்கலாம், பாஸ் விடணுமே “
” அதெல்லாம் பக்காவா பிளான் பண்றோம். உங்க பாஸையும் பிளான்ல சேர்த்துட்டா போச்சு.. லீவ் லா ஜூஜூபி” ……..
பின் மாலை வேளையில், ஹ்ருதயா புன்னகையுடன் அனைவரிடமும் விடைபெற்றாள்.
“பாஸ் வீடு அழகு, மனசு அது விட அழகு…” என்று சொல்லிவிட்டு சூர்யாவின் பக்கத்தில் வந்தாள்.
சந்திரசேகர் “ராத்திரி ஆகுதுமா, தனியா எப்படி போவ இரு … கார்த்தி… நீ அவளைக் கொண்டு போய் விட்டுட்டு வா இருட்டுல பாத்து ஓட்டிக்கிட்டுப்போ “
சட்டென சூர்யா, ” பா எனக்கு அத்த வீட்ல சில ஃபார்ம் எடுக்கணும்.. நா அங்க தான் போக கிளம்புறேன். நானே விட்டுறேன். பாவம் கார்த்தி நேற்று வேற பைக்லா அவ்ளோ தூரம் போயிட்டு வந்தான், எதுக்கு அலைச்சல், அவன் ரெஸ்ட் எடுக்கட்டும்”
கார்த்தி மைண்ட் வாய்ஸ் இவன் அவ்ளோ நல்லவன் இல்லையே 🤔🤔🤔
“ம்ம் அதுவும் சரிதான்.. பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க “.
வரேன் மாமா, அத்த வரேன் பாட்டி தாத்தா என காலில் விழுந்தாள்.
” நல்லா இரு ராசாத்தி”
சூர்யா கார் சாவியை எடுத்து ஹ்ருதயாவை பார்த்தான். அவளும் அமைதியாக தலை அசைத்து புறப்பட்டாள்.
—
இரவு 7.15 மணி
வழியில் தெருவிளக்கு ஒளிவீச, தெற்கில் போன மழை காற்று சில்லென்று முகத்தில் அடிக்க, கார் மெதுவாக கம்பத்திலிருந்து வண்டிப்பெரியர் சாலை நோக்கி நகர்ந்தது.
கொல்லம் – தேனி ஹைவே சாலையில் கார் தன் சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. ஹ்ருதயாவும் சூர்யாவும் மௌனமாய் அமர்ந்திருந்தனர்.
அந்த அமைதியை முதலில் உடைத்தது அவளே,
” நைட் டைம் கார்ல லாங் டிரைவ் போறது நல்லாதான் இருக்கு. பாட்டு எதாச்சும் போடவா, ரொம்ப சைலண்டா இருக்கு, உங்களுக்கு டிஸ்டர்ப் இல்லைல”
“இல்ல, போட்டுக்கோ”
“ம்ம் “
காரிலுள்ள மியூசிக் சிஸ்டம் ஆன் பண்றா, அதுல, சூர்யாவோடா பிளேலிஸ்ட் தான் ஓட ஆரம்பிச்சது….
🎵என் இனிய பொன் நிலாவே பொன்நிலவில் என் கனாவ🎵 காணாத நிலா கண்ணாடி ஜன்னலில் பிரதிபலிக்க, ஹ்ருதயா மெதுவாக அவளது உள்ளமே உருகுவது போல…காற்றை சுவாசித்தபடி அந்த பாடலை ரசித்தாள்.
சூர்யா டிரைவிங்ல இருந்தாலும், பாட்டின் நடுவே வந்த அவள் மூச்சின் மெளனம் கூட அவனுக்கு இசையா கேட்டது.
🎵நினைவிலே புது சுகம்…தரரா ராததா தொடருதே தினம் தினம் தரராராததா🎵
அவளின் இதழ்கள் தரரா ராததா…ஹம்மிங் பண்ண, விரல்கள் தாளமிட்டு கொண்டு இருந்தன…
சூர்யா சாலையில் ஒரு கண்ணும், அவளின் மேல் ஒரு கண்ணுமாய் வண்டி ஓட்டி கொண்டு இருந்தான்.
முணுமுணுக்கும் அச்செவ்விதழ்களை இழுத்து தேன் பருகும் ஆசை துளிர்விட, தன்னை சமன்படுத்தி ‘ இனி அவ பக்கம் பார்வை திரும்ப கூடாது steady surya steady ‘ என தனக்குள்ளேயே சொல்லி கொண்டான்.
🎵பன்னீரைத் தூவும் மழை, ஜில்லென்ற காற்றின் அலை🎵
அவள் பாடலை ரசித்து வானில் தெரியும் நிலவை பார்த்து சிரித்தாள். அந்த சிரிப்பில் அவள் கண்ணும் முகமும் நிலவின் ஒளியை தோற்கடித்துவிட்டதோ என எண்ணும் அளவுக்கு மிளிர,
சூர்யா, அவளை ஒரப்பர்வையில் ரசிக்க , முகமோ சுவிட்ச் போடாமலே ஒளிர்ந்தது.
🎵என் நெஞ்சில் என்னென்னவோ எண்ணங்கள் ஆடும் நிலை🎵
அவளுக்கும்… அவனுக்கும்…
அந்த இரவு நேரமும், அந்த பாடலும், காற்றும் கூட காதலை கற்றுக்கொடுக்க ஆசை கொண்டது.
இந்த வரிகள் வந்தவுடனே, சூர்யா ஒரு சின்ன சுவாசத்தோடு, மெதுவாக அந்த வரியை ஹம்மிங் பண்ண ஆரம்பிக்கிறான்.
இது பாடல் இல்ல, அவனோட ஆழ் மனதை திறக்கும் திருவுகோல்..
சட்டென நினைவுகள் பின்னோக்கி நகர்கின்றன.. அவனுக்கும் அவன் காதலுக்கும் இடையேயான பந்தம் இந்த வரிகள்..
“என் நெஞ்சில் என்னென்னவோ…”
அவன் இதயஒலி கேட்கும் அளவுக்கே, தன்னையும் மறந்த மாதிரி. அவன் பாடலில் மூழ்கி போக ஹ்ருதயா அவனைக் கண்ணோரமாகப் பார்த்தாள். அவன் கண்ணில் கொள்ளை கொள்ளையாய் கொட்டிக்கிடக்கும் காதல்.. அதை தன்னை மறந்து பார்த்து கொண்டு இருந்தாள்.
………..
கல்லூரி விடுதி மாடியில்
இரவு நேரம்.
சிறிது நாட்களாகவே தொலைந்த தூக்கத்தை தேடி விடுதி மாடியில் காதில் எர்போன் வெச்சு உலாவுகையில் அவன் கேட்கும் இசை – இதே பாடல்.
மழை வந்த பிறகு வீசும் காற்றாய், மனதை வருடும்
கண்மூடினால் கண்ணுக்குள் நின்று சிரிப்பவளை என்ன செய்வது என தெரியாமல் , தன்னை இசை ஞானியிடம் ஒப்படைத்து விட்டு நித்ரதேவியை நாடுவான்..
மனம் இசையில் ஊறி கண் இமைகள் தானாய் மூடி கொள்ளும்.
——
எதிரே வந்த ட்ரக்கின் வெளிச்சத்தில் நினைவலைகள் அறுந்தன.
” சூர்யா பார்த்து ” என அவள் அவன் தோளை தொட, சட்டென வண்டியை ஓரம் கட்டி நிறுத்தினான்.
தலையை உலுக்கி சமன்படுத்தி பெருமூச்சை எடுத்து தன்னை நிலைபடுத்தினான்.
“சூர்யா , என்னாச்சு நீங்க ஓகே வா, . ஒரு நிமிஷம் இந்தாங்க தண்ணி குடிங்க.. Relax… Relax”
“ம்ம்”
படப்படப்பில் , அவன் மார்பில் முதுகில் தேய்த்து விட்டவள் இயல்பாக தோளில் தடவிக் குடுக்க, அப்போது தான் சுற்றம் உணர்ந்து கையை எடுத்து கொண்டாள்.
தட்டு தடுமாறி ” இப்.. இப்போ ஓகே வா நீங்க”
அவளது செய்கையையும் திணறலையும் மனதுக்குள் சேமித்து, வெளியே எதையும் காட்டிக்கொள்ளாமல்
“ம்ம்.. சடனா ஒரு மாதிரி பிளாங்க் ஆகிருசு, now I’m alright .. போலாமா “
” ஹான்…. ம்ம் போலாம் “
மீண்டும் வண்டி வேகமெடுத்தது.
“பிளீஸ் மெதுவா போங்களேன்.. எதுக்கு இவ்ளோ வேகம்..”
மெல்ல சிரித்து ” வேகமா … மேடம் வண்டி 90 லா தான் போது, இதுவே வேகமா சர்தான் “
நேரம் நிலையாக நகர்ந்தது… ஆனால் அவர்களுக்குள் என்ன நடக்கிறதுன்னு அவர்களுக்கே சொல்லிக்க முடியாத வகையில் எதுவோ ஒன்று பூக்க ஆரம்பித்தது.
………..
🎵 கண்ணோடு தோன்றும் சிறு கண்ணீரில் ஆடும் கைசேரும் காலம் இது தானே என் ஆசைகள், அன்பே…🎵
சூர்யா மெதுவா ஸ்ட்ரிங்கில் தாளம்மிட்ட வண்ணம் வண்டியை வளைத்து ஓட்டினான்.
இறுதி வரிகளுக்கு நேராக வண்டி அத்தை வீட்டு வாசலை நெருங்கியது. சிறு மூச்சு விட்டு சூர்யா காரை நிறுத்த, ஹ்ருதயா அவனை பார்த்தாள்.
வீட்டின் வாசலின் லைட்ஸ் எரிய. அது தாங்கள் வந்துவிட்டோம் என சொல்லாமல் சொல்லியது..
ஒரு ஏமாற்றம்…இன்னும் கொஞ்ச நேரம் இதே பயணம் நீடித்திருக்கலாமோ என்ற ஒரு உள்உணர்வு இருவருக்கும்.
காரில் சற்றே கனத்த அமைதி நிலவுகிறது…
இருவரும் தங்கள் இடத்தில் இருந்து புன்னகையுடன்… ஆனால் சொல்லாமலே ஒருவருக்கொருவர் ஏதோ உணர்ச்சி ஏற்பட்டதை உணர்கிறார்கள்.
—————
” அது வந்து…. ஹிருத்யா…. ”
அவன் சொல்ல வாயெடுக்கஅதற்குள் அத்தை வந்துவிட,
“என்னடா பசங்களா, வண்டி சத்தம் கேட்டுச்சு, உள்ளார வருவீங்கனு பார்த்த காருக்குள்ளவே இருக்கீங்க இரண்டுபேரும்.. நேரமாச்சு மொத உள்ள வாங்க. சாப்ட்டு மத்த விஷயம் பேசலாம்”
” ஹான் அத்தை இதோ வரோம் “
” Thanks boss , இந்த டிரைவ் ரொம்ப ஸ்பெஷல்.. மறக்க முடியாத ஒரு இரவு. இப்படி ஒரு நாள் போகணும்ன்னு சின்னதுல நெனச்சதுண்டு, இப்போ அத நெனவக்கினதுக்கு big thanks.. “
சின்ன சிரிப்போடு காரில் இருந்து இறங்கினான். அவளும் இறங்க சூர்யா மனசுக்குள்ள ‘ எனக்குமே இது ஒரு மறக்க முடியாத இரவு தான் தயா thanks for coming into life’.
…….
Song
பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ…
மீதி ஜீவன் என்னைப் பார்த்த போது வந்ததோ…
ஏதோ சுகம் உள்ளூறுதே…
ஏனோ மனம் தள்ளாடுதே…