நெஞ்சில் உறைந்த தேடல் – 9 (2)

நிறுத்தியதோடு தன்னோடு அவளை சாய்க்க முதலில் திமிறியவள் பின் அவன் அணைப்பில் ஒன்ற,

“ஆஷா…” ஹஸ்கி வாய்ஸில் பேசியவன்,

“ஐ கான்ட் ஆஷா…” அவள் முகத்தை தனக்கு நேராக பிடித்து நிறுத்த அவன் செய்யவிருக்கும் காரியம் ஸ்டெபியை  படபடக்கச்செய்தது.  முகத்தை அப்படியும் இப்படியுமாக திருப்ப முயல,

“ஆஷா ப்ளீஸ்…” என்றவன் ஒரு அழுத்தமான முத்தமொன்றை அவளின் இதழில் பதித்துவிட்டே விட்டான்.

அவளை விட்டு சிறிது நகர்ந்து நின்றவன் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு திரும்பி பார்த்தால் ஸ்டெபி அந்த இடத்திலேயே  உறைந்துபோய் நின்றிருந்தாள்.

அவளை தலைமுதல் பாதம் வரை அளவிட்டான். லைட்வெயிட் பட்டுச்சேலையில் பாந்தமாக இருந்தவள் தன்னுடைய சிறு கூந்தலை க்ளிப்பில் அடக்கி அதில் கொஞ்சம் பூவையும் வைத்திருந்தவள் வகிட்டில் அடர்வாக குங்குமத்தை வைத்து தனக்கு பிடித்தது போல அலங்கரித்து இருந்த ஸ்டெபியின் மேல் காதல் இன்னமும்  பெருகியது.

ஒவ்வொரு செயலிலும் தன் மேல் உள்ள காதலை வெளிப்படுத்தி கொண்டிருக்கும் ஸ்டெபியை நினைக்க நினைக்க அவனது மனம் நிலையில்லாமல் அவளை நெருங்க துடித்தது.

இவளை எப்படி தன்னால் பிரியமுடியும்? இல்லை தன்னை பிரிந்து அவளால் தான் இருக்கமுடியுமா? புரிந்துகொள்ள மறுக்கிறாளே என்ற ஆயாசம் படர்ந்தது அர்ஜூனின் மனதில்.

மேலும் இங்கேயே நின்றால் அவளை கட்டாயப்படுத்தி தன்னோடு அழைத்துசென்றுவிடுவோமோ என்று பயந்துவிட்டான்.

திகைத்து அசையாமல் நின்றிருந்த அவளின் தோற்றத்தில் தன்னையே கடிந்துகொண்டவன் உலுக்கியவன் அவளின் பார்வையில் மீண்டும் அவளுள் மூழ்க நினைக்க,

“அஜூ…” என்ற அவளது அழைப்பு அவனுக்கு இப்போது கோவத்தை குடுத்தது.

“ஏன் ஆஷா என்னை கொல்ற? உன்னை விடவும் மனசில்லை. உன் வார்த்தையை விட நீதான் எனக்கு முக்கியம்னு உன்னை நோகடிச்சு உன்னோட வாழவும் முடியலை. தினம் தினம் சித்ரவதையா இருக்கு ஆஷா…”

அவனது கோவத்தில் ஏதோ சொல்லவர அவனை கையமர்த்தி தடுத்தவன், “வா உள்ள போவோம்…” என முன்னால் நடக்க ஆரம்பித்துவிட்டான். பொங்கிவந்த அழுகையை அடக்கியவள் அவனோடு சேர்ந்து உள்ளே சென்றாள்.

எப்போதும் தைரியமாக இருக்கும் ஸ்டெபி ஏனோ இப்போதெல்லாம் கண்ணீரில் கரைய ஆரம்பித்து இருக்கிறாள்.

அன்றைக்கான நல்லநேரம் வடிவாம்பாள் பார்க்க அந்த நேரத்தில் நிலாவை ஆரவ்வின் அறைக்கு அழைத்துசென்று விட்டுவந்தாள் ஸ்டெபி.

சிறிது நேரம் ஹாலில் அமர்ந்து அனைவரோடு பேசிக்கொண்டிருக்க அர்ஜூன் பார்வை அவள்மீது விழவே  இல்லை. நொடிக்கொருதரம் இவள் தான் அவனை பார்த்துகொண்டிருந்தாள்.

சிறிதுநேரத்தில் பேச்சின்  திசை மாறி அர்ஜூன் ஆஷா எதிர்காலத்தை பற்றி வடிவே ஆரம்பிக்க குனிந்த தலை நிமிராமல் பதிலும் கூறாமல் அப்படியே அமர்ந்திருந்தாள் ஸ்டெபி. அதைக்கண்டு ஆண்டனி வேதனைபட  அதில் சற்றுமுன் மட்டுப்பட்டிருந்த அர்ஜூனின் கோவம் கூடியது.

காலையில் இருந்து அவளது அருகாமையும் அவள் உணர்த்திய நெருக்கமும் அவனை இம்சிக்க சற்றுநேரம் முன்பு பரிமாறிய முத்தமும் அணைப்பும் அவனது கோவத்தை தூண்டி பேயாட்டம் போடவைத்தது.

விளைவு அதுநாள் வரை ஸ்டெபிக்கே தெரியாத ஒரு ரகசியத்தையும் போட்டுடைத்தான். அவனது இந்த ருத்ரதாண்டவமே அவர்கள் இருவரையும் சேர்த்துவைக்க துணைபுரிந்தது.

சடாரென எழுந்தவன், “அவளுக்கு அவளோட பிடிவாதமும் யாரோ சொன்ன வார்த்தைக்கான கோவமும் தான் பாட்டி பெருசு. பெத்த தகப்பன் தன்னோட வாழ்க்கையை நினைச்சு கலங்குறது தெரியாது…”

“வளர்த்த தகப்பனும், தாயும் வருந்தறது புரியாது. கட்டினவன் நான் அவளை பிரிஞ்சு அவளுக்காக ஏங்குவதும், தவிக்கிறதும் விளங்காது…” என்றவன்,

“ப்ச் நான் ஒரு மடையன் பாட்டி, அவ ஊருக்கே அர்த்தம் சொல்லுவா, அவளுக்கா இதெல்லாம் புரியாது. அவ கண்ணுல பட்டாலும் கண்டுக்காம இருக்கிறாளே? நாங்க காயப்பட்டாலும் பரவாயில்லை. அவளுக்கு அவளோட பிடிவாதமும் வறட்டு கௌரவுமும் தான் முக்கியம் பாட்டி…”

“இவளை நான் எப்படியெல்லாம் விரும்பினேன் தெரியுமா? நான் காதலிச்சவளா பாட்டி இவ? எப்போ இருந்து இப்படி சுயநலமா மாறினான்னே எனக்கு தெரியலை. எந்த இடத்துல இருந்து இவளை நான் கவனிக்காம விட்டேன்? எனக்கு புரியலை பாட்டி…” என தளர்ந்து அமர்ந்தவன்,

“எனக்கு குழந்தை வேணும்னு நான் கேட்டேனா? நான் குழந்தை குட்டியோட இருக்க பெருசா விட்டுகொடுக்கிறாளாம். யாருக்கு தேவை இவளோட  பெருந்தன்மை. எனக்கு இவதான் வேணும் பாட்டி. அது இவளுக்கு புரியமாட்டிக்கே?. சொல்றதை காதுகுடுத்து கேட்க கூட மாட்டேன்றா…”

“அஜூ நான் உனக்காகத்தான். என்னால ………. உன..க்கு….  நா…. வேண்டாம் …. அஜூ….” என அழுகையோடே கூற இன்னமும் வெறியாகிவிட்டான் அர்ஜூன்.

“என்ன எனக்காக? எனக்கு தெரியாமையா நான் என்னோட உன்னை வாழ சொல்றேன்? பெருசா பேசவந்துட்டா….”

அவனால் இனியும் ஸ்டெபியை பிரிந்து இருக்கமுடியும் என நினைக்கமுடியவில்லை. ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டவன் ஸ்டெபியின் அருகில் வந்தமர்ந்தான்.

“நானும் சொல்லவேண்டாம்னு தான் நினைக்கிறேன் ஆஷா. ஆனா என்னால உன்னை பிரிஞ்சு இனி ஒரு நொடி கூட இருக்க  முடியாது. ஐம் சாரி டூ சே திஸ்…” என பீடிகை போட அனைவரும் ஏன் இப்படி சொல்கிறான் என்பது போல பார்க்க,

“பட் இப்போ இதை சொல்லலைனா நீ என்னை விட்டு இன்னும் விலகிட்டே தான் இருப்ப…” என்றவன் ஒரு நொடி நிதானித்துவிட்டு,

“ஆஷா உன்னால குழந்தை பெத்துக்க முடியாதுன்னு நம்ம கல்யாணத்துக்கு முன்னாடியே எனக்கு தெரியும்…” புயலை அடக்கிய குரலில் கூற,

அதிர்ச்சியில் எழுந்தேவிட்டனர் அனைவரும். ஸ்டெபியோ சிலையென அமர்ந்துவிட்டாள். என்ன சொல்கிறான் இவன்? என்று இன்னும் விழிதெறிக்க பார்க்க,

“நம்ம மேரேஜ் பிக்ஸ் ஆகியிருந்தப்போ எனக்கு தெரியும். நம்ம ஹாஸ்பிட்டல்ல உனக்கு மந்த்லி டைம்ல ஓவர் ப்ளீடிங், ஸ்டமக் பெயின்னு வந்தப்போ ஒரு செக்கப் பண்ணினோமே ஞாபகம் இருக்கா?…”

அதை ஆமோதிக்க கூட முடியாமல் அவள் இன்னமும் உறைந்த நிலையிலேயே இருக்க,

“அப்போதான் உனக்கு ஸ்கேன் எல்லாமே எடுத்து பார்த்ததிலே உன்னோட யூட்ராஸ் குழந்தையை சுமக்கிற அளவுக்கு வளர்ச்சி அடையலைன்னு ரிப்போர்ட் வந்தது. அதை உன்கிட்ட சொல்றதுக்கு முன்னாடியே நான் டாக்டர் தன்யாகிட்ட கேட்டு தெரிஞ்சுட்டேன்…”

“முதல்ல சொல்லமாட்டேன்னு தான் சொன்னாங்க. நான் தான் கட்டாயப்படுத்தி விஷயத்தை தெரிஞ்சுட்டேன். அதோடு இதை பத்தி உன்கிட்டயும், யார்க்கிட்டயும் சொல்லகூடாதுன்னும் கேட்டுகிட்டேன். அவங்க எனக்கு செஞ்சது ஒரு ப்ரெண்ட்லி ஹெல்ப்…”

“இப்போ சொல்லு. எனக்கு என்னோட வாரிசுதான் வேணும், அதுக்காகத்தான் கல்யாணம்னு நான் நினைச்சிருந்தா கல்யாணத்தை அப்போவே நிறுத்தியிருப்பேனே? நீ வேணும்னு நினைச்சதால தானே இப்போ வரைக்கும் உன்னோட போராடிட்டு இருக்கேன். அதை ஏன்டா புரிஞ்சுக்க மாட்டேன்னு பிடிவாதமா இருக்க?…”

எல்லாவற்றையும் கூறிமுடிக்க ஆண்டனி வந்து அர்ஜூனை அணைத்துகொண்டார்.

“அர்ஜூன் என் ஜீசஸ் தான் உங்களை என் மகளுக்கு வாழ்க்கைத்துணையா அனுப்பிருக்காரு அர்ஜூன். இப்போ என் கண்ணுக்கு நீங்க கடவுளுக்கும் மேளாதான் தெரியறீங்க…” உணர்ச்சிக்குவியலாக மாறியிருந்த ஆண்டனியை சமாதானம் செய்ய யாராலும் முடியவில்லை.

எத்தனை பெரிய விஷயத்தை இவ்வளவு சாதாரணமாக கூறிவிட்டான் இந்த அர்ஜூன். இவனால் எப்படி இது போலவெல்லாம் நடந்துகொள்ள முடிந்தது? என்ன மனிதன் இவன்? என வியக்காமல் இருக்கமுடியவில்லை மற்றவர்களால்.

ஆண்டனியின் அணைப்பில் திணறிய அர்ஜூனை பிரித்த ராகவன் அவரை தானே தேற்றினார். தர்ஷினி ஸ்டெபியை அழைக்க அவரது அழைப்பு காதில் விழுந்தாலும் ஸ்டெபியின் எண்ணம் முழுவதும் அர்ஜூன் கூறிய செய்தியை சுற்றியே வலம் வந்தது.

அவளால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளமுடியவில்லை. தனக்காகவா? தன்மேல் கொண்ட காதலுக்காகவா? என நினைத்து அவன் கூறிய விஷயத்திலிருந்து வெளிவரமுடியாமல் தவித்தாள்.

“ஆஷா…” அர்ஜூனின் தீண்டலில் அவனது தோள் சாய்ந்தவள்,

“அஜூ…” என கதறியபடி  அவனை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.

அத்தனை நாள் மனதினுள் போட்டு அடைத்துவைத்த அந்த கதறல் பெரும் கேவலாக வெடித்து சிதறியது. அவளின் வேதனை தீருமட்டும் அழுது கண்ணீரில் கரைக்கட்டும் என்று அர்ஜூனும் அவளை அணைத்தபடியே அமர்ந்திருந்தான்.

அவனை விட்டு பிரிந்து அவன் வீட்டை விட்டு வெளியேறிய போது கூட கலங்காமல் இருந்தவள் அதன் பின்னும் இரண்டு வருடங்கள் பார்வையால் கூட அர்ஜூனின் புறம் மீண்டும் சாயாமல் கம்பீரத்துடன் வலம் வந்தவள் இப்போது தன் சக்திமொத்தமும் வடிய அழுகையில் தன் மனபாரங்களை கழுவி வெளியேற்றினாள்.

வடிவின் கண்ணசைவின் படி அவர்களுக்கு தனிமைகொடுத்து அனைவரும் அவர்களை விட்டு விலகி அவரவர் அறைக்குள் சென்று அடைந்துகொண்டனர். ராகவ் ஆண்டனியை தனியே விடாமல் அவரோடு சென்று அமர்ந்துகொண்டார்.

ஸ்டெபியின் அழுகை நிற்காமல் அர்ஜூனிற்கு பெரும் சோதனையை வைத்தது. தன் கைவளைவிற்குள் அமர்ந்திருந்தவளது உடல் குலுங்க ஒரு கட்டத்திற்கு மேல் தாங்கமாட்டாதவனாக அவளை இழுத்துகொண்டு அங்கிருந்த ஒரு அறைக்குள் நுழைந்துகொண்டான்.

“ஆஷா…”

error: Content is protected !!