நெஞ்சில் உறைந்த தேடல் – 9 (1)

தேடல் – 9

              தன் எதிரில் முறைத்தபடி நின்றுகொண்டிருந்த கல்பனாவை உள்ளம் படபடக்க அச்சத்துடன் பார்த்தாள் ஸ்டெபி.

“ஏசுவே இவரிடம் இப்படி சிக்கவைத்துவிட்டாயே? என் இதயத்தின் இதத்தை ஒழிக்கவென வந்திருக்கிறாரே. அவர் எதுவும் பேசிவிடாமல் என்னை காத்துவிடு இறைவா”

ஸ்டெபியின் வேண்டுதல் இறைவனுக்கு கேட்டதோ இல்லையோ அவள் கணவனுக்கு கேட்டுவிட்டது போல. உடனே விரைந்தான் தர்ஷினியின் ரூபத்தில்.

அங்கிருந்து நகரமுடியாமல் ஆணியடித்தது போல அப்படியே நின்ற ஸ்டெபியிடம் நெருங்கிய கல்பனா பேச வாயை திறக்கும் முன்,

“ஸ்டெபி உன்னை எங்கலாம் தேடறது? ஆரவ் உன்னை கூப்ட்டுட்டே இருக்கான். நீங்க இங்க இருக்கியா?…” என்றவர் அவளை விட்டு அகலாது கைகளோடு கைகோர்த்து பிடித்துக்கொண்டு, அப்போதுதான் கல்பனாவை பார்ப்பது போல பாவனை புரிந்த தர்ஷினி,

“அடடே வாங்க கல்பனா, பாருங்களேன் உங்களை நீங்க வந்ததை கவனிக்கவே இல்லை. உங்களோடதான் உங்க மருமக பேசிட்டு இருந்தாளா? கோச்சுக்காதீங்க ப்ளீஸ். ஆரவ் ஏதோ முக்கியமான விஷயமா பேசனும்னு இவளை கூட்டிட்டு வரசொன்னான்…”

வலிய புன்னகையை வரவழைத்துகொண்டு கல்பனாவிடம் பேசியவர் அவரை பேசவிடாமல் ஸ்டெபியை இழுத்துக்கொண்டே சென்றுவிட்டார். சென்றவர் நேராக அர்ஜூனிடம் ஸ்டெபியை ஒப்படைத்துவிட்டு ஒரு புன்னகையோடு அங்கிருந்து நகர்ந்துவிட்டார். ஸ்டெபி அர்ஜூனை கேள்வியாக பார்க்க அவனோ,

“அவங்க ஏதாவது பேசினாங்களா?…” எனவும் தான் இது அர்ஜூனின் வேலை என்பதை உணர்ந்து அவனை பாராட்டுதலாக பார்த்தவள்,

“அவங்க எதுவுமே பேசலை. முறைச்சுட்டே கிட்ட வந்தாங்க. அதுக்குள்ள தர்ஷிமா வந்து கூட்டிட்டு வந்துட்டாங்க…”

“உனக்கு வாயெல்லாம் என்னிடம் தான். என்னை மட்டும் தான் எதிர்த்து கேள்வி கேட்ப. இல்லையா?…”

“என்னை பிடிக்காதவங்ககிட்ட ஒரு வார்த்தை கூட பேச என்னைக்குமே இந்த ஸ்டெபிக்ஷா விரும்பமாட்டா. அவங்க பேசிருந்தாலும் நான் பதில் பேசிருக்கமாட்டேன்…”

இந்த பதிலில் அர்ஜூனின் கண்களில் சிறு குறும்பு தோன்றி மறைய அதை கண்டுகொண்டவள் தான் கூறியதன் அர்த்தம் அவனுக்கு விளங்கியதை உணர்ந்துகொண்டாள்.

“நீ போய் ஆரவ் பக்கம் இரு. இல்லைனா பாட்டி தாத்தா பக்கம் இரு. தனியா இருக்க வேண்டாம்…” எனவும் இவள் தலையசைக்க பின் அவனாகவே,

“டாக்டர் மேத்தா வந்திருக்கார் ஆஷா. நிலாவை பத்தி கொஞ்சம் பேசவேண்டியதிருக்கு. அவர் இப்போ கிளம்பிடுவார். பேசி அனுப்பிட்டு வரேன்…”

அர்ஜூன் விடைபெற்று நகர தானும் பாட்டியின் அருகில் சென்று அமர்ந்துகொண்டாள். நிலா, ஆரவ்வை தொந்தரவு செய்ய விரும்பாமல்.

அர்ஜூன் செல்வதையே பார்த்துகொண்டிருந்தவள் அவன் கார்த்திக்கிடம் கோவமாக ஏதோ பேசுவதை கண்டாள். கார்த்திக்கிற்காக இவள் பாவப்பட்டாள். தன்னால் தான் அவனுக்கு இந்த திட்டு விழுகிறது என்பது ஸ்டெபி அறிந்ததே.

“எப்படி என்னை பார்த்துகொள்கிறான்” என்று சில்லாகித்த ஸ்டெபியின் இதயம் முழுவதும் தன் மீதான அர்ஜூனின் காதலே வியாப்பித்திருந்தது.

ஸ்டெபி ரெஸ்ட்ரூம் பக்கம் செல்வதை எப்படி எதேர்ச்சையாக கண்டானோ அதே போல தன் தாயும் பம்மி பம்மி செல்வதை கண்டுவிட்டான். நொடியின் விசயத்தை கிரகித்தவன் தர்ஷினியை அழைத்து ஸ்டெபியை கூட்டிவரும் படி கூறி அனுப்பிவைத்துவிட்டான்.

இப்போது கார்த்திக்கையும் வசைமாரி பொழிய ஆரம்பித்து அவனை எச்சரித்து வைத்த பின் தான் அங்கிருந்து நகர்ந்தான். சிறிது நேரத்தில் கார்த்திக் அர்ஜூனின் பெற்றோரை அழைத்துகொண்டு கிளம்பியது தெரிந்தது.

“இவன் இருக்கிறானே ஊரையே மிரட்டி வைப்பான்” கணவனின் அன்பில் மகிழ்வோடு திளைத்தாள் ஸ்டெபி. அவளுக்கு தெரியவில்லை. இன்று முதல் தனது சந்தோஷத்தின் எல்லைகள் விரிவடைந்து கிடக்கின்றன என்று.

வீட்டிற்கு கிளம்புகையில் நாராயணன் மீண்டும் ஒரு ஆர்ப்பாட்டத்தை ஆரம்பிக்க நினைக்க அதற்கு வாய்ப்புகொடுக்காமல் ஆரவ்வே வீட்டிற்கு அழைக்கவும் மறுபேச்சில்லாமல் சிறுபிள்ளை போல கிளம்பிவிட்டார்.

“என் பேரன் கூப்பிட்டான், என் பேரன் கூப்பிட்டான். அதுக்காக மட்டும் தான் வீட்டுக்கு வரேன்…” என தண்டோரா போடாத குறையாக கூவ ஆரவ்வினாலே சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.

அவரின் அன்பில் இவனது மனம் கனிந்தது. ஆனாலும் அவனுக்கு இது போதாதே. இந்த அன்பும் பாசமும் அதற்கும் மேலான உரிமையும் தனது தாய்க்கு கிடைக்கவேண்டுமே. அந்த அங்கீகாரம் கிடைத்த நிமிடம் தஞ்சையில் தஞ்சமாக தயாராக இருந்தான் ஆரவ்.

அவரது வாயிலிருந்து வரும் மருமகளே என்னும் ஒரு அழைப்பிற்காக தர்ஷினியோடு தானும் சேர்ந்து காத்திருந்தான். அது மட்டும் நடக்கட்டும் இந்த கிழவனை பார்த்துகொள்கிறேன் என மனதிற்குள் கூறிக்கொண்டான்.

திருமணம் அனைவரும் மெச்சுபடி நல்லபடியாக நடந்துமுடிய இரவு சடங்கிற்காக ஆரவ்வின் வீட்டில் அனைத்தும் தயாராக ஆரம்பித்தன. அங்கு தொடங்கியது ஆரவ்வின் தவிப்பு.

ஒரு நிலையில் இல்லாமல் மனம் பரிதவித்தான். ஏதோதோ எண்ணங்கள். உணர்வுக்கும், மனதிற்கும் நடுவில் கிடந்து அல்லாடினான். ஒருமனமோ வேண்டும் என்க, இன்னொரு மனமோ வேண்டாம் என்க.

இரண்டுவகையான உணர்ச்சிகளின் பிடியில் சிக்கித்தவித்தான். ஏனோ கண்கள் நிலாவையே வட்டமிட அவள் அருகில் செல்லவே பயந்தான். உணர்ச்சிவேகத்தில் எதையாவது செய்துவிடகூடாதே என்று.

இவனது இந்த அலைப்புருதல் மற்றவர்களுக்கு தெரிந்ததோ இல்லையோ ஸ்டெபி கண்டுகொண்டாள். அத்தோடு நில்லாமல் அர்ஜூனிடம் கூற அவனோ,

“எல்லாம் பார்த்துட்டு தான் இருக்கேன். அவன் இப்படி இருக்க காரணம் புரியாமலா. கொஞ்சநேரம் ஆகட்டும். நான் பேசறேன்…” என ஒரு நமுட்டுச்சிரிப்போடு கூற,

“ப்ச், என்ன அஜூ இது விளையாட்டு. பாவம் அவன். நீங்க போய் பேசுங்க…” என்றவளை மேலும் பேசவிடாமல் தேக்கியது அர்ஜூனின் பார்வை.

“இதென்ன இப்படி பார்க்கிறான்? என்ன சொல்லிட்டோம் நாம்?” என யோசித்தவள் தலையில் பல்ப் எரிந்தது. அவனை கணவனாக நன்கு அறிந்தவள் ஆகிற்றே.

“சரி தான். ஏற்கனவே சார் காலையில இருந்து வேற ஒரு மூட்ல இருக்காரு. சிக்காம இருந்தோம். இப்போ நாமலே நல்லா இழுத்துவிட்டுட்டோமே” என திருதிருவென முழிக்க அவளின் பாவனையின் தனக்குள் கரைந்துகொண்டிருந்தான் அர்ஜூன்.

அவஸ்தையாக பார்த்துகொண்டிருந்தவளை அருகில் வா என தலையசைத்து அழைக்க அதற்கு மேல் ஸ்டெபியை சோதிக்காமல் தர்ஷினி வந்து காப்பாற்றினார். அவர் ஸ்டெபியை அழைத்து செல்லவும் ஊப் என மூச்சை இழுத்துவிட்டான் அர்ஜூன்.

அந்த மாயவலையில் இருந்து விடுபட்டாலும் இரண்டு வருடங்களாக அடைக்கப்பட்டிருந்த அடக்கிவைக்கப்பட்டிருந்த உணர்வுகள் மொத்தமும் அடி ஆழத்திலிருந்து கட்டவிழ்ந்து கிளம்பிய தாக்கத்தில் அங்கே அமரமுடியாமல் எழுந்து சென்றான்.

வெளியே சென்று நிற்க அங்கே ஏற்கனவே ஆரவ் நிலையில்லாமல் அங்குமிங்கும் நடைபயில அவனை பார்த்து வாய்விட்டு சிரித்தவன் அவனருகே சென்றான்.

“என்னடா சக்கு? இந்நேரம் வாக்கிங்? சொல்லிருந்தா துணைக்கு நானும் வந்திருப்பேனே?…”

“எதுக்கு? உன் சங்காத்தமே எனக்கு வேண்டாம். நானே குழப்பத்துல இருக்கேன். ஏன்டா நீ வேற படுத்தற?…” அவன் முகத்தில் தென்பட்ட குழப்பமுடிச்சுகள் அர்ஜூனிற்கு சிரிப்பை தான் வரவழைத்தது.

அவனையே ஆழ்ந்து பார்த்தவன் பின் தொண்டையை செருமிக்கொண்டு,

“ஆரவ்  நிலா ஒரு இயல்பான திருமண வாழ்க்கையை வாழ எல்லா விதத்திலும் தயார் தான். உங்க தாம்பத்திய வாழ்க்கையால அவளுக்கு எந்த பாதிப்பும் நிச்சயம் வராது. அதனால நீ குழம்பாதே. உள்ள போ…” எனவும் ஆரவ்வின் முகம் தெளிவில்லாமலே தயங்கி இருந்தது.

“நான் சொன்னா கேளேன்டா. நேத்தே இது விஷயமா உன்கிட்ட பேசி உன்னை தெளிவுபடுத்ததும்னு நினச்சேன். உன்னை எனக்கு தெரியாதா?…” என்றவனை இழுத்து அணைத்துகொண்டான் ஆரவ்.

“ப்ரீயா இரு. இந்த நாள் உங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப முக்கியமான நாள். எதையும் நினச்சு மனசை போட்டு குழப்பிக்ககூடாது புரியுதா? நீயும் நிலாவும் சந்தோஷமா இருக்கனும். இவ்வளோ போராடி கல்யாணம் செஞ்ச நீ நிலாவை கடைசிவரைக்கும் சந்தோஷமா வச்சுப்படா. அந்த நம்பிக்கை எனக்கு முழுமையா இருக்கு…” என்ற அர்ஜூனை பெருமை பொங்க பார்த்தவன்,

“லவ் யூ டா டக்கு…” எனவும் அவனோடு சேர்ந்து அர்ஜூனும் இதை கூற அங்கே,

“எனக்கெல்லாம் இல்லையா?…” என்றபடி ஸ்டெபி வர ஆரவ்வின் கண்கள் மின்னியது. அர்ஜூனை பார்த்து கண்ணடித்தவன்,

“பேப் என்கிட்டே இப்போ ஸ்டாக் இல்லை. என் டார்லிக்காக நான் சேவ் பண்ணிட்டேன். இந்தா உன் புருஷன். இவன்கிட்ட தான் எக்கச்சக்கமா இருக்கு. வேணும்ன்ற அளவுக்கு வாங்கிக்கோ…” என அர்ஜூனை ஸ்டெபியின் மேல் தள்ளிவிட்டு ஆரவ் உள்ளே ஓடிவிட்டான்.

அர்ஜூன் தன் மேல் விழுந்த வேகத்தில் நிலைதடுமாறிய ஸ்டெபி ஸ்திரமாக நிற்க முயன்று தோற்று கீழே விழ போக அர்ஜூன் தன்னை நிலைப்படுத்திக்கொண்டு அவளையும் பற்றி நிறுத்தினான்.

error: Content is protected !!