தேடல் – 13
உறங்கும் நிலாவின் முகத்தையே தீவிரமாக பார்த்துக்கொண்டிருந்த ஆரவ் சிறிது நேரத்தில் தர்ஷினியை போனில் அழைத்து எழுப்பி தனக்கு காபி வேண்டுமென்று கூறிவிட்டு குளிக்க சென்றான்.
தர்ஷினியே அவனின் அறைக்கு வந்தவர் வெளியில் இருந்து அழைக்க,
“என்ன மாம் நீங்க ஏன் எடுத்திட்டு வந்தீங்க? குடுத்தனுப்பிருக்க வேண்டியது தானே?…” என கடிய அவனை முறைத்தவர்,
“டைம் என்ன ஆகுது? இந்நேரம் வேலைக்கு வந்திருவாங்களா? காபி வேணும்னா அது எந்நேரம்னு பார்க்கவே மாட்ட. வேணும்னா வேணும் தான் உனக்கு…” அவர் கூறியதில் இருந்த உண்மையில் அசடு வழிந்தவன்,
“சரி உள்ளே வாங்க…” என அவரையும் அழைத்துகொண்டு அறைக்குள் நுழைய அவனை தொடர சங்கடமடைந்த தர்ஷினி,
“இல்லை ஆரவ், எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நீ போய் இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கேன். இன்னும் டைம் இருக்கு பாரு. நானும் போய் தூங்கறேன்…” என நழுவ பார்க்க,
“யாரு? நீங்களா தூங்குவீங்க? சரி வாங்க, இங்க ஹால்ல உட்கார்ந்துக்கலாம். நிலா தூங்கறா. அவ எழுந்ததும் காபி கொடுப்போம். இப்போ இந்த காபியை நாம ரெண்டுபேரும் சேர்ந்து குடிக்கலாம் சரியா?…”
தர்ஷினியையும் இழுத்துகொண்டு மாடியில் இருக்கும் ஹாலில் ஆரவ் அமர்ந்துகொள்ள அவனோடு சேர்ந்து தானும் காபியை குடிக்க ஆரம்பித்தார். ஆரவ்வின் முகத்தை ஆராய்ச்சியுடன் பார்த்து எதுவும் கண்டுகொள்ளமுடியாமல் திணறித்தான் போனார் தர்ஷினி.
“குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்திருப்பார்களா? இவன் இப்படி அதிகாலையிலேயே எழுந்துவிட்டானே? ஏன்?” என யோசித்தபடி அமைதியாக காபியை அருந்த ஆரவ் அதற்குள் குடித்து முடித்திருந்தான்.
“மாம் என்னை பத்தி எந்த கவலையும் வேண்டாம். நாங்க சந்தோஷமாதான் இருக்கிறோம். இப்போ உங்களோட மனம் நிம்மதியானதா?…” தர்ஷினி திகைத்தார். கண்டுகொண்டுவிட்டானே என்று அவனை முறைக்க ஆரவ் குறுஞ்சிரிப்போடு அவரை பார்த்து,
“ஆனாலும் நீங்க இவ்வளவு யோசிக்கக்கூடாது மாம். கேட்க நினைக்கிறதை நேரடியா கேட்கவேண்டியது தானே?. என்கிட்டே உங்களுக்கு என்ன தயக்கம்?…” என்றவன்,
“நிலா இப்போதான் தூங்கவே ஆரம்பிச்சிருக்கா. எனக்கு சந்தோஷத்துல தூக்கமே வரலை. அதான் எழுந்து குளிச்சுட்டேன். காபி குடிக்கனும்னு தோணுச்சு. உங்களை எழுப்பிட்டேன்…”
ஆரவ்விற்கு எப்போது வீட்டில் காபி குடிக்க வேண்டும் என்றாலும் அது தர்ஷினி கையில் தான். வீட்டிலிருக்கும் வேளைகளில் அவரை பாடாகப்படுத்தியாவது அவரிடம் ஓயாமல் காபியாக வாங்கி குடித்துக்கொண்டே இருப்பான்.
தர்ஷினி இது என்ன பழக்கம் என்று கண்டித்தும் பலனில்லை. அவரின் பேச்சை காதில் வாங்காதவன் போல இருந்துவிடுவான். ஆனாலும் தன் காரியத்தை சாதித்தபடி. இன்றும் நாலரை மணிக்கே காபியை கேட்டு வாங்கியும் விட்டான்.
“உன் பிடிவாதம் இருக்கு பாரு. இதை நிலாக்கிட்டையும் காட்டாதே…” என்ற தர்ஷினியை பார்த்து புன்னகைத்தவன்,
“நிலாக்கிட்ட ஏன் காட்டபோறேன்? அதுக்குதான் நீங்க இருக்கீங்களே?…” என கண்ணடிக்க அவனை அடிப்பது போல பாவனை செய்த தர்ஷினியை கட்டிகொண்டவன்,
“மாம் ஐம் சோ ஹேப்பி. இந்த நிமிஷம் இந்த உலகத்துல சந்தோஷமா இருக்கிற ஒருத்தர் யாருன்னு கேட்டா நான் மட்டும் தான்னு சொல்வேன்…”
முகம் நிறைய புன்னகையோடு பூரிப்பாக பேசியவனை பார்க்க பார்க்க தர்ஷிக்கு கண்கள் பனித்தது. மகனின் இந்த சந்தோஷம் நிலையாக இருக்க,
“அம்மா தாயே துர்கா தேவி. என் மகனின் முகத்தில் தெரியும் இந்த நிறைவையும், சந்தோஷத்தையும் என்றைக்கும் வாடாமல் வைத்திரு தாயே” என வேண்டிக்கொண்டார்.
என்னதான் ஆரவ்வின் பேச்சில் மகிழ்ந்தாலும் அதை முழுமையாக அனுபவிக்கவிடாமல் நிலாவின் உடல்நிலை கண்முன் தோன்றி அவரை அச்சம் கொள்ளவைத்தது.
இன்னும் மூன்று மாதத்தில் நடக்கவிருக்கும் ஆப்பரேஷனில் நிலாவிற்கு எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்படாமல் நல்லபடியாக காப்பாற்றிகொடுக்க அவளின் ஆதர்ஷகடவுளான துர்கை அம்மனிடம் வேண்டுதல்களை முன்வைத்தார்.
அதை தவிர்த்து மற்றவற்றை பேசிக்கொண்டிருக்க தர்ஷினி கேட்டுக்கொண்டே அவனை பார்த்தபடி அமர்ந்திருக்க பேச்சுக்களின் இடையே ஆரவ் ஐந்தாறு முறை கண்கள் செருகவும் மீண்டும் விழிப்பதுமாக இருந்தான்.
அதை கண்ட தர்ஷினி, “ஆரவ், இப்போதான் ஐந்தாகுது. போய் தூங்கு. நானும் தூங்கறேன். ஏனோ எனக்கும் இன்னைக்கு தூக்கமாக வருது…” என்றபடி ஒரு கொட்டாவியை விட்டுக்கொண்டே எழுந்துகொள்ள ஆரவ்வும் தலையாட்டியபடி எழுந்து அறைக்குள் சென்றுவிட்டான்.
அவன் சென்றதும் மீண்டும் தனதறைக்கு வந்தவர் உறங்காமல் அமர்ந்திருக்க இரவு ஆண்டனிக்கு துணையாக இருந்த ராகவ் இன்னும் வந்திருக்கவில்லை. அதனால் தர்ஷினி தனித்து இருந்தார் அந்த அறையில்.
எப்படியும் வடிவும் நாராயணனும் எழுந்து வர நேரமாகும் என நினைத்தவாறே என்றைக்கும் இல்லாமல் இன்றைக்கு மீண்டும் படுத்து உறங்க ஆரம்பித்தார்.
மகனின் எதிர்காலம் குறித்த கவலையோ, நிலாவிற்கு பழைய நினைவுகள் தெரிந்தால் என்ன நடக்கும்? மகனின் நிலை என்ன? என்ற வருத்தமோ அவரை மனச்சோர்வுக்கு உள்ளாக்கி உறக்கத்தில் தள்ளியது.
ஜன்னல் வழி வெளிச்சம் வரும் வரையில் தூக்கத்தில் இருந்த அர்ஜூன் விழித்துக்கொள்ளவும் அவனது கரங்கள் வழமை போலே அருகில் ஸ்டெபியை தேடி காணவில்லை என்றதும் சட்டென எழுந்து அமர்ந்தான்.
“நேற்று நடந்தது அனைத்தும் கனவோ” என நினைத்த நிமிடம் அவனின் இதயமே செயலற்றுவிட்டது போல ஆனது.
ஆனாலும் நேற்று இரவு தானும் ஸ்டெபியும் பேசியது அனைத்தும் மனதில் உலா வர தன் உணர்வு பொய்க்காது என நினைத்தவன் எழுந்து சென்று முகத்தை அலம்பிவிட்டு வெளியே வர கதவு தட்டப்படும் சத்தத்தில் அதை திறந்தான்.
வெளியே அவ்வீட்டின் உதவியாள் அர்ஜூனின் பேக்கை கொண்டு வந்து கொடுக்க அதை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றவன் நொடியில் குளித்து கிளம்பி வந்து தனது மொபைலை எடுக்க அதில் ஸ்டெபியின் மெசேஜ் இருந்தது.
உடனே அவளுக்கு அழைக்க அழைப்பை ஏற்ற ஸ்டெபி, “குட்மார்னிங் அஜூ, எழுந்தாச்சா?…” எனவும்,
“ஹ்ம் எழுந்தாச்சு. நீ என்ன மார்னிங்கே என் கண்ணுல படாம எஸ்கேப் ஆகிட்ட?…”
“அதெல்லாம் ஒண்ணும் எஸ்கேப் ஆகலை. ஏற்கனவே ஹாஸ்பிட்டல்ல என்ன அவசரம்னாலும் ஆரவ்வை டிஸ்டர்ப் செய்யகூடாது. என்னை மட்டுமே கூப்பிடுங்கன்னு சொல்லியிருந்தேன். நல்ல வேளை நேத்து எமர்ஜென்சின்னு என்னை கூப்பிட்டாங்க…”
“சரி இப்போ சொல்லு. அந்த பேஷன்ட் இப்போ எப்படி இருக்காங்க?…”
“இப்போ நோ ப்ராப்ளம். அவர் சேஃப். ஆபத்துக்கட்டத்தை தாண்டியாச்சு…”
“ஹ்ம் ஓகே எப்போ வீட்டுக்கு வர?…”
“இதோ கிளம்பிட்டேன். பார்க்கிங் பக்கத்துல வந்தேன். நீங்களும் கால் பண்ணிட்டீங்க. இன்னும் ஒன் ஹவர்ல வீட்ல இருப்பேன்…” என்றவள் அழைப்பை துண்டிக்க அர்ஜூன் அதை பார்த்தவாறே அமர்ந்திருந்தான்.
தொலைத்த சந்தோஷம் கை சேர்ந்த நிம்மதியில் முகம் விகசிக்க எழுந்து வெளியில் வந்தவன் பழைய கம்பீரத்தோடு ஹாலில் அமர்ந்திருந்த ஆண்டனியை நெருங்கினான்.தேடல் – 13

தொலைத்த சந்தோஷம் கை சேர்ந்த நிம்மதியில் முகம் விகசிக்க எழுந்து வெளியில் வந்தவன் பழைய கம்பீரத்தோடு ஹாலில் அமர்ந்திருந்த ஆண்டனியை நெருங்கினான்.