“அவங்க உள்ளே படுத்து இருக்காங்க.. இவனால் இப்போ மயக்க நிலையில் இருக்காங்க.. நான் ஹாஸ்…….” என்று மகிழ் கொற்றவன் பேசிக் கொண்டு இருக்கும் போதே,
“டேய்! என் லயாவை என்னடா செய்த?” என்று எகிறியபடி ராகேஷ் முன்னால் வந்தான்.
அவனை தடுத்து நிறுத்திய மகிழ் கொற்றவன் சுதீப்பைப் பார்த்து, “சார்.. நான் எதுவும் பொய் சொல்லலை.. பொய் பித்தலாட்டம், எல்லாம் இவன் வேலை தான்” என்றான்.
சுதீப், “மிஸ்டர் நித்தின்.. கொஞ்சம் அமைதியா இருங்க.. நான் தான் விசாரிச்சிட்டு இருக்கிறேனே!” என்றதும், ராகேஷ் மகிழ் கொற்றவனை முறைத்தபடி அமைதியாக நின்றான்.
மகிழ் கொற்றவன் சுதீப்பிடம், “இவன் நிச்சயம் ரிட்டன் கம்ப்ளைண்ட் கொடுக்க மாட்டான் சார்.. ஏன்னா, அது உண்மை இல்லை.. உண்மை என்னனா, லயனிகாஸ்ரீ என்னோட மனைவி.. இவன் அவங்களை கடத்த முயற்சித்த போது தான், நான் இவனை அடித்தேன்.” என்றான்.
சுதீப் வரவழைத்த சிறு சந்தேகம் கலந்த யோசனையான பார்வையை ராகேஷ் பக்கம் திருப்ப, அவனோ இவனை கண்டுகொள்ளாமல் மகிழ் கொற்றவனை முறைத்த படி,
“இல்ல சார்.. இவன் பொய் சொல்றான்.” என்று கத்தினான். பின் மகிழ் கொற்றவனிடம், “அதுக்கு என்ன ஆதாரம் இருக்கு?” என்று கேட்டான்.
“உன்னிடம் என்ன ஆதாரம் இருக்கு? சும்மா சவுண்ட் விடாம அமைதியா நில்லு.” என்ற மகிழ் கொற்றவன் சுதீப்பை பார்த்து, “நானும் லயனியும் கணவன் மனைவின்னு என்னால் நிரூபிக்க முடியும்.. இவ்ளோ சொல்றானே! சிம்பிள் குவெஸ்டீன் கேட்கிறேன்.” என்றவன் நவீனாவை சுட்டிக் காட்டி,
“இவங்க யாரு? இவங்க பெயர் என்னனு இவனால் சொல்ல முடியுமா?” என்று சவாலிடும் குரலில் கேட்டான்.
நவீனா, பெரும் அதிர்வுடன் நின்றிருந்தாள். அவளால் சட்டென்று ராகேஷை எதிர்த்தது போல், மகிழ் கொற்றவனின் கூற்றை பொய் என்று கூற முடியவில்லை. மகிழ் கொற்றவன் கூறிய ‘நான் என்ன பேசினாலும் அது லயனியோட நன்மையை கருதி தான் இருக்கும்’ என்ற வார்த்தைகள் அவளை தடுத்தது. கூடவே, அவனது நேர் பார்வையில் பொய்யோ கயமையோ இருப்பதாக அவளுக்குத் தோன்றவில்லை.
ராகேஷ், “இவங்க லயா பிரெண்ட்” என்றான்.
மகிழ் கொற்றவன், “சரி.. காலேஜ் பிரெண்டா, ஸ்கூல் பிரெண்டா, பிஸ்னெஸ் பிரெண்டா? இன்னும் இவங்க பெயர் சொல்லலையே!” என்றான்.
சில நொடிகள் திணறிய ராகேஷ், பின் சுதீப்பைப் பார்த்து, “இவன் என்னை தாக்கிட்டு லயாவை கூட்டிட்டு போறது சிசிடிவி புட்டேஜ்ஜில் இருக்கும்.” என்றான்.
மகிழ் கொற்றவன் அசராமல், “வாங்க சார், போய் பார்க்கலாம்.. கூடவே, இந்த ஹோட்டல் ஓனரையும் கூப்பிட்டுக்கலாம்” என்றான்.
ராகேஷ் தனது பதற்றத்தை மறைத்தபடி, “இவன் பொய் சொல்றான்.. இவனை அரெஸ்ட் செய்துட்டு, லயாவை ரெஸ்கியூ பண்ணுங்க சார்” என்று சொன்னதையே திரும்பக் கூறினான்.
மகிழ் கொற்றவன் ராகேஷைப் பார்த்து உதட்டோர வளைவுடன் லேசாகச் சிரித்தான்.
ராகேஷ் கோபத்துடன், “இப்போ எதுக்குடா சிரிக்கிற?” என்று கேட்டான்.
“ஸோ, உனக்கு இவங்களை தெரியலனு ஒத்துக்கிற!”
“இவங்க பெயர் மறந்துட்டேன்.. நாங்க பேசிய நேரத்தில் எங்களை பற்றி தான் பேசினோம்.. எங்களோட வேவ்லென்த் ஒத்து போனதால் தான் கல்யாணம் வரை பேசினோம்.. பிரெண்ட்ஸ் பாமிலினு இன்னும் டீப்பா பேசிக்கல…” என்று சமாளித்தான்.
சுதீப், “மிஸ்டர் மகிழ், நீங்க இவரைக் கேட்ட கேள்விக்கு இப்போ நீங்களே பதில் சொல்லுங்க.. அண்ட் நீங்களும் இவர் சொல்ற லயனிகாவும், கணவன் மனைவி தான் என்பதற்கு ப்ரூப் இருக்கா?”
“என் மனைவி பெயர் லயனிகா இல்லை, லயனிகாஸ்ரீ.. இவங்க நவீனா.. என் மனைவியோட நெருங்கிய தோழி.. ஐ மீன் பெஸ்டீ.. பள்ளிக் காலத்தில் இருந்தே தோழிகள்.. இவங்க மட்டும் இல்லை.. இந்த ஹோட்டல் ஓனரோட வருங்கால மனைவி மிஸ் ரிதன்யா, இவங்க, அண்ட் என் மனைவி, மூன்று பேருமே நெருங்கிய தோழிகள்..”
இடையிட்ட ராகேஷ், “அப்ப, நீ ஏன் பார்ட்டி வரல…?”
அவனைக் கண்டு கொள்ளாமல் சுதீப்பிடம், “எல்லாமே நான் சொல்றேன்.. இவனை நடுவில் பேசாம அமைதியா இருக்கச் சொல்லுங்க சார்”
ராகேஷ் நக்கலுடன், “ஏன் நடுவில் பேசினா, நீ சொல்ற கதையை மறந்திருவியா?” என்று கேட்டான்.
அலட்சியமாக உதட்டை பிதுக்கியவன், “கதை புனைப்போ, பொய்யோ என்னிடம் இல்லை.. நீ எவ்ளோ இன்ட்ரப்ட் செய்தாலும் சரி, எப்படி மாத்தி மாத்தி கேட்டாலும் சரி… நான் ஒரே மாதிரி தான் சொல்வேன். ஏன்னா, உண்மை எப்போதும் நிறம் மாறாது.” என்றான்.
மற்ற மூவருமே, ‘அடப்பாவி!’ என்பது போல் தான் பார்த்தனர். ஆனால் வெவ்வேறு உணர்வுகளுடன். நவீனா பிரமிப்பாகவும், சுதீப் ஆச்சரியமாகவும், ராகேஷ் எரிச்சல் கலந்த கோபத்துடனும் பார்த்தனர்.
மகிழ் கொற்றவன் சுதீப்பை பார்த்துத் தொடர்ந்தான்.
“மிஸ்டர் ராஜீவ் கிருஷ்ணா, மிஸ் ரிதன்யா மேரேஜ் அண்ட் என்னோட மெடிக்கல் காண்ஃபரென்ஸ் சேர்த்து தான், நாங்க இங்கே வந்தது.. எங்களுக்கு த்ரீ டேஸ், இந்த ரூம் புக் செய்தது மிஸ் ரிதன்யா தான்..!
இன்றைய பேச்சிலர் பார்ட்டிக்கு கூட, நான் போறதா தான் இருந்தது.. என்னோட காண்ஃபரென்ஸ் முடிந்ததும், கடைசியில் போய் ஜாயின் செய்றதா இருந்தேன்.. நடுவில் ப்ரேக் டைமில் லயனிக்கு போன் போட்டப்ப, அவ எடுக்கலைனு அவளை நான் தேடி வந்தேன்.. அப்ப தான், இவனிடம் இருந்து லயனியை நான் காப்பாற்றியது.
முதலில் எனக்கு அது லயனினு தெரியலை. ஏதோ ஒரு பொண்ணுனு நினைத்து தான் காப்பாற்ற முயற்சித்தேன்.. அப்புறம் தான் அது என் மனைவினே எனக்கு தெரிந்தது. மே பி நாங்க கணவன் மனைவினு தெரியாததால், இவனே ஒரு கதையைப் புனைந்து உங்களை ஏமாற்றி, என்னை பழி தீர்த்து, லயனியை கூட்டிட்டு போய் நாசம் செய்றது தான் இவன் பிளான்.” என்று நீளமாகப் பேசியவன், இறுதியில் உண்மையான கோபத்துடன் ராகேஷை முறைத்துக் கொண்டு நின்றிருந்தான்.
ஒரு நொடி ராகேஷே, ‘ஒருவேளை இவன் சொல்றது உண்மையோ!’ என்று நினைத்துவிட்டான்.
சுதீப் மனதிலும் ‘வாய்ப்பு இருக்குதோ!’ என்று தோன்றினாலும், காரியத்தில் கண்ணாக, “உங்க மேரேஜ்கான ப்ரூப்?” என்று கேட்டான்.
“இவங்க சொல்லுவாங்க.. மிஸ் ரிதன்யா அண்ட் மிஸ்டர் ராஜீவ் கிருஷ்ணா கூட சொல்லுவாங்க.”
நவீனா, “எஸ் சார்.. இவரும் லயாவும் கணவன் மனைவி தான்.” என்றாள்.
ராகேஷ், “பொய்.. பொய்.. நம்பாதீங்க சார்.. இவங்கே ரெண்டு பேருமே கூட்டுக் களவானிங்க” என…
நவீனா முறைப்புடன், “அப்போ, இந்த ஹோட்டல் ஓனர் ராஜீவ் கிருஷ்ணா கிட்டயே கேளுங்க சார்.”
“அவன் என்னோட காலேஜ் பிரெண்ட் தான்.. அண்ட் எங்களுக்குள் பிஸ்னெஸ் டை-அப் கூட இருக்குது சார்.. அவன் இன்வைட் செய்து தான், நான் பார்ட்டிக்கு வந்தேன்..” என்றவனை இடையிட்ட நவீனா,
“இதெல்லாம் இப்போ எதுக்கு மிஸ்டர் சொல்ற? அவர் பிரெண்ட்னு சொல்லிட்டா, நாங்க பயந்து பின் வாங்கிடுவோம்னு தப்பு கணக்கு போடாதே.. நீ கிருஷ்ணாக்கு பிரெண்ட்னா, நான் அவரை கல்யாணம் செய்துக்க போற ரிதன்யாக்கு க்ளோஸ் பிரெண்ட்” என்றாள்.
அவளது அதிரடி பதிலில் சற்றே திணறிய ராகேஷ், “நா..ன்.. ஒன்னும் உங்களை பின் வாங்கச் சொல்லலை.. ஜஸ்ட் என்னை அறிமுகம் செய்தேன்.. அண்ட் இந்த நேரத்தில் ராஜீவை தொந்தரவு செய்ய வேண்டாம்னு தான் சொல்ல வந்தேன்.” என்று பின் வாங்கினான்.