
கீதம் 3
“எப்போதும் செய்ற மாதிரி முன்ன பின்ன தெரியாதது போல நீ போலீஸ்ஸாவும், நான் கம்ப்ளைன்ட் கொடுத்த ஆளாவும் போய் தெறிக்க விடுவோம்.. வா.. வா” என்றபடி ராகேஷ் வேகமாக நடக்க ஆரம்பிக்க,
சுதீப்போ, “டேய் இருடா” என்றபடி அவனது கையைப் பற்றி நிறுத்தினான்.
ராகேஷ் சிறு எரிச்சலுடன், “என்னடா?” என்றான்.
“இதுக்கு முன்னாடி, ரெண்டு முறை நீ சொன்னது போல செய்து இருக்கிறோம் தான்.. ஆனா அது வேற ஹோட்டல்.. அங்க மாட்டினாலும், ஹோட்டல் ஓனர் நம்ம டைப், ஸோ பிரச்சனை இல்லை.. ஆனா…”
“இங்கேயும் பிரச்சனை வராதுடா.. சிசிடிவி புட்டேஜ் என் ஆளை வச்சு டெலீட் செஞ்சிடலாம்.. பெயரும், நித்தின்னு தான் சொல்லி இருக்கேன்.”
“அது இல்லைடா.. முதல் முறை இப்படி செய்தப்ப, அந்த காதல் ஜோடி வீட்டுக்கு தெரியாம வந்து இருந்தாங்க.. பொண்ணு மட்டை ஆனதும், அந்த காதலனை நான் ஒரு ரூமுக்கு கூட்டிட்டு போய் மயக்க மருந்து கொடுத்து கவுத்தேன். அப்புறம் அந்த பொண்ணை நாம எஞ்ஜாய் செய்ததோட போட்டோ வீடியோனு மிரட்டவும், ரெண்டும் வாயே திறக்கல…!
அடுத்த காதல் ஜோடி, வீட்டிற்கு தெரிந்த ஜோடி தான் என்றாலும், போட்டோ வீடியோனு காமிக்கவும், மானம் மரியாதைனு விஷயம் வெளியே தெரியாம இருந்தா போதும்னு புட்டேஜ் மட்டும் நம்ம கிட்ட வாங்கிட்டு அமைதியா இருந்துட்டாங்க.. ஆனா..”
“இன்னும் என்னடா ஆனா?”
“இதுக்கு முன்னாடி சாட்சினு யாரும் இல்லை.. அண்ட் ரெண்டும் உண்மையான காதல் ஜோடி.. ஆனா, இப்போ ரெண்டுமே இடிக்குது,”
“இங்கே லவ்வர்ஸ் கூட இல்லைங்கிறது நம்மளுக்கு ப்ளஸ் தான்.. அடுத்து அந்த பொண்ணு! முடிஞ்சா அவளையும்.. முடிஞ்சா என்ன? அவளை நீ அனுபவி, லயனிகாவை நான் அனுபவிக்கிறேன்.. லயனிகா எனக்கு மட்டும் தான்.” என்று ஒரு வித வெறியுடன் கூறினான்.
“டேய், எனக்கு என்னவோ இது சரி வரும்னு தோணலை.. அந்த டாக்டர் லேசில் விடுறவன் போல தெரியல…”
“அப்போ என்ன *** இவ்ளோ நேரம் என் கூட சேர்ந்து தேடின? பயமா இருந்தா மூடிட்டு கிளம்பு!”
“ப்ச்.. டேய்.. கொஞ்சம் யோசிக்க சொல்றேன்.. அவன் ஒரு டாக்டர், ஸோ, இந்நேரம் நீ அந்த பொண்ணுக்கு ட்ரக்(drug)கொடுத்தது அவனுக்கு தெரிந்து இருக்கும்.”
“தெரிந்தா என்ன!” என்று அலட்சியமாகக் கூறியவன், “வெட்டிக் கதை பேசாம வா..! அவனை யோசிக்க விடாம கார்னர் செய்யலாம்.. ஒரு காமன் மேன் கிட்ட அவனோட மூளை ஸ்மார்ட்டா வேலை செய்யும். ஆனா, திடீர்னு போலீஸ், அர்ரெஸ்ட்னு சொல்றப்ப, கண்டிப்பா கொஞ்சம் திணறுவான்.. அந்த கேப் போதும் நமக்கு.” என்றான்.
அபோழுதும் சுதீப் தயங்கவும், “உனக்கு இந்த வேலை எப்படி கிடைத்ததுனு மறந்துடாத…” என்றான்.
“டேய் மச்சி.. நான் உனக்கும் சேர்த்து தான் யோசிக்கிறேன்.”
“ரொம்ப யோசிக்காத.. சரியா தான் நடக்கும்.. நீ போலீஸ்.. என் பெயர் நித்தின், என்னோட வருங்கால மனைவியை அவன் கடத்திட்டான்.. இதான் கம்ப்ளைண்ட்!”
“அந்த பொண்ணு, அவ பிரெண்ட்னு சொல்ற, அவ இல்லைனு சொல்லுவாளே!”
“அது பிரெண்டானு தெரியாது.. பக்கத்தில் இருந்தா, அவ்ளோ தான்.. அப்படியே பிரெண்டாவே இருந்தாலும் பிரச்சனை இல்லை.. இங்கே வந்து, இந்த பார்ட்டியில் தான் ரெண்டு பேரும் பேசி பழகி, நான் ப்ரொபோஸ் செய்து அவ ஓகே சொல்லிட்டா.. அதான் வருங்கால மனைவினு சொன்னேன்னு சொல்லிக் சமாளிக்கலாம்.. அவளுக்கு அவனை தெரியாது தானே.. அது நமக்கு பிளஸ்.. ஸோ அவன் தான் லயனிகா நிலைக்கு காரணம்னு சொல்லிடலாம்.. பழியை என் மேல் போடுறான்னு சொன்னா, எல்லாம் சரியா தான் இருக்கும்.. நம்ம டார்கெட் அவன் தான்.. அவனைத் தான் அப்புறப்படுத்தனும்.”
“சரி வா” என்றபடி அவனுடன் சென்ற சுதீப் மனதினுள், ஏதோ சரியில்லாதது போல் தான் தோன்றியது.
அதன் பிறகே, மகிழ் கொற்றவன் மற்றும் நவீனா இருக்கும் இடத்திற்கு சென்ற சுதீப், “மிஸ்டர் நித்தினின் வருங்கால மனைவியை கடத்திய குற்றத்திற்காக, நான் உங்களை கைது செய்கிறேன்” என்றது.
முதலில் அதிர்ந்த நவீனா, ‘நித்தின்’ என்ற பெயர் அவளது மூளையில் உரைக்கவும், அவனை முறைத்தாள்.
அவளுக்கு அவனை விழாவில் பார்த்த ஞாபகம் இருந்தாலும், அவனது பெயர் தெரியவில்லை. அதனால் அவனது பெயர் நித்தின் என்றே நினைத்தவள் கோபத்துடன், “வாட் ரப்பிஷ்?” என்று சீறினாள்.
ராகேஷ், “என்ன! என்ன ரப்பிஷ்? லயாவும் நானும் ரூமுக்கு வந்துட்டு இருக்கும் போது, இவன் என்னை அடிச்சிட்டு லயாவை கடத்திட்டு போயிட்டான்.” என்றான்.
நவீனா கோபமாக பேச வர, மகிழ் “இருங்க.. நான் பேசுறேன்” என்றான்.
அப்பொழுதும் அவள், “இல்ல.. இவன்..” என்று ஆரம்பிக்க,
அவளை தீர்க்கமாகப் பார்த்தவன் அழுத்தமான குரலில், “என் மேல் நம்பிக்கை இருந்தால், கொஞ்ச நேரம் அமைதியா இருங்க.. நான் என்ன பேசினாலும், அது லயனியோட நன்மையை கருதி தான் இருக்கும்.” என்று கூறினான்.
சுதீப்பைப் பார்த்து, “நீங்க?” என்று கேட்டான்.
“நான் ** ஸ்டேஷன் எஸ்.ஐ சுதீப்”
“நான் டாக்டர் மகிழ் கொற்றவன்” என்றபடி கை குலுக்க நீட்டியவன், “அது என்ன எடுத்ததும் கைது செய்றேன்னு சொல்றீங்க?” என்று கேட்டான்.
அவனிடம் கை குலுக்கிய சுதீப், அவனது புத்தி கூர்மையில் சுதாரித்து, “விசாரிக்க தான் வந்து இருக்கிறேன்.. அது உங்க ரியாக்சன் பார்க்கச் சொன்னது.” என்றான். பின் அழுத்தமான பார்வையுடன், “தேவைப்பட்டால் கைது கூட செய்வேன் தான்.” என்றான்.
மகிழ், உதட்டோர மென்னகையுடன், தோளை லேசாகக் குலுக்க,
ராகேஷோ, “என்ன சார் அக்கியூஸ்ட் கிட்ட கை குலுக்கிட்டு இருக்கிறீங்க?” என்று எகிறினான்.
மகிழ் கொற்றவன் ராகேஷைப் பார்த்து நக்கல் குரலில், “ஓ! கடத்தினவன் தப்பிச்சு போகாம, இங்கேயே ரூமில் இருக்கிறேனா?” என்று கேட்டான்.
“அதான் உன்னோட கிரிமினல் மூளை…”
“இஜிட்?” என்று நடிகர் வடிவேல் போல் கேட்ட அவன், “அப்படி என்ன கிரிமினலா யோசித்தேன்னு சொல்லேன்.” என்றான்.
அவனது நக்கலில் பல்லை கடித்தபடி ராகேஷ் முறைக்க,
அவனோ, “சாரி, நான் பல் டாக்டர் இல்லை.. என் பிரெண்ட் டென்டிஸ்ட் தான்.. சஜெஸ்ட் செய்யவா?” என்று இன்னும் நக்கல் செய்தான்.
“டேய்…!”
“எஸ்டா.. டெல்…” என்று நடிகர் ரோபோ சங்கர் போல் பேசினான்.
இன்னும் கடுப்பான ராகேஷ், அதீத கோபத்துடன்… “என்னை வெளியே தேட விட்டுட்டு, இவன் இங்கேயே சேஃப்பா இருந்து இருக்கிறான் சார்.. இவனை அரெஸ்ட் செய்துட்டு, லயாவை என்னிடம் ஒப்படைங்க.” என்றான்.
தன்னை ஆராய்ந்து கொண்டு இருந்த சுதீப்பை பார்த்த மகிழ் கொற்றவன், “இவன் கம்ப்ளைண்ட்டை ரிட்டன் ஸ்டேட்மென்ட் தந்தானா? வாய்ப்பு இல்லையே! அது எப்படி இவ்ளோ சீக்கிரம் நீங்க இங்கே வந்தீங்க?” என்று கேள்விகளை அடுக்கினான்.
அவனது கேள்விகளில் மீண்டும் சுதாரித்த சுதீப், “நான் இந்த பக்கம் ரவுண்ட்ஸில் இருந்தப்ப, என்னோட ஹையர் ஆஃபீசியல் என்னை இவருடன் விசாரிக்கப் போகச் சொன்னாங்க” என்று சமாளித்தான்.
பின், “மிஸ் லயனிகா எங்கே?” என்று கேட்டான்.